Thursday, February 28, 2019

புல்வாமா தாக்குதலும் அரசியலும்


புல்வாமா தாக்குதலை தொடர்ந்து நடக்கும் சமூக நிகழ்வுகள்…. சற்று அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இதை பற்றி எழுத வேண்டாம் என்று கூட எண்ணியிருந்தேன். ஆனால் சமூக வலைதள பதிவுகள் விடவில்லை..

போர் வருமா? வராதா ? என்று விவாதங்கள் தொடங்கி விட்டன. மத்திய அரசின் ஆலோசனையை விடவும்…. சமூக வலைதளங்கள் தொடங்கி, டீக்கடை அரசியல் வரையும் ஆலோசனைகள் அதிகமாக பிரதிபலிக்கின்றன. போர் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுஏனெனில் வளரும் பொருளாதார நிலையில் போர் மூண்டால் மிகப்பெரிய வீழ்ச்சியை இரு நாடுகளும் சந்திக்கும். அதிலும் பாகிஸ்தானில் அந்நிய செலவாணி கையிருப்பு மிக குறைவாக இருக்கிறது. ஆதலால் பேச்சு வார்த்தையை பாகிஸ்தானும் விரும்புகிறேன்..

ஆனாலும்இருநாடுகளும் தன்னுடைய இருப்பை நிலைநிறுத்தி கொள்வதற்காக சிறிய எதிர்ப்பை தாக்குதல் மூலம் காட்டி கொண்டிருக்கின்றன.

பாதுகாப்பு சார்ந்த விஷயங்களை எல்லாவற்றையும் போது மேடைகளில் சொல்லி கொண்டிருக்க முடியாது. இது மாதிரி தருணங்களில், பொது மக்கள் நாம் செய்ய வேண்டியதெல்லாம் அமைதி காப்பது மட்டுமே!!! அரசிற்கு துணை நிற்பது மட்டுமே!!! அதை விடுத்து அனைத்தும் அரசியலாக மாற்றப்பட்டு பேசுவது அபத்தமாய் தெரிகிறது. அதிலும் தேர்தல் நெருங்கிற தருணத்தினால் நிலைமை…. இன்னும் மோசமாகவே இருக்கிறது.

பாகிஸ்தான் பன்னெடும் காலமாக தீவிரவாத அமைப்புகள் ஊக்குவித்து வந்துள்ளது. இராணுவம் சார்ந்த ஆட்சியே நடக்கிறது. இதையெல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் புரியாமல் பிதற்றுவது ஏனோ??? புரியவில்லை.

எந்த பிரச்சனையிற்கு வன்முறை தீர்வாகாது. அந்த கொள்கையை பல தருணங்களில் இந்தியா நிருபித்துள்ளது. அந்த நிலையே தொடர வாய்ப்புகள் அதிகம்!!! அதை விடுத்துஇத்தருணத்தில் பொறுப்பற்று பேசும் மூடர்கள் கண்டு அழுவதா??? சிரிப்பதா??? என்று தெரியவில்லை….

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Friday, February 22, 2019

எஸ்பிஐ எடிம் கார்டும், என் அனுபவமும்


அப்பாவின் எஸ்பிஐ எடிம் கார்டு வந்து பத்து மாதங்களாகி விட்டது. பெரியளவிற்கு டிரான்ஸ்சிசன் இல்லாததால், அதனை ஆக்டிவேட் பண்ணவில்லை. ஆனால் புயல் நிவாரண தொகை வந்ததால், அதனை ஆக்டிவேட் செய்ய வேண்டி இருந்தது. கஜா புயல் பாதிப்பால்….. நான்கு மாதங்களுக்கு பிறகு, எஸ்பிஐ எடிம் இப்போது தான், வேலை செய்ய செய்ய ஆரம்பித்தது.

கார்டை ஆக்டிவேட் செய்ய, நேற்றிரவு எடிம் மையத்திற்கு சென்றிருந்தேன். ஏற்கனவே ஒருவர் மையத்தின் உள்ளே இருந்தார். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால்உள்ளே சென்றேன். அவரும் எடிம் கார்டு ஆக்டிவேட் செய்யவே வந்திருக்கிறார். பலகட்ட முயற்சிக்கு பிறகும், அவரால் ஆக்டிவேட் செய்ய முடியாமல் திரும்பினார்.

என் முறை வந்தது….. பதற்றத்தில் அக்கவுண்ட் நம்பரை தவறாக அழுத்தி விட்டேன். (எதோ எக்சம் போன்று பதற்றம்). கேன்சல் செய்து விட்டு, மீண்டும் முதலிருந்து ஆரம்பித்தேன். கடைசியில் அனைத்தும் முடித்து, செல்போனிற்கு ஒடிபி வந்தது. மறுபடியும் கார்டை போட்டு……. புதிய PIN நம்பரை அழுத்தி, மாற்றலாம் என்று காத்து கொண்டிருந்தேன். தவறான ஒடிபியை அழுத்தி விட்டதாக….. திரையில் காட்டி, புதிய PIN ஏற்கவில்லை. மறுபடியும் முயற்சித்து தோல்வியே மிஞ்சி, மையத்தினை விட்டு வெளியே வந்தேன்.

வந்த ஒடிபி குறுங்செய்தியை மீண்டுமொரு முறை படித்த போது தான்….. ஒரு விஷயம் புரிந்தது. அந்த குறுங்செய்தியில் இருந்த நான்கிலக்க எண்ணை பதிய விட்டேன். அது எடிம் கார்டின் கடைசி நான்கிலக்க எண்!!! ஒடிபி வார்த்தைகளால்(verbal) கொடுக்கப்பட்டிருந்தது. Privacy க்காக இப்படி கொடுக்கப்பட்டிருக்கிறது போலும்!!!! ஏதோ நேர்முக தேர்வு மாதிரி மொத்தமும் பணால்!!!!

மறுபடியும் மையத்தில் சென்று, வார்த்தைகளால் கொடுக்கப்பட்ட எண்ணை பதிய விட்டு…. புதிய PIN வெற்றிகாரமாக மாற்றி விட்டேன். வெற்றி பெற்றது போன்று உணர்வு!!! (முன்னவர் மாற்ற முடியாததற்கு, இதுவே காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கிறேன்). எடிம் கார்டுக்கு இவ்வளவு அலப்பறையா??? என்று உள்மனது கேட்பதை புரிந்து கொள்கிறேன்.

முன்பெல்லாம், எடிம் கார்டோடு புதிய PIN சேர்த்து அனுப்பப்படும். ஆனால் இப்போதோ எடிம் கார்டு மட்டுமே வருகிறது. PIN திருட வாய்ப்புள்ளதால், இதுமாதிரியான புதிய வழிமுறைகளை வங்கிகள் மேற்கொள்கிறது. டிப்டாப் ஆசாமிகளுக்கு, இவ்வளவு பிரச்சனைகள் என்றால்…… படிக்காத பாமர மக்களின் நிலையை…. உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். கிராம புற மக்களுக்கு, எடிம்மில் பணம் எடுப்பதிலே பல இடர்பாடுகளை சந்திக்கும் போது இதெல்லாம் கூடுதல் பிரச்சனை தான்!!!

நவீன தொழிற்நுட்ப வசதிகள் பெருகி விட்ட போதிலும்…. குற்றங்களை நடப்பதும் அதிகமாகி கொண்டு தான் இருக்கின்றன. அதனால் வங்கிகளும் புதிய புதிய வழிமுறைகளை கையாண்டு, பிரச்சனைகளை களைய முற்படுகிறது. ஆனால்…. அதுவே வாடிக்கையர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறி நிற்கிறது. இதில் யாரை குற்றம் சொல்வதென்று தெரியவில்லை!!! ஆனால் நிச்சயமாக களைய பட வேண்டிய ஒன்று!!!

கடைசியாக……. எல்லாவற்றையும் முடித்து வெளியே வந்தேன். கவலை தோய்ந்த முகத்தோடு…. கைலி காட்டிய மனிதர் மையத்திற்கு வெளியே நின்றார். அவருக்கும் ஆக்டிவேட் செய்ய வேண்டும் போலும்!!! அவருக்கு எல்லா வழிமுறைகளையும் சொல்லி கொடுத்து….. ஆக்டிவேட் செய்து கொடுத்து விட்டு…. .வீட்டிற்கு கிளம்பினேன்.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்