நா முத்துகுமாரின் இறப்பினை தொடர்ந்து நடைபெறும், சமூக ஊடக விவாதங்கள், பெரும் கவலை கொள்ளும் விதமாகவே அமைகிறது. மஞ்சள் காமாலையால் இறந்தார் என்பது மட்டுமே உண்மை.
முத்து குமார், தன் மகனுக்காக எழுதியதாக பகிரப்பட்ட கடிதம், மதுவினால் இறந்ததாக சொல்லப்பட்ட செய்தி என போலி செய்திகள் பகிரப்படுகின்றன. அச்சு மற்றும் காட்சி ஊடகத்தை விமர்சிக்கும் முன், நம் செய்யும் அநாகரீக செயல்களை பற்றியும் விமர்சனம் செய்து கொள்வது அவசியமாகிறது.
இதன் உச்ச கட்டமாக... ஒரு குறிப்பிட்ட கம்பெனி ஆயுர்வேத மருந்தை உட்கொண்டால், அனைத்தும் வகையான மஞ்சள் காமாலையும் குணமாகும் என்பது போல்... தகவல்கள் பகிரப்படுகின்றன. அதில் ஒரு ஆயுர்வேத மருத்துவரின் பெயரிடப்பட்டு, நம்பகத்தன்மைக்கு வித்திடுகின்றனர். (அப்பதிவிட்ட மருத்துவரின் முகநூல் பதிவிலிருந்து, சுமார் 14,000 பேர் பகிர செய்திருக்கின்றனர் )
மஞ்சள் காமாலைக்கு சித்தா/ஆயுர்வேத/ மூலிகை மருத்துவத்தில் தீர்வு உண்டெனினும், அனைத்தும் காமாலைக்கு தீர்வு உண்டென விளிப்பது ஏனோ!!!!!
தன்னை சார்ந்தவதற்கு நல்லது செய்கிறோம் என்ற போர்வையில், காமாலை கண்களை போல், பித்து பிடித்து அலைவதேனோ!?!?!? ....
உங்களில் ஒருவன்
‘உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment