நேற்றைய தினம்...
சிறப்பு மருத்துவ முகாமிற்கு 60 வயதுதக்க பெண்மணி வந்திருந்தார். அவரது மருத்துவ பதிவேடுகளை பார்த்த போது...
ஆரம்ப சிறுநீரகம் செயலிழப்பு, சர்க்கரை வியாதி, இடுப்பு வலி மற்றும் மூட்டு வலி இருப்பதை அறிந்தேன்.
” வீட்டுல ரெஸ்ட் எடுக்கிறீங்களா?” என்றேன்.
“ எங்க சார்.... வீட்டில எல்லா வேலையும்....... நான் தான் செய்றேன்”
“ மருமக... படிச்சிட்டு தான்..... அதனால... எந்த வேலையும் செய்றதில்லை...... ஏன் வீட்டை விட்டு வெளியே வர்றதில்லை.... “ என்று தொடர்ந்தார்.
“.........”
” இப்ப 10-11 மணி... ஆகியிருக்கும்....இப்பத்தான் ..... படுக்கையை விட்டு எழும்பி... குளிச்சிருக்கும்.... “ என்றார்.
“ இதெல்லாம் பேசி என்னவாக போகுது??” என்றார் அவரின் கணவர் வெறுப்பாக... ( அவர் உடம்பு குணமாவதை பற்றி சொன்னரா.... வீட்டு பிரச்சனை பற்றி பேசினறா......)
அவரிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை... ஆனால் ரெஸ்ட் எடுத்துகிட்டு ...... மாத்திரையை சாப்பிட்டு.... ஆயிலை தேய்ச்சி வலி குறைஞ்சிடும் என்று சொல்லி அனுப்பினேன்.
மனம் எதோ செய்தது????
--------------------------------
மருமகளை குற்றம் சொல்வதா??
வீட்டு வேலைகளை..... பெண் சமூகம் மட்டுமே செய்ய வேண்டும் என்ற வரையறை கொடுத்த சமூகத்தையா??
வயது முதிர்ந்த நிலையிலும்.... வேலையை அனுமதிக்கும் இளைய சமூகத்தினரையா??
வயதான பின்பு....... தனது பணியை விட்டு கொடுக்காத மாமியார்களையா???
---------------------
விடையற்ற வினாக்கள் ஏராளம்!!! விடைகள் பெறுவதற்கு வாய்ப்பில்லை!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்