Sunday, December 15, 2019

சமூக அவதானிப்புகள் - டிசம்பர் 2019

சம கால சமூகத்தினை கவனித்ததில்.... சில அவதானிப்புகள்

1. பசிக்காக உணவு என்ற நிலையிலிருந்து, சுவைக்காக உணவு என்ற நிலைக்கு மாறியிருக்கிறது. அதனால் தான்.... விதவிதமான உணவுகளை, மக்கள் விரும்புகிறது. வாரம் ஒருமுறையாவது... சமையலுக்கு விடுப்பு அளித்து, உணவகங்களுக்கு செல்வது அதிகமாகிறது. இதன் நீட்சியாகவே சுவிகி, உபர் ஈட்ஸ் போன்ற வீட்டிற்கே வந்து உணவளிக்கும் வணிகம் அமைகிறது.

2. இந்தாண்டு பருவமழையில் நன்றாக இருக்கிறது. நெல் நல்ல மகசூலை தரும். அதிக மகசூலால் , விலை குறையவும் வாய்ப்பு உள்ளது. குறைந்த பட்ச ஆதார விலையினை அரசு அளித்தாலும், விவசாயிகளின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுத்துமா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மறுபுறம் வெங்காயம் உற்பத்தி குறைந்து விலை விண்ண முட்டுகிறது. விலை உயர்ந்தாலும் மற்றும் விலை தாழ்ந்தாலும் இடைத்தரகர்களே அதிகம் பலனடைய வாய்ப்பு அதிகம்.

3. கிராம புறங்களில் சாலைகளில் அதிக வளைவுகள் இருப்பது வழக்கம். ஆனால் முக்கியமான வழித்தடங்களில்.... திருவாரூர்- கும்பகோணம் சாலையும், கும்பகோணம்- கரைக்கால் சாலைகளில் வளைவுகள் அதிகமாக இருக்கிறது. பொதுவாக நடைபாதைகளே.... வருங்காலங்களிலே சாலைகளை மாறுகின்றன. பெரிய நிலசுவன்தார்கள் நிலங்களின் குறுக்கே பாதைகள் விட வாய்ப்பில்லை. இவ்வாறாக நடைபாதைகளே, சம கால சாலைகளாக மாறி வாகன ஓட்டிகளுக்கு சவாலாக அமைகிறது. நிலவுடைமை சமூகத்தின் நீட்சியாகவே தெரிகிறது.

4. சமூகம் வளர வளர திருமணம் சார்ந்த எதிர்ப்பார்ப்புகளும் அதிகமாகி வருகின்றன. ஆதலால் திருமண வயது அதிகமாகி வருகிறது. சமகால சூழ்நிலைகளினை பெற்றோர்களும், பிள்ளைகளும் புரிந்து கொள்வதில்லை. திருமண வயது அதிகமாகும் குழந்தை பிறப்பு விகிதமும் குறைந்து வருகிறது. குழந்தை பெற்று வளர்ப்பதற்கு அதிகமான பொருளாதாரம் தேவைப்படுவதால், ஒரு குழந்தையே போதும் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர். இந்த மனநிலையால்... .10-20 ஆண்டுகளில் குடும்ப சக்கரம் சுருங்கி, இந்தியா அதிகளவு பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

5. வேலையில்லாத சூழ்நிலை அதிகமாவது அனைவரும் அறிந்ததே!! ஆனால் உடல் சார்ந்த தொழில்களில் வேலைகள் இருக்கவே செய்கின்றன. அதற்கு மக்கள் தயாராக இல்லை. கார்பெண்டர், பெயிண்டர், எலெக்டிரிசன், டிரைவர், மெக்கானிக் போன்ற திறன்மிகு(skilled) வேலைகளுக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது. அதனை குறித்து சம கால இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். மொத்தத்தில் மன உழைப்பையும் உடல் உழைப்பையும் சமமாக எண்ணும் மனநிலை வளர வேண்டும்.

6. பொது போக்குவரத்தை பயன்பாடு வெகுவாக குறைந்து வருகிறது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர பயன்பாடு மத்திய தர வர்க்கத்தினரிடம் அதிகமாகி வருகிறது. சுற்றுப்புற சூழல் பிரச்சனைகளையெல்லாம் தாண்டி..... பொது போக்குவரத்து சார்ந்த வேலைவாய்ப்புகளும் குறைய வாய்ப்பு இருக்கிறது. அரசு பள்ளி ஆசிரியர்களை போல...

7. செல்போன்கள் வாழ்க்கையை அதிகமாக ஆக்கிரமித்து கொள்கின்றன. மனிதர்களுக்கு இடையே முகம் பார்த்து பேசுவது குறைந்து வருகிறது. மேலும் மனிதர்களுக்கு இடையே முகம் அறியாத பேச்சுகளே (whatsapp, Facebook) அதிகமாக வருகின்றன. முகமறியாத பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகளை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்ள முடியாது. முகம் பார்த்து பேசும் போதும் கூட ......... எதையும் சரியாக புரிந்து கொள்ளா நிலையே இருக்கிறது. இறுதியாக எந்த பிரச்சனையையும் தெளிவாக புரிந்து கொண்டு, தீர்வு கிடைப்பது அரிது.

8. பாலியல் வன் கொடுமைகள், கொலைகள் பற்றி பேசும் போதும், உணர்வு பூர்வமாக பேசுவதே அதிகமாகி வருகிறது. மிக விரைவாக வழக்குகளை முடித்து தண்டனை கொடுத்தால் மட்டும் குறையும் என்ற பொது புத்தியை முழுமையாக ஏற்று கொள்ள முடியவில்லை!!! பாலியல் கல்வி, ஆணாதிக்கம் பற்றிய புரிதல், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை கற்று கொடுத்தல் போன்றவற்றை ஏற்படுத்தாமல் எந்த மாற்றமும் நடக்காது!!!

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்


Tuesday, October 8, 2019

ஆசிரிய பணியும் எனது அனுபவமும்


நீ பேசுறது தான்எனக்கு தெளிவா புரியமாட்டோங்குது!! உன்கிட்ட வர பேசண்ட் கிட்டவாவது தெளிவா, சத்தமா பேசு ரமேஷ் குமார்

மேற்கண்ட வாசகம்ஆட்டோகிராப் புத்தகத்தில் மருத்துவ நண்பர் எழுதிய வாசகம்!!!

மேற்கண்ட செய்தியில் உண்மையில்லாமல் இல்லை. நான் வேகமாக பேச கூடியவன்!!! நான் சொல்ல வந்த செய்தியைகோர்வையாகவும் தெளிவாகவும் பேச தெரியாவதன்!!! (வாதமும் பித்தமும் சேர்ந்தால் அப்படி தானே இருக்கும்) இதனால் பல இடங்களிலும் சங்கடங்களையும் அனுப்பி இருக்கிறேன்.

பள்ளி படிப்பை முடித்து…… பட்ட படிப்பு குறித்து பேசும் போது, ஆசிரியர் பணி தேர்ந்தெடுக்க சொல்லி வற்புறுத்தினர். மேற்கண்ட காரணத்தில் முற்றிலும் நிராகரித்தேன். சரி….. மருத்துவ படிப்பு தேர்ந்தெடுத்தாயிற்று!! அதிலும் சித்த மருத்துவம்!!! இதற்கு பேசு மொழி தேவை!! ( வந்த பிறகு தெரிந்தது என்பது வேறுகதை!!)

கிராமத்தில் பிறந்து, படித்து வந்ததுனாலவோஎன்னவோ!!! தாழ்வு மனப்பான்மையும் பயமும் சேர்ந்து வந்து விட்டது!!! கல்லூரிகளில் செமினார் எடுக்கும் போதுஎவ்வளவு தடுமாறினேன் ? ” என்பது இன்றும் நினைவில் உள்ளது

முதுநிலை மருத்துவம் படிக்கும் போது….. ஜுனியர் மாணவர்களுக்கு ஒரு முறை இசிஜி சொல்லி கொடுத்தேன்!!! அவர்களும் சிறிதளவு புரிந்தது கொண்டது பேரானந்தம்!!! அப்போதோ…. “ நம்மளும் பாடங்கள் எடுக்க இயலும் என்ற சிறிய நம்பிக்கை பிறந்தது!!!

முகநூலினை போல….. கருத்து ரீதியான மோதல்கள், செல்போன் மூலமாகவும் நேரடியாகவும் பல தடவை நடந்துள்ளது!!! இதுவும் பல விஷயங்களை கற்று கொடுத்தது!!!

அடுத்த வாய்ப்பு…. வார இறுதி நாட்களில், இலவச டிஎன்பிஎஸ்சி வகுப்பு எடுக்கும் நிகழ்வு!!! ஆரம்ப காலங்களில்நிறைய தடுமாற்றம்!!! நான் எடுக்கும் பாட பகுதிகளாகஅரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் இரண்டுமே புரிந்து கொள்ளும் வகையில் எடுத்தால் மட்டும் புரியும்!!! காலங்கள் செல்லசெல்ல எடுக்கும் திறனும் நன்கு மேம்பட்டிருக்கிறது!!! பெரும்பாலும் நான் எடுப்பது மதிய வகுப்பு !!! தூங்காமல் எடுப்பது மிக சவலான விஷயம்!!!

1 ½ மணி நேரம் பாடம் எடுத்து முடித்த பிறகு, ” பிரேக் போய்டுக்கு வாங்க!!! என்று சொன்ன போது… “ ஓ பிரேக் டைம் வந்து விட்டதா?? “ என்பது போன்று மாணவர்களின் முகவோட்டமாக தெரிந்ததுஅன்றைய பொழுதில் நான் ஆசிரியராக உணர்ந்தேன்!! இது 2-3 முறை நடந்தது!!

ஒருமுறைபாடம் நடத்தி முடித்த பிறகு…. “ நீ லாயரா சார்?? “ என்றான் மற்றொரு மாணவன்.

சார்!!! புத்தகமே இல்லாமலே பாடம் நடத்துறது!! எப்படி நடத்த முடியுதுன்னு தெரியல!!

மேற்கண்ட மாணவர் கருத்துகள்…. பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்த கூடியவை!! சக மனித உரையாடலை தாண்டி….. பாடம் நடத்தும் அளவிற்கு உயர்ந்திருப்பதுஎன்னளவில் மிகப்பெரிய வளர்ச்சி!!!

தனி மனித முன்னேற்றத்திற்கு….. மேடை பேச்சுமொழி முக்கியம்!!! அதை நோக்கிய பயணத்தில்இது முக்கிய படி!!! ஒரு காலத்தில் ஆசிரிய பணியை வெறுத்த நான்…. இன்றும் விரும்ப ஆரம்பித்துள்ளேன்!!! வாழ்க்கை எத்தனை நகைமுரண் நிறைந்தது!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்