Saturday, March 31, 2018

ஏர்செல் பிரச்சனையும் நுகர்வோர் பாதுகாப்பும்


ஏர்செல் நெட்வெர்க்கில் உண்டான, கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையினால், ஏப்ரல் 15 தேதியுடன் தனது சேவையை நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது. இது அனைவரும் அறிந்ததே!!!!

ஏர்செல் நெட்வெர்க்கில், சுமார் 8 கோடி கஷ்டமர்கள் இந்தியா முழுவதும் உள்ளனர். அதிலும் தமிழ்நாட்டில் மட்டும், சுமார் 1.5 கோடி கஷ்டமர்களை கொண்டிருந்தது. இவர்கள் அனைவரும் வேறொரு நிறுவனத்திற்கு மாறி விட்டனர்.

இவ்வாறாக, புதிய நெட்வெர்க்கினை தேர்ந்தெடுக்கும் போது, அந்நிறுவனம் முறையாக கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கிறதா??? என்பதே முக்கிய செய்தி!!!

பெரும்பாலும் நிறுவனங்களை, இதை பற்றி கவலைபபடுவதாக தெரியவில்லை. தன்னுடைய கஷ்டமர்களின் எண்ணிக்கை அதிகமானால் மட்டும் போதும்!!! என்றே செயல்படுகின்றன. இதற்கு முன்னர் reliance, videocon போன்ற நிறுவனங்களை மூடும் போது, இந்நிலையே தொடர்கின்றன!!!

குறிப்பிட்ட பகுதியில் உள்ள டவரிலிருந்து, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களே பேச முடியும். அவ்வாறான எண்ணிக்கையை தாண்டும் போது, network busy/ out of order என்றே வருகிறது. call drop பற்றி டிராய் முறையாக கவனிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது!!!

முறையாக கட்டிடங்கள் இல்லாமல் தொடங்கப்படும் கல்லூரிகள், முறையாக ஆசிரியர்கள் இல்லாமல் தொடங்கப்படும் பள்ளிகள், முறையாக பயிற்றுநர்கள் இல்லாமல் தொடங்கப்படும் போட்டி தேர்வு மையங்கள், முறையாக பயிற்சி அளிக்காமல் வெளியேற்றப்படும் கல்லூரி மாணவர்கள்.... இப்படியாக நுகர்வோர் ஏமாற்றப்படுவது நீக்கமற நிறைந்து கிடக்கிறது.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வந்து, அதை பயனை முழுமையாக நுகர்வோர் அடைகிறார்களா? என்ற கேள்வியை கேட்க வேண்டியுள்ளது.

உலக சந்தையர்களின் குப்பைத் தொட்டியாக கருதப்படும் இந்தியாவில், நுகர்வோர் பாதுகாப்பு/உரிமை குறித்த புரிதல் இல்லாதற்கு, யாரை குற்றம் சுமத்துவது????

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

வருங்காலங்களில் வேலைவாய்ப்பின் தன்மை


இரு வாரங்களுக்கு முன்,” வருங்காலங்களில், வேலைவாய்ப்பு நிலை என்னவாக இருக்கும் சார்??? “ என்றார் நண்பர் ஒருவர். அதற்கு என்னுடைய நேரடியான பதில், “ இன்றைய நிலையை விட, இன்னும் மோசமாக மாறுமே தவிர குறைய வாய்ப்பில்லை. வேலைவாய்ப்பு கிடைக்கிற தன்மை குறையவே செய்யும்என்றேன். அந்த பதில், அவருக்கு வியப்பாக இருந்தது; வருத்தத்தினை வெளிப்படுத்தினார்.

இந்திய மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடைபெறும் சமூக மாற்றத்தினையும், பொருளாதார மந்தநிலை புரிந்து கொள்பவர்களுக்கும், உலக அளவில் மாறி வரும் பொருளாதார வலது சாரி சிந்தனையை புரிந்து கொள்பவர்களுக்கும், இந்நிலையில் ஆச்சரியம் இருக்க வாய்ப்பில்லை;

அதிலும் இந்தியாவில், நேரடியாக விவசாய துறையிலிருந்து, சேவை துறையினை நோக்கி பயணிக்கும் சமூக மனநிலையை புரிந்து கொள்ளும் போது, TNPSC Group- IV தேர்வில், 8,000 பணியிடங்களுக்கு, 22 லெட்சம் பேர் விண்ணப்பதில் ஆச்சரியம் இல்லை!!!

அதனை மேலும் உண்மையாக்கும் விதமாக, மேலுமொரு வருத்தமான செய்தியும் வந்துள்ளது. ரயில்வே துறையில் உள்ள 90,000 பணியிடங்களுக்கு, சுமார் 2.5 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இது வருத்தமான நிலையாக இருந்தாலும், உண்மையை வெளிக்கொணரும் கசப்பு டானிக்!!!!

மேற்கண்ட இரு தேர்வுகளிலும், காலி பணியிடங்களினை விட, சுமார் 20 மடங்கு அதிகமான நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது மிகவும் மோசமாக விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும்!!!! இந்தியாவின் வருங்காலத்தினை நிர்ணயம் செய்யும் தூண்கள், இவ்வாறு வேலையற்று வீட்டிலே முடங்கி கிடக்கும் போது, வருங்கால இந்தியா குறித்த புரிதல்கள் கானல் நீராகவே அமையும்!!!!!

வேலைவாய்ப்பின்மை என்பது இந்தியாவிற்கான பிரச்சனையாக மட்டும் பார்க்க இயலாது., உலகம் முழுமைக்குமான முழு முதற் பிரச்சனை!!! ஆனால், இந்த நிலையின் ஆழத்தினை புரிந்து கொண்டோமா??? என்பதே முக்கியமான செய்தி!!!

இவ்வாறாக…. இந்தியர் முழுமையான வேலைவாய்ப்பினை அரசினால் மட்டும் உருவாக்கி விட முடியுமா??? என்றால், நிச்சயமாக முடியாது என்று அறுதியிட்டு கூற முடியும். தேவையில் 10 சதவிதத்தினை பூர்த்தி செய்தாலே, நல்லது என்பேன்!!!

மற்ற 90 சதவீதமும், சுய தொழிலும், தனியார் துறையின் பங்களிப்பும் முக்கியம்!!!! தனியார் துறையின் பங்களிப்பிற்கு பண மூலதனமும், பொருள்/சேவையின் தேவையும் முக்கியம்!!! அது இரண்டின் நிலையினை, நான் விளக்க வேண்டிய அவசியமில்லை. வங்கிகள் கடன் கொடுக்க முடியாத அளவிற்கு, வாரா கடன் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. பொருள் மற்றும் சேவையின் தேவை, உலக பெருமந்தத்தினால் குறைவாக உள்ளது.

தனி மனித துண்டுதலும் இல்லாமல், வேலைவாய்ப்பு பிரச்சனையை குறைக்க இயலாது. பிரச்சனை நீடிக்குமானால், சமூக விரோத செயல்கள் அதிகமாகுமே தவிர குறையாது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Saturday, March 24, 2018

ஐபிஎல் - சூதாட்ட புகாரும், பொதுமக்களின் கேள்வியும்


சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி , சூதாட்ட புகாரில் ஈடுப்பட்டார்கள் என்று பிசிசிஐ சொன்னது..... சரி.... அவங்க சொன்னா கரெக்ட் தான் இருக்கும்ன்னு ஒத்துகிட்டேன்.

சரி....என்ன டா தண்டனை கொடுக்க போறீங்கன்னா.... ஆயுள் தண்டனையா? அல்லது அபாரமா? ன்னு பார்த்தா.... இரண்டாண்டுகள் அணிகளுக்கு தடைன்னு சொன்னிங்க!!!!!.... சரி.. .நீங்க சொன்ன கரெக்ட் தான் இருக்கும்ன்னு ஒத்துகிட்டேன்.

இந்த இரண்டு அணி வீரர்கள் எந்த தவற்றை செய்யலையா??? ரொம்ப நல்லவங்களாம்!!! சரி... அதனை ஒத்து கொண்டேன்!!!!

ரொம்ப நல்லவர்களான இரண்டு அணி வீரர்கள் விளையாடுவதற்கு, புனே மற்றும் குஜராத் என்று புதிய அணிகள் உருவாக்கப்பட்டது(திறமையை வீணாடிக்க கூடாது பாருங்க!!!!). இவங்களெல்லாம் கிரிக்கெட் விளையாட வில்லையென்றால், இந்திய விளையாட்டு துறைக்கு, மிகப்பெரிய இழப்பு அல்லவா? ... நீங்க சொன்னா கரெக்ட் தான் இருக்கும்ன்னு ஒத்துகிட்டேன்.

இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன். புனே மற்றும் குஜராத் அணிகள் நீக்கப்பட்டது. சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இணைக்கப்பட்டது. சென்னை அணிக்கு விசில் அடிங்கன்னு!!! நாங்களும் தோனி,ரெய்னான்னு பார்க்க கிளம்பிட்டோம்!!! ஏதோ... நிங்க சொன்னா கரெக்ட் தான் இருக்கும்ன்னு நம்பிக்கை தான்!!!

என்னா!!! நாங்கெல்லாம் அதி புத்திசாலிகள்!! திராவிட இனத்தவர்!!! மற தமிழர்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Friday, March 23, 2018

சமூக அங்கிகாரமும் ,முன் அனுபவமும்


நண்பர் ஒருவரோடு தொலைபேசியில் பேசி கொண்டிருந்தேன். அதன் மையம், சமூகத்தில் ஒருவனை ஆங்கிகாரம் செய்தல் குறித்து வந்தது.

இச்சமூகத்தில், ஒவ்வொருவனுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்கிறதா? என்ற கேள்வி கேட்டால், நிச்சயமாகஇல்லை என்ற பதிலேபெரும்பாலும் திரும்ப வரும்!!!!

ஒரு துறையில் இளங்கலை முடித்து, அதே துறையை சார்ந்த நிறுவனத்தில் வேலைக்கு விண்ணபிக்கும் போது, முன் அனுபவம் உள்ளதா? என்று கேட்பார்கள். அதிலும் படிப்போடு, pratical உள்ள துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும்,....... இந்நிலையே தொடர்கிறது.

இவ்வாறாக, ஒரு கல்வி பயிலும் துறையில் உள்ள பிரச்சனையை, ஒரு தனிமனிதனின் பிரச்சனையாக சமூகம் மாற்றி விடுகிறது.

வாய்ப்பு கொடுக்கும் போது, ஒருவனின் திறமையை அறிய முடியும். ஆதலால் தான், பல தொழிற்துறை நிறுவனங்களில் apprenticeship என்ற பயிற்சியை வைத்திருக்கிறார்கள்.

இன்னொரு கோணத்தில் யோசித்து பாத்தால்..... தனியார் நிறுவனங்கள் எதிர்ப்பார்க்கும் முன் அனுபவத்தில் தவறென்று இல்லை என்றே தோன்றுகிறேன்.

சுய அறிவற்ற, சமயோசித புத்தியற்ற, படித்ததை வாந்தியெடுக்கும் மாணவனை, பட்டப்படிப்பு படித்து விட்டான் என்பதற்காக, ஒருவனை தகுதியானவனாக, தனியார் நிறுவனம் எப்படி ஏற்று கொள்ளும்.

எது எப்படியோ....... ஒருவனை திறமையானவன் என்ற அங்கிகாரம் செய்வதில், பொதுசமூகமும், தனிமனித திறமையும் முக்கியாமானவை. இரண்டும் அறமற்ற நிற்கையில், திறமையானவன் புறக்கணிப்படுவதில் ஆச்சரியமில்லை: திறமையற்றவன் கொண்டாடப்படுவதில் ஆச்சரியமும் பட தேவையில்லை!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Wednesday, March 21, 2018

முதுமை- மற்றுமொரு மரணம்!!!


ஒவ்வொரு மனித வாழ்வியலும், கொடுமையான/கண்ணீர் சிந்தக்கூடிய தருணங்கள் நிறையவே உள்ளன. இப்படியாக ஒருவரை கேட்டால் போதும்.... பக்கம் பக்கமாக கதையே எழுதி..... புத்தகமே போடுமளவிற்கு சொல்லுவார்!!! அதையெல்லாம், உண்மையான துன்பங்களாக என்பது மில்லியன் டாலர் கேள்வி!!!

உண்மையாக, கடுமையான தருணங்கள் என சிலவற்றை நிச்சயமாக கூறலாம். மேல்நிலை தேர்வு, முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவன்!!!!! படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞன்!!!! திருமணமாகி, காலம் கடந்தும் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் இளம் தம்பதிகள்!!!! அவசிய தேவைக்களுக்காக கடன் வாங்கி, கொடுக்க முடியாமல் தவிக்கும் குடும்ப தலைவன்!!!! வங்கியில் பயிர் கடன் வாங்கியும், வறட்சியினால் நெல் கருகுவதையும் கண்டு, மனம் புழுகும் விவசாயி!!!! மகன்/மகள் செய்த தவற்றிற்காக குற்றவாளி கூண்டில் ஏற்றப்படும் பெற்றோர்கள்!!! மரணத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும் நோயாளி!!! இப்படியாக பட்டியல் நீளும்.

ஆனால், இவைகளை தாண்டியும், முதுமையின் தனிமை கொடுமையானது என்று நினைக்கிறேன். கை கால்கள் வலுவின்றி நடக்கு முடியாமலும், காது கேட்கும் திறன் குறைந்து கேட்க முடியாமலும், கண் பார்வை மங்கி பார்க்க முடியாமலும், உண்ணுவதற்கு... வகைவகையான உணவுகள் இருந்தும், உண்ண முடியாமலும், செலவழிக்க பணம் இருந்தும்..... செலவிட முடியாமலும், பெற்ற பிள்ளை மற்றும் வளர்த்த பேர பிள்ளைகளின் புறக்கணிப்பினாலும், நவீன அறிவியல் சாதனங்கள் இருந்தும் பயன்படுத்த தெரியாமலும், ஒவ்வொரு வீட்டிலும் புழுங்கி கொண்டிருக்கும் வயதான தாத்தா, பாட்டிகள் ஏராளம்.

பெரும்பாலும் கண்ணீர் சிந்தும் தருணங்கள் அனைத்தும், குறைந்த ஆயுளை கொண்டவை. ஆதலால், இளம் வயதில் எளிதாக கடக்கலாம். ஆனால், முதுமையில் அனைத்தும் நீண்ட கால ஆயுளை உடையது. ஆதலால், வலியின் தன்மை அதிகம்!!! வார்த்தை ஜாலங்களால் விவரிக்க இயலாதவை!!!

இந்தியா போன்ற நாடுகளில், முதுமை குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. மெத்த படித்தவர்கள் கூட, முதுமையின் உளவியல் புரிந்து கொள்வதில்லை. “இதுக்கு வேற இல்லைஎன்று பெற்றோர்களினை குறைசொல்லவே முயல்கின்றனர்; புறக்கணிக்கவே செய்கின்றனர்.

இந்திய குடும்ப அமைப்பியிலேயே, வயதானவர்களின் நலம் குறித்த புரிதல் அதிகமாகவே இருந்தது. ஆனால், நவீனத்துவம் சார்ந்த புரிதலை உள்வாங்கும் போது, முதுமையை குறித்த புரிதலை எளிதாக புறக்கணித்து விட்டோம். சீனாவில்.... வயதானவர்களை நன்றாக பார்த்து கொள்வது இன்றும் தொடர்கிறது.

ஒன்றை மறந்து விடாதீர்கள்!!! நாளையும் நம்மையும் முதுமை தாக்கும்!!! “பழுத்த மட்டை பார்த்து, பச்சை மட்டை இளித்ததாம்என்ற பழமொழியை மறந்து விடாதீர்கள்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Friday, March 16, 2018

தேர்தல் முடிவுகளும், வோட்டிங்க் மிஷினும்



தேர்தலோ/இடைத்தேர்தலோ முடிந்து ,வாக்குகள் எண்ணப்பட்டு வெளியிடப்பட்டவுடன் வரும் முதல் வார்த்தை...... வோட்டிங் மிஷனை பற்றி தான்!!!

தேர்தலில் தோற்ற.... ஒவ்வொரு கட்சியும், வோட்டிங் மிஷனில் நடந்த தில்லுமுல்லு வேலைகளினால் தோற்றோம் என்று அறிக்கை வெளியீடுவது வழக்கம்!!!!

அரசியல் கட்சிகள் தான், இவ்வறிக்கைகள் மூலம், தன்னை நியாயப்படுத்தி கொள்ள முயற்சி செய்கின்றன. சமூக நல ஆர்வலர்களும், எழுத்தாளர்களும், அறிவியலாளர்களும்... இதே கருத்தை முன் வைப்பதே ஆச்சரியமாக உள்ளது.

வோட்டிங் மிஷினில்..... தில்லு முல்லு வேலைகளை , நீருபணம் செய்யுங்கள் என்று அறை கூவல் இட்ட போது, யாரும் முன்வரவில்லை.

தில்லுமுல்லு வேலைகளுக்கு வாய்ப்புள்ளது என்று சில அறிவியலாளர்கள் சொன்னாலும், அதை முழுமையாக செயல்படுத்தி, வெற்றி பெற வாய்ப்பிருக்கிறதா? என்றால் கிடையாது என்று தோன்றுகிறது.

இது மாதிரியான செய்திகளை கடக்கும் போது, உதட்டில் வரும் புன்னைகையோடு கடந்து விடுவது, என்னை போன்ற முட்டாள்களுக்கு நல்லது!!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Thursday, March 15, 2018

மலையேற்றம்- சுற்றுலாவின் அடுத்த பரிணாமம்


இடத்தினை, முல்லை நிலமாக பிரித்த தமிழ்சமூகத்திற்கு மலையில் ஏறுதல் என்பது புதிதல்ல!!! அதே சமயத்தில், சுற்றுலாவாக மலையேற்றம் செய்வது என்பது பத்தாண்டுகளாக அதிகரித்து வருகிறது என்பது உண்மை. இதன் உளவியல் சார்ந்த மன மாற்றத்தை புரிந்து கொள்வதும் அவசியம் என்று நினைக்கிறேன்.

இடம்பெயர்தல் சமூகத்திற்கு, சுற்றுலா என்பது அவசியம் இல்லாமல் இருந்தது. ஆனால், மனிதன் நாகரீகம் என்ற பெயரில், ஒரிடத்தில் தங்க ஆரம்பித்தது முதல், அதன் எதிர்மறையாக மற்றொரு இடத்தினை சுற்றுதல் என்பது காலத்தின் தேவையாக மாறியது.

தன்னிறவை பெற்ற மனித சமூகம், மனநிறைவிற்காக, வேறோரு சூழ்நிலைக்கு பயணிப்பதும் நடக்க ஆரம்பித்து விட்டது. ஆதலால் தான், மேற்கத்திய நாடுகளிலிருந்து சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம்!!!

சுற்றுலாவின் ஆரம்ப கட்டத்தில், இயற்கை ரசிப்பதற்கான பயணமாக அமைந்தது. ஆனால், கால ஒட்டத்தினால், நவீன அறிவியல் உலகம், புகைப்படங்களாகவும், உயிரோட்டமிட்ட திரைப்படங்களாகவும் வெகு கொணர்ந்ததால், இயற்கை அழகை ரசிக்கும் பார்வை வெகுவாக குறைந்துள்ளது.

அந்த இடத்தில், இயற்கை ரசிப்பதோடு கூடிய, பரபரக்கும், ”அடுத்த என்ன??” என்று கேட்க கூடிய அட்வெஞ்சரஸ் சுற்றுலாவின் தேவை ஏற்படுகிறது. இதன் ஒரு பகுதியே மலையேற்றமும்!!! பாராகிளாடிங்க், கிஷ்கிந்தா போன்ற பொழுதுபோக்கு பூங்காக்கள் இவையில் அடங்கும்!!!

நான்கிற்கு நான்கு சுவற்றில் அடைப்பட்டு கிடக்கும், நகர மனிதனுக்கும், இயற்கையோடு கூடிய கிராம வாழ்க்கையும் கூடுதல் ஈர்ப்பை தருவதில் வியப்பேதும் இல்லையே!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்