ஒரு ஆண்/பெண், மற்றொரு பாலினத்தை காணும்
போது, அவர்கள் அறியாமலே
மற்றவரின் மீது ஈர்ப்பு வந்து விடுகிறது. (அதற்கு காரணம் என்ன வேண்டுமானாலும்
இருக்கட்டும்). காதல் மலர்ந்ததும், ” மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும். பேச வேண்டும்” என்று மனம் பதப்பதைக்கிறது.
காதல் திருமணம் நடந்து, பல காலம் கடந்து பிறகு, ஈர்ப்பு குறைந்து மற்றொரு பாலினத்தின் வெறுப்பு தன்மையே அதிகமாகிறது. ஆரம்ப
காலத்தில் ஈர்ப்பு கொண்ட மனமே, வெறுப்பை நோக்கி பயணிக்கிறது(இது நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்திலும்).
ஏன் இந்த வேறுபாடு???
அதற்கு விடை
மனமே!!!! காதலிக்கும் போது,
தன்னை விட்டு
காதல்பிரிந்து போய்விடுமோ என்ற பயம், அதீத ஈர்ப்பை உண்டு பண்ணுகிறது. திருமணத்திற்கு பின், தனக்கனாவள்/ன் தான் என்ற
பிறகு ஈர்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாக தோணுகிறது.
மற்றொரு காரணம், இளமைக் காலம்
எதிர்ப்பார்ப்புகள் நிரம்பியவை.
காலம் கடந்து செல்ல, செல்ல, எதிர்ப்பார்ப்புகள்
குறைந்து, எதர்த்தாத்தை புரிந்து
கொள்ளும் காலம் வரும். இதனால் ஈர்ப்பு தன்மை குறையலாம் அல்லது குறைந்தது மாறி
கானல் நீராக மாறலாம்.
மோடி/ அரவிந்த் கெஜரிவால் போன்றயை அரசியல்வாதிகள், வருவதற்கு முன்னர்,
நிறைய
எதிர்ப்பார்ப்புகள் இருந்தது. அவர்களது செயல்பாடுகள் , மக்கள் எதிர்ப்பார்த்தை விட குறைந்ததால், அவர்கள் மீது வெறுப்பு வந்தது மாதிரி தோன்றியது. இதே மாதிரி, பெரிய
எதிர்ப்பார்ப்புகளில் எடுக்கப்பட்ட படங்கள், பெரும்பாலும் தோல்வியிலே முடிந்தது.
எதிர்ப்பார்ப்புகள் நிறைந்த மனதால், இத்தகைய வேறுபாடுகளும், முரண்பாடுகளும் தோன்றுகிறது. எதிர்ப்பார்ப்புகளை சிறிதளவு குறைந்து
பயணித்தால், வாழ்க்கையில் தோல்விகளை
குறைக்கலாம். வாழ்க்கை பயணம் சுகமாகும்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment