Thursday, August 25, 2016

ஒலிம்பிக் போட்டியும், நமது மனநிலையும்

ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து, இரண்டு நாட்களாகி விட்டது. இன்னும் ஒரு வாரம் கடந்தால், ஒலிம்பிக் போட்டியை பற்றியே மறந்து விடுவார்கள். TNPL வந்துவிட்டதால், சென்னை, மதுரை, கோவை என்று பேச ஆரம்பித்து விடுவார்கள். அதனால், நான் நினைத்த செய்தியை... இப்போதே சொல்லி விடுகிறேன்.
ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க வேட்டை பற்றிய விவாதம் என்பது மிகப்பெரியது. அதனை தாண்டிய, நமது மனநிலை பற்றியே செய்தியே.... இது!!!!
பிவிசிந்து, தீபா, சாக்ஸி மாலிக் போன்றவர்களின் திறமையை புகழ்பாடும் நாம்...... அபிநவ் பித்ரா, ஜீது ராய் மற்றும் போபண்ணா-சானியா போன்றோரின் திறமையை... ஏன் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
பிவிசிந்து, தீபா, சாக்ஸி போன்றவர்களின் திறமையின் மீது எள்ளவும் ஐயமில்லை. அதே போல், அவர்களை சிறுமைப்படுத்தும் நோக்கிலும் எழுதவில்லை.
அபிநவ் பித்ரா நூலிழையில் வெண்கலத்தை தவறவிட்டவர்(4 வது இடம்). சானியா- போபண்ணா ஜோடி வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் தான் தோல்வியடைந்தனர், ஜீது ராயும்... இறுதி போட்டியில் 8 ம் இடம் பிடித்தார்.
நடுநிசியில் தீபாவின் இறுதி போட்டியை கண்டவர்களில் எத்தனை பேர்..... அபிநவ் பிந்தராவின் இறுதி போட்டியை பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அதே போல் போபண்ணா- சானியாவின் வெண்கல பதக்கத்திற்கான போட்டியை பார்த்திருப்பார்களோ!?!?!?
இதற்கெல்லாம் காரணமாக... இரண்டு விடயங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது.
1. பிவிசிந்து, தீபா, சாக்ஸி மாலிக் போன்றவர்கள்.... இந்த ஒலிம்பிக்கின் மூலம் திறமையானவர் என்ற வெளியுலக புரிதல் ஏற்பட்டது. அதனால்.. அவர்களுடைய ஒவ்வொரு வெற்றிப்படியும் பெரிதாக தெரிந்தது. பெரிதாக பேசப்பட்டது. ஆனால், அபிநவ் பித்ரா, ஜீது ராய் மற்றும் போபண்ணா-சானியா போன்றவர்கள், ஏற்கனவே திறமையானவர்கள் என்ற புரிதல் இருந்தது. அவர்களின் வெற்றி பெரிதாக பேசப்படவில்லை.
2. எதிர் பாலின கவர்ச்சி/போலி பெண்ணியம்....
மேற்கண்டவர்கள் மட்டுமல்லாது..... அனைத்து வீரர்களும் திறமையானவர்களே... காலமும் சூழ்நிலையும் சிலருக்கு வெற்றியையும், சிலருக்கு தோல்வியாகவும் அமைந்து விடுகிறது.. அதீத புகழ்ச்சியும், அதீத அவநம்பிக்கையும் நல்லதல்ல...

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Wednesday, August 17, 2016

முத்துகுமாரின் மரணமும், நமது பித்து மனநிலையும்

நா முத்துகுமாரின் இறப்பினை தொடர்ந்து நடைபெறும், சமூக ஊடக விவாதங்கள், பெரும் கவலை கொள்ளும் விதமாகவே அமைகிறது. மஞ்சள் காமாலையால் இறந்தார் என்பது மட்டுமே உண்மை.
முத்து குமார், தன் மகனுக்காக எழுதியதாக பகிரப்பட்ட கடிதம், மதுவினால் இறந்ததாக சொல்லப்பட்ட செய்தி என போலி செய்திகள் பகிரப்படுகின்றன. அச்சு மற்றும் காட்சி ஊடகத்தை விமர்சிக்கும் முன், நம் செய்யும் அநாகரீக செயல்களை பற்றியும் விமர்சனம் செய்து கொள்வது அவசியமாகிறது.
இதன் உச்ச கட்டமாக... ஒரு குறிப்பிட்ட கம்பெனி ஆயுர்வேத மருந்தை உட்கொண்டால், அனைத்தும் வகையான மஞ்சள் காமாலையும் குணமாகும் என்பது போல்... தகவல்கள் பகிரப்படுகின்றன. அதில் ஒரு ஆயுர்வேத மருத்துவரின் பெயரிடப்பட்டு, நம்பகத்தன்மைக்கு வித்திடுகின்றனர். (அப்பதிவிட்ட மருத்துவரின் முகநூல் பதிவிலிருந்து, சுமார் 14,000 பேர் பகிர செய்திருக்கின்றனர் )
மஞ்சள் காமாலைக்கு சித்தா/ஆயுர்வேத/ மூலிகை மருத்துவத்தில் தீர்வு உண்டெனினும், அனைத்தும் காமாலைக்கு தீர்வு உண்டென விளிப்பது ஏனோ!!!!!
தன்னை சார்ந்தவதற்கு நல்லது செய்கிறோம் என்ற போர்வையில், காமாலை கண்களை போல், பித்து பிடித்து அலைவதேனோ!?!?!? ....

உங்களில் ஒருவன்
‘உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Tuesday, August 16, 2016

சித்த மருத்துவமும் அறிவியலும்

சித்த மருத்துவம், நவீன ஆய்வுகளுக்கு உட்படவில்லை என்பது அறிவியலாளர்களின் கருத்து. சித்த மருத்துவம் தத்துவத்தை அடிப்படையாக கொண்டது. ஆதலால், நவீன ஆய்வுகளுக்கு உட்படுத்துவது கடினம்/ உட்படுத்துவது தேவையில்லாதது என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
இவ்வாறான வார்த்தை போர்கள், தினந்தோறும் நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் சண்டை போல் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.
என்னை பொறுத்தவரை, சித்த மருத்துவத்தை நவீன ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டும் என்றே சொல்வேன்.(ஆனால்... அதற்கான கட்டமைப்பும் பணபலமும்அறிவியாலாளர்களும், நம்மிடம் தற்போதில்லை என்பது நிதர்சன உண்மையும் கூட). இல்லையேல், நவீன உலகத்தின் பார்வையிலிருந்து, சித்த மருத்துவம் எளிதாக புறக்கணிக்க படும்!!!!
ஆனால்... அத்தகைய ஆய்வுகளுக்கு முன்னர், சித்த மருத்துவர்கள் செய்ய வேண்டிய களப் பணிகள் ஏராளம். ” சித்த மருத்துவம், தத்துவத்தை அடிப்படையாக கொண்டது “ என்று சொல்லி கொண்டு காலம் கடத்துகிறோம். ஆனால், “ தத்துவம் சார்ந்த ஆய்வுகளை எந்தவளவிற்கு முன்னெடுத்து செல்கிறோம்??? ...” என்ற கேள்வி மட்டும் தொக்கி நிற்கிறது.
ஒரு முதுநிலை மருத்துவர், ” மூட்டுவலிக்கு x என்ற மருந்து சிறப்பாக வேலை செய்கிறது...” என்று சொன்னால்.... அதை அப்படியே பின்பற்றுவோம். அல்லது analgesic, anti-arthritic anti-inflammatory anti-rheumatic க்காக வேலை செய்யுமா??? என்று யோசிப்பமோ தவிர, வாதத்தை குறைக்குமா?? அதிலுள்ள உள்ள மூலிகையின் சுவை என்ன?? வீரியம் விபாகம் என்ன??? என்ற சிந்தனையெல்லாம் வராது....(மாறாக... நீங்கள் அப்படி தான் யோசிக்கிறீர்கள் என்றால்... என்னுடைய சிரம் தாழ்ந்த வாழ்த்துகள்)
நம்முடைய மருத்துவ நூல்களில், எவ்வளவோ.... அனுபவ குறிப்புகள் உள்ளன. அவற்றையெல்லாம், அதன் சுவை என்ன?? என்ன குற்றத்தை கட்டுபடுத்தும்/நீக்கும்??? எந்த உடலிற்கு கொடுக்கலாம்???? என்ற தத்துவ ரீதியான ஆய்வுகளுக்கு உட்படுத்தினால்... நல்லதொரு ஆராய்ச்சியின் தொடக்கமாக அமையும்.
நமது சிந்தனைகளில் மாற்றம் வரவேண்டும்... ஆராய்ச்சியின் தொடக்கம்.. உங்களின் தத்துவத்திலிருந்தே தொடங்குங்கள்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Monday, August 15, 2016

மனித மனநிலையும், முத்துகுமாரின் மரண நிகழ்வும்

இறையன்பு அவர்கள், கடந்த வார புதிய தலைமுறையில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். ஒரு இனிப்பை உண்ணும் போது, சுவையின் அருமை தெரியும். ஆனால்... அதையே அளவுக்கு அதிகமாக உண்ணும் போது, இனிப்பு சுவையின் மீதே வெறுப்பு வந்து விடும். அதனால்..... திகட்டுவதற்கு முன்னரே நிறுத்தி விடுவது நல்லது.
அது போல் தான்.... வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களும் அமைகின்றன. அதை புரிந்து கொள்ளாமல், ”எனக்கு அந்த விஷயத்தின் மீது வெறுப்பு வந்து விட்டது” என்று புலம்பி கொண்டிருப்போம்.
(பணிக்கு பிறகு ஒய்வும், படத்திற்கு இடைவெளி போன்ற செயல்களெல்லாம், இவ்வெற்றிடத்தை நிரப்புகின்றன)
வாழ்க்கையில், வேறொரு பரிணாமமாக.... இச்செயல்கள் காட்சியளிக்கிறது. தலைமுறை இடைவெளி என்பது 20-30 வருடங்கள் ஆகும். ஒரு குறிப்பிட்ட தலைமுறையில் வெற்றியாக கருதப்பட்ட ஒரு செயல்... அடுத்த தலைமுறையில்..... வீழ்ச்சியின் குறியிடாக இருக்கும்.
அதாவது முந்தைய தலைமுறையில்... சிறந்த நடிகராக கருதப்பட்ட சிவாஜி,,,,, அடுத்த தலைமுறையில் அதீத நடிப்பென விமர்சனம் செய்யப்படுகிறது. என்னுடைய அப்பா தலைமுறையில்... ரஜினி நடித்தால் வெற்றி என்ற நிலை மாறி, இன்றைய நிலையில், ரஜினியின் வெற்றியும் கேள்விக்குறி தான்!!!
கிரிக்கெட்டு வாழ்க்கையில், கங்குலியின் ஆரம்ப காலம் ரம்மியமானது... ஆனால், இறுதிக்கட்டம் கொஞ்சம் மோசமாக அமைந்தது. இதில் டிராவிட், சச்சின், தோனி போன்றோரும் விதிவிலக்கல்ல.....
மேற்கண்ட நிகழ்வில் மூலம், நாம் அறியவேண்டியது என்னவென்றால், நாம் வெற்றியாளராக இருக்கும் போது, அத்துறையில் இருந்து ஒய்வை அறிவித்து கொள்வது நல்லது... விட்டுவிட்டால்... சமூகத்தினால் அத்துறையாலே புறக்கணிப்படுவர்..... அச்செயலை காலம் செவ்வெனே செய்து விடும்...
அப்படியோரு தருணம்... .நா. முத்துக்குமாருக்கு அமைய வேண்டாமென... இறைவன் நினைத்து விட்டார் போலும்??? முன்னரே.... தன்னோடு அழைத்து கொண்டார்!!!!!!
-----------------------------------------------------------------------------
நா.முத்துகுமாரின் ஆன்ம சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்.

Saturday, August 13, 2016

எழுத்தும் சித்த மருத்துவ வளர்ச்சியும்

ஒரு துறையின் வளர்ச்சியில், எழுத்து துறையின் பங்கு அளப்பறியது. அது அச்சு ஊடகம் சார்ந்ததாக இருக்கலாம் அல்லது அச்சிடப்பட்ட புத்தகமாகவும் இருக்கலாம்.
சித்த மருத்துவ துறையிலும், எழுத்து முறை சிறப்பாக பயணப்பட்டிருக்கிறது எனலாம். வாய்வழி செய்யுள் முறையில் தொடங்கி, ஒலைச் சுவடிகளை யெல்லாம் தாண்டி, இன்றைய அச்சு மற்றும் மின் ஊடகம் வரை சிறப்பாகவே செயலாற்றி கொண்டிருக்கிறது.
இருந்த போதிலும், சித்த மருத்துவர்களினை தாண்டி, பொது தளத்தில் சித்த மருத்துவ எழுத்துக்கள் பயணப்படவில்லை என்றே கூறுவேன். பரிபாஷை, இலக்கண வரம்பிற்குட்படாத செய்யுள், மறைக்கப்பட்ட செய்யுள்கள், முகலாயர் மற்றும் ஐரோப்பியரின் எழுச்சி போன்ற காரணங்கள் பல.
சித்த மருத்துவத்தை பொறுத்தவரை, இரு வகையான எழுத்துகளை முக்கிய மென்பேன். ஒன்று பொது தளத்திற்கான... சித்த மருத்துவம் சார்ந்த நூல்கள். இரண்டாவது சித்த மருத்துவர்களுக்கான ... சற்று ஆழமான, சித்த மருத்துவ ஆய்வு சார்ந்த நூல்கள். இரு வகையான நூல்களும் சேர்ந்து தான், மருத்துவ வளர்ச்சியை முன்னெடுக்க முடியும்.
முதல் வகையிலான பொதுத் தளத்திற்கான நூல்கள், சமீப காலமாக அதிகமாகி கொண்டே இருக்கிறது. அது சித்த மருத்துவமாக/நாட்டு மருத்துவமாக/ மூலிகை மருத்துவமாக... அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சென்றிருக்கிறது. குறிப்பாக சுரத்திற்கு நிலவேம்பு குடிநீர் போன்றவை. இவ்வகை நூல்கள், பொது மக்களை சித்த மருத்துவத்தை நோக்கி பயணப்பட முக்கியமானது.
இரண்டாவது வகையான நூல்கள், மிகவும் குறைவென்பேன். ஆனால், அதற்கான முன்னெடுப்புகள், சித்த மருத்துவர்களுக்கிடையே நடைபெற்று கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியே!!! . ஆயுர்வேதத்தினை காட்டிலும், சித்த மருத்துவத்தில் வேகம் மிக குறைவே!!!!
இவ்வகையான நூல்கள், சித்த மருத்துவத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துவதற்கும், நவீன உலகத்தின் ஒட்டத்திற்கு ஏற்ப நம்மை தயார் படுத்தவும் உதவும்.
இதையெல்லாம் தாண்டி, பொது வெளியில் உள்ள எழுத்தாளர்கள், சித்த மருத்துவத்தை பற்றி எழுத முன் வர வேண்டும்.

உங்களில் ஒருவன்
உங்களை போல்; ஒருவன்
வேதை குமார்

Friday, August 12, 2016

சிறு சந்தோஷங்களும், வாழ்க்கை பயணங்களும்

ஒரு துறையின் வளர்ச்சியில், எழுத்து துறையின் பங்கு அளப்பறியது. அது அச்சு ஊடகம் சார்ந்ததாக இருக்கலாம் அல்லது அச்சிடப்பட்ட புத்தகமாகவும் இருக்கலாம்.
சித்த மருத்துவ துறையிலும், எழுத்து முறை சிறப்பாக பயணப்பட்டிருக்கிறது எனலாம். வாய்வழி செய்யுள் முறையில் தொடங்கி, ஒலைச் சுவடிகளை யெல்லாம் தாண்டி, இன்றைய அச்சு மற்றும் மின் ஊடகம் வரை சிறப்பாகவே செயலாற்றி கொண்டிருக்கிறது.
இருந்த போதிலும், சித்த மருத்துவர்களினை தாண்டி, பொது தளத்தில் சித்த மருத்துவ எழுத்துக்கள் பயணப்படவில்லை என்றே கூறுவேன். பரிபாஷை, இலக்கண வரம்பிற்குட்படாத செய்யுள், மறைக்கப்பட்ட செய்யுள்கள், முகலாயர் மற்றும் ஐரோப்பியரின் எழுச்சி போன்ற காரணங்கள் பல.
சித்த மருத்துவத்தை பொறுத்தவரை, இரு வகையான எழுத்துகளை முக்கிய மென்பேன். ஒன்று பொது தளத்திற்கான... சித்த மருத்துவம் சார்ந்த நூல்கள். இரண்டாவது சித்த மருத்துவர்களுக்கான ... சற்று ஆழமான, சித்த மருத்துவ ஆய்வு சார்ந்த நூல்கள். இரு வகையான நூல்களும் சேர்ந்து தான், மருத்துவ வளர்ச்சியை முன்னெடுக்க முடியும்.
முதல் வகையிலான பொதுத் தளத்திற்கான நூல்கள், சமீப காலமாக அதிகமாகி கொண்டே இருக்கிறது. அது சித்த மருத்துவமாக/நாட்டு மருத்துவமாக/ மூலிகை மருத்துவமாக... அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சென்றிருக்கிறது. குறிப்பாக சுரத்திற்கு நிலவேம்பு குடிநீர் போன்றவை. இவ்வகை நூல்கள், பொது மக்களை சித்த மருத்துவத்தை நோக்கி பயணப்பட முக்கியமானது.
இரண்டாவது வகையான நூல்கள், மிகவும் குறைவென்பேன். ஆனால், அதற்கான முன்னெடுப்புகள், சித்த மருத்துவர்களுக்கிடையே நடைபெற்று கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியே!!! . ஆயுர்வேதத்தினை காட்டிலும், சித்த மருத்துவத்தில் வேகம் மிக குறைவே!!!!
இவ்வகையான நூல்கள், சித்த மருத்துவத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துவதற்கும், நவீன உலகத்தின் ஒட்டத்திற்கு ஏற்ப நம்மை தயார் படுத்தவும் உதவும்.
இதையெல்லாம் தாண்டி, பொது வெளியில் உள்ள எழுத்தாளர்கள், சித்த மருத்துவத்தை பற்றி எழுத முன் வர வேண்டும்.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Thursday, August 11, 2016

சமூக வரையறைகளும், பொருளாதாரமும்

அப்பா/ அம்மா கிராமத்தில் கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள். ஆனால் மகனோ/மகளோ நகரத்தில் நவநாகரீக உடையணிந்து, உயர் தர உணவத்தில் உணவருந்தி, நவ நாகரீக வாழ்க்கையை அனுபவித்து கொண்டிருப்பார்கள். (இப்படியாக வாழ்வது... அவர்களது தனிப்பட்ட உரிமையென்றாலும், பெற்றோரின் கஷ்டங்களை எண்ணும் போது வருத்தமே மிஞ்சுகிறது).
இத்தகைய சூழ்நிலையிற்கு... அவர்கள் மட்டுமே முழுமையான காரணமில்லை என்றாலும், ஒரு வகையில்... அவர்களும் காரணம் தான்.
நவ நாகரீக உலகம்... சில செயல்களை, சமூகத்தின் உயறிய அடையாளங்களாய் வகைப்படுத்தியுள்ளது. அதிக விலையுள்ள உடை அணிவது, உயர்தர அசைவ உணவு, இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் பயணிப்பது, கூலிங் கிளாஸ் அணிவது, காபி டேவில் டீ சாப்பிடுவது, மாயா ஜாலில் படம் பார்ப்பது, ஆண்ட்ராய்டு/ஆப்பிள் போன் வைத்திருப்பது... இப்படியாக பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
சமூகத்தினால் பொருளாதார, சாதிய, மத ரீதியாக பின் தங்கியவர்கள்...... தன்னை சமூகத்தில் முன்னிறுத்தி கொள்ள, ஒவ்வொரு நொடியும் முயன்று கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த பயணம் நீண்ட நெடியது. அதற்கு பொறுமையில்லாமல், மேற்கண்ட செயல்களை செய்வதன் மூலம், தன்னையும் சமூகத்தில் தற்காலிகமாக நிலைநிறுத்த முயற்சி செய்வார்கள்.
மேற்கண்ட சிற்றின்ப செயல்களே, சமூகத்தினால் மதிக்கப்பட்டவை என்ற நம்பிக்கையை, இன்றைய திரைப்படங்கள், நவீன் பொருளாதார யுகம் செவ்வனே செய்து முடிக்கிறது. அதற்குள் இளைஞர்/இளைநி அகப்பட்டு கொள்கிறார்.
இளமையில் தான் சந்தோஷமாக இருக்க முடியும். திருமணமமான உடன் சந்தோஷமாக இருக்க முடியாது என்ற சொல்லாடல்களும்.. மேற்கண்ட செயல்களை அதிகமாக்கி கொண்டே செல்கிறது.
சந்தோஷத்தை தன்னுடைய மனங்களில் தேடாமல்.... மற்றவரின் மனம் சொல்லும் சந்தோஷத்தை, தன் சந்தோஷமாக எடுத்து கொள்கிறார்கள். புரிந்து கொள்வதில் தான் பிரச்சனையே தவிர, வேறொன்றுமில்லை!!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்’
வேதை குமார்

Wednesday, August 10, 2016

முதியோர் மனநிலையும் பொருளாதாரமும்

நேற்றைய தினம்... உறவினர் ஒருவரோடு பேசி கொண்டிருந்தேன். நீண்ட நேர உரையாடல் எனலாம். பேசி கொண்டிருக்கும் போது, அவர் சொன்ன விஷயத்திற்கு... என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கையறு நிலையில் நின்றேன்.
அப்படி என்ன தான் சொன்னாரு????....” பத்து வருடத்திற்கு முன் டிவிஎஸ் 50 பைக்கை 18,000 ரூபாயிற்கு வாங்கினேன். அப்போது ஒரு பவுன் 15000 ரூபாய் இருந்துது..... அந்த பைக்கை, இப்போது விற்றால் 4000 ரூபாயிற்கு கூட வாங்க மாட்றாங்க!!!! ஆனால்... ஒரு பவுன் நகையை, இப்போது விற்றாலும்... 25000 ரூபாய் வரும்...”
“ அப்ப பைக் வாங்குறது நல்லதா?? இல்ல... ஒரு பவுன் நகை வாங்கி வைத்திருப்பது நல்லதா???” என்றார்.
நான், அவருக்கு என்ன பதில் சொல்வது???
இந்த நிகழ்வை கேட்டவுடன்... அவர் மீது எளன பார்வை வந்திருக்கலாம்!?!?!?. நீங்கள்... இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப யோசிக்கிறீர்கள்... ஆனால்... அவரது பார்வை... மூப்பது நாற்பது ஆண்டுகளுக்கு பின்னால் இருக்கிறது... அவ்வளவு தான் வித்தியாசம்!!!!!
அவரது சிறு வயதில் பட்ட கஷ்டங்களும், வேதனைகளும் மனதில் தொக்கி நிற்பதால் மனம் மாற மறுக்கிறது. உங்களது அப்பா/ தாத்தாவிடம் கேட்டு பாருங்கள். அவர்களது சிறு வயது பருவம் துன்ப கடலிலே ஆழ்ந்திருக்கும்....
பொன், மண் போன்றவற்றை எதிர்கால தேவைக்காக பயன்படுத்தினர். பொழுது போக்கிற்காக செலவு செய்ய தயங்குவார்கள். உடலிழைப்பை பயன்படுத்த தயங்க மாட்டார்கள்.
தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு, சேவை துறையின் வளர்ச்சியினால், சேமிப்பு பொருளாதாரத்திலிருந்து... நுகர்வு பொருளாதாரத்தினை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம்(நம்மை அறியாமல்).
பழமையை தூக்கி எறிவதற்கு முன்னால், சிறிது யோசித்து பார்த்து தூக்கி ஏறியுங்கள்!!! அதில் உங்களுக்கு தேவையானவை நிறைய இருக்கலாம்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Tuesday, August 9, 2016

எழுத்தாளர்களும் எழுத்து வகையும்

தான் சொல்ல வந்த கருத்தை.... இலக்கண நெறியோடும், எதுகை மோனையோடும்..... வாசிப்பவற்கு சுவராசியம் வரும் அளவிற்கு எழுதுவது ஒரு வகை. தொடக்க கால எழுத்தாளர்கள், பெரும்பலோனோர்.. இவ்வகையினரே!!!!
கருத்தின் செறிவு குறைவாக இருக்கும். இலக்கண தன்மையும், மொழி புலமையும் மிகுந்திருக்கும்.
இன்றைய நிலையிலும், இவ்வகையினர் அதிகம் எனலாம். மக்களின் எதிர்ப்பார்ப்பத்திற்கு ஏற்ப, எழுத்தை வடிவமைப்பவர்கள்.
இவர்களை தாண்டி... இன்னொரு வகையினர் இருக்கின்றனர். கருத்து செறிவு அதிகமாக இருக்கும். எழுத்து புலமை மற்றும் இலக்கண செறிவு குறைவாக இருக்கும். இவ்வகையான எழுத்துகளை... மக்கள் குறைவாக விரும்புவதால்...... இத்தகைய எழுத்தாளர்களின் எண்ணிக்கையும் குறைவு. இவர்களிடமிருந்தே... திறனாய்வு கட்டுரைகள் வெளிப்படும்.
இரண்டாவது வகையினர், மிக்குறைவாக இருப்பதால்.... இந்திய எழுத்துகள் மீதான, வெளிநாட்டினரின் மதிப்பு குறைவாக உள்ளது.
இந்திய எழுத்துகளில், கருத்து செறிவு மிக்க எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும்.

உங்களில் ஒருவன்’
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Monday, August 8, 2016

கொடையும்... ஊழியர்களின் வறுமையும்

எனக்கு தெரிந்த ஒருவர்.... கோவில்களில் அன்னதானம் வழங்குவார்.... கோவில் கலைநிகழ்ச்சிகளை கொடையாக செய்வார்..... இத்யாதி பல பொது நல செயல்களுக்கு செலவு செய்வதில் வல்லவர் (பிற்காலத்தில் தொழில் நஷ்டம் அடைந்தார் என்பது வேறு கதை).
பொது மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்ற நோக்கில் செய்கிறீராம். இது நல்ல காரியம் தானே??? இதுல என்ன பிரச்சனை என்று நீங்கள் கேட்கலாம்.
அவரது சொந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியம் வழங்குவதில்லை. அதாவது ..... அவருடைய பணியாளர்களிடமிருந்து சுரண்டப்பட்ட பணத்தை.... பொதுநலன் என்ற பெயரில் சுய விளம்பரம் தேடி கொள்கிறார்..
இது மாதிரியான செயல்களை செய்யும்.... பல்லாயிரக்கணக்கான மக்களை தினந்தோறும் நீங்கள் சந்திக்கலாம் . குறுகிய காலத்தில் பெரும் பணமுதலைகளாக உருவெடுத்தவர்களின் பின்புலம்.... இதுவாகத்தான் இருக்கும் (விதிவிலக்குகளும் உண்டு).
இந்த நிகழ்வு தொழிலதிபர்கள் மட்டுமல்ல... தனக்கு கொடுக்கப்படும் ஊதியத்திற்கு ஏற்ப பணிகள் செய்யாத நபர்களும் அடக்கம் தான்!!!! இத்யாதி நபர்கள்... பொதுநல சேவைகளை செய்ய மாட்டார்கள் . மாறாக.... கோயில் ... கோயிலாக/மடமாக அலைந்து கொண்டிருப்பர்... வேறு வகையில் மகிழ்ச்சியை பெற விழைவர்.
இத்தகைய காரியங்களை எல்லாம்... ”இரண்டங்கட்டி வேலை...” எனலாம். உங்களது பணியை ஒழுங்காய் செய்திருந்தால்... வேறொரிடத்தில் போலி பிம்பமும் தேவைப்படாது. ... வேறொரிடத்தில் சந்தோஷத்தை தேடும் அவசியமும் இருக்காது.... எதையும் இழக்க வேண்டிய அவசியமும் இருக்காது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Friday, August 5, 2016

யதார்த்தமும் கல்வி அறிவும்

மாற்றுப் பணிக்காக... அருகிலுள்ள மற்றொரு சித்த மருத்துவமனைக்கு, என்னுடைய இரு சக்கர வாகனத்தில் செல்வது வழக்கம்....
இது ஆடி மாதமாயிற்றே!! காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். காலையில் செல்லுகையில், எந்தவொரு பிரச்சனையில்லை. ஆனால், மாலையில் திரும்புகையில்(வடக்கிலிருந்து தெற்காக) தான் பிரச்சனை. நமது வண்டியை சற்று முறுக்கினால், நானும் காற்றோடு கற்றாக பறந்து விடுவனோ?!?!? என்ற பயம் வேறு!!!!
” ஆடி காத்துல அம்மியே பறக்கும்” ன்னு பழமொழியே இருக்கே!!! இதுல என்ன அதிசயம்.... ஆச்சரியம் இருக்குன்னு நீங்கள் கேட்கலாம்..
இந்த ஆடி காற்று... எதனால் அடிக்குது.. எப்படி அடிக்குது... யொசித்து பார்த்திருமா?? இதனை பற்றிய பூகோள அறிவை.... பள்ளிக்கூடங்களில் படித்தது தான்!!! ஆனால்... அந்த அறிவியலோடு.... நான்/நாம் இதுவரை ஒப்பிட்டு பார்த்ததில்லை.... (ஏட்டு சுரைக்காயோடு நின்றாயிற்று)
தென்மேற்று பருவகாற்று மே மாத இறுதியில் தொடங்கும்.... என்ற பத்திரிக்கை செய்தியோடு கடந்து சென்றிருப்போம்!!! தமிழ்நாட்டிற்கு தென்மேற்கு பருவகாற்று மழையை தருவதில்லை (கோயமுத்தூர், கன்னியகுமாரி தவிர) என்பதால் மறந்து விட்டோம் போலும்!!!
மே மாத இறுதியில்... கேரளா கடற்கரையில் நுழைந்து.. தமிழ்நாட்டின் வழியாக.. வடகிழக்கு மாநிலங்களை சென்றடையும்... பின்னர் திரும்பி... வடகிழக்கு பருவகாற்றாக தமிழகத்தில் நவம்பர், டிசம்பரில் மழை தரும் என்பது உபரி தகவல்...
நாம் மானப்பாடம் செய்தறிவு... மதிப்பெண்ணோடு முடிந்து விடுகிறது... வாழ்வியல் புரிதலுக்கு வெகு தொலைவில் நிற்கிறது போலும்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Wednesday, August 3, 2016

கபாலி படமும், உணர்ச்சி குவியல் மறைவும்

கபாலி படம் பார்த்த பெரும்பாலனோர், சொன்ன விஷயம் இது தான்!!!! இரண்டாவது பாதியில், மனைவியை தேடுவதில், அதிகம் நேரம் எடுத்து கொண்டார் ரஜினி... அது போர் அடிப்பது போல் இருந்தது.
இவ்வாறு போர் அடிப்பது போன்றதொரு மன நிகழ்விற்கு உண்மையான காரணம் படமா?? அல்லது நம்முடைய மனநிலையா?? நம்முடைய மனநிலையே, முதன்மை காரணமென்பேன்.
இதே மாதிரியான சோக நிகழ்வுகளை, மனம் நெகிழ பார்த்த தருணங்கள் பல உண்டு. ஆனால், மனம் என்னவோ.... அந்த சோகத்தை கூட குறைந்து கொள்ள விழைகிறது. அதன் வெளிப்பாடு... இத்தகைய கூச்சல்களின் வெளிப்பாடு....
நவீன சமூக வளர்ச்சியின் குறியீடாக.... உணர்ச்சி ததும்பல்களை குறைக்கவே எண்ணுகிறது. அன்பு, சோகம், காதல், காமம், பாசம், நட்பு போன்ற அக உணர்ச்சிகள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது. அதில் நாமும் அகப்பட்டு கொண்டோம்... அவ்வளவு தான் !!!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்