Thursday, November 30, 2017

விளம்பரங்களும், அதன் மீதான வெறுப்புகள்


விளம்பர உத்திகள் காலத்திற்கு ஏற்ப மாறி வருகின்றன என்பது உண்மை. ஆனால், அந்த உத்தி முறைகள், தனிமனித சுதந்திரத்தை பாதிப்பதாக உள்ளதை, நிச்சயமாக ஏற்று கொள்ள முடியாது.

வேறொருவரை நபரை போன் மூலமாக தொடர்பு கொள்ள நினைத்தால்….. ரிங்க் போவதற்கு முன்னரே, சில விளம்பரங்கள் வருகின்றன. இது மிகவும் எரிச்சல் அடைய செய்கிறது. அதாவது 100 ரீசர்ச் செய்தால், இத்தனை நிமிடங்கள் இலவசம் என்கிறது. அவசரத்திற்கு போன் செய்யும் போது, இப்படியாக வந்தால்….. போன் செய்ய நினைத்தவரின் மனநிலையை எண்ணி பாருங்களேன்!!!

நிறுவனங்கள் தன்னுடைய ஆபர்களை, குறுங்செய்தி மூலம் அனுப்பி வந்தது. அதனை பெரும்பாலும் படிக்காமலே அழிக்கும் நிலை தான் இருக்கிறது. ஆதனால், அடுத்த படிநிலையாக, போன் செய்து ஆபர் சொல்லும் நிலையும் உள்ளது. இந்த தொல்லைகளினால், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போன் என்றாலே, யாரும் எடுப்பதில்லை.

ஆனால் தான், நாம் மற்றொருவரை தொடர்பு கொள்ள நினைக்கும் போது, ரீங் வருவதற்கு முன்னர் விளம்பரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இது மாதிரியான விளம்பரங்களை கேட்டு பிறகு தான், ரீங்க் போகும். இதெல்லாம் அப்பட்டமான தனி மனித மீறல்!!! அரசியலமைப்பு சட்டம்- சரத் 21 மீறுவதாகவே எண்ணுகிறேன். இது கண்டிக்க தக்கது!!!

அதன் அடுத்த படிநிலையாக, வேறொரு வகையான விளம்பரங்களை, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் செய்து வருகின்றன.

நான் ஏர்செல் நெட்வெர்க்கையை பயன்படுத்தி வருகின்றேன். அந்நிறுவனம் ஏற்கனவே, நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஆதலால், தன்னுடைய சேவையை நிறுத்த போவதாக கூட புரளிகள் வெளிவந்தன. இது அனைவரும் அறிந்ததே!!!

நான் போன் செய்யும் போது, ரிங்க் ஆவதற்கு முன்னால், “ நீங்கள் நம்பரை மாற்றாமலே, ஐடியா/ வோடபோன் நெட்வெர்க்கை மாற்றி கொள்ளலலாம்என்று விளம்பரம் வருகிறது.

எந்த நெட்வெர்க்கை தேர்வு செய்ய வேண்டும் என்பது என்னுடைய தனி மனித உரிமை!!! இந்த நெட்வெர்க்கை நீங்கள் பயன்படுத்துங்கள் என்று யாராலும் கட்டளையிட முடியாது!!! ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரம், மற்றொரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் எப்படி ஒளிபரப்பப்படுகிறது என்று புரியவில்லை!!!

இந்த விளம்பரத்தை, ஏர்செல் நிறுவனமே, முன்னின்று செய்கிறதா?? அல்லது, ஐடியா/ வோடபோன் போன்ற நிறுவனங்கள் செய்கிறதா??? புரிந்து கொள்ள இயலவில்லை!!!

விளம்பரம் என்பது, நுகர்வு கலாச்சாரத்தின் அங்கமாக மாறி விட்ட நிலையில், விளம்பரங்கள் செய்வதை தவறென்று கூறவில்லை. அதே சமயத்தில், அடுத்தவரின் தனிமனித உரிமை மீறுவதாக இருப்பது்ம், இதனை வாங்கியே ஆக வேண்டும் என்பது போன்ற வியாபார உத்திகளை, எவ்வகையில் சேர்ப்பதோ????

நிச்சயமாக!!! இன்னும் பத்தாண்டுகளில், விளம்பரங்கள் மீது அளவிட முடியாத வெறுப்பு வரும் என்பது மட்டும் உண்மை!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Tuesday, November 28, 2017

சினிமா நகைச்சுவை- சில புரிதல்


திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளை உற்று நோக்கும் போது, தற்காலத்தின் பல நகைச்சுவை காட்சிகள் அசுசை ஏற்படுத்துவதாக உள்ளது. சம காலத்தில் நடிகர் சந்தானத்தின் நகைச்சுவை முகம் சுளிக்க வைப்பதாக உள்ளது. (சந்தனத்தின் நகைச்சுவையே சிறந்தது என கொடி பிடிப்பவர்கள் சண்டைக்கு வர வேண்டாம்)

பொதுவாக நகைச்சுவை என்பது இரண்டாக பிரிக்கலாம். ஒன்று கருத்துரு சார்ந்தது; மற்றொன்று உடல் மொழி சார்ந்தது. பொதுவாக இரண்டுமே நகைத்தல் சுவையை தரக்கூடியது தான்!!!!!
ஆனாலும் இரண்டுமே கலவாத, அதே சமயத்தில் ஒட்டாமல் தண்டவாளத்தை போல் பயணிக்க கூடியது. விவேக்- வடிவேல், சந்தானம்- சூரி போன்ற இரட்டைகள், இதனை தெளிவுப்படுத்தும்.

கருத்துரு சார்ந்தது என்றால், பேசுவதின் மூலமாக நகைச்சுவை உண்டாக்கக் கூடியவை!!! அதில் விவேக் வல்லவர். அவரிடமிருந்து உடல் மொழி சார்ந்த நகைச்சுவையை அதிகமாக எதிர்பார்க்க இயலாது.

உடல்மொழி என்றால் வடிவேல் தான்!!! தனது உடல் நெளிவுகளினால் , நகைச்சுவையை ஏற்படுத்தியவர்; இவரிடமும் கருத்துரு இருக்கும்; ஆனால் குறைவாக இருக்கும்.

வடிவேலும் விவேக்கும் சம காலத்தில், திரைப்பட உலகத்தில் கோலோச்சியவர்கள்.. இருந்த போதிலும், காலங்கள் கடைக்கையில், விவேக்கினை விட, வடிவேலின் நகைச்சுவைகள் தான் அதிகமாக ரசிக்கப்படுகின்றன. அதாவது உடல் மொழி நகைச்சுவைகளே காலம் கடந்தும் நிற்கும். சார்லி சாப்ளின் இதற்கு உதாரணம்!!!

நடிகர் நாகேஷ்ஷின் நகைச்சுவையில் உடல் மொழி அதிகமாக இருக்கும். அடுத்த தலைமுறையில், கவுண்டர்-செந்தில் ஆகியோரின் நகைச்சுவை இருந்தது. இதிலும் கவுண்டமணியின் நகைச்சுவையில் கருத்துரு அதிகமாக இருக்கும். அதிலும் சிலவற்றில் வக்கிர புரிதல் நிலை உண்டு!!!

சம காலத்தில், அந்த இரட்டை நிலையாக, சந்தானம்- சூரியை எடுத்து கொள்ளலலாம். பெரும்பாலும் சூரி உடல் செய்கை சார்ந்த நகைச்சுவை செய்கிறது. சந்தானத்தின் நகைச்சுவை கருத்துரு சார்ந்தது. அதிலும் மற்றவரினை சிறுமை படுத்துவதன் மூலம், பொது மக்களினை சிரிக்க வைப்பது!!!

பெரும்பாலும் கருத்துரு சார்ந்த நகைச்சுவைகள் தான், காலத்தினால் அதிகமாக மாற கூடியவை. நகைச்சுவை வறட்சி/வெற்றிடம் ஏற்பட வாய்ப்பும் அதிகம்.

கருத்துரு சார்ந்த நகைச்சுவையின், சம கால புரிதல், ” மற்றவரை கீழ்நிலைப்படுத்துவதுஎன்ற புரிதல் நிலை நிற்கிறது!!! இந்த காரணத்தினால் தான், சந்தானம் உச்சம் பெற்றார் என்றாலும், இதுமாதிரியான நகைச்சுவை தரத்தினாலே, சந்தானத்தின் மீது வெறுப்பு நிலையும் வந்துள்ளது. சற்று ஆழ்ந்து நோக்கினால், நகைச்சுவையின் வக்கிர நிலையாகவே எடுத்து கொள்ளலலாம்!!!

இது மனநிலை என்பது, சந்தானம் என்ற நகைச்சுவையாளனின் புரிதல் நிலை மட்டுமல்ல!!! ஒட்டு மொத்த சமூகத்தின் நகைச்சுவை புரிதல் நிலையாக உள்ளது!!! அதிலும் இளைஞர் சமூகத்திடம் அதிகமாக உள்ளது!!!

ஒரு கூட்டத்தில் உள்ள ஒருவரை சிறுமைப்படுத்தப்படுவன் மூலம், தன்னை பெரிய ஆளாக/ சிறந்த நகைச்சுவையாளானக உருவகப்படுத்த முயற்சிக்கும் நபர்கள் அதிகம்!!!. மேலும், பெண்களிடம் வீரத்தை காட்டும் நிகழ்வாகவும், இப்புரிதல் நிலை நடைபெறுகிறது. இது கீழ்த்தரமான மனநிலைக்கு………. சக மனிதனின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத நிலையே காரணம்!!!!

ஒரு செயலின் வெற்றி, ஒரு நல்லெண்ணத்தினால் முழுமை அடையுமே தவிர, கீழ்த்தரமான எண்ணங்கள் அல்ல!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Monday, November 27, 2017

சிறு தெய்வ வழிபாடும், கலைகள் அழிவும்


நேற்றைய தினம், அருகிலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றிருந்தேன். கனமான மழைக்கு பிறகு, சிறுவர்- சிறுமியர்களின் நடன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கனமான மழையினால், கூட்டங்கள் குறைந்து சேர்கள் காலியாக காட்சியளித்தது!!! மழை மட்டுமே காரணமா??? என்றால் நிச்சயமாக கிடையாது. மழை இல்லாமல் இருந்திருந்தால், இன்னும் 200 பேர் அதிகமாக வந்திருக்கலாம்!!!!

ஆக மொத்தத்தில்…… கோயில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை காண வரும் பொது மக்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. சற்றே, 15-20 வருடங்களுக்கு முன் திரும்பி பார்க்கையில், சூழ்நிலையே வேறு!!!!

சரித்திர நாடகங்கள், குடும்ப நாடகங்கள், கூத்து பாடல்கள், சிலம்பாட்டம், திரைப்படம் என கலை நிகழ்ச்சிகளை காண வரும் கிராம மக்களின் எண்ணிக்கையை கணக்கிட இயலாது. ஏன்…. நானே, திரைப்படங்களை காண கோவிலுக்கு சென்று, இடம் பிடித்த தருணங்கள் கூட நினைவில் உள்ளது.

சுமார் 15-20 வருடங்களில், இத்தகைய கலாச்சார, பண்பாடு சார்ந்த சமூக மாற்றங்கள், நாம் அறியாமலே நடந்து கொண்டிருக்கிறது.

தொழிற்நுட்ப வளர்ச்சியினால், கலைத்துறையில் பெரியளவு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனை அறிவியலின் வளர்ச்சி என்பதா??? சமூக மாற்றம் என்பதா???? கலாச்சார, பண்பாட்டு சீரழிவு என்பதா?? புரியவில்லை. ஆனால் நடக்கும் மாற்றங்களை ஏற்று கொண்டே ஆக வேண்டும்.

பல சரித்திர நாடகங்கள், குடும்ப நெடுந்தொடர்கள் என அனைத்தும் தொலைக்காட்சிகளில் நிரம்பி வழிகின்றன. திரைப்படங்கள் அனைத்தும் திரையரங்கள் மற்றும் இணையம் வழியே பெற்று கொள்ளலாம். மேலும் youtube வழியே அனைத்தும் கலைநிகழ்ச்சிகளையும், செல்போன் வழியே பார்க்கலாம். இணையம் மற்றும் காட்சி ஊடகங்கள் வழியே, அனைத்தும் கலைநிகழ்ச்சிகளும், பரவி கிடக்கும் போது, எதற்காக கோவிலுக்கு செல்ல வேண்டும்???? அதிலும் மிக துல்லியமான, தரத்தோடு கிடைக்கும் போது, எதற்காக கோவிலுக்கு செல்ல வேண்டும்????

மேலும், மக்களின் இறை நம்பிக்கை சார்ந்த புரிதலில், சிறிய மாறுதல் ஏற்பட்டுள்ளது. சிறு தெய்வங்கள், காட்டு தெய்வங்கள், ஊர் தெய்வங்கள் ஆகியவற்றின் மீதான் நம்பிக்கை சற்று தாழ்ந்துள்ளதாக எண்ணுகிறேன். அதே சமயத்தில், பெரு தெய்வ வழிபாட்டில் இறை நம்பிக்கை அதிகமாகி உள்ளது., சமகாலத்தில், கார்ப்பரேட் சாமிகளின் வளர்ச்சிகளே, இதற்கு உதாரணம்!!!!

இதையெல்லாம் தாண்டி, மேற்கண்ட கலை நிகழ்ச்சிகளின் புறக்கணிப்பால் பாதிக்கப்படுவதோ என்னவோ........ தமிழகத்தின் பராம்பரிய கலைகளும், தொழில்களும் தான்!!!! குயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், கூத்து என எத்தனை பராம்பரிய கலை நிகழ்ச்சிகள் முழுவதும் அழியும் நிலையில் உள்ளது,

ஒரு கோயிலில் திருவிழா நடைபெறுகிறது என்றால், அதனை சார்ந்து ஒரு இணை பொருளாதாரம் இயங்கும். பல சரக்கு கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், தின்பண்டங்கள் என்று பல குடும்பங்களின் வாழ்க்கை, அந்த இணை பொருளாதாரத்தை சார்ந்திருந்தது. அந்த பொருளாதார சங்கிலி
அறுக்கப்பட்டுள்ளது. அதற்கு நேர் மாறாக, மகா சிவராத்திரியில் நடைபெறும், மகா உற்வசம், இணை பொருளாதாரத்தின் மற்றொரு வடிவமாக மாறி உள்ளது.

மாற்றம் என்ற வார்த்தை மட்டுமே மாறாது!!!! மற்றெல்லாம் மாறுகின்ற உலக தத்துவம்!!! இவையெல்லாம் நல்லவையா??? கெட்டவையா??? என்பதனை காலம் தான் முடிவு செய்யும்.

முடிந்தால்….. கலைகளை அழியாமல் பாதுகாப்போம்!!! இல்லையென்றால், கலைகள் அழிக்கப்படுகிறது என்பதனை மட்டுமாவது தெரிந்து கொள்வோம்!!!!

உங்களின் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Saturday, November 25, 2017

போட்டி பயிற்சி மையங்களும் , அதன் உண்மை நிலையும்


வட தமிழகத்தில் சில பகுதிகளின் வழியாக பேருந்தில் பயணம் செய்த போது, அங்காங்கே கண்ட விளம்பரங்கள், சில கேள்விகளை என்னுள் எழுப்பியது. இந்த கேள்விகள் எனக்கு புதிதல்ல!!!! தமிழகத்தில் புற்றீசல் போல் தோன்றும் தனியார் பள்ளிகளின் கற்பிக்கும் திறன் குறித்து, இதுமாதிரியான கேள்வி கணைகள் தோன்றியுள்ளது !!!! கற்பிக்கும் ஆசிரியர்களில் பல பேர், தமிழ் வழி கல்வி முடித்து, ஆங்கில வழி கல்வி முறை கற்பிப்பவர்கள்!!!!

சரி!!! அதை விடுங்கள்!!! என்னுடைய கேள்விக்கு வருவோம்!!!

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் அறிவிக்கப்பட்ட CCSE IV தேர்வு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி நடக்கிறது. அத்தேர்விற்காக, ஒவ்வொரு ஊரிலும் பல பயிற்சி மையங்கள் புற்றீசல் போல் முளைத்திருக்கிறது. இந்த எண்ணிக்கை 4-10 வரை வேறுபடுமே தவிர, பயிற்சி மையங்கள் இல்லாத ஊர் இல்லை எனலாம்.

இத்தனை மையங்களுக்கு பயிற்றுநர்கள் எங்கு உள்ளனர்????” என்பதே என்னுடைய கேள்வி.

காலம் காலமாக, பணியாளர் தேர்வாணையத்தின் வழியாக தேர்வு நடந்தாலும், போட்டி தேர்வுகள் குறித்த விழுப்புணர்வு, தனியார் துறையின் வீழ்ச்சிக்கு பிறகே அதிகமானது். இருந்த போதிலும், அனைத்தும் மையங்களுக்கு போதுமான பயிற்றுநர்கள் இருக்கிறார்களா என்பது, மிகப்பெரிய கேள்விக்குறி தான்!!!

அந்த வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்கு, பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் திறமை குறித்த சந்தேகம் இல்லை. போட்டி தேர்வுகளுக்கு நடத்தும் அளவிற்கு திறமையுள்ளவர்களா ???? என்பதே எனது கேள்வி!!!!

தமிழ்நாடு முழுவதும் 10-15 லட்சம் போட்டியாளர்கள், தேர்வு எழுத வாய்ப்புள்ளது. அதில் ஒவ்வொரு பயிற்சி நிறுவனத்தில் 100 பேர் சேர்ந்தாலே, கணிசமாக தொகை பணமாக பெற இயலும். அந்த போட்டியாளர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்தை, பணமாக்கும் முயற்சி ஈடுபடுகிறமோ??? என்ற எண்ண தோன்றுகிறது.

பெருநகரங்களிலே, பயிற்றுநர்கள் குறைவாக இருக்கும் போது, சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களை பற்றி கேட்க வேண்டியதில்லை!!

இலவச பயிற்சி மையங்கள் மீது, இதே கேள்வியை நான் வைக்கிறேன். உங்களின் இலவச சேவையில் கேள்வியில்லை!!! ஆனால், பயிற்சி உள்ள தரத்தை குறித்தே!!!

வடிவேல் படத்தில் சொல்லும் நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது. “ பில்டிங்க் ஸ்டிராங்க் தான், ஆனா பேஸ்மெட் தான் கொஞ்சம் வீக்என்பது போல, ஒரு செயலின் அடிப்படை சரியாக இல்லையென்றால், அதன் விளைவும் நிச்சயமாக சரியாக இருக்காது!!!

உங்களின் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Monday, November 20, 2017

வட்டிக்கு கொடுத்தலும், வட்டி விகித மாறுபாடும்


கெளடில்யர் எழுதிய அர்த்த சாஸ்திரம் படித்து கொண்டிருந்தேன். அதில் கடனுக்கான வட்டி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் பல்வேறு வகையான வட்டி விகிதங்கள் குறிப்பிட பட்டிருந்தது. ஆச்சரியமான விசயம்!!! சுமார் 2500 ஆண்டுகள் முன்னரே, இவ்வகையான தகவல்கள் இருப்பது ஆச்சரியம் தானே!!!!

அதில் திருமணம் மற்றும் இன்ன பிற விஷேசங்களுக்கு வட்டி விகிதம் 1.25 சதவீதமாகவும், வியாபாரத்திற்கான வட்டி விகிதம் 5% மாகவும், வெளிநாட்டு வியாபாரங்கள் 10 சதவீதம் வரை, வட்டி வசுலிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வகையான வட்டி வேறுபாடுகளுக்கான காரணங்களும் குறிப்பிட பட்டிருந்தது. வியாபாரம் செய்யும் போது, நஷ்டம் அடைய வாய்ப்பிருக்கிறது. கடன் கொடுத்த தொகை வராமலும் போகலாம். மேலும் லாப சதவீதமும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அதனால் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று வியாபாரம் செய்யும், மேற்கூறிய சாத்திய கூறுகள் இன்னும் அதிகமாக இருக்கும். ஆதலால், வட்டி விகிதம் இன்னும் அதிகமாகும்!!

நிற்க!!!!

மேற்கூரிய கூற்றுகளிலிருந்து தெரிய கூடிய முக்கியமான விஷயம் என்னவென்றால்………. கடன் கொடுத்த தொகை, வாராமல் இருப்பது அதிகமாகும் போது, வட்டி விகிதம் அதிகமாகி நிற்கும்!!!! இதனை இக்காலத்திற்கும் எளிதாக பொருத்தி பார்க்கலாம்!!!!

முற்காலங்களிலும், கடன் கொடுத்த தொகையை திருப்பி அளிக்க வேண்டும் என்ற உணர்வு அதிகமாக இருந்தது. ஆனால், காலங்கள் செல்ல, அந்த தன்மை வெகுவாக குறைந்துள்ளது. இதில் ஏழை,பணக்காரன் என்ற வித்தியாசம் கிடையாது. பணக்காரனுக்கு கோடி என்றால், ஏழைக்கு ஆயிரம் அவ்வளவு தான் வித்தியாசம்!!!!

இப்போது கடன் அளித்தல் என்பது தொழிலாகி விட்டது. ஆதலால், கடன் கொடுக்கப்படும் தொகை முழுவதும் திரும்பி வருமா??? என்பது மிகப்பெரிய கேள்வி குறியாகி விடும் போது, வட்டி விகிதம் அதிகமாகி விடுவதில் ஆச்சரியப்படுவதில்லை.

வட்டி விகிதம் அதிகரிப்பதற்கு, இத்தகைய மக்களின் மனநிலை மட்டுமே காரணம் என்று கூறவில்லை!!! இதுவும் ஒர் காரணம் என்பதே என்னுடைய வாதம்!!!! சாதிய பின்புலம், அரசியல், அதிகார மைய தர்க்கம் என்று பட்டியலை நீட்டி கொண்டே போகும்!!!!

உங்களின் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்