” தலைமை பண்பு
என்பது என்ன??? ” என்று பொதுவாக கேட்டால் நிச்சயமாக ஒரு வரியில் பதில் சொல்ல இயலாது.
இவையெல்லாம் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற கூடியவை.
தமிழ்நாட்டின்
இருபெரும் திராவிட கட்சிகளும், நேர் எதிரான தலைமை பண்பினை உடையவை. ஆனாலும், செம்மையான
வழியில் ஆட்சி செய்தவர்கள் என்பதை மறுக்க இயலாது. வரலாற்றின் பக்கங்களை திருப்புகையில்,
காந்தி மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகிய இருவரின் தலைமைப் பண்பினையும் குறைத்து மதிப்பிட
முடியாது.
மனிதனாக பிறந்த
ஒவ்வொருவரும், தன் வாழ்நிலையில் பல தருணங்களில் தலைமை ஏற்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
பள்ளி மற்றும்
கல்லூரி தருணங்களில் வகுப்பு தலைவன்/தலைவி என்ற நிலையில் தொடங்கி…. வேலை செய்யும் தருணங்களில்,
team leader, supervisor என்ற பல பொறுப்புகள் வரை, ஏற்க வேண்டி இருக்கும். அடுத்த நிலையாக…… திருமண பந்தத்தில்,
குடும்ப தலைவன்/தலைவி என்ற முக்கிய பொறுப்பும் வழங்கப்படும்.
படிப்பு காலங்களிலும்,
வேலைவாய்ப்பு இடங்களிலும் தலைமை ஏற்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும், குடும்ப பொறுப்பை
தவிர்க்க முடியாத இடமாகிறது. ஒரு நிறுவனத்தில் கடைநிலை ஊழியர் என்றாலும், அவரது குடும்பத்தில்,
அவரே தலைமையாக அறியப்படுவார்.
இப்படியாக……. தலைமை பண்பின் அவசியம்
பல்வேறு இடங்களில் இருந்தாலும், பாதிக்கு மேற்பட்டோர் தலைமை பண்பில் சறுக்கவே செய்கின்றன.
இந்த சறுக்கலே…
பல பிரச்சனைகளுக்கு தொடக்க புள்ளியாக அமையும். (பிரச்சனையே இல்லாத வாழ்க்கை, நல்லவா
இருக்கும்!?!?)
சித்த மருத்துவ
தத்துவ வழியில் நோக்கினால், கப உடல்வாகு தலைமை பண்பிற்கு சிறந்தது. வாதம் மற்றும் பித்த
உடல்வாகு தலைமை பண்பினை ஏற்றால், ”தலைமை” தலைகுனிய வேண்டிய வரும்!!!
வாதம்- வீரன்,
பித்தம்- அமைச்சர், கபம்-மன்னன் என்ற சொல்லாடல் பொய்யாகுமா என்ன!?!?
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment