Tuesday, November 29, 2016

வாழைப்பழமும் செயற்கை பழுக்க வைத்தலும்


இரண்டு நாட்களுக்கு முன்னர், நண்பர் ஒருவருடன் பேசி கொண்டிருந்தேன். அவர் கண்ட நிகழ்வை, என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்ன விஷயம், கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. வாழைப்பழ கடையில், ஒரு வாழைப்பழ தாரினை, ஒரு நீருள்ள வாளியில் மூழ்க வைத்து எடுத்தர்களாம். அவ்வாறு எடுத்தால், சில மணி நேரங்களில் பழத்து விடுமாம்.

நானும் வாழைப்பழத்தை பழக்க வைப்பதற்கு, வேறு வகையான முறைகளை பார்த்திருக்கிறேன். பொங்கல் நேரங்களில், புகைமூட்டத்தின் மூலம் பழுக்க வைப்பார்கள். இந்த முறைகளால் பழுக்க வைக்கப்படும் பழங்கள், நல்லவையா?? உடலுக்கு தீங்கு ஏற்படுத்தாதா?? என்ற கேள்வியே முன் நிற்கிறது.

இதற்காக calcium carbide, acetylene, ethylene, propylene, ethrel (2-chloroethyl phosphonic acid), glycol, ethanol போன்ற ராசாயணங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் தலைவலி, தூக்கமின்மை, ஞாபக மறதி, மயக்கம் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்.

இது மாதிரியான நிகழ்வை, நாமும் கடந்து சென்றிருப்போம். ஆனால், அடுத்த நொடியே மறந்து விட்டு, அதே பழத்தை வாங்கி உட்கொள்வோம்!!!! நானும் அதற்கு விதிவிலக்கல்ல!!! ஆனால், நண்பரின் ஒரு கேள்வி, என்னை இன்னும் தீவிரமாக சிந்திக்க வைத்தது. “ நம்முடைய வீட்டில் வளரும் வாழைப்பழம் எப்போது ஒரே சீராக பழுப்பதில்லை, மேலிருந்து கீழாக தான் பழுக்கும். ஆனால் கடைகளில் விற்கபடுவதில் தார் முழுவதும் பழுத்திருக்கும். அதை பற்றி யாரும் யோசித்ததில்லை…” நானும் அப்படித்தான் இருந்தேன்.

வியாபரத்திற்காக செயற்கையாக பழுக்க வைக்கிறோம் என்று வியாபரிகள் நியாயப்படுத்தலாம். ஆனால் உடல்நலத்திற்கு கேடு விளைவிற்பதாக இருந்தால்நிச்சயமாக கெடுதலே!!!! கவனமாக பார்த்து வாங்குங்கள்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Saturday, November 26, 2016

சித்த மருத்துவத்தில் அறிவியலாரின் பங்கு

நான் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் முதுநிலை மருத்துவம் படித்து கொண்டிருந்த தருணம் அது!!!! ஆயுஷ் துறையின் செயலாளர், எங்களது நிறுவனத்திற்கு வருகை தந்தார். அப்போது மருத்துவ மாணவர்களுக்கும் செயலாளாருக்கும் இடையே கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்களுடைய கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்களையும் அளித்தார்.

“drug testing laboratory” எப்போது வரும் என்று மாணவர் சார்பில், ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது. ”நீங்க MD படிக்கிறீங்கஆதலால் நோயாளியை பார்த்தல் மற்றும் நோயை குணமாக்குதலில் கவனம் செலுத்துங்கள் என்றார். PhD (ஆராய்ச்சி) படிப்பு தொடங்கும் போது, அதனை பார்த்து கொள்ளலலாம் என்றார்.

அவரது பதிலில், எனக்கு ஒர் தெளிவு பிறந்தது. ஆராய்ச்சி செய்தல் மற்றும் நோயாளியை அணுகி நோயை தீர்த்தல் ஆகிய இரண்டும் நேர்கோட்டின் இரு விளிம்பில் இருப்பவை. இரண்டையும் ஒருவரே செய்வது என்பது கடினம் என்று தோன்றுகிறது. பிழைகள் ஏற்பட நிறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் நவீன அறிவியல் உலகம், மேற்கண்ட இரு பணிகளையும் சித்த மருத்துவரிடம் இருந்தே எதிர்பார்க்கிறது. எத்தகைய நகை முரண்!?!?!?

ஆங்கில மருத்துவத்தில் இருந்து, ஒரு மருந்து வெளியாக குறைந்தபட்சமாக 10-12 வருடமாகிறது. Preclinical and clinical என்ற இரு நிலைகளிலும், ஆராய்ச்சி பணியில் ஈடுபடுவர்கள், பெரும்பாலும் மருத்துவர் அல்லாதவர்களே!!!! அதாவது pharmacologist, microbiologist, chemists, epidemiologist போன்றோர்களே அதிகமாக ஈடுபடுகின்றனர்.

ஆங்கில மருத்துவத்தில், ஒரு மருந்தை கண்டுபிடித்து வெளியிடுவதற்கு குறைந்தபட்சமாக 200 கோடி செலவாகிறது. அதனை பெரும்பாலும் மருந்து கம்பெனிகளே ஏற்கிறது. அந்த செலவை, 5 ஆண்டுகளிலே மருந்து தயாரிக்கும் நிறுவனம் லாபமாக ஈட்டி விடும். அதோடு மட்டுமில்லாமல் அரசும் மானியம் வழங்குகிறது.

ஆனால் இந்திய மருத்துவ முறையில் உள்ள மருந்துகளில் ஆராய்ச்சி செய்து வெளியிடுவதற்கு, மருந்து நிறுவனங்கள் ஈடுபடுவதில்லை. ஏனெனில் காப்புரிமை பெற முடியாது. இத்தகைய முன்னெடுப்பதில், சில ஆயுர்வேத நிறுவனங்கள் செய்கின்றன. ஆதலால், இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் அடைய முடிகிறது.

சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சி செய்ய மற்ற துறை வல்லுனர்கள் முன்வர வேண்டும். அதிலும் குறிப்பாக pharmacologist, microbiologist, chemists, epidemiologist போன்றோரின் பங்கு முக்கியம். அது போல் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும்.

தேரினை இழுப்பதற்கு, சித்த மருத்துவர் என்ற ஒருவர் மட்டுமே ஈடுபட்டால் சக்கரம் சுழலாது. பல்வேறு கைகள் இணைய வேண்டியது, காலத்தின் கட்டாயம்!!!!!. வாருங்கள் சித்த மருத்துவத்தை முன் இழுப்போம்!!!! அறிவியல் எனும் அச்சாணியில் வடம் இழுப்போம்!!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Tuesday, November 22, 2016

காத்திருத்தல்- நல்லது/கெட்டது

ஒரு நல்ல விஷயத்திற்காக, காத்திருக்கும் போது..... அந்த நல்ல நாளை எண்ணி உள களிப்போடு காத்திருப்போம். ஆனால்... அந்த நல்ல நாள் வந்துவிட்டால்... அந்த மனக்களிப்பின் அளவு குறைந்து விடும். திருமண நாளை எதிர்பார்ப்பில் தான் மகிழ்ச்சியே தவிர!!! திருமண நாளான்று குறைந்தும் விடலாம்.

அது போல்... கெட்ட விஷயத்திற்கும் நடக்கும். கெட்ட காரியம் நடைபெறும் நாள் வரை, மிகவும் வருத்தத்தோடு இருப்போம்!!! அந்த நாளை கடந்து விட்டால், மனம் இலகுவாகி விடும். ஒரு நோயிற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிருப்பின், ஆபரேசன் தியேட்டர் போகும் வரை பயமிருக்கும். ஆனால், உள்ளே சென்று விட்டால், பயம் குறையலாம்.

மேற்கண்ட சந்தோஷம்/துக்கம் ஆகிய இரு நிகழ்வுகளிலும், காத்திருந்த நாட்களிலேயே மகிழ்ச்சியும் வருத்தமும் அதிகமாக இருக்கும். ஆனால், அதை அடைந்து விட்டால் குறைந்து விடும்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Monday, November 14, 2016

சமகாலத்தில் பொருளாதார நடையில் மாற்றம்

நமக்கு தெரிந்தோ அல்லது தெரியமாலோ காலத்தினால் சில காரியங்கள் தீர்மானிக்கப்படும். அப்படியொன்று தான் பொருளாதாரம் வழிமுறை!!!

கிராம பொருளாதாரம் மறைந்து, நாடு என்ற அமைப்பியலால், ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கான பொருளாதாரமாக மாறியது. இவ்வகையான பொருளாதார மாற்றத்திலே…. பொதுநலம் என்பது மறைந்து சுயநலம் துளிர்விட ஆரம்பித்தது.

மேற்கத்திய நாடுகளின் அதீத பொருளாதார வளர்ச்சியினால், தன் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய, மாற்று வழியினை தேடினார். அப்போதுஅவர்கள் கண்ணில்….. வளரும் மற்றும் ஏழை நாடுகள் மட்டுமே கண்ணில் பட்டன. இவ்வாறு…… மற்ற நாடுகளில் விற்பனை செய்யும் பொருட்டு, உலகமயமாக்கல் என்ற நடைமுறை வந்தது.

கிராம பொருளாதாரத்தில், நேரடியான விற்பனை முறை இருந்ததால், சுயநலம் என்பது குறைவாக இருந்தது. ஆனால் உலகமயமாக்கல் தன்மையினால், மறைமுக மாற்றமே அதிகம். அதனால்…. சுயநலம் வேறூன்ற ஆரம்பித்தது. இந்த இடத்தில்…… முதலாளித்துவ பொருளாதாரம் அதிகமாகி கம்யூனிஸ பொருளாதார தன்மை வீழ்ச்சியடைந்தது.

இன்றைய சூழ்நிலையில், பொதுநலம் என்பது வார்த்தைகளில் மட்டும் காண இயலும். நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒன்றாக மாறி விட்டது. இந்த பாதிப்பு முதலாளி என்றில்லை. தினக்கூலி முதல் பண முதலை வரை ஊறி விட்டது.

இத்தகைய மனநிலையேஇன்றைய அனைத்து பொருளாதார மாற்றங்களுக்கும் சீர்கேட்டிற்கும் காரணமாக அமைகிறது. இவையெல்லாம் நல்லவையா??? தீயவையா?? என்ற விவாதம் கூட தேவையில்லை. அதனை பின்பற்றியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையே உள்ளது.

இந்த பொதுமனநிலையை புரிந்து கொள்ளாமல்…. சமீப காலமாக நடக்கும் பிரச்சனைகளை அணுகினாலும் உபயோகமும் இல்லை.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Saturday, November 12, 2016

விமர்சனம் - இருவகையினர்

ஒரு கருத்தாக்கம்/ செயலை விமர்சனம் செய்யும் போது, இரு வகையான புரிதலை கொள்ள வேண்டியுள்ளது. ஒரு வகையினர் கண்மூடித்தனமாக எதிர்ப்பது அல்லது ஆதரிப்பது; மற்றொருவர் உண்மையாகவே நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ விமர்சனத்தை வைப்பார்.

முதல் வகையினர்…. தன் சார்ந்த இயக்கம்/கட்சி/கொள்கை சார்ந்து விமர்சிப்பார்கள். தன்னை சார்ந்தவர்களாக இருந்தால், நேர்மறையாகவும், எதிராக இருந்தால், எதிர்மறையாக விமர்சிப்பார்கள். இவர்களின் கருத்துகளை பெரும்பாலும் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. இத்தகைய மனிதர்கள் இருப்பதனால் தான்ஒவ்வொரு இயக்கமும் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும். மாறாக, இவர்களின் அதீத புகழ்ச்சி, வீழ்ச்சியையும் அடைய செய்கிறது.

இரண்டாவது வகையினர் மட்டுமே உண்மையான விமர்சனத்தை வைப்பார்கள். இவர்களின் கருத்துகள் மிகவும் முக்கியமானது; புறம் தள்ளி விட முடியாதவை.. ஆனால், இவர்களை கண்டறிவது கடினம். குறைந்த அளவே இருக்கின்றனர்.

மாறாகமுதல் வகையினரே, சமூக வலைத்தளங்களில் அதிகமாக இயங்குகின்றனர். ஆகையால் தான்…. சமூக பிரச்சனைகளுக்கும், சமூக வலைத்தளங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது. இவர்களின் பதிவுகளை வாசிக்காமல் தவிர்ப்பதே நல்லது. இது மாதிரியான மனிதர்களை…. Unfriend செய்தும் இருக்கிறேன்….

.உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Monday, November 7, 2016

நீயா நானா-சாகசம் செய்பவர்கள் vs பொதுமக்கள்

நேற்றைய நீயா நானா விவாதம், மிகவும் சுவராசியமாகவே அமைந்தது. சாகசம் செய்பவர்கள் vs பொதுமக்கள் என்ற தலைப்பில் நடந்தது. ஒவ்வொரும் செய்த சாகசனங்கள் பார்த்த போது, உடல் மெய்சிலிர்க்கவே செய்தது. மற்றொரு புறம்அவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமோ என்ற பயமும் இருந்தது.

இன்றைய நவீன மனிதர்கள், பெரும்பாலும் பயம் சார்ந்த மனநிலையோடு வாழ்கின்றனர். படிப்பு, திருமணம், வேலைவாய்ப்பு, உடல்நலம் என்று வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும், பயம் தொற்றி கொள்கிறது. இவ்வாறு பயம் கொள்ளாத மனிதர்கள் வெகு குறைவு.

எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்ற மனநிலையே அதிகமாக இருக்கிறது. எப்போதும் comfort zone ல் இருக்க விரும்புகின்றனர். அதனை முறியடித்து எழுபவர்களாகவே, இத்தகைய சாகசகார்களை காண்கிறேன். இவர்கள் செய்வது சரியா?? தவறா?? என்ற விவாதமும் சரி தான். ஆனால் சாகசம், அவர்களுக்கு மனநிறைவை தரும் என்றால், அதற்கு மேல் விவாதிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

எழுத்தாளர் அபிலாஷ் பார்வை அருமை!!!! இப்படியாகஎதாவது வித்தியாசமாக செய்கிறவார்களேஉலகம் பரிணாம வளிர்ச்சி அடைந்தது என்றார். மேலும் எந்தவொரு விளையாட்டு, முழு வடிவம் பெற்று வளர்ச்சியடைந்து விட்டால், இது போன்ற கேள்விகள் ஏழாது. அது வரை எழுவதையும் தடுக்க இயலாது என்றார்.

ராஜாகோபலனின் பார்வையும் வித்தியாசமாக இருந்தது. முன்றைய போர் வடிவமே.. இன்றைய விளையாட்டு வடிவமாக உள்ளது என்பது அருமை.

சாகசகார்கள்….. ஒரு விதமான உளவியல் மனநிலையில் இருந்தாலும், அவர்களின் அறிய சாகசங்கள், நம் மனதினை ஒரு நிமிடமாக வியப்பு நிலைக்கு கொண்டு சென்றாலே,…. அவர்களின் லட்சியத்தில் வெற்றி பெற்றவர்களே கருதுவேன்!!!!!!

.உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Saturday, November 5, 2016

ஹோட்டல்-வியாபர உத்தி

இன்றைய நவநாகரீக உலகில், ஹோட்டலுக்கு செல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அது ரோட்டோற கடையா?? பைவ் ஸ்டார் ஹோட்டலா?? அல்லது நடுத்தர ஹோட்டலா?? என்பதே வித்தியாசம். வேலை நிமித்தமாக நகரத்தில் பணிபுரிவர்கள், கல்லூரி மாணவர், சுற்றுலா செல்பவர்கள், அதிகாரத்திற்காக ஹோட்டலில் சாப்பிடுபவர்கள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

செல்லும் ஹோட்டலின் தன்மை, பணத்தினை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஏழை தொழிலாளி ரோட்டோற கடையில் சாப்பிடுவதும், கொஞ்சம் வசதியானவர் நடுத்தர ஹோட்டலுக்கு செல்வதும் வழக்கம். அப்படி சென்றாலும், எவ்வகையான உணவை சாப்பிடுவது என்பது பணத்தை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. அதனை தாண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது.

அதாவது, கடையில் உள்ள ஒர் குறிப்பிட்ட உணவை பார்த்து, அந்த உணவையே உண்ண வேண்டும் என்ற தன்னிச்சையாக எண்ணம் (விருப்பம்)!!!! பணம் குறைவாக போது குஸ்கா சாப்பிடலாம் என்று எண்ணி கடைக்கு செல்வோம். ஆனால், சிக்கன் பீஸை பார்த்தவுடன் கடன் வாங்கியாவது பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வரும்.

உணவின் வாசனையை நுகர்வது மூக்காக இருந்தாலும், அதன் சுவையை உணர்வது நாக்காக இருந்தாலும், உணவை தேர்வுச் செய்வதில் கண்ணின் பங்கே முதன்மையானது. இதை அறிவியலும் ஒத்து கொள்கிறது.

இதனால் தான், நடுத்தர கடைகளில், உணவு தயாரிக்கும் முறை கொஞ்சம் வெளிப்படையாகவே நடக்கும். புரோட்டா போடுவது, சிக்கன் ரைஸ் செய்வது, பிரியாணியை கடையின் வெளிப்பகுதியில் வைத்து விற்பனை செய்வது, முட்டை புரோட்டா போடுவது என்ற பல்வகையான உணவு தயாரிப்பு முறைகளை, வாடிக்கையாளர்களின் பார்வைப் படும் படியாக செய்கின்றனர்.
இதில் இருவகையான நன்மைகள் இருக்கின்றன. ஒன்று…. 

மேற்சொன்னவாறு பார்வையாளர்களை ஈர்ப்பது. மற்றொன்று….. நாங்கள் வெளிப்படையாக உணவு தயாரிக்கிறோம் என்ற உத்திரவாதம். இதை தாண்டி கடையில் இடப்பரப்பு பத்தாது என்பது வேறு கதை!!!

இதே வழிமுறையை…. பெரிய உணவகங்கள் வேறு மாதிரியாக கையாளுகின்ற்ன. பார்த்தவுடன் ஈர்க்கும் வண்ண உணவு புகைப்படங்கள், மெல்லிய இசை போன்றவற்றை பயன்படுத்துகின்றன. சில உயர்ந்த உணவகங்கள், உணவு சமைப்பதை கண்ணாடியின் காணும் அளவிற்கும் வெளிப்படையாகவும் செய்கின்றன. சில உணவகங்களில், கிரில்லுடு சிக்கனை வெளியே வைத்திருப்பார்கள்.

மேற்கண்ட அனைத்துமேஅந்த நொடி பொழுதில் பணத்தை பற்றி கவலைப்படாமல், உணவு ருசிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணமே!! அந்த உணர்ச்சி வேகத்தில்….. வாடிக்கையாளர்களாகிய நாம் பெரும்பாலும் அகப்பட்டே கொள்கிறோம்!!!

இவையெல்லாம் சரியா?? தவறா?? என்ற விவாதத்திற்கு செல்ல விரும்பவில்லை. அந்த நொடி பொழுதில்அத்தகைய உணவு, நம்முடைய மனதில் களிப்பை ஏற்படுத்தினால் போதும் !!!! எல்லாம் ஒர் சாண் வயிற்றுக்கு தானே!!!!

.உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்