Monday, June 30, 2014

பலியா? நரபலியா??

போரூரை அடுத்துள்ள மவுலிவாக்கம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த இரண்டு 11 அடுக்கு மாடி கட்டிடங்களில் ஒன்று இடிந்து விழுந்து தரை மட்டமானது. நேற்று மாலை நடைபெற்ற இந்த விபத்தை தொடர்ந்து, விடிய விடிய மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 26 பேருக்கு போரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கட்டுமான நிறுவனம் இடி தான் காரணமென இயற்கையின் மீது பழி போட்டு, தப்பிக்க நினைக்கிறது. அப்படி நடக்க வாய்ப்பு இல்லை. அவ்வாறு நடக்குமென கற்பனையாக வைத்து கொண்டாலும், இடிக்கே தாங்காத கட்டிடத்தில் நாம் எப்படி குடியிருக்க முடியும்???

CMDA யும் அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடு இல்லை எனவும் கூறுகிறது. எங்களிடம் மண் பரிசோதனை செய்து அனுமதி வழங்கும் அளவிற்கு தொழில்நுட்ப அலுவலர்கள் இல்லை என்கிறது. சில வருடங்களுக்கு முன்னர், சென்னை உயர் நீதிமன்றமும் கட்டிடங்கள் கட்டுவதில் உள்ள முறைகேடுகளை சுட்டி காட்டியும் மாறவில்லை.

ஏரியின் மாவட்டமான காஞ்சிபுரத்தில் முற்காலத்தில் ஏரி இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். அப்படி இருக்கையில் அடிப்படை கட்டுமான சரியாக போடாமல் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் அருகாமையிலே என்று விளம்பரம் படுத்தும் கட்டுமான நிறுவனங்கள் பெரும்பாலும் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை கை காட்டுகின்றன. அப்படிப்பட்ட கட்டுமான நிறுவனங்களை எவ்வகையில் நம்புவது???

இந்தியாவில் போன்ற வளரும் நாடுகளில், அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சி அதிகமாக வேண்டும் என்று சொல்ல கூடிய காலத்தில் , கட்டுமானம் இப்படி இருக்கலாமா???

அரசாங்க ஊழியர்களை கேட்டால், ஆட்கள பற்றாக்குறை, அதிகமான வேலைப்பளு, எங்களிடம் தொழில் நுட்ப அலுவலகர்கள் இல்லை என்று ஏதாவது ஒரு பதிலை சொல்லி தப்பித்து கொள்வார்கள்.

கடவுள் இயற்கையின் வழியே, அவ்வப்போது  அரசாங்கத்திற்கு சுட்டி காட்டினாலும், தொடர்ந்து தப்புகள் நடைபெற்று தான் வருகின்றன. தவிர்க்க முடியாத நிகழ்வை போல் காட்சியளிக்கின்றன.

இது மாதிரியான நிகழ்வுகளில் பாதிக்கப்படுவது, ”சராசரி மனித உயிர் தானே, நம் உயிரா என்ன???” என்ற மனநிலையோடு மனிதன் வாழ்கின்றான். இரண்டு நாளைக்கு தொலைகாட்சியில் பார்த்தும் பேப்பரில் படித்தும் விட்டு, உதட்டளவிலும் மனதளவிலும் உச்கொட்டி விட்டு, அடுத்த நாளிலிருந்து சீரியலையும் கால்பந்தையும் சீரியஸ் பார்க்க போய் விடுவார்கள். டாஸ்மார்க் கடையை அடுத்து எங்கு ஆரம்பிக்கலாம் என்று அரசாங்கமும் தீவிரமான யோசனையில் இறங்கி விடும்.

இன்றைய நிகழ்வு(இறப்பு) ….நாளைய வரலாறு ஆகலாம்….
ஆனால்வரலாற்று பதிவில்
.பாடம் கற்று கொள்ளாமல் இருந்தால்பயனில்லை…. 

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||  


Sunday, June 22, 2014

Why not

மக்கள் விறகு, விரட்டி கொண்டு சமையல் செய்த காலம் மறைந்து, எரிவாய்வு மூலம் சமையல் செய்கின்றனர். வாழ்க்கை முறை மாற்றத்தை தன்னுள் ஏற்படுத்தி கொண்டனர். அதற்காக அரசும் மானிய விலையில் எரிவாயு வழங்கி வருகிறது.

மத்திய அரசு சமையல் எரிவாய்வு சிலிண்டர் எண்ணிக்கையை நிர்ணயம் செய்தால், அதற்கான வழங்கப்படும் மானியத்தை குறைத்து விடலாம் என எண்ணியது. அதன் படி வருட்த்திற்கு 9 சிலிண்டர் மட்டுமே மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ராகுல் காந்தி வற்புறுத்தலால் 12 ஆக எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

மத்திய ரிசர்வ் வங்கியும் நிதி ஆணையமும் மானியத்தை குறைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. புதிய அரசும் மானியத்தை குறைப்பதற்கான வழிமுறைகளை யோசித்து வருகிறது. சிலிண்டர் மீதான மானியத்தை சிறிது, சிறிதாக குறைத்து, பின்னர் முழுவதும் நிறுத்தி விடலாம் என யோசித்து வருகிறது. இதனால், சுமார் 8,000 கோடி மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. 

அதே சமயத்தில், வறுமை கோட்டிற்கு கீழுள்ள ஒருவனுக்கும் 10 லட்ச ரூபாய் வருமான வரி கட்டுபவனுக்கும் ஒரே மாதிரியான சிலிண்டர் மானியத்தை வழங்கி வருகிறது. இந்த முறை ஏற்று தக்கதாய் இல்லை.
அரசாங்க வேலை செய்பவர், தொழிலதிபர்கள், ஆகியோரை விடுத்து, கிராம ஏழை மக்களுக்கு மானியத்தை தொடர்ந்து வழங்கி, மக்களின் மீதான சுமையை குறைக்கலாம். வருமான வரி செலுத்துவோரின் அடிப்படையில், மானியத்தை வழங்க மத்திய அரசு பரிசிலிக்கலாம். அதற்கு அரசு ஆவண செய்யலாமே???

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||

||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||

மாணவனின் கனவா மருத்துவன்

நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பை தேர்ந்தெடுத்த அனைத்து மாணாக்கர்களுக்கும், எனது உளமார்ந்த வாழ்த்துகள்.

மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் நாளை முடிவடைகிறது. இன்றுடன் OC, BC, MBC, BCM போன்ற மாணவர்களுக்கான இடங்கள் முடிந்து விட்டன. இவை பெரும்பாலும் 197-198 கட் ஆப் மதிப்பெண் அளவிலே முடிவடைந்து உள்ளது. நாளை SC, ST மாணவர்களுக்கு நடைபெற உள்ளது.

OC, BC, MBC, BCM போன்றவர்களில் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய மதிப்பெண் சதவீதம் 98-99% அளவிற்கு இருந்தும், சீட் கிடைக்கவில்லை என்பது மன வறுத்தமான விஷயம்.

நுழைவு தேர்வு தடை செய்யப்பட்ட பிறகு, இது மாதிரியான மன நெருக்கடிகளை மாணவர்களும், பெற்றோர்களும் சந்தித்து வருவது வருட வருடம் அதிகரித்து வருகிறது. இதற்கு காரமென்ன????

கடந்த பல ஆண்டுகளாக, மாணவர்கள் பெறும் மதிப்பெண் அதிகரித்து வருகிறது. அதற்கு சந்தோஷ பட்டாலும் கல்வி திறனில் பெரிய அளவிற்கு மாறுதல் இல்லை என்றே கல்வியாளர்கள் கூறுகின்றனர். IIT  மற்றும் UPSC தேர்வுகளிலும் தமிழக மாணவர்களின் தேர்ச்சி சதவீத உயரவில்லையே என எதிர்கேள்வி கேட்கிறார்கள்.

மாணவர்களின் படிப்பு திறன் அதிகரித்து இருப்பதால், இனிமேல் மதிப்பெண் குறைவதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார் ஆசிரியர்.
இன்னொரு காரணமாக, மருத்துவ படிப்பின் மீதான மோகம் அதிகரித்து இருப்பதும் உணமை. மருத்துவர்களின் மீதான அதிகப்படியான மரியாதையும், எளிதில் பணம் பெறக்கூடிய வழியாக இருப்பதால், அந்த பாதையில் பயணிக்க ஆசைப்படுவர்கள் அதிகமாகி வருகிறது.

இன்று மருத்துவ துறை, பணம் போட்டு முதலீடு பண்ணும் தொழிலாக மாறி இருக்கிறது என்றால் மிகையாது. இந்த ஊளவியலை பயன்படுத்தி, மாணவர் மற்றும் பெற்றோரின் பணம் சாம்பாதிக்கும் வெளி நாட்டு மற்றும் உள் நாட்டு கும்பல்கள் ஏராளம். இவற்றின் மதிப்பு பல லட்சங்களிலிருந்து சில கோடிகள் வரை இருக்கலாம்.
இஞ்சினிரியங் படிப்பின் மீதான மதிப்பும் நம்பிக்கையும் குறைந்ததும், மற்ற துறையை பற்றி விழிப்புணர்வு இல்லாத்தும் முக்கிய காரணம் ஆகும்.
மாணவர்களும் பெற்றோரும் துணை மருத்துவ படிப்பு, தகவல் தொழில் நுட்ப துறை, ஊடகவியல் துறை, கட்டுமான துறை, மார்கெட்டிங் துறை, விவசாய துறை, சினிமா போன்ற வளரும் துறைகளை பற்றிய அறிவும் தேவைப்படுகிறது. அதனை பள்ளி கூடங்களிலே மாணவர்களுக்கு தெரிய வைக்க வேண்டியது ஆசிரியரின் கடமை.

மருத்துவம் படித்தால் மட்டுமே வாழ்க்கை என்ற உளவியலை மாணவர் மனதில் சமுதாயம் ஏற்படுத்தி விடுகிறது. 2 வருட கடின உழைப்பு, இரவு பகல் தூக்கமின்மை, ஒழுங்கான உணவு இல்லாமை, டிவி, சினிமா பார்க்க முடியாமை, பெற்றோரின் தொடர்ந்த மன அழுத்தம் போன்ற பல மன இன்னலை சந்தித்து நல்ல மதிப்பெண் பெற்றும், மருத்துவராக முடியாத நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

மதிப்பெண் பெற்றதான் வாழ்க்கை
மருத்துவர் ஆன மட்டும் தான் வாழ்க்கைஎன்ற ஊளவியலை விட்டு வாருங்கள் தம்பி, தங்கைகளே!!!! பள்ளி போகாமாலே சாதிக்க பிரபலங்கள் ஏராளம். டெண்டுல்கர், பில்கேட்ஸ், காமராசர் போன்று பட்டியல் நீளும்.

இந்த உலகம் பெரிது!!! வாய்ப்புகள் ஏராளம்!!!!
நம்பிக்கையோடு புதிய பாதையில் அடி எடுத்து வை!!!!
வெற்றி உன்னை கை கோர்க்கும்!!!!

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||

||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||

சற்று யோசித்து பார்க்கலாமே

நாகரிகம் என்பது
புற வளர்ச்சி

பண்பாடு என்பது
அக வளர்ச்சி

நாகரித்தை வளர்த்தவர் மேலை நாட்டினர்
பாண்பாட்டை வளர்த்தவர் இந்தியர்

பண்பாட்டை
நாகரிகம் என்ற போர்வையினால்
அழிக்கப்படுவது தான் வேதனை

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||

||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||

ஆசை


==ஆசையே துன்பத்திற்கு காரணம்- புத்தர்======
எந்த ஒரு பொருளின் அல்லது செயலின் மீதும் அதிகமாக ஆசை கொண்டால், அதிலிருந்து நீ வெளிவருவதும் கடினம். அது இல்லாமல், உன்னாலும் வாழ முடியாது. வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாது, அனுபவிக்கவும் முடியாது

====அத்தனைக்கு ஆசைப்படு- ஜக்கி வாசு தேவ்=====

எந்த ஒரு ஒரு பொருளின் அல்லது செயலின் மீதும் அதிகமாக ஆசை கொண்டால் தான், அந்த இலக்கை அடைய முடியும். நீ விரும்புவதை பெற முடியும். உன் ஆசையை நிறைவேற்ற முடியும். நீ வெற்றி அடைவாய்.......

இரண்டு பேரும் ஆன்மிகத்தில் ஆய்வு பூண்டு மக்களின் செவ்வியல் வாழ்வினை மெருகேற்றியவர்கள். அப்படி இருக்கையில் நாம் ஏதை பின்பற்றுவது???? ஆசை படுவதா??? ஆசையை வெறுப்பதா?

வாழ்வியல் செயல்முறைகளை பல நேரங்களில் மனம் தான் நிர்ணயம் செய்கிறது. அப்படி பட்ட வேளையில், மனத்தின் தனமையை பொறுத்து வாழ்க்கை மாறும். அந்த மனவெழுச்சியின் இரு பக்கங்களை தான் , இரு ஆன்மிக புலவர்களும் எடுத்து கூறுகின்றனர்.

மனிதனின் மனம் பல விதங்களில் பறைசாற்ற கூடியவை. அவைகளை செம்மை படுத்த வேண்டியது மானுடனின் தேவை. அதை நீங்கள் எந்த வகையில் செம்மை படுத்துகிறீர்கள் என்பது உங்கள் மனநிலையை பொறுத்து அமையும். அவற்றின் இரு கோணங்கள் தான் இவை. ஆசையை வெறுப்பதா???? ஆசை படுவதா???? முடிவு உங்கள் கையில் ......

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 

 

Saturday, June 14, 2014

கேமரா புகைப்படங்கள்

காலை கதிரவனின் பின்புலத்தில் கோவில் கோபுரம்

சற்று யோசித்து பார்க்கலாமே

தன்னை பொதுநலவாதியாக
காட்டி கொள்ளும் ஒருவன்.....
தன் எப்போதும் பொதுநலவாதி என்று
நினைத்து கொள்ளும் ஒருவன்......
அவசர காலங்களில்.....
தன் உயிரை மட்டும்
காப்பாற்ற நினைக்கும் மனசு
அந்த நேரத்தின்
பொதுநலவாதி இறந்து விடுகிறான்
மனதளவில்.........

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


கவிதை-(அ)நாகரிகம்

அங்கும் இங்கும்
கிழிந்து தைத்த உடைகள்…..
பசி மயக்கத்தில்
தள்ளாடி நடந்த கால்கள்…..
பிச்சைக்காரனை
நினைவு படுத்தினாள்
மாடலிங் பெண்……




|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


சிந்தனை துளிகள்

உலகின் பலம் வாய்ந்த வார்த்தைகள் இரண்டு.....

====தன் தவற்றை உணரும் போது
சொல்லும் sorry
====அடுத்தவர் செய்த உதவியை
மறவாத thanks.

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


Sunday, June 1, 2014

சினிமா துறையின் காட்சி பொருளா சித்த மருத்துவன்?

கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம், பரத் நடிக்கும் ஐந்தாவது தலைமுறை சித்த வைத்திய சிகாமணிஎன்ற திரைப்படம் தயாரித்து வருகிறது.

பரத் ஒரு பரம்பரை சித்த வைத்தியர் என்றும், அவர் நந்திதாவை காதலிக்கிறார். அந்த விஷயம் நந்திதாவின் அப்பாவிற்கு தெரிய வர, பரத்தை ஆள் வைத்து அடிக்கிறார் பின்னர் மருத்துவர் என தெரிந்து கொண்டதும், நந்திதாவின் அப்பா ஓத்து கொள்கிறார். சித்த வைத்தியர்னு தெரிஞ்சா ஒத்து கொள்ளமாட்டார்கள். காதலிக்கிற பொண்ணும் கிடைக்க மாட்டாள், இதனால சித்த வைத்தியரான பரத், எம்.பி.பி.எஸ் டாக்டரா நடிச்சு பிரச்னைகளை சமாளிச்சு எப்படி நந்திதாவை கை பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

இந்த கதை களம், சித்த மருத்துவர்களை கேலி செய்வதாக அமைக்கப்பட்டு இருப்பது கவலையளிக்கிறது. கதையின் தன்மைக்காகவும், காமெடிக்காவும் சித்த மருத்துவத்தை கீழ் தரமாக சித்தரிக்கிறார்கள். பல்வேறு கால கட்டங்களில் ஊடக துறையில் இத்தகைய நிகழ்வுகள்  நடந்தே வருகிறது. நவீன சரஸ்வதி சபதம், பிதாமகன், உன்னை நினைத்து போன்றவை உதாரணங்கள். டிவிக்களில் வரும் மருத்துவ விளம்பரங்களை கொண்டே அமைப்பதாக திரைத்துறையினரும் காரணமாக கூறுகின்றனர்.

மக்களிடம் எடுத்து செல்வதற்கு, எல்லா துறையிலும் விளம்பரங்கள் அவசியமென்பது காலத்தின் கட்டாயமாகியது. மருத்துவ விதிமுறைகளுக்கு எதிராகமருத்துவ துறையிலும் விளம்பரங்கள் புகுந்து இருப்பது வருத்தமே.. .அதை அரசும் மருத்துவ கவுன்சிலும் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது.

சித்த மருத்துவமானது ஆண்மை குறைவு, குழந்தையின்மை போன்றவற்றை மட்டுமே தீர்க்கமென வெளிக்காட்ட படுவது ஆச்சரியம் அளிக்கிறது. சிக்கன்குனியா, டெங்கு காய்ச்சல் போன்ற அவரச கால நோய்களை சித்த மருத்துவம் குணப்படுத்தியதை வரலாறு மறந்து விட்டதா?. பாரம்பரிய மருத்துவ முறைகளால், தீர்க்க முடியாத நோய்களை குணப்படுத்தினாலும் ஊடகத்தின் கண்களுக்கு கொண்டு செல்லாதது மருத்துவர்களின் குறைபாடு.

 கடந்த நூற்றாண்டில் காலடி எடுத்த வைத்த ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக பாரம்பரிய மருத்துவம், வளரவில்லை என்பது நிதர்சனம். அதற்கான நடைமுறைகளை அரசும் மருத்துவர்களும் மருத்துவ சமூகமும் முன்னெடுத்து செல்லாதது சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கு தடையாகியது. மக்களிடம் கொண்டு செல்வதில் ஏற்பட்ட குறைபாடே, பாரம்பாரிய மருத்துவத்தை மறந்து விட ஏதுவதாக மாறியது. இதை சித்த மருத்துவ சமூகம் மறந்து விட்டது ஏனோ?..

சினிமா துறையில் காட்சி பொருளாக மாறி விட்ட சித்த மருத்துவர்களின், காட்சி பிழைகளை நீக்க சினிமா துறை முன் வர வேண்டும். உண்மை நிலையை பிரதிபலிக்க விட்டாலும், பிழையான பிரதிபலிப்பை காட்ட வேண்டாம் என்பதே சித்த மருத்துவர்களின் கோரிக்கை..

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 




சிந்தனை துளிகள்

சிலருக்கு பணம் இருப்பதால் பிரச்சனை
பலருக்கு பணம் இல்லாததால் பிரச்சனை

மொத்தத்தில் பணம் தான் பிரச்சனையா?
இல்லை!!! இல்லை!!!
மனிதனின் மனம் தான் பிரச்சனை

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 




சிந்தனை துளிகள்

எழைக்கு ஆயிரம் ரூபாய் கடன்
பணக்காரனுக்கு லட்ச ரூபாய் கடன்
நாட்டுக்கு ஆயிரத்து லட்சம் கோடி கடன்

ஆகையால்,,,,,

கடனை போல பிரச்சனையும்
நீ தாங்கும் அளவிற்கு
கடவுள் கொடுப்பார்

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 



சிந்தனை துளிகள்

உங்களின் தேவைக்காக
செல்வத்தை சேமியுங்கள்....
உங்கள் தலைமுறையின்
வளர்ச்சிக்காக சேமியுங்கள்......

ஆனால்,

உங்கள் தலைமுறையை
சோம்பேறியாக்க
சேமிக்காதீர்கள்


|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||

||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||  

சிந்தனை துளிகள்

இலக்கு எளிது!!!

உலகம் உன்னை என்னவாக
மாற்ற விரும்புகிறது என்று தெரிந்து கொள்

அதன் பிறகு
நீ விரும்புவதை முயற்சி செய்!!!

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்||||||||||||||||||||| 


சிந்தனை துளிகள்

தலைவன்
அவன் அவனுக்காக வாழ கூடாது
ஆயிரம் மனங்களுக்காக வாழ வேண்டும்

அவனது முடிவு
தொண்டர்களின் மனங்களை
பிரதிபலிக்க கூடியவையாக இருக்க வேண்டும்
அவன் முடிவை திணிக்க கூடாது

தலைவன் உருவாக்கப்படுவதில்லை
தலைவன் வெளி கொணரப்படுகிறான்

|||||||உங்களை போல் ஒருவன்||||||
||||||||||||உங்களில் ஒருவன்||||||||||||||||
||||||||||||||||||வேதை குமார்|||||||||||||||||||||