இரவு 11 மணி…….
சென்னை பீச்சில்
இருந்து தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் வந்து இறங்கினேன் (உறவினரை பஸ் ஏற்றி விட வேண்டிய
நிமித்தம் காரணமாக).நான், அதற்கு மேல் தாம்பரம் சானடேரியம் செல்ல வேண்டி இருந்தது.
பஸ் (அ) ஷேர் ஆட்டோ
பிடித்து போய் சென்று விடலாம் என்று எண்ணி, அந்த பக்கத்திற்கு சப்-வே வழியே நடக்க ஆரம்பித்தேன்.
சப்-வே யில் நடைபாதை கடைகள் கூட இல்லாமல்
வெறிச்சோடி கிடந்தன.
பஸ் ஸ்டாண்டு வந்து
பார்த்தபோது, பஸ் எதுவும் இல்லை. ஆட்டோவும் எதுவும் வருவதாக தெரியவில்லை. “நாம நினைத்த படி என்னைக்குத்தான் நடந்திருக்கு,
இல்லை நாம தான் நடக்கிறத்தான் நினைக்கிறோம??” என்று மனம் திடப்படுத்தியது.
சரி ப்ரண்ட்ஸ் கூப்பிட்டு,
பைக்குல போகலாம் என்று, செல்போனை எடுத்தேன், சார்ஜ் இல்லை. ”என்ன கொடுமை சரவணா?” என்ற
பிரேம்ஜி வசனம் தான் ஞாபகம் வந்தது.
சற்றொன்று ஏதோ ஒரு
நினைப்பு, ஏன் நடந்து செல்ல கூடாது??. ஒரு கி.மீ தூரம் தானே இருக்கும் என்று எண்ணி
நடக்கலானேன். ”ஏன் நீ எல்லாம் ஸ்கூலில் 2 கி.மீ தூரம் நடந்து தானே போனாய், இப்போ என்ன
நடக்க மாட்டாயா??? ” என்று மனமே காரணம் சொல்லி கொண்டது.
சும்ம நடக்க முடியுமான என்ன!!!!, என் கைகள் என்னை
அறியாமல் ஹேன் செட்டை தேடியது. போன்ல சார்ஜ் தான் இல்லையே. வந்த களைப்பினால், கால்கள்
மெதுவாக நடக்க ஆரம்பித்தது.
ஜி.எஸ்.டி ரோட்டின்
தெரு விளக்கில், வாகனங்கள், மின்மினி பூச்சி போல, கண நேரத்தில் மறைந்து சென்றன.
அப்போது கோபிநாத்
எழுதிய புத்தக வரிகள் நினைவில் வந்தது……..எதாவது ஒரு நாள்………….நடுநிசியில்…………. இரவு
வெளிச்சத்தில்…………….நான் மட்டும் தனியாக …………. ஹேன் செட் எதுவும் இல்லாமல்………… சாலையில்
ஓரமாக நடக்க வேண்டும்………என்ற வரிகள் நினைவில் வந்தோடின………
அந்த வார்த்தைகளில்,
என் மனம் என்னையறியாமல் லயிக்க ஆரம்பித்தது. மனதின் சந்தோஷத்தின் காரணத்தை, ஆராய விரும்பவில்லை
அறியவும் முடியவில்லை. இப்படித்தான் பல நேரங்களில், நாம் சந்தோஷங்களை இழந்து விடுகிறோம்
என எண்ணியது.
மழை தூறலின் மண்
வாசனை……… மழையில் விளையாடுவது……… குழந்தையின் முதல் மழலை சொல்………….. உறவினருடன் அமர்ந்து
உண்பது…….. அண்ணன் தங்கையின் சிறுசிறு சண்டைகள்……………. குளத்தில் அடிக்கும் நீச்சல்……….
பழைய சோறும் பச்சை மிளகாய்………….. கோவில் திருவிழா….. அதில் போடும் சினிமா………. சிறு
வயதில் விளையாடும் நொண்டி….. திருடன் போலிஸ்……… இப்படியாக நினைவலைகளின் எண்ணங்கள் நிற்கவில்லை.
பணம் என்பதை மட்டுமே
சந்தோஷமாக கொண்டு, புலியாக பாயும் போது சிற்சில சந்தோஷங்கள் கூட கானல் நீராக மறைந்து
விடுகிறது போலும். சோக கடலில் ஆழ்ந்திருக்கும் மனதில், பல சுகங்கள் கூட சுமையாக தோன்றும்.
நினைவலைகள் ஓடி
கொண்டு இருக்கையில் ………. தீடீரென்று ஹாரன் ஒலிக்கும் சத்தம் கேட்டது… நண்பன் பைக்கில்
வருகிறான் என்று தெரிந்தது…….. அவனுடன் விடுதியை சென்று அடைந்தேன்.
-மரு. பெ. இரமேஷ் குமார்

