Monday, April 11, 2016

விடுமுறை தினத்தில்!?!?!

நேற்றைய தினம், சற்று வித்தியாசமாக பொழுது புலர்ந்தது. விடுமுறை தினமென்பதால், சற்று பொறுமையாக படுக்கையை விட்டு எழும்பலாம் என்று நினைத்தாலும் முடியவில்லை.
முன்னரே எழுந்து, காலை டீயை குடித்து விட்டு, வயலில் இறங்கியாச்சு!!!! வயலில் இட்ட நிலக்கடலைக்கு நீர் பாய்ச்சும் பணியை தொடங்கினோம். நீண்ட நாட்கள் பிறகு, விவசாய பணி எனும் போது, களைப்பு சற்று அதிகமாக இருந்தது.
பணிகள் முடிய, பத்து மணியாகி விட, வயிற்றுப்பசியை அடக்க முடியவில்லை. சூரிய தேவன், அதிகளவு களைப்படைய செய்து விட்டான்.
தென்னை மரத்தில் உள்ள இரண்டு இளநீரை பறித்து, வயிற்றில் நீராக விட, வயிறு சற்று சாந்தமானது. காலை டிபனையும் முடித்தாயிற்று. நிலக்கடலைக்கு நீர் விட வேண்டிய அவசியத்தை, நாம் வயிற்று பசியின் மூலம், இயற்கை நம்மை அறிவுறுத்தியது போல் இருந்தது.
மருத்துவராக பணி புரியும் நமக்கு, விவசாயத்திலும் இறங்கி களப்பணியாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் என நினைக்கிறேன். உடல் உழைப்பிற்காக வாக்கிங் என்று தனியாக பயிற்சி செய்வதை விட, விவசாய பணிகளை சிறிது செய்தாலே போதும். உடலும் நன்மை பயக்கும். மனதிற்கு நன்மை பயக்கும்.
வயிற்று பிசைப்புகாக வேலை செய்கிறோம் என்ற பிதற்றுவதை விடுத்து, வயல் பணிகளை சிறிதளவு செய்தால் வயிறும் நன்றாக இருக்கும்!!!! வயல் வெளியும் நன்றாக இருக்கும்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

No comments:

Post a Comment