இன்றைய கல்வி முறை, ஆண் பெண் ஈர்ப்பு சார்ந்த காதல், மதிப்பெண் சார்ந்த வாழ்க்கை முறை, கல்வி சார்ந்த வியாபரம் என்று அனைத்து இடங்களையும் படம் கடந்து செல்கிறது.
சமுத்திரக்கனி குடும்பத்தினை மட்டுமே வைத்து, படத்தினை இயக்குநர் நகர்ந்தியிருந்தால், ஒரு வாரத்தில் தியேட்டரிலிருந்து நிச்சயமாக தூக்கப்பட்டிருக்கும். ஆனால், வெவ்வேறு குணநலங்களையும் உடைய மூன்று குடும்பங்களை, ஒரே கதையில் முன்னிறுத்துவதால் தான், படம் வெற்றிக்கனியை பறிக்கிறது. ( மூன்று அப்பாக்களையும் சித்த மருத்துவத்தின் வாத, பித்த, கப மனநிலைக்கு ஒப்பிடலாம்)
குழந்தைகளின் அதி புத்திச்சாலித்தனம், வெளிப்புற சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமல் அப்பாவின் பேச்சை மட்டுமே கேட்கும் குழந்தைகள், ஆண்-பெண்ணையும் சகஜமாக பழக விடும் குடும்பத்தார் போன்ற காட்சிகளை, சினிமாத்தனம் என்ற போர்வையினால் மறைத்து விட்டு கடக்க வேண்டியுள்ளது.
இத்தகைய அருமையான திரைப்படத்தை பார்த்து முடித்தவுடன், மனதில் ஒர் கேள்வி தொக்கி நின்றது. சமுத்திரக்கனியான வாழ்ந்த அப்பாவை பாராட்டி விட்டு, அவரை போல் வாழும் அப்பாக்கள் எவ்வளவு பேர்கள்????
சமுத்திரக்கனியை போல் வாழ்வியலை புரிந்த அப்பாக்கள் எத்தனை பேர்?? மற்றும் அப்படிப்பட்ட அப்பாக்கள் சொல்வதை கேட்கும் பிள்ளைகள் எத்தனை பேர்?? இரண்டு பேரின் சதவீதமும் மிகக்குறைவு. அப்படியே எண்ணினாலும், இன்றைய சமூகத்தின் அழுத்தம், அவர்களை விடுவது இல்லை. சமூகத்தை தாண்டி, தனி மனிதனாக என்ன செய்ய முடியும்?? என்ற சால்சப்போடு, நாமும் கடந்து சென்று விடுவோம்.
சமுத்திரக்கனியை போல் தம்பி ராமையாவின் நோக்கம் ஒன்று தான்…. பையனின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும். சமுத்திரக்கனிக்கு வாழ்வியலை பற்றிய சரியான புரிதல் இருந்ததால், தன் மகனுக்கு தெளிவான பாதையை காண்பித்தார். ஆனால், தம்பி ராமைய்யாவிற்கு புரிதல் இல்லாததால், சமூகம் வடிவமைத்து கொண்ட பாதையை சரியென நினைத்தார். அதுவே தவறானது.
இன்றைய சமூக சூழ்நிலையில், சமூக ஊடகம் மற்றும் திரைப்படங்களின் தாக்கம், இளைய தலைமுறையிடம் அதிகமாக காணப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால், அப்பா- அம்மா- பிள்ளைகள் உறவே வேரற்று கிடைக்கையில், பெற்றோர்களின் அறிவுரைகளை, மாணக்கர்களும் விரோதமாகவே பார்க்கின்றனர்.
மதுவிலிருந்து மாது வரையிலான் கெட்ட பழக்கங்களை, திரைப்படத்திலிருந்து பெற்று கொள்ளும் நாம், இது போன்ற நன்னெறிகளையும், திரைப்படத்திலிருந்து பெற்று கொள்ள வேண்டும். இல்லெயென்றால், இந்தியன், அந்நியன் போன்ற சமூக அக்கறையுள்ள படங்களின் வரிசையில் ஒன்றாகவே அமையுமே தவிர, வாழ்க்கை பாடமாக மாறாது.
-----------------------------------------------------------------------------
இந்த இடத்தில், என்னுடைய வாழ்க்கையில், பெற்றோரின் பங்கையும் ஒப்பிட்டளவில் குறிப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இதுவரையிலும், என்னுடைய எந்தவொரு முடிவிற்கு, பெற்றோர்கள் ஆக்கமாக இருந்தார்களே தவிர, தடையாக இருந்ததில்லை. இந்த தருணத்தில், அவர்களுக்கும் நன்றி சொல்வது செம்மையாக இருக்கும்.
உங்களின் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்