Monday, April 23, 2018

புத்தகத்தின் தேவையும், வீழ்ச்சியும்


மனிதன் அறிவை பெற கூடிய வழிகள் ஏராளம். அதில் ஒன்று புத்தகம்!!! பேப்பர் கண்டுபிடிப்பிற்கு பின்பு, புத்தகம் மெல்ல மெல்ல வளர்ந்து, இன்று இமயமலை ஒத்ததாக வளர்ந்து நிற்கிறது. பேப்பருக்காக மரங்கள் வெட்டுவதல் அதிகமாகும் போது சுற்றுபுற சூழல் பாதிக்கப்படுவது அதிகமாகிறது. ஆதலால், புத்தகங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து, மின்னூல் வடிவில் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்!!!!

புத்தக தோற்றத்திற்கு முன்னரும், மனிதன் அறிவை பெற்றுக் கொண்டு தான் இருந்தான். அது போல், எதிர்காலத்திலும் வேறொரு ஊடகம் வழியாக அறிவை பெறத்தான் போகிறான். இவ்வாறு எல்லா கால கட்டத்திலும், மனித சமூகம் அறிவை பெற்று கொண்டு தான் இருக்கும்.. அவ்வாறு இடைக்காலத்தில், அந்த இடத்தினை புத்தகங்கள் நிரப்பின என்பதில் ஐயமில்லை!!!

கண்டல், கேட்டல் மூலம் மனித அறிவை பெற முடியும்!!! இருந்த போதிலும், அவற்றின் உண்மை தன்மை குறித்த கேள்வி எழுப்பப்படும். ஆனால், புத்தகத்தை ஒரு துறையின் வல்லுநரே எழுதுவதால், அக்கருத்தின் நம்பக தன்மை அதிகம் எனபது மட்டும் உண்மை. அத்தகைய நம்பிக்கை தன்மையிலும், இன்றைய சூழ்நிலையில், விரிசல் விழுந்திருக்கிறது என்பது உண்மை.

இன்றைய சூழ்நிலையில், 100 புத்தகங்கள் வெளிவருகிறது என்றால், சுமார் 30 புத்தகங்கள் கூட தரமாக இல்லை!!! அப்படியே இருந்தாலும், அந்த புத்தகத்தின் கருத்தும், முழுமையாக ஏற்று கொள்ள கூடியதாக இல்லை என்பது ஒருபுறம்!!! புத்தகத்தை முழுமையாக படிக்காமல், நுனி புல் மேய்வதை கடக்கும் வாசகன் மறுபுறம்!!!!

இவ்வறாக…… புத்தகத்தை தேவையும் மதிப்பும் வெகுவாக குறைந்துள்ளது. வருங்காலங்களில் இன்னும் வீழ்ச்சி அடையுமே தவிர, உயர வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.

ஆனால், பொது சமூகத்தில், ” புத்தக படிப்பவன் புத்திசாலிஎன்ற பார்வை இருக்கிறது. இக்கருத்தினை முழுமையாக மறுக்கிறேன். புத்தக வாசிப்பு என்பது, ஒரு வகையில் அறிவை பெறக்கூடிய தவிர, முழுமையான அறிவை புத்தக வாசிப்பின் மூலம் பெற முடியாது. கண்டல், உற்று நோக்கல், ஒப்பிடுதல் போன்று பல்வகை திறன்கள் மூலம் அறிவை பெறலாம்.

உண்மையிலே…… புத்தக படித்தவன் எல்லாம் புத்திசாலி என்றால், கல்லூரி மற்றும் பள்ளி பாடங்களை படித்தவர்கள் எல்லாம், ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று யோசித்து பாருங்கள்.

என்னை பொறுத்த வரை, “ படிக்காத அறிவாளிகளை விட, படித்த முட்டாளே அதிகம்என்பேன்.

அப்புறம் முக்கியமான விஷயம்….. உலக புத்தக தினம் வாழ்த்துங்கள்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment