நான் முகநூலில் கற்று கொண்டது அதிகம்!! ஒரு செய்தி குறித்து 360 டிகிரி பார்வை கிடைக்கும்!!! அதாவது... தவறாக இருந்தாலும்... அதற்கு 2 பாயிண்ட் கண்டுபிடித்து முட்டு கொடுப்பவர்கள் அதிகம்!!! அது கூட அறிவு நிலையே!!!
வெற்றியை நோக்கி பயணிக்கும் மானுடம், தன் வந்த பாதையோ, வாழ்ந்த நிலையோ திரும்பி பார்க்க நேரமில்லாமல், பயணிக்கிறான். வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் மட்டுமே, நினைத்து பார்க்க கூடிய மனநிலை இருக்கிறது. இந்த மனநிலையை மாற்றி, வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், தான் செய்தது சரியானது என சுய மதிப்பீடு செய்வது அவசியமாகிறது. அதற்கான வழிகாட்டுதலே எந்தன் பதிவின் பணி.
Sunday, August 30, 2020
முக நூலும் கட்சி சார் அரசியலும்
Wednesday, August 12, 2020
கருத்தியலும் கலையும்
சிறந்த பேச்சாளர்கள், சமூகத்தில் வெகுவாக பாராட்டப்படுவதற்கு காரணம்... .பேச்சுத்திறனும் மொழி நடையும் !! அதிலுள்ள கருத்து செறிவு மிக குறைவு !!
உளவியல் அடிப்படையில் பார்த்தாலும்.... அறிவு சார் கருத்துகளை தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு அதிகமாக.கேட்க முடியாது!!! மூளையில் தொய்வு ஏற்பட்டு... கருத்து உள்வாங்க முடியாது!!! தொய்வு ஏற்பட்டு.... பேச்சாளர் மீதே வெறுப்பு ஏற்பட்டு விடும்!!!
ஆனால்... சிறந்த பேச்சாளர்கள் பேசினால்.... ஒரு மணி நேரம் தொடர்ந்து பேசினாலும் கேட்டு கொண்டிருக்க முடியும்!!!! அங்கு கருத்து செறிவினை விட..... மொழி நடையும்.... உடல்மொழியும்... குரலின் ஏற்ற இறக்கங்களும்... நகைச்சுவைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன!!!
இன்னொரு புறம்.... சிறந்த அறிவாளிகள் மிக சிறந்த பேச்சாளர்களாக இருக்க வாய்ப்புகள் குறைவு!!! ஒரு துறையை சார்ந்த அறிவினை பற்றி சிந்திக்க முடியுமே தவிர.... எதிரில் உள்ளவர்களுக்கு எதுவாக பேச திறன் இருக்காது!!!
ஆனால்... மிக சிறந்த அறிவாளிகள்.... ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடைந்த பிறகு.... அவர்களும் மிக சிறந்த பேச்சாளர்களால் அறியப்படும் நிலையும் உண்டு!!! ஒரு குறிப்பிட்ட துறையின் திறமையினால்... சிறந்த பேச்சாக கருதப்படும் வாய்ப்பினால்!!!
இதே புரிதல்... சிறந்த பேச்சாளர்களுக்கு உண்டு!!!
நிற்க....
சித்த மருத்துவ தேகி அடிப்படையில் புரிந்து கொள்ளலலாம்!!! கப தேகிகளுக்கு சிந்தனை திறன் மிக குறைவு . ஆனால் தனக்கு தெரிந்ததை .... மற்றவர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வல்லவர்கள்!!!
பித்த தேகிகள்..... புத்தி கூர்மையானவர்கள்!!! தனக்கு தெரிந்ததை சுருக்கமாக பேசுவதில் வல்லவர்கள்!!!
வாத தேகிகள்... மிக சிறந்த சிந்தனைவாதிகள்!!! ஆனால் தெளிவாக பேசவே தெரியாது!!!
நிற்க...
அறிவாளியாகவும் பேச்சுதிறன் வல்லவர்கள் யாருமே இல்லையா?என்று நீங்க கேட்கலாம்!!! இருப்பார்கள் சதவீதம் மிக குறைவு!!!
பல திறமைகள் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை!!!
இரண்டிலும் பெரியவர்கள் என்றால்... ஒரு வகையில் அரைகுறை தான்!!! ஆற்றில் ஒரு கால்!! சேற்றில் ஒரு கால் வகையறா!!!
டாட்........
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
Sunday, August 9, 2020
பொருளாதாரமும் அரசியல் பேசுதலும்
அரசியல் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க இயலாது!!!
அதில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு கூட விடை தெரியவிலை!!!
அதே சமயத்தில்…… அரசியலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்!!!
ஏனெனில் அரசியல்வாதிகள் தான்.. இந்த நாட்டை வழிநடத்துபவர்கள்!!!
நிற்க!!!
சமூக வலைதளங்கள் தொடங்கி அச்சு, காட்சி ஊடகங்கள் வரை… அரசியலை தான் பெரும்பாலும் பேசுகின்றன!!! அதிலும் கட்சி சார்ந்த அரசியல், தனிநபர் அரசியலை அதிகமாக விவாதிக்கின்றன!!! இந்தளவிற்கு பேச வேண்டிய அவசியம் இருக்கிறதா? என்றால்… தேவையில்லை என்பேன் ( என் கருத்துபடி )
இவ்வாறு… தனிநபர் அரசியல் மற்றும் கட்சி சார்ந்த அரசியலை அதிகமாக பேசுவதால் தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் ஏற்படும் இழப்புகள் ஏராளம்!!!
அதிலும் குறிப்பாக….. சமூக வலைதளங்கள் அதிகமாக தனிநபர், கட்சி சார்ந்த அரசியலை பேசுகின்றனர்!!! ஒருவர் முழு நேர அரசியல்வாதியாக இருந்தால்… அரசியல் பேசுவதில் இல்லை!!!
ஆனால்….. தேவையில்லாமல் அரசியல் பேசி… உங்களை இழக்காதீர்கள்!!!! அரசியல் பேசுவதை குறைத்து… வேறு செயல்களில் கவனம் செலுத்துங்கள்!!! சமூகம், அறிவியல், பொருளாதாரம் போன்றவற்றில் கற்று கொள்ளுங்கள்!!! அதிகம் படியுங்கள்!!! தனிநபர் பொருளாதாரத்தை உயர்த்துங்கள்!!!
உண்மையினை உடைத்து பேசுவதென்றால்…… சமூக வலைதளத்தில் பொதுநலம் என்று சொல்லி கொண்டிருக்கலாம்!!! தனிமனித அடிப்படை பொருளாதார தேவைகள்… அதை விட முக்கியம்!!!
உளவியல் ரீதியாக சொல்வதென்றால்…. தனிமனித பொருளாதார தேவை பூர்த்தி அடைந்தால் மட்டுமே. சிந்தனை திறன் கூட சிறப்பாக இருக்கும்!!!!
அரசியல் பேசுவது தவறில்லை!!! ஆனால்.. .தனிநபர் , கட்சி சார் அரசியல் மட்டுமே பேசுவதில் பயனில்லை!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்