”பாத்து போங்கடீ….”
மேற்கண்ட வாக்கியத்தை மறுபடியும் மனதினுள் ஒட விட்டுப் பாருங்கள். பெண் தோழியை வழியனுப்பி வைக்கும், சக தோழியின் சொல்லாடலும் அல்ல. ஒரு ஆணை பார்த்து சொல்லும், ஒரு பெண்ணின் சொல்லாட்சி…. என்ன குழப்பாக இருக்கிறதா???
ஏதோ இலக்கணப் பிழை என்றும் நினைத்து விட வேண்டாம். இலக்கண போலி என்று கூட வைத்து கொள்ளுங்கள் தவறில்லை. எங்களது கிராமங்களில், பேரன்/பேத்தியை வழியனுப்பி வைக்கும், ஒரு பாட்டியின் சொல்லாடலின் நீட்சியே இவை!!!! இதில், பாட்டியின் அத்மார்த்தமான அன்பும், பாசமும் கலந்தது என்றால் மறுப்பதற்கில்லை.
இவையெல்லாம் தவிர்த்து, இந்த வாக்கியத்தை சொன்ன பாட்டியும் சொன்ன இடமும் கொஞ்சம் மயிர் கூச்செரிய கூடியது
என்னுடைய கிளினிக்கை பூட்டி விட்டு சொல்லும் நேரத்தில், மருத்துவம் பார்க்க ஒரு வயதான பாட்டி வந்தாள். மருந்துகளையெல்லாம் பெற்று புறப்படுகையில், என்னை நோக்கி ” பைக்கல தான் போறிங்க!!! பார்த்து போங்கடீ” என்றார் சற்றென்று. அந்த இரவு நெர இருளையும் தாண்டி, என்னுடைய மனம் பிரகாசமாக மின்னியது…..
எத்தனையே மனம் இறுகி போன வாழ்க்கை தருணங்களை யெல்லாம் தாண்டி, இப்படியான சில தருணங்களே… எம்மை நெகிழ்ச்சி படுத்துவையாக உள்ளது!!! கிராமத்தின் வாசனை நம்மை தாலாட்டுகிறது!!!!
உங்களின் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment