Friday, January 27, 2017

தலைமை பண்பு

” தலைமை பண்பு என்பது என்ன??? ” என்று பொதுவாக கேட்டால் நிச்சயமாக ஒரு வரியில் பதில் சொல்ல இயலாது. இவையெல்லாம் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற கூடியவை.

தமிழ்நாட்டின் இருபெரும் திராவிட கட்சிகளும், நேர் எதிரான தலைமை பண்பினை உடையவை. ஆனாலும், செம்மையான வழியில் ஆட்சி செய்தவர்கள் என்பதை மறுக்க இயலாது. வரலாற்றின் பக்கங்களை திருப்புகையில், காந்தி மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகிய இருவரின் தலைமைப் பண்பினையும் குறைத்து மதிப்பிட முடியாது.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும், தன் வாழ்நிலையில் பல தருணங்களில் தலைமை ஏற்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

பள்ளி மற்றும் கல்லூரி தருணங்களில் வகுப்பு தலைவன்/தலைவி என்ற நிலையில் தொடங்கி. வேலை செய்யும் தருணங்களில், team leader, supervisor என்ற பல பொறுப்புகள் வரை, ஏற்க வேண்டி இருக்கும். அடுத்த நிலையாக…… திருமண பந்தத்தில், குடும்ப தலைவன்/தலைவி என்ற முக்கிய பொறுப்பும் வழங்கப்படும்.

படிப்பு காலங்களிலும், வேலைவாய்ப்பு இடங்களிலும் தலைமை ஏற்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும், குடும்ப பொறுப்பை தவிர்க்க முடியாத இடமாகிறது. ஒரு நிறுவனத்தில் கடைநிலை ஊழியர் என்றாலும், அவரது குடும்பத்தில், அவரே தலைமையாக அறியப்படுவார்.

இப்படியாக……. தலைமை பண்பின் அவசியம் பல்வேறு இடங்களில் இருந்தாலும், பாதிக்கு மேற்பட்டோர் தலைமை பண்பில் சறுக்கவே செய்கின்றன. இந்த சறுக்கலே பல பிரச்சனைகளுக்கு தொடக்க புள்ளியாக அமையும். (பிரச்சனையே இல்லாத வாழ்க்கை, நல்லவா இருக்கும்!?!?)

சித்த மருத்துவ தத்துவ வழியில் நோக்கினால், கப உடல்வாகு தலைமை பண்பிற்கு சிறந்தது. வாதம் மற்றும் பித்த உடல்வாகு தலைமை பண்பினை ஏற்றால், ”தலைமை தலைகுனிய வேண்டிய வரும்!!!

வாதம்- வீரன், பித்தம்- அமைச்சர், கபம்-மன்னன் என்ற சொல்லாடல் பொய்யாகுமா என்ன!?!?

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Friday, January 13, 2017

போகியில் மாசு

பழையன கழிதலும், புதியன புகுதலும் போகியின் சிறப்பு... சரி நம்மையும் மாற்றலாம் பார்த்த... முடியாது போலும்!!! நம்முடைய உடலமைப்பு மாற்ற இயலாது!! குணத்தையும் மாற்ற இயலாது!!! முடிந்தளவிற்கு செயலை மட்டும் புதுமையாக்குவோம்!!!
-------------------------------------------------------------------------
பழையவற்றை தீக்கிரையாக்கி, சுற்று புறத்தை மாசாக்குவதே போகி என்பது போன்ற சில பதிவுகளை காண்கிறேன். நம்முடைய எண்ணங்களை... இந்தளவிற்கு சுருக்கி கொண்டோமே... என்ற எண்ணுவதை தவிர, வேறொன்றுமில்லை!!!

நவீன நுகர்வு உலகம், தேவையற்ற பல பொருட்களை நம்முள் விதைத்து... அதன் அறுவடையாகவே, இன்றைய மாசான சுழலை உருவாக்கியுள்ளது. அதனையும் இன்றைய தமிழ் சமூகமும் ஏற்று கொண்டதன் பின் விளைவே இவையெல்லாம்!!!

அதை விடுத்து, சுற்று புற சூழலை மாசாக்கிறது என்ற கருத்தியலை மட்டும் வைத்து பகடி செய்வதில் பலன் ஏதே!!!

நகரமயமாக்கத்தின் விளைவாக, பொருட்களை புதைப்பதற்கு கூட இடமில்லாமல், எரித்து விடும் அளவிற்கு, நாம் தள்ளப்பட்டுள்ளோம். இது தினந்தோறும் தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் மாசை விட அதிகமா என்ன??

சீனாவிலும் டெல்லியிலும் போகி பண்டிகை கொண்டாட்டத்தின் போது தான், இவ்வளவு மோசமான மாசான நிலை ஏற்பட்டது போலும்!!!

தமிழர் பண்பாட்டின் விழா என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே... நான் இதை கூறவில்லை!!! நவீனத்தின் பாதிப்பை, இத்தருணத்தோடு முடிச்சிட்டு வாதிடவதே தவறு என்கிறேன்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Thursday, January 12, 2017

அறிதல் - மூன்று நிலைகள்

நான் எப்போதும் மூன்று வழிகளிலே, அறிவை பெறுகிறேன். 1. கண்டல் 2. கருதல்/அனுமானம். 3. உரைகள். இவைகளே தத்துவ ஞானத்தை விளக்கவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

முதலாவது….. நாம் கண்ணால் காண கூடிய விஷயங்களை வைத்து, ஒரு வகையான அறிவை பெற இயலும். இதுவே மனிதனுக்கு மிக முக்கியமானது. இவ்வகையான observation வைத்து நிறைய உண்மைகளை பெற இயலும். ஒவ்வொரு நிமிடம் கடந்து செல்லுகையில், அதிலிருந்து பல விஷயங்களை பெற இயலும். அது நல்லவையாகவும் இருக்கலாம்; கெட்டவையாகவும் இருக்கலாம்.

இரண்டாவது…… ஒருவர் கூறும் கருத்திலிருந்து, நாம் பெற்று கொள்ளும் அறிவு/புரிதல் ஆகும். நாம், தினந்தோறும் பல்லாயிர கணக்காக செய்திகளை கேட்கிறோம்; சொல்கிறோம். அவற்றின் உண்மை தன்மை பற்றி, நாம் யோசித்ததில்லை.

எல்லா விஷயங்களையும், நம் கண்ணால் மட்டுமே கண்டு அறிவை பெற இயலாது. அதனால் தான், மற்றவரின் கருத்தையும் பெற வேண்டியது அவசியமாகிறது.

மூன்றாவது …. உரைகள்/நூல்கள்: மக்களின் முக்கியமான அறிவு தேடலின் பீடமாக உள்ளது. இதனுள் புத்தகங்கள், நாளிதழ்கள், சஞ்சிகைகள் மற்றும் ஒலி,ஒளி படைப்புகள் அனைத்துமே அடங்கும். ஆனால், சமீப காலங்களில், இதன் மீது சந்தேக கண் வீசுவது அவசியமாகிறது.

எந்தவொரு மானுடமும், மேற்கண்ட ஒன்றின் மூலம் மட்டுமே அறிவை பெறுதல் இயலாத காரியமாகும். ஆதலால், மூன்றினையும் பயன்படுத்த தயங்குதல் கூடாது. நான், “ எந்த துறையை சார்ந்தவராக இருந்தாலும், அத்துறையின் சாதக பாதகங்களை, அவரிடமிருந்தே பேசி கேட்டு கொள்வேன்”. அது போல், புத்தகங்களிலிருந்து பெறும் அறிவு எண்ணில் அடங்கா!!!!

ஆனால், அனைத்திலும் முக்கியமானது!!! நாம் பெறும் தகவலை பகுத்தறிவதே!!!!!

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்!! “ என்பது பொய்யாகுமா என்ன?????

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Monday, January 9, 2017

கவிதை- காதல்/காமம்

#கவிதை_1

சிக்கி முக்கி கல்லில்
சிக்குண்ட தீம்பிழம்பாய்
சித்தனின் மனம்
சிக்குண்டது!!!!
நிலையில்லா உயிரை
நிலையென
நிற்க வைத்தது
நின்னவளின் நிஜங்கள்!!!!

#கவிதை_2

விழி பாடும் பாதையில்
வழிந்தோடும் வியர்வை!!!
மொழி பேசும் வார்த்தையில்
மறைந்த உண்மை!!!!
காசி தந்த பார்வையில்
கழிந்த வாழ்க்கை!!!!
அவன் விரித்த வலையில்
அவள் எழுந்தாள் நினைவில்
காதலெனும் காமத்தால்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Friday, January 6, 2017

கிரிக்கெட் கேப்டன் - தோனி/கோலி

ஒரு அணியை வழிநடத்தி செல்வதில்இரண்டு வகையே உள்ளது. ஒன்று கட்டுபாடான, ஆக்ரோஷமான நிலை; மற்றொன்று- அமைதியான நிலை. இந்த இரு நிலைகளையும், இந்திய கிரிக்கெட் அணியை கண்டுள்ளது.

இதில் எது சிறந்தது??? “ என்ற விவாதமெல்லாம் நிச்சயமாக தேவையில்லை. ஏனெனில்.. இத்தகைய தலைமை பண்பு என்பது காலத்திற்கும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறக்கூடியவை.

காலத்திற்கு ஏற்ப மாற கூடிய தன்மை என்பதால், குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு, மற்றொரு அணுகுமுறை உள்ள தலைமை தேவைப்படும். இந்த கால இடைவெளியை தாண்டும் போது, அணி தலைவன் என்பவர், தலைமை பொறுப்பிலிருந்து விலகி விடுவது நல்லது.

இத்தகைய புரிதலை, தோனி நன்றாக புரிந்துள்ளார் என்பேன். அதனால் தான், ஒரு நாள் போட்டியில் தலைமை பொறுப்பிலிருந்து விலகி விட்டார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில், சரியாக புரிந்து கொள்ளவில்லை. அதனால் தான், தோனியின் மீது பல விமர்சன கணைகள் வந்தன.

அணி தலைவன் என்ற முறையில் , தோனி சற்று அமைதியாக கையாள கூடியவர். ஆனால், அதற்கு நேர் எதிர் மாறாக, ஆக்ரோஷமாக கையாள கூடியவர் கங்குலி!!! இப்போது தலைமை ஏற்றிருக்கும் கோலியும் ஆக்ரோஷ மனநிலைக்கு சொந்தக்காரர் தான்!!

நான் அறிந்த கிரிக்கெட்டில், கங்குலி, தோனி மற்றும் கோலி ஆகியோர் சிறந்த அணி தலைவராகவே வலம், வந்தனர். ஆனால் அசாருதீன், டெண்டுல்கர் மற்றும் டிராவிட் போன்றோர் சற்று சறுக்கினார்கள்; ஆனால் நல்ல விளையாட்டு வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை!!!

ஆனாலும்….. ” அணி தலைவன் மட்டுமே வெற்றியை தந்து விட முடியாதுஎன்பது என்னுடைய நம்பிக்கை. கள வீரர்களின் திறனும் முக்கியம்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Monday, January 2, 2017

குடும்பங்களில் - பொதுக்குழு நடத்தப்படல் வேண்டும்

எந்தவொரு அமைப்பும்….. குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒரு முறையாவது பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது விதி. ஏனெனில், கடந்த வருடத்தின் செய்த நல்ல, கெட்ட காரியங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் அடுத்த வருடம் செய்ய வேண்டிய காரியங்களை பற்றி விவாதிப்பது அவசியமாகிறது. வளர்ச்சி கட்டத்தில்சுய விமர்சனம் என்பது மிக முக்கியமானது!!!

அமைப்பு/ இயக்கத்திற்கு மட்டுமல்லாது, நாட்டிற்கும் சுய விமர்சனம் மிக முக்கியம். அதன் ஒரு வழியாகவே மத்திய பட்ஜெட் மற்றும் மாநில பட்ஜெட் அமைகிறது. மேலும் பட்ஜெட்டிற்கு முதல் நாள் வெளியிடப்படும் Econmic survey ம் இதில் அடக்கம்!!!!

நாடு மற்றும் இயக்கம்/அமைப்பை தாண்டி, பொருளாதார பிரச்சனைகளை பற்றிய விவாதங்களை மேற்கொள்ள வேண்டிய மற்றொரு இடம் வீடு!!!! இப்படியான விவாதமே, எனது வீட்டில் நேற்று நடந்தது. இது மாதிரியான விவாதங்கள்பலமுறை நடந்துள்ளது

இன்றைய சூழ்நிலையில்குடும்பத்தின் பொருளாதார விவகாரங்களை அறிந்து கொள்ள, குழந்தைகள் விரும்பவில்லை. மேலும் நாமும் கற்ற தருவதும் இல்லை!!! ” பைக் வேண்டும்…” என்று பையன் கேட்டால், பெற்றோர் வாங்கி தர வேண்டிய நிலை மட்டுமே உள்ளது. ” அது தேவையா??? “ என்பது போன்ற விவாதங்களே நடைபெறுவதில்லை!!!!

பொருளாதார அளவில், நாம் பெரிய முன்னேற்றத்தை அடைந்திருப்பதனால்…. ” அந்த கேள்விக்கே அவசியம் இல்லைஎன்ற நிலைக்கே வந்து விட்டது. அது சரியா தவறா?? என்ற சுய விமர்சனம் தேவையென்றே நினைக்கிறேன்.

தனிநபர் செயல்பாடுகளினால், பெரிய அளவிலளான பொருளாதார சீர்க்கேடுகள் தினந்தோறும் நடந்து வருகிறது. அத்தகைய சீர்கேடுகளை தடுக்கஒவ்வொரு.வீட்டிற்குள்ளேயும் பொது குழு விவாதம் அவசியம்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்