நேற்று இரவு, ஒர் பெண்மணி கிளினிக்கிற்கு வந்தார். தான் சென்னையில்
உள்ள மருத்துவமனையில், வெண் புள்ளிக்காக நாட்டு மருந்து எடுத்து கொண்டிருப்பதாகவும்,
தற்போது நடுக்கலோடு கூடிய சுரம் இருப்பதாகவும் கூறினார்.
சென்னையில் உள்ள மருத்துவரை தொடர்பு கொண்ட போது, ” நாட்டு
மருந்து கடையில் போய் போன் பண்ணுங்கள், அங்குள்ள கடைக்காரிடம் சில மருந்துகளை செல்லுகிறேன்…
நீங்கள் சாப்பிடுங்கள்… எக்காரணத்தை கொண்டு ஆங்கில மருத்துவத்தை நாடி விடாதீர்கள்”
என்று சொல்லி இருக்கிறார்.
என்னிடம் போனை கொடுத்து பேச சொன்ன போது, அவர் ஹோமியோபதி மருத்துவர்
என்று தெரிந்து கொண்டேன். அருகில் உள்ள ஹோமியோ மெடிக்கலுக்கு அனுப்பி வைத்தேன்.
சரி… நான் விஷயத்திற்கு வருகிறேன்.. இந்த மாதிரியான சூழ்நிலைகளை
பல தடவை கண்டாகி விட்டது. இந்த இடத்தில் முக்கியமான கேள்வி எழுகிறது. ஒரு நோயிற்கு
ஒரு மருத்துவ முறையில் மருந்து எடுத்து கொள்ளும் போது, சாதாரண/ அசாதாரண சூழ்நிலைகளில்
வேறொரு மருத்துவ முறையை கையாள கூடாதா?? அல்லது எடுத்து கொள்ளலாமா??
இந்த செயல்முறை, சித்த மருத்துவம்/ஆயுர்வேதம்/யுனானி மற்றும்
ஆங்கில மருத்துவம் என்ற வேறுபாடெல்லாம் இல்லை. எல்லா மருத்துவர்களும், இதே செயல்முறையை,
சில மருத்துவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இது சரியா நடைமுறையா அல்லது தவறா என்று கேள்வி
என்னுள் எழுகிறது.
என்னுடைய அனுபவத்தில், பட்ட மேற்படிப்பு முதல் இன்றைய கால
கட்டம் வரை, தேவைப்பட்டால், மாற்று மருத்துவத்தை பரிந்துரைக்க செய்கிறேன். அதிலும்
குறிப்பாக அசாதாரண சூழ்நிலைகளில், ஆங்கில மருத்துவத்தை பிரயோகம் செய்யுங்கள் என்றே
சொல்லி வருகிறேன். இது வரை எந்த பக்க விளைவுகளை கண்டதில்லை. ஆங்கில மருந்துகளின் செயல்படும்
தன்மையை புரிந்து கொண்டதால், சிலவற்றை சேர்த்தே அனுமதித்து இருக்கிறேன்.
மருந்துகளின் சேர்ந்து கொடுப்பதால் உள்ள பாதிப்புகள பற்றிய
கள ஆய்வுகள் இல்லாத போது, இதனை கையாள்வது கடினமான காரியம் என்பதை, என்னால் உணர்ந்து
கொள்ள முடிகிறது. ஆங்கில மருந்துகளை (drug-drug interactions)சேர்த்து உபயோகிப்பதை
ஏற்படும் பாதிப்புகளை விட, மூலிகை மருந்துகள் மற்றும் ஆங்கில மருத்துவத்தை(herbal-drug
interactions) சேர்த்து உபயோகம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறைவு என்பதை அறிவியல்
இதழ் கூறுகின்றன.
மருத்துவ முறைகளின் ஒருகிணைப்பை பேச வேண்டி தருணத்தில், ஒவ்வொரு
மருத்துவ முறையினரும், மற்றைய மருத்துவ முறையினரை விரோத போக்கோடு பார்ப்பது எவ்வகையில்
சிறந்ததாகும்??
எந்தவொரு மருத்துவ முறையும், எந்தவொரு நோயினை முழுமையாக குண்ப்படுத்த
இயலாது என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில், மருத்துவ முறையின் ஒருக்கிணைப்பு அவசியமாகிறது.
நோயிற்காகவே மருந்தே தவிர, மருந்திற்காக நோயாளியோ/நோயோ அல்ல.
நோயின் சூழ்நிலையினை வைத்து முடிவு செய்யாமல், தட்டையான மனநிலையோடு,
ஒரு மருத்துவத்தை பின்பற்றி இருக்கும் போது, மாற்று மருத்துவத்தை அணுக கூடாது என்பது நியாயமா???
நீண்ட நாட்களாக, என் மனதில் உள்ள கேள்வி. என்னுடைய மருத்துவ
பயிற்சி அனுபவ காலம் என்பது மிகக் குறைவு. மருத்துவ மாமேதைகளிடமிருந்து பதிலை எதிர்ப்பார்க்கிறேன்….நன்றி
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
