”உழைப்பு உயர்வு தரும்…..”
“உழைத்தால் வாழ்வில் முன்னேறலாம்….”
உழைத்தால் தான் வயிற்று உணவு….”
போன்ற வார்த்தைகள், சராசரி
மனித வாழ்வில் கேட்காத இடமில்லை. தன்னம்பிக்கை மேடைகளில், உழைப்பு
தான் தாரக மந்திரம். எந்த ஒரு மனிதனும், இந்த கருத்தை
மாறுப்பதும் இல்லை. அந்தளவிற்கு உண்மை பொதிந்துள்ளது.
இந்த கருத்தை தாண்டி, நிதர்சனத்தை
பார்க்கும் போது சற்று போய்யோ என்று தோன்றுகிறது. உழைத்தவன் அனைவருக்கும், பணமோ
பொருளோ ( இதையே சமுதாயம் பெரிதாக எண்ணுகிறது) அனைவருக்கும் கிடைப்பதாக
தெரியவில்லை. உழைக்காத சிலருக்கு, பணமோ பொருளோ எளிதாக கிடைத்து விடுகிறது. இங்கு அதிஷ்டம்
என்ற வார்த்தை மிக எளிதாக புகுந்து விடுகிறது.
உடலுழைப்பு மற்றும் மனவுழைப்பு இரண்டையும் ஒன்றாகவே
வைத்து கொள்வோம். ஆனால், கொஞ்சம் புத்தசாலித்தனமாக யோசித்து உழைத்தால், உழைப்பின்
பலனை முழுவதும் பெறலாம்.
இதையே கொஞ்சம் தத்துவ ரீதியாக யோசித்து பார்த்தால், சில
காரணங்களை முன் வைக்கலாம். உழைப்பவனுக்கு, பணமாகவோ
அல்லது பொருளாகவோ மட்டுமே, அனைத்து கிடைத்து விடாது. அன்பு., உடல்
நலம் மற்றும் நிம்மதி என்ற வழியிலும் கிடைக்கலாம் அல்லது பிறிதொரு நிலையிலும்
கிடைக்கலாம் என்றும் வைத்து கொள்ளலாம்.
அதே போல், உழைக்காதவனுக்கு
அதிகளவு பணம் பெறப்படும் போது, அது எதேனும் ஒரு வழியில் செலவகலாம் அல்லது அன்பு, உடல்நலம்
மற்றும் நிம்மதி போன்றவற்றில் குறை ஏற்படலாம். இதில் ஏதும் இல்லாமல் அதிஷ்டம், முன்
ஜென்ம பலன் அல்லது விதி என்றும் வைத்து கொள்ளலாம். இந்த விஷயங்கள், தனி
மனித புரிதலை பொறுத்து உள்ளது.
உழைப்பவன்,
எந்த இடத்தில் உழைக்கிறான்? என்ற
கேள்வியையும் கணக்கில் கொள்ள வேண்டும். தன்னுடைய சொந்த நிறுவனத்தில் வேலை
செய்தவனின் பிரதிபலன் ஏதேனும் ஒரு வகையில் வந்து விடும். ஆனால், வேறு
ஒருவனுக்காக உழைக்கும் போது, அதன் மதிப்பு மாறி விடுகிறது.
பொதுவுடைமை விவாதத்தில் முன் வைக்கப்பட்ட கருத்தை, இங்கு
குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது என நினைக்கிறேன். நிறுவனத்தின் உயர் அதிகாரி, தன் சக
ஊழியர்களிடம்,” உழை….உழைத்தால் தான் முன்னேறலாம்..” என்ற
வார்த்தையில் கூட சிறிதளவு போலித்தனம் உள்ளதாக எண்ண வேண்டி உள்ளது.
நிறுவனம் நிறைய இலாபம் பெற்றாலும், அதில்
சிறிய பங்கு மட்டுமே, உழைத்தவனுக்கு கிடைக்க போகிறது. ஊழியரின் கடின உழைப்பின்
உண்மையான பலன் முதலாளிக்கு என்பதை மறுக்க இயலாது. பல நிறுவனங்களின் மறைமுக தராக
மந்திரமும் அது தான்.
இல்லையென்றால், இந்தியாவில் பல
அந்நிய நிறுவனங்களின் படையெடுப்பிற்கு வாய்ப்பு குறைவு. அமெரிக்காவில் செய்யக்கூட
வேலையை, இந்தியன் பாதி சம்பளத்தில் செய்ய நிலை உள்ளது. ஆனால், இந்தியாவில்
அந்த சம்பளம் அதிகம் என்பது வேறு விஷயம்.
பல நிறுவனங்களில் பணி புரிகின்ற இந்தியனின் ஈடுபாடும், ஒத்துழைப்பும்
சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், உண்மையில், உழைப்பிற்கு
தகுந்த கூலியை பெற முடிகிறாதா என்பது கேள்வி குறியே.
இதில் இன்னொரு பரிணாமத்தையும், நாம்
மறுப்பதற்கு இயலாது. சில இடங்களில், நாம் பெறுகின்ற
ஊதியத்திற்கு தகுந்தாற் போல் உழைக்கிறமா என்பது கேள்வியும் எழுகிறது. இதில் மாற்று
கருத்து பல எழலாம்.
இந்த கேள்வி பதில் சொல்ல வேண்டுமானால், உழைப்பின்
பிரதிபலன் என்ன? உழைப்பின் அளவு கோல் என்ன ? என்ற
கேள்விக்கு பதிலை கண்டு பிடிக்க வேண்டும். பதிலை தத்துவத்தின் அடிப்படையில்
மட்டுமே காண முடியும் என்று எண்ணுகிறேன்.
எது எப்படியாக இருந்தாலும், தன்னுடைய
மனசாட்சி படி நடந்து கொண்டால் போதும் என்று நினைக்கிறேன்.
(இவை அனைத்தும் தனி மனித மாற்றத்திற்கு உட்பட்டது. நான்
எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் உண்மை என்று நான் வலியுறுத்தவில்லை. மாற்று
கருத்துகளும் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன்)
|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||
No comments:
Post a Comment