இடத்தினை,
முல்லை நிலமாக பிரித்த தமிழ்சமூகத்திற்கு
மலையில் ஏறுதல் என்பது புதிதல்ல!!!
அதே சமயத்தில், சுற்றுலாவாக மலையேற்றம் செய்வது என்பது பத்தாண்டுகளாக
அதிகரித்து வருகிறது என்பது உண்மை. இதன்
உளவியல் சார்ந்த மன மாற்றத்தை
புரிந்து கொள்வதும் அவசியம் என்று நினைக்கிறேன்.
இடம்பெயர்தல்
சமூகத்திற்கு, சுற்றுலா என்பது அவசியம் இல்லாமல்
இருந்தது. ஆனால், மனிதன் நாகரீகம்
என்ற பெயரில், ஒரிடத்தில் தங்க ஆரம்பித்தது முதல்,
அதன் எதிர்மறையாக மற்றொரு இடத்தினை சுற்றுதல்
என்பது காலத்தின் தேவையாக மாறியது.
தன்னிறவை
பெற்ற மனித சமூகம், மனநிறைவிற்காக,
வேறோரு சூழ்நிலைக்கு பயணிப்பதும் நடக்க ஆரம்பித்து விட்டது.
ஆதலால் தான், மேற்கத்திய நாடுகளிலிருந்து
சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம்!!!
சுற்றுலாவின்
ஆரம்ப கட்டத்தில், இயற்கை ரசிப்பதற்கான பயணமாக
அமைந்தது. ஆனால், கால ஒட்டத்தினால்,
நவீன அறிவியல் உலகம், புகைப்படங்களாகவும், உயிரோட்டமிட்ட
திரைப்படங்களாகவும் வெகு கொணர்ந்ததால், இயற்கை
அழகை ரசிக்கும் பார்வை வெகுவாக குறைந்துள்ளது.
அந்த இடத்தில், இயற்கை ரசிப்பதோடு கூடிய,
பரபரக்கும், ”அடுத்த என்ன??” என்று
கேட்க கூடிய அட்வெஞ்சரஸ் சுற்றுலாவின்
தேவை ஏற்படுகிறது. இதன் ஒரு பகுதியே
மலையேற்றமும்!!! பாராகிளாடிங்க், கிஷ்கிந்தா போன்ற பொழுதுபோக்கு பூங்காக்கள்
இவையில் அடங்கும்!!!
நான்கிற்கு
நான்கு சுவற்றில் அடைப்பட்டு கிடக்கும், நகர மனிதனுக்கும், இயற்கையோடு
கூடிய கிராம வாழ்க்கையும் கூடுதல்
ஈர்ப்பை தருவதில் வியப்பேதும் இல்லையே!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment