Thursday, April 12, 2018

சித்தம்- இலவச மின்னூல்


சித்த மருத்துவ நண்பர்களுக்கு வணக்கம்!!!

மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலம், சித்த மருத்துவ அலுவலருக்கான தேர்வு, 2017 ஆம் ஆண்டு நடந்தது. இத்தேர்விற்காக, இலவச வினா-விடை தொகுப்பினை தயாரித்து வெளியிட்டு இருந்தேன். இதில் உள்ள சில பிழைகளை நீக்கி, முழு மின்னூலாக மாற்றி இருக்கிறேன். இனிவரும் காலங்களில் வருகின்ற AMO, PG NEET போன்ற தேர்வுகளுக்கு, பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

தேர்வு என்றவுடன் சற்று படப்படப்பு தோன்றி விடுகிறது!!! அதிலும் போட்டி தேர்வுகள் என்றால் சொல்லவே தேவையில்லை!!! ” வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்க போகிறதுஎனும் போது, இதயத்துடிப்புகள் அதிகமாவதை தவிர்க்க இயலாது. இருந்த போதிலும்…. இத்தடைகளை யெல்லாம் உடைத்தெறிந்து வெற்றியை பெற வேண்டும்!!! காலத்தின் கட்டாயம்!!!!

தேர்வை அணுவது எப்படி??? போட்டி தேர்வுகளுக்கு படிப்பது எப்படி???? படிக்கும் போது செய்ய வேண்டியது என்ன??? வினாத்தாளை அணுகுவது எப்படி???? பயிற்சி மையங்கள் அவசியமா/இல்லையா??? என்பது போன்ற பல வினாக்களுக்கு விடைகளை காண முயல்கிறேன்!!!

சித்த மருத்துவ தேர்வுகள் குறித்த பயமும், அது சார்ந்த மிகை பிரதிபலிப்புகளை உடைக்கவும், வணிகம் சார்ந்த அரசியலை தடுக்கவும், இப்படைப்புகள் காலத்தின் கட்டாயம் என்று எண்ணுகிறேன்!!! எனது நோக்கம் முழுமையடையுமா?? என்று தெரியாது. ஆனால் தொடக்க புள்ளியாக அமைவது நிச்சயம்!!!

இந்த மின்னூலை...... https://drive.google.com/…/fol…/0B5w2UPmrNSHRUXZlZmV1QkxPWXM
என்ற Google Drive இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலலாம். மேலும் MRB AMO SIDDHA 2017 என்ற முகநூல் குரூப்பிலிருந்து தரவிறக்கி கொள்ளலாம்.

சித்த மருத்துவத்தின் வளர்ச்சி பாதையில், என்னால் முடிந்த சிறிய பங்காளிப்பாகவே, இதை நினைக்கிறேன். வாழ்க சித்த மருத்துவ மருத்துவம்!!! வளர்க!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment