” நீ பேசுறது தான்… எனக்கு தெளிவா புரியமாட்டோங்குது!! உன்கிட்ட வர
பேசண்ட் கிட்டவாவது தெளிவா, சத்தமா பேசு
ரமேஷ் குமார் “
மேற்கண்ட வாசகம்… ஆட்டோகிராப் புத்தகத்தில் மருத்துவ நண்பர்
எழுதிய வாசகம்!!!
மேற்கண்ட
செய்தியில் உண்மையில்லாமல் இல்லை. நான் வேகமாக பேச கூடியவன்!!! நான் சொல்ல வந்த
செய்தியை… கோர்வையாகவும் தெளிவாகவும் பேச தெரியாவதன்!!!
(வாதமும் பித்தமும் சேர்ந்தால் அப்படி தானே இருக்கும்) … இதனால் பல இடங்களிலும் சங்கடங்களையும் அனுப்பி
இருக்கிறேன்.
பள்ளி படிப்பை
முடித்து……
பட்ட படிப்பு குறித்து
பேசும் போது, ஆசிரியர் பணி
தேர்ந்தெடுக்க சொல்லி வற்புறுத்தினர். மேற்கண்ட காரணத்தில் முற்றிலும்
நிராகரித்தேன். சரி….. மருத்துவ படிப்பு
தேர்ந்தெடுத்தாயிற்று!! அதிலும் சித்த மருத்துவம்!!! இதற்கு பேசு மொழி தேவை!! ( வந்த
பிறகு தெரிந்தது என்பது வேறுகதை!!)
கிராமத்தில்
பிறந்து, படித்து வந்ததுனாலவோ… என்னவோ!!! தாழ்வு மனப்பான்மையும் பயமும்
சேர்ந்து வந்து விட்டது!!! “ கல்லூரிகளில்
செமினார் எடுக்கும் போது… எவ்வளவு
தடுமாறினேன் ? ” என்பது இன்றும்
நினைவில் உள்ளது
முதுநிலை மருத்துவம்
படிக்கும் போது….. ஜுனியர்
மாணவர்களுக்கு ஒரு முறை இசிஜி சொல்லி கொடுத்தேன்!!! அவர்களும் சிறிதளவு புரிந்தது
கொண்டது பேரானந்தம்!!! அப்போதோ…. “ நம்மளும்
பாடங்கள் எடுக்க இயலும் ” என்ற சிறிய
நம்பிக்கை பிறந்தது!!!
முகநூலினை போல….. கருத்து ரீதியான மோதல்கள், செல்போன் மூலமாகவும் நேரடியாகவும் பல தடவை
நடந்துள்ளது!!! இதுவும் பல விஷயங்களை கற்று கொடுத்தது!!!
அடுத்த வாய்ப்பு…. வார இறுதி நாட்களில், இலவச டிஎன்பிஎஸ்சி வகுப்பு எடுக்கும்
நிகழ்வு!!! ஆரம்ப காலங்களில்… நிறைய
தடுமாற்றம்!!! நான் எடுக்கும் பாட பகுதிகளாக… அரசியல் அறிவியல்
மற்றும் பொருளாதாரம் இரண்டுமே புரிந்து கொள்ளும் வகையில் எடுத்தால் மட்டும்
புரியும்!!! காலங்கள் செல்ல… செல்ல எடுக்கும்
திறனும் நன்கு மேம்பட்டிருக்கிறது!!! பெரும்பாலும் நான் எடுப்பது மதிய வகுப்பு !!!
தூங்காமல் எடுப்பது மிக சவலான விஷயம்!!!
1 ½ மணி நேரம் பாடம்
எடுத்து முடித்த பிறகு, ” பிரேக்
போய்டுக்கு வாங்க!!! “ என்று சொன்ன போது… “ ஓ பிரேக் டைம் வந்து விட்டதா?? “ என்பது போன்று மாணவர்களின் முகவோட்டமாக
தெரிந்தது…
அன்றைய பொழுதில் நான்
ஆசிரியராக உணர்ந்தேன்!! இது 2-3 முறை நடந்தது!!
ஒருமுறை… பாடம் நடத்தி முடித்த பிறகு…. “ நீ லாயரா சார்?? “ என்றான் மற்றொரு
மாணவன்.
“ சார்!!! புத்தகமே
இல்லாமலே பாடம் நடத்துறது!! எப்படி நடத்த முடியுதுன்னு தெரியல!!”
மேற்கண்ட மாணவர்
கருத்துகள்…. பெரும் சந்தோஷத்தை
ஏற்படுத்த கூடியவை!! சக மனித உரையாடலை தாண்டி….. பாடம் நடத்தும் அளவிற்கு
உயர்ந்திருப்பது… என்னளவில் மிகப்பெரிய
வளர்ச்சி!!!
தனி மனித
முன்னேற்றத்திற்கு….. மேடை பேச்சுமொழி
முக்கியம்!!! அதை நோக்கிய பயணத்தில்… இது முக்கிய
படி!!! ஒரு காலத்தில் ஆசிரிய பணியை வெறுத்த நான்…. இன்றும் விரும்ப
ஆரம்பித்துள்ளேன்!!! வாழ்க்கை எத்தனை நகைமுரண் நிறைந்தது!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்