வெனிசுலாவின்
பொருளாதார வீழ்ச்சி குறித்து, ஊடக தகவலை கொண்டு, கீழ்கண்டவாறு புரிந்து கொள்ள முயல்கிறது. இதை சம கால இந்திய
பொருளாதார நிகழ்வோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
வெனிசுலா
நாட்டில் மொத்த வருமானத்தில் 95 சதவீதம் கச்சா எண்ணெயின் மூலம் கிடைக்கிறது. அந்த வருமானத்தை, மக்களின் வாழ்வதாரத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்களில் செலவிடுகிறார் அதிபர்.
வருமானத்தை
வேறு எந்த துறைகளிலும் முதலீடு செய்யப்படவில்லை. நாட்டிற்கு தேவையான பொருட்களை, உற்பத்தியை செய்யாமல் இறக்குமதி மூலம் பெறப்படுவது அதிகமாகிறது.
நாட்டில்
உள்ள பல தனியார் நிறுவனங்களை,
அரசு கைப்பற்றுகிறது. இவ்வாறு நாட்டுமையாக்கப்படும் போது, ஆரம்பத்தில் நல்ல நிலையில் சென்றாலும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு…… அரசு நிர்வாகத்தில் ஊழல் அதிகமாகிறது. அரசு நிறுவனங்களின் உற்பத்தி திறன் குறைகிறது.
அளவுக்கு
அதிகமாக உள்ள தனியர் நிலங்கள், நிலமற்ற ஏழைகளுக்கும் பிரித்து அளிக்கப்படுகிறது. (பொதுவாக நிலங்கள் துண்டாக்கப் படும் போது, விவசாய உற்பத்தி திறன் குறையும்.) வறட்சியும் சேர்த்து கொள்கிறது.
கச்சா
எண்ணெயின் விலை பாதியாக வீழ்ச்சி அடைகிறது. அதோடு, உலக பொருளாதார மந்த நிலை சேர்ந்து கொள்கிறது. இவ்வாறாக பல்வேறு காரணங்களால், விலை வாசி உயர்கிறது. அரசு பணத்தினை அதிகளவு அச்சடித்து வெளியிடும் போது பணவீக்கத்தினை இன்னும் அதிகமாகிறது.
அரசியல்
நிலையற்ற நிர்வாகம் , சுழ்நிலையை மேலும் மோசமாக்குகிறது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தலைவரின் மீது மக்கள் நம்பிக்கை இல்லாமல் போராடவும் ஆரம்பிக்கிறார்கள். எதிர்கட்சிகள் சார்பில்…. ஒரு தலைவர் தன்னை தானே, ஒரு தலைவராக அறிவித்து கொள்கிறார்.
உலக
வங்கி நிதி அளிக்க முன்வந்தும், அதிபர் மறுக்கிறார். வெளிநாட்டு உதவிகளும் மறுக்கப்படுகிறது. உலக அரசியல் தலையீடுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து எதிர்கட்சிக்கு ஆதரவு அளிக்கின்றன. சீனா, ரஷ்யா ஆளும் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறது. இவ்வாறு இன்றைய சூழ்நிலையில், விலைவாசி விண்ணை மூட்டி, பல லட்ச மக்கள்
நாட்டினை விட்டு வெளியேறி வருகின்றனர்.
கச்சா
எண்ணெய் வீழ்ச்சி, நிர்வாகத்தில் ஊழல், நிலையற்ற அரசியல் சுழ்நிலை, நாட்டுடைமையாக்கல் என்று சுருக்கமாகவும் கூறலாம். நல்ல வளம் இருந்து, தவறான பொருளாதார, அரசியல் சூழ்நிலையில் வெனிசுலா வீழ்ச்சி அடைந்தது…. சம கால உதாரணம்.
நாமும்
பொருளாதார சார்ந்து பல கருத்துகளை அள்ளி
தெளித்து கொண்டிருக்கிறோம், அதனை வெனிசுலாவின் நிலையோடு ஒப்பிட்டு புரிந்து கொள்ளுங்கள்!!!!
உங்களில்
ஒருவன்
உங்களை போல்
ஒருவன்
வேதை குமார்