Wednesday, May 14, 2014

மார்க் மனித வாழ்க்கையை மாற்றாது

+2ல் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மகன்... டாக்டர் கனவு பொய்த்ததால் தந்தை தற்கொலை- பத்திரிக்கை செய்தி…..

இது ஓரு விசித்திரமான செய்தி…….

வருட வருடம் முதல் மார்க் எடுத்த மாணக்கரை பற்றிய செய்தி வருகையில், ஏதேனும் ஓரு மூலையில் மார்க் குறைந்ததால், மாணக்கர் தற்கொலை என்பதும் செய்தியாக வெளிவருகிறது. எமன் பாச கயிற்றை +2 தேர்வு முடிவுக்காக தயாராக வைத்து இருப்பார் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

இதற்கு யார் காரணம்???? அதற்கு மாணக்கர் மட்டும் தான் காரணமா??? இல்லை…இல்லை ….என்பதை அடித்து கூறலாம். அப்போது யார் காரணம். சமுதாயம் என்று ஒற்றை வார்த்தையில் விடை கூறி விடலாம்.

இதில் பல விஷயங்களை உற்று நோக்க வேண்டும். ஒரு மாணக்கர் +2 அதிகம் மார்க் எடுத்து மருத்துவம் அல்லது பொறியியல் துறையை தேர்ந்தெடுத்தால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கல்வி நிலையங்களும் பெற்றோரும் மறைமுகமாக திணித்து வருகின்றன.
பெற்றோரும், தன் மகன் அல்லது மகள் என்ன படிக்க வேண்டுமென்று விருப்படுகிறாள் என்று அறிவதில்லை. அவர்களுடைய படிக்கும் திறன் எவ்வளவு??? அவர்களால் எவ்வளவு மார்க் வாங்க முடியும் ???? என்று யோசிக்காமல், நிறைய மார்க் வாங்க வேண்டுமென்று கட்டாயப் படுத்துகிறார்.

+2 அதிக மார்க் எடுக்கா விட்டால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற மனநிலையை மாற்ற வேண்டும். மருத்துவம் அல்லது பொறியியல் துறையை தவிர்த்து நிறைய துறைகளை சாதிக்க கூடியவைகளாக உள்ளன. மனப்பாடம் செய்து பரீட்சையில் வாந்தி எடுத்து விட்டு மருத்துவம் அல்லது பொறியியல் சேர்ந்து விட்டால் சாதிக்க முடியுமென்று யார் சொன்னது???? படிப்பறிவை விட அனுபவ அறிவு முக்கியமென்பதை மறந்து விட வேண்டாம்.

படித்து பட்டம் பெற்று சாதித்தவர்களை விட படிக்காமல் சாதித்தவர்களே, இந்த மண்ணுலகில் அதிகம் என்பதை மனம் ஏற்று கொள்ள மறுக்கிறதா????

மார்க் மனித வாழ்க்கையை மாற்றாது!!!!
மனித மனம் தான் வாழ்க்கையை மாற்ற கூடியது!!!!


உங்களில் ஒருவன்
உங்களை  போல் ஒருவன்

||||||||வேதை குமார்|||||||||||

அன்னையர் தின வாழ்த்து

அனைத்து அன்னையர்களுக்கும்
அன்னையர் தின வாழ்த்துகள்….

மாதா,பிதா, குரு, தெய்வம்….என்பதில்
முதலில் அம்மாவை வணங்கியவன் தமிழன்……
 
இந்திய திருநாட்டை அன்னையோடு ஓப்பிட்டு
பாரதத்தாய் என போற்றி வழிப்பட்டவன் இந்தியன்….
இவ்வகையில் தாயை பெருமை படுத்தப்பட்டவள் …….

என்னை உயிரூட்டி
என்னை உணர்வுட்டி
எனக்கு பண்பையும் பாசத்தையும் கற்று கொடுத்தவள் நீ…..
உன்னை வாழ்த்துவதை விட
வணங்குவதில் பெருமை கொள்கிறேன்……..


உங்களில் ஒருவன்
உங்களை  போல் ஒருவன்

||||||||வேதை குமார்|||||||||||

சிந்தனை துளிகள்

வெற்றி என்பது எதைப் வைத்து நிர்ணயம் செய்கிறாய் என்று கேட்டால், பொதுவாக அடுத்தவரை விட அதிக மார்க் எடுப்பது, அதிகம் பணம் சம்பாதிப்பது, அதிகம் புகழ்ச்சி பொறுவது,................” என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இதில் ஒரு விஷயத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். சமுதாயத்தில் வெற்றி என்பது மற்றவரை பொறுத்து தீர்மானிக்க கூடியதாகவே பார்க்கப்படுகிறது. இது தவறான கண்ணோட்டம்.

வெற்றி என்பது உன் நிலையில் இருந்து உயர்வதே ஆகும். நீ எடுத்த 80 சதவீத மதிப்பெண்ணை விட 10 சதவீதம் எடுப்பதே உன்னுடைய வெற்றி.
அடுத்தவர் எந்த முறையில் ஜெயித்தார் ??? என்று ஓப்பிட்டு பார்ப்பது வேண்டுமானால், உன் வளர்ச்சியை கூட்டும்.

உங்களில் ஒருவன்
உன்னை போல் ஒருவன்

||||||வேதை குமார்||||||||

Saturday, May 10, 2014

சற்று யோசித்து பார்க்கலாமே

”டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்” இது தான் ஓவ்வொரு வருடமும் முதல் 5 இடங்களை பெறும் மாணாக்கர்களின் பொதுவான சொல்லாடல். அவர்களின் சேவை மானப்பாங்கிறகு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஆனால் அப்படிப்பட்ட மருத்துவரை பார்த்தில்லை என்பதே நிதர்சனம். அப்போ!! எங்கு தப்பு நடக்கிறது????? ஒரு வேளை படிப்பதில் மட்டும் கவனம் செலுத்தியதால், வெளியுலகம் தெரியாமல், இதை கூறி விட்டார்களா????? இல்ல!! நம் கண்ணுக்கு அகப்படாமல் விட்டதா????

இப்பூவுலகில், சில நேரங்களில் கடமையை செய்ய பணம் தேவைப்படுகிறது!!!! சில நேரங்களில் கடைமையை செய்யாமல் இருக்க பணம் தேவைப்படுகிறது!!!!

கடைமையை செய்ய கஷ்டப்பட்டு தோற்றவர்களே அதிகம். அந்த பாதையில் நீங்கள் இல்லாமல், மருத்துவராகி கஷ்டப்பட்டாவது கடைமை செய்யுங்கள்!!! வாழ்த்துகள் தம்பி தங்கைகளே!!!  

உங்களில் ஒருவன்
உன்னை போல் ஒருவன்
மரு.பெ.இரமேஷ் குமார்


கடவுளின் குழந்தைகள்:

திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கிகரிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மனித சமூகங்களால் வரவேற்க தக்க ஆணை.திருநங்கை வாழ்வில் ஓளி ஏற்றி வைத்த தீர்ப்பு என்று கூறலாம்.

சிறு வயதில் ஆணாகவோ பெண்ணாகவோ வளர்ந்து வரும் வேளையில், ஹார்மோன் மாற்றத்தில், உடலில் ஓரு சொல்ல முடியாத மாற்றம் உண்டாகி, ஆணுமற்ற பெண்ணுமற்ற நிலைக்கு மானுடம் தள்ளப்படுகிறது.

திருநங்கையாக மாறிய பிறகு, வீட்டிலிருந்து புறம் தள்ளப்பட்டு, சமுதாயத்தின் அவல ஓலியாக மாறுகிறது. சமுதாயமும், வீட்டினரும் திருநங்கைகளை தீண்ட தாகதவர்களாகவும், குற்றம் புரிந்தவர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். குற்றம் புரிந்தவன் கூட நிம்மதியாக வெளியில் நடமாடும் போது, ஹார்மோன் செய்த தவறால் திருநங்கையாவன், குற்றம் புரிந்தவன் போது பார்க்கப்படுகிறான்.

பல இடங்களிலும் பிச்சைக்காரர்களாவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியும் வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளது.
ஒன்பது’, ‘அலிபோன்ற கொச்சை சொற்கள் பயன்படுத்தும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கடவுளின் குழந்தைகளாக திருஎன்ற அடையாளத்துடன் திருநங்கை என பெயரிட்டவர் கலைஞர்.

திருநங்கைகளுக்கு தனியாக வாரியத்தையும் குடும்ப அட்டையும் வேலை வாய்ப்பு வழங்கி மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. திருநங்கைகள் உடலளவிலும் மனதளவிலும் நன்கு தைரியமானவர்கள், அனைத்து வேலைகளையும் செய்யும் சக்தியுடையவர்கள். ஆனால், சமுதாயம் பலகீனமானவர்களாகவே காட்டுகிறது.

கடவுளின் குழந்தைகளை, கடவுளாக மதிக்க வேண்டாம், குறைந்த பட்சம் மனிதாக மதிக்க கற்று கொள்வோம்…….

உங்களில் ஒருவன்
உன்னை போல் ஒருவன்

மரு.பெ.இரமேஷ் குமார்