Saturday, August 30, 2014

மல்டி லெவல் மார்க்கெட்டிங்

உலகில் அதிக அளவில் வாங்கும் சக்தி உள்ள நாடுகளில், மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. வெளி நாட்டு பொருடகளின் மீதான இந்தியனின் ஆர்வம் கொஞ்சம் அதிகம். அதனால், இந்தியாவில் கடை விரிக்க, பல வெளிநாட்டு நிறுவனங்கள் காத்திருக்கின்றன. இந்தியாவில் சட்ட திட்டங்களும், சலுகைகளும் அந்நிய நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

கம்பெனி ஆரம்பிப்பதை போல், விளம்பரப்படுத்துவதும் அந்நிய நிறுவனங்களுக்கு ரொம்ப எளிதான காரியம். ”சச்சினோ, சாருக்கானோ வந்து டிவியில் சொன்ன போதும்….. ”  நாம் அனைவரும் வாங்கி பயன்படுத்த ஆரம்பிச்சிடுவோம். அது நல்லதா? கெட்டதா? விலை குறைவா? அதிகமா? என்று நாமும் யொசிப்பதில்லை. அரசும் கேட்பதில்லை. இப்படியாக பல பொருட்கள், வெளிநாட்டில் இருந்து இந்தியாவின் மார்க்கெட்டிங்கில் புகுந்து பல வருடமாகிறது.

இந்த பொருட்களின் தயாரிப்பு செலவு என்பது விற்பனையாகும் பொருட்களின் விலையில், 30-40 சதவீதத்தை தாண்டாது. அதன் பிறகு, விளம்பர செலவு, கம்பெனியின் லாபம், ஸ்டாக்கிஸ்ட், டீலர், விற்பனையாளர் என்று மொத்தமாக வாடிக்கையாளரின் கையில் 100 சதவீத்தை பெற்று விடும். பொருட்களின் விலை அதிகம் என்றாலும், பல இடை தரகர்களை தாண்டி வருவதால், தயாரிப்பு விலையை விட இரண்டு மடங்கு அதிகமாகி விடுகிறது. இது கம்பெனிக்கு ஏற்ப சற்று வேறுபடலாம். விளம்பரம் இல்லாமாலே அல்லது தரகர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பின் விற்பனை விலை சற்று குறையலாம்.

இது மாதிரியான விளம்பர செலவுகள் இல்லாமல், இடை தரகர்களுக்கு பணம் செல்லாமல், நேரடியாக கம்பெனியின் விலைக்கே தருகிறோம் என்று புது வகையான மார்க்கெட்டிங் வலம் வருகிறது. அது தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் (MLM BUSINESS). இதை பிரமிடு மார்க்கெட்டிங், சங்கிலி தொடர் மார்க்கெட்டிங், பொன்ஸி மார்க்கெட்டிங் என்ற பல பெயர்களுடன் வலம் வருகிறது. இதற்கு Amway, Oriflame, Herbalife, Avon, Balaji போன்ற நிறுவனங்கள் தான் உதாரணம். இது தங்கமவோ, வீட்டு உபயோக பொருளாகவோ, மருந்து பொருளாகவோ, ஈமு கோழியாகயாகவோ, ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு முறையில் ஏமாற்றும் முறையினை பல நிறுவனங்கள் செய்து வருகின்றன.

கொல்கத்தாவில் சராதா சிட்பண்ட, தமிழ்நாட்டில் ஈமு கோழி வளர்க்கும் திட்டம் போன்றவை, மக்களிடம் நன்கு அறிமுகமான மல்டி லெவல் மார்க்கெட்டிங் ஏமாற்று நிறுவனங்கள். இதே மாதிரி பல இடங்களில் பல தடவை நடந்து வருகிறது. இருந்தாலும் மக்களின் பண ஆசையினை முதன்மைப்படுத்தி, ஏதேனும் ஒரு வகையில், காளான்களை போல முளைத்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த சங்கிலி தொடர் மார்க்கெட்டிங் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது.. இந்தியாவில், MLM மூலமாக பணம் வியாபாரம் தடை செய்யப்பட்டு இருக்கிறது. அப்படி இருந்தும் , சட்டத்தில் உள்ள ஒட்டைகளில் வழியே, மீண்டும் வந்து ஏமாற்றப்பட்டோம் என்பதற்கு சராதா சிட்பண்ட் ஒரு சிறந்த உதாரணம்.

இந்த பிரஷ் வாங்கிகோங்க சார்இந்த மருந்தை சாப்பிட்ட ஒல்லியாடுவிங்க….” என்றும், ஏதேனும் ஒரு எம்.எல்.எம் விற்பனை அதிகாரி உங்கள் வீடு தேடி வந்திருப்பார். “,  “….இந்த பொருட்களை வாங்கி விற்றால் நிறைய லாபம் பெறலாம்…… பெரிய மூதலீடு பண்ண தேவையில்லை…. நிறைய பேர் பல லட்சம் சாம்பதிக்காரங்க……….பார்ட் டைம் கூட பண்ணலாம்…” என்ற கவர்ச்சி கரமான வார்த்தைகள் உங்கள் காதுகளில் வந்து விழுந்திருக்கும். இவற்றில் சில உண்மைகள் இருந்தாலும், சில பொய்மைகளை சொல்ல வேண்டியது அவசியமாகிறது.

எம்.எல்.எம் விற்பனையில் பெரும்பாலும் முதன்மைப் படுத்தப்படுவது இரண்டு துறைகள் மட்டுமே. ஒன்று FMCG(Fast Moving Cunsumer Goods) எனப்படுகின்ற அன்றாட வீட்டு உபயோக பொருட்கள். மற்றொன்று மருந்து உபயோக பொருட்கள். இந்த இரண்டு துறைகளும் நாட்டின் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டாலும் பாதிக்கப்படாத துறைகள் என்பது கூடுதல் பலம். அதிலும், மருந்துகள் அனைத்தும், ஊட்ட சத்து பொருட்கள் என்றும், மூலிகை மருந்துகள் என்றும் சந்தைகளில் வெளி கொண்டு வரப்படுகிறது.

விளம்பர செலவு இல்லாமல், தரகர் செலவு இல்லாமல் விற்கப்படும் பொருட்கள், சாதாரண பொருட்களை விட அதிகமாக விற்கப்படுவதற்கு காரணம் என்ன??? உங்களுக்கு உற்பத்தி செலவே, அவ்வளவு ரூபாய் ஆகி விடுகிறதா??? சில உதாரணங்களை குறிப்பிட விரும்புகிறேன்

1.  1.  புரோட்டின் பவுடர்(200கி) கடைகளில் வாங்கினால், 200 ரூபாயை தாண்டாது. ஆனால் உங்களிடம் வாங்கினால் சுமார் 800 முதல் 1200 ரூபாய் வரை ஆகலாம்.

2.   2.  டூத் பேஸ்ட்(100கி) கடைகளில் வாங்கினால் 40 ரூபாயை தாண்டாது. அதே எடை உள்ள பொருளை, சுமார் 50 முதல் 100 ரூபாய் கொடுத்து  உங்களிடம் வாங்க வேண்டி உள்ளது.
3.   
3. ஒமேகா 3 கொழுப்பு சத்து பொருள்- இது அலிசி விதை என்ற தாவரத்திலிருந்தும், சாலமன் என்ற மீனில் இருந்து எடுக்கப்படுகிறது. இந்த மாத்திரையை(60), சுமார் 1000 முதல் 1500 ரூபாயில் வங்க வேண்டி உள்ளது. அதே கடைகளில், 400 ரூபாயிலே கிடைக்கிறது.

இதிலிருந்து சில உண்மைகளை தெரிந்து கொள்ளலாம். கம்பெனிக்கு அதிக லாபம் கிடைக்கிறது அல்லது விற்பனை முகவருக்கு அதிக லாபம் கிடைக்கிறது. சரி ….நீங்கள் லாபம் பெற்று கொண்டு விற்பனை செய்தாலும், வெளி கடைகளில் விற்பதை விட, இரண்டு மூன்று மடங்கு விற்பதற்கு காரணம் என்ன????  

எம்.எல்.எம் மார்க்கெட்டிங்கில், பொருட்களினை விற்பனை செய்வதை தாண்டி, புதிய நபர்களை சேர்த்து விட்டால் தான் அதிக லாபம் அடைய முடியும். அதாவது, ஒருவர் தன்னின் கீழ் நான்கைந்து நபர்களை சேர்த்து விட வேண்டும். அப்படி சேர்த்து விட்டாலும் ஊக்க தொகை கிடைக்கும். அவர் விற்பனை செய்யும் பொருளுக்கு ஊக்க தொகை கிடைக்கும்.

அப்படியாக சேர்த்து கொண்டே(குறைந்த பட்சம் ஐந்து நபர்) சென்றால், 13 வது இணைப்பில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையை எட்டி விடும். 17 வது தொடர் இணைப்பில் உலக மக்கள் தொகையை தாண்டி விடும் என்பது உண்மை. அப்படியானால், அனைவரும் எவ்வாறு லாபம் அடைய முடியும்???? முதல் நிலை முகவர்கள் மட்டுமே லாபம் பெற முடியும். மாத மாதம் லட்ச லட்சமாய் வருமானம் பெறுபவர்கள் அனைவரும், மேற்கண்ட 4 அல்லது 5 நிலைகளில் இருப்பவர்கள் மட்டுமே. உங்கள் முன் வெற்றி பெற்றவர்களாக காட்டப்பட்டவர்கள் அனைவரும் இவர்களே.

கடந்த காலங்களில் ஆம்வேயின் செயல் அதிகாரி, கேரளா மற்றும் கர்நாடகா போலிஸால் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம். மல்டி லெவல் மார்க்கெட்டிங் பற்றி தவறான புரிதலை மத்திய அரசு கொண்டுள்ளது. அது பற்றிய சட்ட திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆம்வே நிறுவனம் மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளது. இது பற்றி ஆம்வே முகவரிடம் கேட்ட போது, “ பெரிய இடம்ன்ன பிரச்சனை இருக்க தானே செய்யும்….” என்று கவுண்டமணி மாதிரி பதில் சொன்னார். அதற்கு பிறகு, அவரை கேள்வி கேட்க விரும்பாததால் விட்டு விட்டேன்.

அலைச்சல் இல்லாமல் வீட்டிற்கு தேடி வரும் பொருள் என்பதால், மக்களும் வாங்குவார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. மிக குறைந்த முதலீடு பெரிய இலாபம், பகுதி நேர வேலை, ஷோ ரூம் தேவையில்லை என்ற நிறுவனங்களின் ஆசை  வார்த்தைகளினை நம்பும் முகவர்களை குற்றம் சொல்வதிலும் மறு பரிசீலினை பண்ண வேண்டிய அவசியம் உள்ளது.

இந்த வியாபார உத்திகளையும் தாண்டி, மக்களின் மனநிலையையும் பார்க்க வேண்டியுள்ளது. தன் வீடு தேடி வரும் நபர்களையும், வெறும் கையோடு அனுப்ப மாட்டார்கள். அந்தளவுக்கு விருந்தோம்பல் பண்பு இந்தியரிடம் பரவி கிடக்கிறது. அந்த பண்பே, எம்.எல்.எம் முகவர்களுக்கு எளிதாக அமைந்து விடுகிறது. அதிக விலை உள்ள பொருட்கள் அனைத்துமே நன்றாகத்தான் இருக்கும் என்பது மக்களின் மனநிலையாக உள்ளது. பொருளின் தரத்தை பற்றி யோசிப்பதில்லை. அதனால், அதிக விலை கொடுத்து வாங்குவதால், சந்தை பொருட்களை விட நன்றாக வேலை செய்கிறது என்று எண்ணுகின்றனர்.

இறுதியாக என்னுடைய கேள்விகள் இரண்டு தான். சங்கிலி தொடர் மார்க்கெட்டிங் முக்கிய நோக்கமே, அடுத்தவனை சேர்த்து விடுவது தான். அப்படி சேர்த்து விட்டால் தான், உங்களுக்கு லாபம் கிடைக்கும். அதிலும், அடுத்தவர் விற்கும் பொருளுக்கும் உங்களுக்கும் கமிஷன் வந்து சேரும். அப்படிப்பட்ட உழைப்பை, அப்படிப்பட்ட லாபத்தை, நாம் எந்த வகையில் எடுத்து கொள்வது என்று எனக்கு தெரியவில்லை. அவரையும் சேர்த்து கொண்டு சம்பாதிப்பதற்கு வழியை ஏற்படுத்தி தருகிறோம் என்று நீங்கள் கூறுலாம். அப்படியானால், அவருடைய வருமானத்தில், சிறிதும் நீங்களும் எடுத்து கொள்கிறீர்களே??? அதை எப்படி எடுத்து கொள்ள முடியும்???  ரொம்ப சிம்பிளாக, அடுத்தவரை மாட்டி விடுவது என்று வைத்து கொள்ளலாம்.

சந்தை விட அதிகமாக விற்பதற்கு காரணம் என்ன?? ”அப்படியே அமேசான் காட்டிலே போய், கஷ்டப்பட்டு மூலிகையை எடுத்து வந்து எங்களுக்கு கொடுக்கிறதுனாலஇவ்வளவு அதிக விலையோ!!!....என்னவோ!!. ” என்று தான் நினைக்க வேண்டி உள்ளது.

(பல முறை ஆம்வே முகவர்கள் என்னிடம் அணுகி, பொருளை  வாங்கவும், விற்பனை படுத்தவும் முற்பட்டார்கள். நான் மறுத்து விட்டேன். சரி…. எம்.எல்.எம் என்றால் என்ன??? சற்று விசாரித்த போது கிடைத்த தகவல்களே இவை. )   

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||  


உழைப்பின் அளவுகோல் என்ன???

உழைப்பு உயர்வு தரும்…..”

உழைத்தால் வாழ்வில் முன்னேறலாம்….”

உழைத்தால் தான் வயிற்று உணவு….”

போன்ற வார்த்தைகள், சராசரி மனித வாழ்வில் கேட்காத இடமில்லை. தன்னம்பிக்கை மேடைகளில், உழைப்பு தான் தாரக மந்திரம். எந்த ஒரு மனிதனும், இந்த கருத்தை மாறுப்பதும் இல்லை. அந்தளவிற்கு உண்மை பொதிந்துள்ளது. 

இந்த கருத்தை தாண்டி, நிதர்சனத்தை பார்க்கும் போது சற்று போய்யோ என்று தோன்றுகிறது. உழைத்தவன் அனைவருக்கும், பணமோ பொருளோ ( இதையே சமுதாயம் பெரிதாக எண்ணுகிறது) அனைவருக்கும் கிடைப்பதாக தெரியவில்லை. உழைக்காத சிலருக்கு, பணமோ பொருளோ எளிதாக கிடைத்து விடுகிறது. இங்கு அதிஷ்டம் என்ற வார்த்தை மிக எளிதாக புகுந்து விடுகிறது.

உடலுழைப்பு மற்றும் மனவுழைப்பு இரண்டையும் ஒன்றாகவே வைத்து கொள்வோம். ஆனால், கொஞ்சம் புத்தசாலித்தனமாக யோசித்து உழைத்தால், உழைப்பின் பலனை முழுவதும் பெறலாம்.

இதையே கொஞ்சம் தத்துவ ரீதியாக யோசித்து பார்த்தால், சில காரணங்களை முன் வைக்கலாம். உழைப்பவனுக்கு, பணமாகவோ அல்லது பொருளாகவோ மட்டுமே, அனைத்து கிடைத்து விடாது. அன்பு., உடல் நலம் மற்றும் நிம்மதி என்ற வழியிலும் கிடைக்கலாம் அல்லது பிறிதொரு நிலையிலும் கிடைக்கலாம் என்றும் வைத்து கொள்ளலாம்.
அதே போல், உழைக்காதவனுக்கு அதிகளவு பணம் பெறப்படும் போது, அது எதேனும் ஒரு வழியில் செலவகலாம் அல்லது  அன்பு, உடல்நலம் மற்றும் நிம்மதி போன்றவற்றில் குறை ஏற்படலாம். இதில் ஏதும் இல்லாமல் அதிஷ்டம், முன் ஜென்ம பலன் அல்லது விதி என்றும் வைத்து கொள்ளலாம். இந்த விஷயங்கள், தனி மனித புரிதலை பொறுத்து உள்ளது.

உழைப்பவன்எந்த இடத்தில் உழைக்கிறான்? என்ற கேள்வியையும் கணக்கில் கொள்ள வேண்டும். தன்னுடைய சொந்த நிறுவனத்தில் வேலை செய்தவனின் பிரதிபலன் ஏதேனும் ஒரு வகையில் வந்து விடும். ஆனால், வேறு ஒருவனுக்காக உழைக்கும் போது, அதன் மதிப்பு மாறி விடுகிறது.

பொதுவுடைமை விவாதத்தில் முன் வைக்கப்பட்ட கருத்தை, இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது என நினைக்கிறேன். நிறுவனத்தின் உயர் அதிகாரி, தன் சக ஊழியர்களிடம்,” உழை….உழைத்தால் தான் முன்னேறலாம்..என்ற வார்த்தையில் கூட சிறிதளவு போலித்தனம் உள்ளதாக எண்ண வேண்டி உள்ளது.

நிறுவனம் நிறைய இலாபம் பெற்றாலும், அதில் சிறிய பங்கு மட்டுமே, உழைத்தவனுக்கு கிடைக்க போகிறது. ஊழியரின் கடின உழைப்பின் உண்மையான பலன் முதலாளிக்கு என்பதை மறுக்க இயலாது. பல நிறுவனங்களின் மறைமுக தராக மந்திரமும் அது தான்.

இல்லையென்றால், இந்தியாவில் பல அந்நிய நிறுவனங்களின் படையெடுப்பிற்கு வாய்ப்பு குறைவு. அமெரிக்காவில் செய்யக்கூட வேலையை, இந்தியன் பாதி சம்பளத்தில் செய்ய நிலை உள்ளது. ஆனால், இந்தியாவில் அந்த சம்பளம் அதிகம் என்பது வேறு விஷயம்.

பல நிறுவனங்களில் பணி புரிகின்ற இந்தியனின் ஈடுபாடும், ஒத்துழைப்பும் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், உண்மையில், உழைப்பிற்கு தகுந்த கூலியை பெற முடிகிறாதா என்பது கேள்வி குறியே.

இதில் இன்னொரு பரிணாமத்தையும், நாம் மறுப்பதற்கு இயலாது. சில இடங்களில், நாம் பெறுகின்ற ஊதியத்திற்கு தகுந்தாற் போல் உழைக்கிறமா என்பது கேள்வியும் எழுகிறது. இதில் மாற்று கருத்து பல எழலாம்.

இந்த கேள்வி பதில் சொல்ல வேண்டுமானால், உழைப்பின் பிரதிபலன் என்ன? உழைப்பின் அளவு கோல் என்ன ? என்ற கேள்விக்கு பதிலை கண்டு பிடிக்க வேண்டும். பதிலை தத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே காண முடியும் என்று எண்ணுகிறேன்.

எது எப்படியாக இருந்தாலும், தன்னுடைய மனசாட்சி படி நடந்து கொண்டால் போதும் என்று நினைக்கிறேன்.

(இவை அனைத்தும் தனி மனித மாற்றத்திற்கு உட்பட்டது. நான் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் உண்மை என்று நான் வலியுறுத்தவில்லை. மாற்று கருத்துகளும் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன்)  

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||  


நல்லவன் எப்படி இருக்க வேண்டும்!!!

நேற்றைய நீயா நானா பகுதியில், நல்லவனாக வாழ்வது எப்படி? என்ற தலைப்பை பார்த்தேன். உண்மையிலே நல்லதொரு தலைப்பு என்றால் மிகையாது. சமூகத்தில் எவன் நல்லவன்?”  என்று நாம் சொல்லி கொண்டிருப்பதின் மூகத்திரையை கிழித்தது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதங்கம் எதார்த்தமானது; ஆத்ம மார்த்தமானது; உண்மையானது. அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஆனால் நாம் யாரை நல்லவனாக நினைத்து கொண்டிருக்கிறோம் என்பதே பெரிய கேள்வியாகி விட்டது.

மனம் சற்று சிக்கலானது. எவன் நல்லவன் என்று கேள்வி கேட்டால் கூட, எதிர்மறை செயல்களை செய்யாதவன், நல்லவன் என்று சொல்லி பழகி விட்டது. இத்தகைய நல்ல குணங்கள் இருப்பதால், நல்லவன் என்று சொல்ல மறுக்கிறது. சமூகமும் அப்படி தான் பழக்கி வைத்திருக்கிறது. கருப்பு கலர் இருப்பதால் வெள்ளை அழகாக தெரிகிறது. நொண்டி நடப்பவனை வைத்தே, நன்றாக நடப்பவனை அடையாளம் காட்டுகிறோம். இது நம் குற்றமல்ல. மனித மனதின் குற்றம்.

நன்றாக படித்து, நல்ல மதிப்பெண் பெற்று, நல்ல வேலைக்கு போய், வீட்டில் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணினை திருமணம் செய்து, எந்தவொரு பிரச்சனைக்கு போகாமல், மது மற்றும் புகை வகைகளை உட்கொள்ளாமல் இருப்பவன் நல்லவன் என இச்சமூகம் முத்திரை குத்தி உள்ளது. இதில் எந்தவொரு குணத்திலிருந்து தடம் மாறினாலும், மனிதன் கெட்டவனாகி விடுகிறான். .

நல்லவன் எப்படி இருக்க வேண்டும்…” என, திருக்குறள், நாலடியார், நாண்மணிக்கடிகை போன்ற பதினென் கிழக்கு நூல்கள் மூலமாக பத்து நூற்றாண்டு முன்னரே, நம் முன்னோர் கூறி விட்டனர். அந்த நூல்களின் படி நடந்தால், “ நீ இந்த சமுதாயத்திற்கு லாயிக்கற்றவன், புழைக்க தெரியாத புள்ளைய இருக்கியே, இவருக்கு பெரிய காந்தின்னு மனசுல நினைப்பு, சமுதாயத்தை திருத்த வந்து இருக்காரு….” என்ற பல அவல ஒலிகள் தான் கேட்கும்.

ஒவ்வொரு மனிதனிடமும், நல்ல குணங்களும் கெட்ட குணங்களும் கலந்தே இருக்கும். அதில் சதவீத வேறுபாடே, நல்லவனையும் கெட்டவனையும் வேறுபடுத்தி காட்டும். எந்தவொரு கெட்டவனிடமும், எதாவது ஒரு நல்ல குணம் இருக்கும் என்பது இயற்கை நியதி. அதை அவனிடமிருந்து நாம் தான் கண்டு பிடிக்க வேண்டும். நல்லவனிடமிருந்து நாம் எப்படியெல்லாம் வாழ வேண்டும்என்றும், கெட்டவனிடமிருந்து எப்படியெல்லாம் வாழ கூடாதுஎன்று கற்று கொள்ள வெண்டும்.

அன்பு, நட்பு, நேசம், பொதுநலன், சகிப்பு தன்மை, விட்டு கொடுத்தல் , உதவி , தானம், வீரம் போன்ற குணநலன்கள் தமிழ் டிஷ்னரியில் மட்டும் தேட கூடியாதாக மாறாமல் இருந்தால் சரி…….

ஆங்கில் கவிஞன் வார்த்தைகளே, நினைவில் வந்து செல்கின்றன. உலக ஒரு நாடக மேடை…… நாம் அனைவரும் நடிகர்களே…. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு கதாப்பத்திரம்….. ஒழுங்காக நடித்தால், மறு ஜென்மம்(பாத்திரம்) கிடையாதுஇல்லையேல் மீண்டும் பிறந்து வேறு பாத்திரமாய்(ஜென்மம்) நடிக்க வேண்டியிருக்கும்……இந்த கற்பனை காவியத்தை …. இன்றைய மனிதர்கள்….. உண்மையாக்கி விட்டார்கள் போலும்.

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||