Saturday, April 30, 2016

வலதுசாரி-இடதுசாரி சிந்தனை

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை முறையும், இடதுசாரி சிந்தனையாக ஆரம்பித்து, வலதுசாரி சிந்தனை முடிவதாக நினைக்கிறோம்... ஆனால், எல்லா சிந்தனைகளையும் அப்படியாக நடப்பதில்லை...
பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை என்பது, இளைஞர்களிடம் குறைவாகவே காணப்படும். இந்த மாதிரியான இடது சாரி சிந்தனைகள், கால போக்கில் வலது சாரியாக மாறி, கடவுள் நம்பிக்கை உ ள்ள மனிதனாக இறக்கிறான்.
இந்த விஷயத்தில், தன் மீதான நம்பிக்கை குறைந்து, கடவுள் மீதான நம்பிக்கை அதிகமாகும் போது, . வலதுசாரி சிந்தனை அதிகமாகுவது போல் தோன்றமளிக்கிறது.
சில சிந்தனைகள், காலத்தினால் மழங்கடிப்பட்டு, இடது சாரி சிந்தனைகள், வலது சாரி சிந்தனையாக மாற்றம் அடைகிறது.
என்னுடைய சம காலத்தில், காதல் திருமணம் என்பது பண்பாட்டு ரீதியாக தவறில்லை என்ற நிலையில் உள்ளது. இந்த சிந்தனை, என் வாழ்நாள் முழுவது்ம் மாறாது.
ஆனால், அடுத்த தலைமுறையில் காதல் திருமணங்கள் மறைந்து லிவிங் டூகதர் என்ற வாழ்க்கை முறை, சமுதாயத்தினால் முன்னெடுக்கப்படலாம். அப்போது, காதல் திருமணம் என்பது வலது சாரி சிந்தனையாக மாறி இருக்கலாம்.
சில நேரங்களில், சிந்தனைகள் மாறுவது போல் தோன்றமளிக்கிறது. சில நேரங்களில், உண்மையாகவே சிந்தனைகள் மாற்றம் அடைகின்றன. அனைத்தினையும் காலமும் சூழ்நிலையும் முடிவுச் செய்கின்றன.
-----------------------------------------------------------------------------
உங்கள் புரிதலுக்காக:: இடது சாரி சிந்தனை என்பது மாற்றம் (புதுமைவாதிகள்)வேண்டும் என்பவர்கள்...
வலது சாரி சிந்தனை என்பது மாற்றம் வேண்டாம்(பழைமைவாதிகள்). பழைய நிலையே தொடரலாம்.

உங்களில் ஒருவன்’
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Friday, April 29, 2016

”பாத்து போங்கடீ….”

”பாத்து போங்கடீ….”
மேற்கண்ட வாக்கியத்தை மறுபடியும் மனதினுள் ஒட விட்டுப் பாருங்கள். பெண் தோழியை வழியனுப்பி வைக்கும், சக தோழியின் சொல்லாடலும் அல்ல. ஒரு ஆணை பார்த்து சொல்லும், ஒரு பெண்ணின் சொல்லாட்சி…. என்ன குழப்பாக இருக்கிறதா???
ஏதோ இலக்கணப் பிழை என்றும் நினைத்து விட வேண்டாம். இலக்கண போலி என்று கூட வைத்து கொள்ளுங்கள் தவறில்லை. எங்களது கிராமங்களில், பேரன்/பேத்தியை வழியனுப்பி வைக்கும், ஒரு பாட்டியின் சொல்லாடலின் நீட்சியே இவை!!!! இதில், பாட்டியின் அத்மார்த்தமான அன்பும், பாசமும் கலந்தது என்றால் மறுப்பதற்கில்லை.
இவையெல்லாம் தவிர்த்து, இந்த வாக்கியத்தை சொன்ன பாட்டியும் சொன்ன இடமும் கொஞ்சம் மயிர் கூச்செரிய கூடியது
என்னுடைய கிளினிக்கை பூட்டி விட்டு சொல்லும் நேரத்தில், மருத்துவம் பார்க்க ஒரு வயதான பாட்டி வந்தாள். மருந்துகளையெல்லாம் பெற்று புறப்படுகையில், என்னை நோக்கி ” பைக்கல தான் போறிங்க!!! பார்த்து போங்கடீ” என்றார் சற்றென்று. அந்த இரவு நெர இருளையும் தாண்டி, என்னுடைய மனம் பிரகாசமாக மின்னியது…..
எத்தனையே மனம் இறுகி போன வாழ்க்கை தருணங்களை யெல்லாம் தாண்டி, இப்படியான சில தருணங்களே… எம்மை நெகிழ்ச்சி படுத்துவையாக உள்ளது!!! கிராமத்தின் வாசனை நம்மை தாலாட்டுகிறது!!!!
உங்களின் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Monday, April 11, 2016

விடுமுறை தினத்தில்!?!?!

நேற்றைய தினம், சற்று வித்தியாசமாக பொழுது புலர்ந்தது. விடுமுறை தினமென்பதால், சற்று பொறுமையாக படுக்கையை விட்டு எழும்பலாம் என்று நினைத்தாலும் முடியவில்லை.
முன்னரே எழுந்து, காலை டீயை குடித்து விட்டு, வயலில் இறங்கியாச்சு!!!! வயலில் இட்ட நிலக்கடலைக்கு நீர் பாய்ச்சும் பணியை தொடங்கினோம். நீண்ட நாட்கள் பிறகு, விவசாய பணி எனும் போது, களைப்பு சற்று அதிகமாக இருந்தது.
பணிகள் முடிய, பத்து மணியாகி விட, வயிற்றுப்பசியை அடக்க முடியவில்லை. சூரிய தேவன், அதிகளவு களைப்படைய செய்து விட்டான்.
தென்னை மரத்தில் உள்ள இரண்டு இளநீரை பறித்து, வயிற்றில் நீராக விட, வயிறு சற்று சாந்தமானது. காலை டிபனையும் முடித்தாயிற்று. நிலக்கடலைக்கு நீர் விட வேண்டிய அவசியத்தை, நாம் வயிற்று பசியின் மூலம், இயற்கை நம்மை அறிவுறுத்தியது போல் இருந்தது.
மருத்துவராக பணி புரியும் நமக்கு, விவசாயத்திலும் இறங்கி களப்பணியாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் என நினைக்கிறேன். உடல் உழைப்பிற்காக வாக்கிங் என்று தனியாக பயிற்சி செய்வதை விட, விவசாய பணிகளை சிறிது செய்தாலே போதும். உடலும் நன்மை பயக்கும். மனதிற்கு நன்மை பயக்கும்.
வயிற்று பிசைப்புகாக வேலை செய்கிறோம் என்ற பிதற்றுவதை விடுத்து, வயல் பணிகளை சிறிதளவு செய்தால் வயிறும் நன்றாக இருக்கும்!!!! வயல் வெளியும் நன்றாக இருக்கும்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்