எந்தளவிற்கு
மனித சமூகம், பொருளாதார ரீதியாக
முன்னேறி கொண்டிருக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கிறமோ......
அதே அளவில் உளவியல் ரீதியாக
வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது!!!!
போட்டி,
பகைமை, வஞ்சகம் போன்றவை எல்லா
காலங்களிலும் நடந்து கொண்டு இருக்கிறது.
ஆனால், வடிவங்கள் மாறுகின்றதே தவிர, குணங்கள் மாறவில்லை
என்றே தோன்றுகிறது.
சமூகவியல்
நெருக்கடிகள், மனிதனை இந்த நிலைக்கு
ஆட்படுத்துகின்றது என்பது உண்மை. அந்த
உண்மையை வைத்து, நம்மை நாமே
ஏமாற்றி கொண்டிருப்பதும் எவ்வளவு நாட்களுக்கு!!!!
சமீப காலமாக நடக்கும், தனிமனித
தாக்குதல்கள், அதனை மெய்பிக்கும் விதமாகவே
உள்ளது. அதற்கான எதிர் வினைகளும்,
தாக்குதல்களை விட பயங்காரமாக உள்ளது.
” தமிழ்
பண்பாடு உயர்ந்தது “ , “ திராவிட பராம்பரியம் பகுத்தறிவு
சார்ந்தது” போன்ற வீர முழுக்கங்களை
கேட்டு, காது செவிடது தான்
மிச்சம் போலும்!!!!
சுயமரியாதை
கற்று கொடுத்த பெரியாளர் வழி
வந்தவர்கள் கூட, செயலளவில் பெரியார்
கருத்திற்கு எதிராக செயல்படுவர்களாக தெரிகின்றனர்.
உதட்டளவில், பெரியார் கருத்துகளை ஏற்று கொள்வதோடு முடிந்து
விடுகிறதோ!!! என்னவோ!!!!
பல தருணங்களில் புறக்கணிப்பு என்பது மிகச் சிறந்த
ஆயுதம் தான்!!! ஆனால், அதை
IPL மேட்ச்சை மாற்றுவதோடு மட்டும், நம்முடைய பகுத்தறிவை நிறுத்தி விட்டோமே!!!! எத்தனையே தருணங்களை புறக்கணிப்பு செய்ந்திருந்தால், பல பிரச்சனைகளின் தீர்வுக்கு
முயன்றிருக்கலமே!!!
எல்லை தகராறுக்காக தாத்தாவை பழித்த சமூகம், சாதிய
கெளரவ கொலைக்களுக்காக தந்தையை பழித்த சமூகம்,
சம காலத்தில், அதை விட கேவலமான
செயல்களை செய்து கொண்டிருக்கிறதே!!! இதற்கு
யாரை கையை காட்டி,
நீங்கள்
தப்பித்து கொள்ள போகிறீர்கள்!?!?!?1?
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
