Sunday, September 13, 2020

கல்வி, வேலைவாய்ப்பு -சில புரிதல்கள்

1.     “தப்பி பிழைத்தல் விதி “ மிக முக்கியமானது. 1980 இருக்கும் சூழ்நிலை வேறு!!! 2020 இருக்கும் சூழ்நிலை வேறு!!! காலத்திற்கு ஏற்ப நம்மை தகவமைத்து கொள்ள வேண்டும். இதை புரிந்து கொண்டால் மட்டும்… இவ்வுலகத்தில் வாழலாம்!!!

2.   . பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வி ஆகிய இரண்டிலும் எண்ணிக்கையை அடிப்படையில்(Quantity) தேவையான அளவினை தமிழ்நாடு கடந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.  தரம் (Quality) அடிப்படையிலான தேவையான பயணிக்க ஆரம்பிக்க வேண்டும். இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுவதை விட்டு, மற்ற நாடுகளினை ஒப்பிடும் நிலையினை அடைந்து விட்டோம்

3.   . 1990 க்கு பிறகு உலகமயமாக்கலுக்கு பிறகு, இந்தியா சேவை துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது. அதிலும் தென் இந்திய மாநிலங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது. மத்திய தர வர்க்க அதிகம் கொண்ட தமிழ்நாட்டில், சேவை துறையை நோக்கி பயணிப்பது இயற்கையாக நடந்தது!!! ஆனால் தேவையை விட அதிகமான மாணவர்களை ஈர்த்து….. தேக்க நிலை(வீக்கத்தினை) ஏற்படுத்தி விட்டது.

4.   . இன்னும் 10 ஆண்டுகளில்… தமிழ்நாடு உயிர்கல்வி துறை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிடலாம்!!! கல்லூரிகள் மூடல் நடக்கலாம்!!! Quantity தாண்டி Quality யோசித்தால் மட்டும் தக்க வைத்து கொள்ள இயலாம்!!! வேலையில்லா திண்டாட்டம், குழந்தை பிறப்பு விகிதம் குறைவு போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கும்

5.    இன்றைய சூழ்நிலையில், 7-10 % இருக்கும் வேலையில்லா திண்டாட்டம் … இன்னும் பத்தாண்டு ஆண்டுகளில் 20-30 % வரை கூட ஆகலாம்!!! மருத்துவர்கள் கூட தேவையை விட…. அதிகமாக உருவாக்கி வருகிறோம்!!! உலக சுகாதார நிறுவனத்தின் தேவையை விட அதிகமாக மருத்துவர்களை உருவாக்கி வருவது நல்லதல்லது என்றது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சொன்ன கருத்தினை நினைவு கூறுகிறேன்.

6.   . தமிழ்நாட்டில் திறன் மிகு பணியாளர்களின் ( Skilled labour) தேவை அதிகமாக இருக்கிறது. கார்பெண்டர்கள், கொத்தனார், மெக்கானிக், எலெக்டிரியன் போன்ற திறன்மிகு பணியாளர்களின் சம்பளத்தை விட டிகிரி படித்தவர்களின் சம்பளம் குறைவு!!! ஏனெனில் தேவையான இடத்திற்கு பணியாளர்களினை உருவாக்க தவற விட்டு விட்டோம்!!!

7.   மீண்டும் கூறுகிறேன்.. ” தப்பி பிழைத்தல் விதி ”மிக முக்கியமானது!!! கஷ்டப்படுவர்களினை கை கொடுத்து… தூக்கி விட வேண்டும் என்ற  உண்மை ஒருபுறம்!!! கை கொடுக்கும் போது… தனிமனிதனின் முயற்சியையும் தன்னம்பிக்கையும் குறையும் என்ற மறுபுறமும் இருக்கிறது

8.    விளம்பு நிலை மக்களுக்கு, சூழ்நிலையை விட்டு வெளியேறுவதற்கு கல்வி என்ற கல்வி முக்கியம்!!!  கல்வியில் தனியார் மயம் மற்றும் போட்டி உலகிற்கு ஏற்ப .. .கல்வி முறையை மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்!!! எத்தனை கல்வி முறை வந்தாலும்.. அதனை நடைமுறைப்படுவத்திலும், பயிற்றுமுறையில் மாற்றம் வராமல் எந்த மாற்றம் நடைபெறாது.

9.    10,12 வகுப்பு தேர்வில்… புத்தகத்தின் பின்பக்க வினாக்களில் இருந்து கேள்வி கேட்காமல், புத்தகத்தின் உள்பகுதியில் கேட்கப்பட்ட போது … அதற்கு மதிப்பெண் அளிக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறியதாக தினசரி நாளிதழ் ஒன்று கட்டுரை எழுதியது!!! ஏமாற்றமே மிஞ்சியது.

10  10,12 வகுப்பு முடித்து வரும் மாணவர்களிடம், ”அடுத்த என்ன படிக்கலாம் ? “ என்று கேட்டு பாருங்களேன்….மருத்துவம், பொறியியல்,கலை, அறிவியல் தாண்டி பெரிதாக தெரியாது. இது கிராமப்புற மாணவர்கள் மட்டுமில்லாமல்…. நகரப்புற மாணவர்களும் அடக்கம்!!! ஆசிரியர்களுக்கும் , பெற்றோர்களும் விதிவிக்கல்ல!!!

11. . எதிர்கால படிப்புகள் குறித்த தெளிவான புரிதல்களோடு… ஒரு பட்டப்படிப்பு தேர்ந்தெடுத்தால் பிரச்சனையில்லை!!! சமூகம் கொடுக்கும் பிம்பம்/அழுத்தம், அறியாத மாணக்கர்கள், புரியாத பெற்றோர்கள், விளக்காத ஆசிரியர்கள் என திரும்ப திரும்ப ஒரே குட்டையில் மீன் பிடித்து கொண்டு இருக்கிறார்கள். மருத்துவர் குறித்து பிம்பம் ..இந்த புள்ளியில் தொடங்கிறது. ஆனால் உண்மை என்பது வேறு!!!

12..  கல்வி என்பது தொடர் கற்றல்!!! அதை எத்தனை பேர் புரிந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை!!! (அனைத்து துறைகளுக்கும் பொருந்தும் )  பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசியர்களின் தேர்வு முறைகளில் மாற்றம் தேவை

13..  பட்ட படிப்பு முடித்த பிறகு…. அடுத்து என்ன பண்ணலலாம்? என்பதில் கூட பல பேருக்கு தெளிவில்லை!!! அந்த புரிதல் கல்வி முறை அளிக்க வில்லை!!! சரி… போட்டி தேர்வு எழுதலாம் என்றால் கூட…….. TRB, TNPSC தாண்டி யோசிப்பதில்லை!!! அப்புறம் கூச்சல் வேறு!!

14. . போட்டி தேர்வுகள் சார்ந்து மூன்றாண்டுகளாக பயணித்ததில் சொல்கிறேன். மானப்பாடம் தாண்டி… சற்று சிந்திக்கிற மாதிரி கேள்வி கேட்டாலே.. கடினம் என்கிறார்கள்!!! இதன் அடித்தளம்,…. பள்ளியில் ஆரம்பித்தது. பள்ளித்தேர்வு, போட்டித்தேர்வுகள் உண்மையான திறமையை ஆய்வு செய்யுமா? என்று நீங்கள் கேட்கலாம்!!! மாற்று இருந்தால் சொல்லுங்கள்…. அரசுக்கு கோரிக்கை வைப்போம்!!!

15. நம்முடைய எண்ணங்கள்…. உயர்வாக இருக்கும்!!! எனக்கும் கூட ..பல நோக்கங்கள் உண்டு!!! அதனை நடைமுறை சாத்தியங்களோடு ஒப்பிட்டு புரிந்து கொள்வது முக்கியம்!!! 


உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Sunday, August 30, 2020

முக நூலும் கட்சி சார் அரசியலும்

 நான் முகநூலில் கற்று கொண்டது அதிகம்!! ஒரு செய்தி குறித்து 360 டிகிரி பார்வை கிடைக்கும்!!! அதாவது... தவறாக இருந்தாலும்... அதற்கு 2 பாயிண்ட் கண்டுபிடித்து முட்டு கொடுப்பவர்கள் அதிகம்!!! அது கூட அறிவு நிலையே!!!

ஆனால் ...மிகப்பெரிய வெறுப்பை ஏற்படுத்தும் விஷயம் அரசியல் சார்ந்த புரிதல்!!! தன் சார்ந்த அரசியல் கட்சிக்கு ஆதரவாக பேசிகிறேன் என்றும்... சிறிய விஷயத்தை கூட பெரிதாக்கி பூதக்கரமாக்குவதும் , பெரிய விஷயத்தினை கண்டுக் கொள்ளாமல் இருந்தும் சிறிய விஷயமாக மாற்றுவதும் நடக்கும்!!!
இதற்கெல்லாம் உச்சப்பட்சமாக...... பத்திரிக்கை துறையும், காட்சி ஊடகமும் ஒத்திசைவாக இருப்பதும் துரதிஷ்டம்!!!
நல்ல பதிவுகளை வைத்து....... பலரை பின் தொடர்வதும் உண்டு!!! ஆனால் அவர்களுடைய அரசியல் பதிவுகளை கண்டால்.... ” ஏன் தொடர வேண்டும் ? “ என்ற நிலைக்கு வந்து விடுகிறேன்!!!
அதிலும் தனி மனித துதிகளும், தனி மனித அவமதிப்புகள் அதிகமாகி கொண்டே வருகிறது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அசுசைகள் அதிகமாகி வருகிற்து .சமூகம் முன்னேற .... தனிமனித உரிமைகள் அதிகமாக வேண்டுமே தவிர.. .குறைய கூடாது!! அதிலும் உயர்ந்த பதவியில் இருந்தவர்களும்.. அச்செய்கையை தொடர்வது வருத்தமாக இருக்கிறது!!!
சுயமரியாதை பேசுவர்கள் சுய மரியாதைக்கு மதிப்பு கொடுக்காமல் போதுவதும் , அடுத்தவர் செய்யும் தவறிற்கு பதிலாக... நானும் அதே தவற்றை செய்பவர்களும், தனிமனித துவேஷங்களும் அதிகமாகி வருகிறது
கட்சி சார் அரசியல் சார்ந்த உரையாடலில், ஈர்ப்பும் லைக்கும் அதிகம் கிடைக்கும் என்பதும் உண்மை!!! ஆனால்... அரசியல் குறித்து விவாதத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை .... மற்ற துறைகளுக்கு கொடுக்கலாம்!!! ஏனெனில் கட்சி சார் அரசியல் பேசுவதில் சமூகத்திற்கு பெரிய பயனில்லை!!!
இதையெல்லாம் சொன்னால் .... யாராவது மாற போறாங்களா?? நிச்சயம் இல்லை!!! என்னுடைய மனக்குமுறல் அவ்வளவே!!! அதை தாண்டி யாதெறும் பலனில்லை!!!

Wednesday, August 12, 2020

கருத்தியலும் கலையும்

 சிறந்த பேச்சாளர்கள், சமூகத்தில் வெகுவாக பாராட்டப்படுவதற்கு காரணம்... .பேச்சுத்திறனும் மொழி நடையும் !! அதிலுள்ள கருத்து செறிவு மிக குறைவு !!

உளவியல் அடிப்படையில் பார்த்தாலும்.... அறிவு சார் கருத்துகளை தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு அதிகமாக.கேட்க முடியாது!!! மூளையில் தொய்வு ஏற்பட்டு... கருத்து உள்வாங்க முடியாது!!! தொய்வு ஏற்பட்டு.... பேச்சாளர் மீதே வெறுப்பு ஏற்பட்டு விடும்!!!

ஆனால்... சிறந்த பேச்சாளர்கள் பேசினால்.... ஒரு மணி நேரம் தொடர்ந்து பேசினாலும் கேட்டு கொண்டிருக்க முடியும்!!!! அங்கு கருத்து செறிவினை விட..... மொழி நடையும்.... உடல்மொழியும்... குரலின் ஏற்ற இறக்கங்களும்... நகைச்சுவைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன!!!

இன்னொரு புறம்.... சிறந்த அறிவாளிகள் மிக சிறந்த பேச்சாளர்களாக இருக்க வாய்ப்புகள் குறைவு!!! ஒரு துறையை சார்ந்த அறிவினை பற்றி சிந்திக்க முடியுமே தவிர.... எதிரில் உள்ளவர்களுக்கு எதுவாக பேச திறன் இருக்காது!!!

ஆனால்... மிக சிறந்த அறிவாளிகள்.... ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடைந்த பிறகு.... அவர்களும் மிக சிறந்த பேச்சாளர்களால் அறியப்படும் நிலையும் உண்டு!!! ஒரு குறிப்பிட்ட துறையின் திறமையினால்... சிறந்த பேச்சாக கருதப்படும் வாய்ப்பினால்!!!

இதே புரிதல்... சிறந்த பேச்சாளர்களுக்கு உண்டு!!!

நிற்க....

சித்த மருத்துவ தேகி அடிப்படையில் புரிந்து கொள்ளலலாம்!!! கப தேகிகளுக்கு சிந்தனை திறன் மிக குறைவு . ஆனால் தனக்கு தெரிந்ததை .... மற்றவர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வல்லவர்கள்!!!

பித்த தேகிகள்..... புத்தி கூர்மையானவர்கள்!!! தனக்கு தெரிந்ததை சுருக்கமாக பேசுவதில் வல்லவர்கள்!!!

வாத தேகிகள்... மிக சிறந்த சிந்தனைவாதிகள்!!! ஆனால் தெளிவாக பேசவே தெரியாது!!!

நிற்க...

அறிவாளியாகவும் பேச்சுதிறன் வல்லவர்கள் யாருமே இல்லையா?என்று நீங்க கேட்கலாம்!!! இருப்பார்கள் சதவீதம் மிக குறைவு!!!

பல திறமைகள் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை!!!
இரண்டிலும் பெரியவர்கள் என்றால்... ஒரு வகையில் அரைகுறை தான்!!! ஆற்றில் ஒரு கால்!! சேற்றில் ஒரு கால் வகையறா!!!

டாட்........


உங்களில் ஒருவன் 

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Sunday, August 9, 2020

பொருளாதாரமும் அரசியல் பேசுதலும்

 

அரசியல் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க இயலாது!!! அதில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு கூட விடை தெரியவிலை!!!

அதே சமயத்தில்…… அரசியலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்!!! ஏனெனில் அரசியல்வாதிகள் தான்.. இந்த நாட்டை வழிநடத்துபவர்கள்!!!

நிற்க!!!

சமூக வலைதளங்கள் தொடங்கி அச்சு, காட்சி ஊடகங்கள் வரைஅரசியலை தான் பெரும்பாலும் பேசுகின்றன!!! அதிலும் கட்சி சார்ந்த அரசியல், தனிநபர் அரசியலை அதிகமாக விவாதிக்கின்றன!!! இந்தளவிற்கு பேச வேண்டிய அவசியம் இருக்கிறதா? என்றால்தேவையில்லை என்பேன் ( என் கருத்துபடி )

இவ்வாறுதனிநபர் அரசியல் மற்றும் கட்சி சார்ந்த அரசியலை அதிகமாக பேசுவதால் தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் ஏற்படும் இழப்புகள் ஏராளம்!!!

அதிலும் குறிப்பாக….. சமூக வலைதளங்கள் அதிகமாக தனிநபர், கட்சி சார்ந்த அரசியலை பேசுகின்றனர்!!! ஒருவர் முழு நேர அரசியல்வாதியாக இருந்தால்அரசியல் பேசுவதில் இல்லை!!!

ஆனால்….. தேவையில்லாமல் அரசியல் பேசிஉங்களை இழக்காதீர்கள்!!!! அரசியல் பேசுவதை குறைத்துவேறு செயல்களில் கவனம் செலுத்துங்கள்!!! சமூகம், அறிவியல், பொருளாதாரம் போன்றவற்றில் கற்று கொள்ளுங்கள்!!! அதிகம் படியுங்கள்!!! தனிநபர் பொருளாதாரத்தை உயர்த்துங்கள்!!!

உண்மையினை உடைத்து பேசுவதென்றால்…… சமூக வலைதளத்தில் பொதுநலம் என்று சொல்லி கொண்டிருக்கலாம்!!! தனிமனித அடிப்படை பொருளாதார தேவைகள்அதை விட முக்கியம்!!!

உளவியல் ரீதியாக சொல்வதென்றால்…. தனிமனித பொருளாதார தேவை பூர்த்தி அடைந்தால் மட்டுமே. சிந்தனை திறன் கூட சிறப்பாக இருக்கும்!!!!

அரசியல் பேசுவது தவறில்லை!!! ஆனால்.. .தனிநபர் , கட்சி சார் அரசியல் மட்டுமே பேசுவதில் பயனில்லை!!!

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Thursday, July 30, 2020

ஈசலும் ஒணானும் - உணவு சங்கிலி

 

காலை எழுந்து பார்த்த போது…. வீட்டில் முற்றத்தில் ஈசல் மொய்த்து கொண்டிருந்தது!! சந்தோஷம்!!

ஏற்கனவே ஒரு மாதமாக… .சராசரியான இடைவெளியில் மழை பெய்து கொண்டிருந்தது. கடந்த ஒரு வாரமாக…. தினமும் மழை பெய்து கொண்டிருக்கிறது. ஈசல் வந்தால்இன்னும் மழை பெய்யும் என்பார்கள்!!

எனக்கு நினைவு தெரிந்த வரை…. ஜீலை/ ஆகஸ்டில் பெரிதாக மழை பெய்ததில்லை!!! பெரும்பாலும் உச்ச பட்ச கோடையாய் இருக்கும்!!! நான் சார்ந்த பகுதி.. வடகிழக்கு பருவ காற்றினால் மட்டுமே மழை தரும்!!!

இவ்வாறு தொடர்ந்து மழை பெய்வது…. நல்லது என்றாலும்சில விஷயங்களை சிந்தித்து பார்க்க வேண்டியுள்ளது!!!! கோரோனாவினால்வாகன போக்குவரத்தும், தொழிற்சாலைகள் உற்பத்தி குறைந்தததால்இயற்கை தன் இயல்பு நிலையை அடைந்து விட்டதோ!!! என்று நினைக்க வேண்டியுள்ளது!!!

நிற்க….

குளித்து முடித்து…. மருத்துவமனைக்கு கிளம்பினேன்!!! சாலைகளில் ஈசல் குறைந்தபாடில்லை!! வாகனத்தை செலுத்துவது கூட கஷ்டமாக இருக்கும்!!!

ஆனால்

வழிநெடுகையிலும்….. சாலைகள் ஒணான்கள் அடிப்பட்டு இறந்து கிடந்தது. சுமார் 9 கிமீ தொலைவில்…. சுமார் 40-50 ஒணான்கள் இறந்து கிடந்திருக்கும். ஒணான் உணவிற்காக….. ஈசலை பிடித்து திங்க சாலைக்கு வரும் போது வாகனங்களில் அடிப்பட்டு இறந்து கிடைக்கிறது!!

பரிதாபம்!!! ஆறறிவு உடைய மனிதனே….. தூரித உணவினால் உடல்நிலைக்கு பாதிக்கப்படும் என்று அறிந்து உண்ணும் போது…. ஒணானுக்கு சிந்திக்கின்ற திறனா இருக்கிறது??? சாலையில் ஈசலை சாப்பிடும் போது….. “ அடிப்பட்டு இறக்க வாய்ப்புள்ளதுஎன்று நினைத்திக்குருமா என்ன??

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Saturday, July 18, 2020

நீங்கள் வலது சாரியா? இடது சாரியா?

 

1. உங்கள் வீட்டில் இருக்கும் மனைவி, அக்கா/தங்கை என அனைவருக்கும் சமமான உரிமை அளித்தீர்களா??

 

2. சாதி, மதம், இனம் ஆகியவற்றை எதிர்க்கிறீர்களா?

 

3. உங்கள் வீட்டில் பணிபுரியும் பணியாட்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்குகிறீர்களா?

 

4. அதிகார பரவாக்கலை ஆதரிக்கிறீர்களா? அதிகாரம் ஒரே இடத்தில் குவிதலை எதிர்க்கிறீர்களா?

 

5. சமூகத்தில் காணப்படும் பிரச்சனைகளை தீர்க்க யோசனை அளித்தீர்களா?

 

6. முதலாளியாக… உங்களது உபரி வருமானத்தை தொழிலாளி பிரித்து அளிக்கிறீர்களா?

 

மேற்கண்ட கேள்விகளுக்கு ஆம்… என்று பதில் அளித்தால்… உங்களை இடது சாரி சிந்தனை உள்ளவராக கருதலாம்.. மாறாக… இல்லை என்றால்… நீங்கள் வலது சாரி சிந்தனை கொண்டவர்!!

 

மனிதன் இயற்கையாக …. வலது சாரி சிந்தனை கொண்டவன் தான்!!! சிலர் மட்டும்… .அதில் விலகி … பகுத்தறிவோடு… இடது சாரி சிந்தனை கொண்டதாக இருக்கின்றனர். அதாவது …இடது சாரி சிந்தனை என்பது மனித மூளைக்கு செயற்கையானது!!!!

 

உலக அளவில் 90 % வலது சாரி சிந்தனை!!! சிலர் இடது சாரி சிந்தனை கொண்டவர்களாக…… பொது உலகத்திற்கு நடிக்கின்றனர்!!! பலர் வலது சிந்தனை பற்றி அறியாமலே… வலது சாரியாக வாழ்கின்றனர்!!!

------------------

மேற்கண்டதில்… பலருக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம்!!! ஆராய்ந்து பார்த்தால் உண்மை புரியும்!!!

------------------------

சமூகம் மற்றும் பொருளாதார அடிப்படையில் ....... இடது சாரி, வலது சாரியாக பிரிக்கலாம்!!! பொருளாதார அடிப்படையில் .... இடது சாரி கொண்ட நாடு எதுவுமில்லை!!! சமூக பார்வை அடிப்படையிலே..... சில நாடுகள் இடது சாரி பார்வை உள்ளது!!!

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Tuesday, July 14, 2020

கொரோனா -சித்த மருத்துவ விழிப்புணர்வு

 

1. கோரோனா வைரஸ் விஷயத்தில்… பொதுமக்கள் மத்தியில் சித்த மருத்துவம் மீதான விழிப்புணர்வு அதிகமாகி இருக்கிறது என்பது உண்மை!!

 

2. அரசும் …முழுமையாக ஏற்று கொண்டுள்ளது. அதனால்…. சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையங்களை…. சென்னை, பாளையங்கோட்டை, மதுரை, கோயமுத்தூர், திருவண்ணாமலை போன்ற இடங்களில் ஆரம்பித்துள்ளது. வருங்காலங்களில் ….. மாவட்டம் தோறும் மையங்கள் வரலாம்!!!

 

3. முதலில்… நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மருந்தாக அறிமுகம் செய்து…. பிறகு.. .நவீன மருந்துகளோடு இணைந்து அளிக்கும் மருந்தாக இருந்து… இப்போது முழுமையாக சித்த மருத்துவத்தினை மட்டும் வழங்கும் மையங்களை ஏற்படுத்தி உள்ளது.

 

4. அமைச்சர்கள், சுகாதார செயலாளர், மாவட்ட ஆட்சியர், மருத்துவ துறை சார்ந்த இணை இயக்குநர் வரை அனைத்து இடங்களிலும் …சித்த மருத்துவம் சார்ந்த புரிதல் அதிகமாகி இருக்கிறது. பராம்பரிய மருத்துவ முறைகளினை அதிகார மட்டத்தில் கொண்டு சேர்த்து இருக்கிறது!! வருங்காலத்தில் நல்ல பலனையும் எதிர்பார்க்கலாம்

 

5. உள்ளுணர்வு சார்ந்து சொல்வதென்றால்….. சித்த மருந்துகளை அளிக்கும் பட்சத்தில்.. நோயாளிகள் மருத்துவமனை இருக்கும் காலத்தினை நிச்சயம் குறைக்கலாம். (Recovery rate அதிகமாகும்)

 

6. நவீன மருத்துவர்களுக்கும் … சித்த மருத்துவம்/ ஆயுஷ் மருத்துவம் சார்ந்த புரிதலும் அதிகமாகி இருக்கிறது!! தனிபட்ட முறையில் பயன்படுத்துவதற்கு மருந்துகளை பெறுவதும் அதிகமாகி இருக்கிறது. மையங்களில் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யும் முறைகளில் ஒருங்கிணைப்பு நடக்கிறது.

 

7. பெரும்பாலும் சமூக மாற்றங்கள்… மெல்லிதாக நடக்கும்!! ஆனால் கொரோனா விஷயத்தில்…. மாற்றம் சற்று வேகமாக நடப்பதாக உணர்கிறேன்.

 

8.சில நவீன மருத்துவர்களிடமிருந்து கேள்விகள் வரலாம்!!! அனைவரும் உடனே ஏற்று கொள்வார்கள் என்று எதிர்பார்க்க கூடாது!! விமர்சனங்கள் அதிகமாக வருகிறது என்றால்… சித்த மருத்துவத்தினால்… அவர்கள் பாதிக்கபப்ட்டிருக்கிறார் என்று அர்த்தம்!!! புறம் தள்ளுங்கள்!!! செயல்படுவோம்!!!

 

9. நவீன மருத்துவர்களிடமிருந்து வரும் நியாமான விமர்சனங்களை ஏற்று கொள்வோம்!! அது நம்மை பலம் படுத்துவோம்!!! அபத்தமான வாதங்களை கண்டு கொள்ளாமல் கடந்து செல்வோம்!!!

 

10. பல இடங்களில் அறிவியல் பூர்வமாக ஆய்வு நடந்து வருகிறது….மகிழ்ச்சியான செய்தி!!! ஆனால் … இன்னும் அதிகப்படுத்த வேண்டும்!!! அதற்கு அரசும் … அறிவியலாளர்களின் ஒருங்கிணைப்பும் அவசியம்!!! ( ஆராய்ச்சிகளில் குறைப்பாடுகள் இருக்கலாம்!!! அதற்காக முற்றிலும் அறிவியலில் புறக்கணிப்பது நல்லதல்ல)

 

11. சித்த மருத்துவர்கள்… எவ்வித தயக்கமின்றி… கோரோனா வார்டுகளில் பணியாற்றுவது சந்தோஷம்!!! மைய நீரோட்டதோடு இணையும் வாய்ப்பினை தவற விட கூடாது!!!

 

12. தமிழ்நாடு மட்டுமின்றி….. சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் பிரிவுகளில் மூலமாக மற்ற மாநிலங்களிலும்…… தலைநகரமான டெல்லி வரைக்கும் கொண்டு சேர்ந்திருக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

கோரோனா - சில அவதானிப்புகள்- ஜீலை 2020

 

1.கடந்த வாரம்…. கோரோனாவின் பாதிப்பு குறைவாக இருந்த மாதிரி தெரிந்தது. ஆனால் திரும்பவும் எண்ணிக்கை அதிகமாக தொடங்கி இருக்கிறது. அதிலும் சென்னையில் குறைந்து…. மாநகரினை சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிகமாகி வருகின்றது. சென்னை மக்களின் ஏற்பட்ட விழிப்புணர்வும், மற்ற மாவட்டங்களுக்கு நடந்த இடம் பெயர்வு காரணமாக இருக்கலாம்.

 

2. குக்கிராமங்களிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகிறது. அதிலும் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும்…. (என் காதுகளுக்கு எட்டியவரையே) 5 கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

3. அதே போல்…….. முன்கள பணியாளர்களின் பாதிப்பும் குறைந்தபாடில்லை!! மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர், காவற்துறை நண்பர்கள் என அதிகமாகி வருவது நல்லதல்ல!!! குறிகுணங்கற்ற நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது… முன்கள பணியாளர்களின் பாதிப்பு அதிகம் என்றால், குறிகுணங்கள் இருந்தால்… மருத்துவ கட்டமைப்பு பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கலாம்!!

 

4. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மீதான….. சமூக புறக்கணிப்பு குறைந்தபாடில்லை!!! குற்றவாளிகளை போல் பார்க்கின்றனர்!!! சமீபத்தில் மருத்துவ நண்பருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதற்காக குடியிருந்த வாடகை வீட்டினை காலி செய்ய சொல்லி வலியுறுத்தை வலியுடன் பகிர்ந்து கொண்டார். (வீட்டின் உரிமையாளர்.. அரசு ஊழியர் ) இதற்காகவே… பல மருத்துவமனை பணியாளர்கள் பரிசோதனை செய்வதே தயங்கும் நிலைக்கு சென்று விட்டனர்.

 

5. மருத்துவமனையில் பணி செய்கிறார் என்பதற்காகவே…. சமூகத்தில் மெல்லிய புறக்கணிப்பும் நடக்கிறது.

 

6. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் … சிலருக்கு… யார் மூலம் தொற்று ஏற்பட்டது என்று கண்டறியவது கடினமாக உள்ளது. அதனால்… பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்தாலோ… அல்லது… பாதிக்கப்பட்டவருக்கு தொடர்பில் இருந்தால்… நீங்களவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்வது நலம்!!!

 

7. சமீபத்தில்… உலக சுகாதார மையம் … கோரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று கூறியிருக்கிறது. அதாவது எச்சில் துளிகள்/சுவாச துளிகள் காற்றில் மிதந்து… அருகிலுள்ள பொருட்களில் இருக்கும். அதனை தொட்டு… முகத்தில் கை வைப்பதனால் பரவும். ஆதலால்… கை கழுவுதல் அவசியம்!!! முகத்தில் கை வைப்பதை தவிர்க்கவும்!!

 

8. குறிகுணங்கற்று .... மருத்துவமனையில் நோயாளிகளாக தங்கியிருப்பது மனித சமூகத்திற்கு புதிது!!! குறிகுணங்கள் இருந்தால் கூட…. அதில் குறித்த வலிகளோடு மருத்துவமனையோடு கடந்து விடும். ஆனால் ….குறிகுணங்கற்ற நிலையில் சமூக புறக்கணிப்பு சேர்ந்து கொள்ளும் போது …. உளவியல் ரீதியாக மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் தான்… சிலர் தற்கொலை செய்து கொண்டனர்

 

9.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு……. பாதி பேர் மட்டும் முதல் வாரத்திலே ….Negative ஆகி வெளியேறுகின்றனர். ஆனால்… பலருக்கு இரண்டாவது… மூன்றாவது பரிசோதனையில் கூட .,… Positive வருகின்றது.

 

10. ”எனக்கு தான் எந்த பிரச்சனையில்லையே… நான் வீட்டில் போய் தனியாக இருந்து கொள்கிறேன்” என்று கூறுபவர்களும் இருக்கின்றனர். ஆனால் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுபவர்களுக்கு ஏற்ற சூழ்நிலையும், புரிதலும் பொதுமக்களுக்கு இருக்கிறதா? என்று தெரியவில்லை.

 

11. குறிகுணங்களற்று இருப்பவர்களுக்காகவே… அரசு பல இடங்களில் COVID CARE CENTRE அமைத்து உள்ளது.

 

12 .கடந்த 4 மாதங்களாக…. களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவ துறை, காவற் துறை, உள்ளாட்சி துறை, வருவாய் துறை ஆகியோருக்கு வணக்கங்களும்… நன்றிகளும்… தாங்களை பற்றி கவலையில்லாமல்…. மக்களுக்காக பணியாற்றி கொண்டிருக்கின்றனர்.

 

13. அதிலும்……. மருத்துவமனையில் பணியாற்றும் கீழ்நிலை பணியாளார்களின் பணி நிச்சயமாக பாராட்ட வேண்டியது உண்மை!!

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்