தியரி(கருத்தாக்கம்) vs பிராட்டிகல்(நடைமுறை)...
இதில் எது சிறந்தது??? நீயா நானா போல், ஒரு பக்கம் நின்று பேசலாம் என்றால் முடியாது போலும். கோபிநாத் போன்று நடுவுல நின்று, இரண்டு பக்கமும் பேச வேண்டியது தான்!!!!
கருத்தாக்கம் என்பது கொள்கை எனலாம். அதாவது ஒரு செயல் பற்றிய முழு விளக்கம் ஆகும். நடைமுறையில் சாத்தியாமா என்பதை பற்றியெல்லாம் யோசனை கிடையாது. தத்துவஞானிகள் சிறந்த எடுத்துக்காட்டு.
ஒரு செயலினை நடைமுறைப்படுவது என்பது கள நிலவரங்களை பொறுத்தே அமையும். பல நேரங்களில், கொள்கைகளே மறந்து போகும் அளவிற்கு சமரசம் செய்து கொள்ளும்.
இரண்டில் எது சிறந்தது என்ற விவாதமெல்லாம், தர்க்கத்திற்கு உதவுமே தவிர, நடைமுறையிற்கு முழுவதும் சாத்தியமில்லை.
நம்முடைய கல்வி முறையிலே, இதன் தேவை அதிகம். வெறும் தியரி வைத்தும் ஒன்று சாதித்து விட முடியாது. அது போல், வெறும் பிராடிக்ல் மட்டுமும் உதவாது. தியரிக்காக பிராட்டிகலே தவிர, பிராட்டிகலுக்காக தியரி கிடையாது.
இதனை விளக்க... இன்றைய தொழிற்நுட்ப கல்வியை எடுத்து கொள்ளலாம் என நினைக்கிறேன். பி இ படித்தவர்கள், தியரி பற்றிய அறிவே அதிகமாக இருக்கும். ஆனால் பாலிடெக்னிக் படித்தவர்களிடம், தியரி மற்றும் பிராட்டிகல் படித்தன் அறிவு இருக்கும். ஆகையாலே இன்று பாலிடெக்னிக்கின் மதிப்பு இன்றும் குறையவில்லை.
தியரியும் பிராட்டிகலும், நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. இரண்டும் இருந்ததால் தான் மனித வாழ்வு நாணயத்தை போல் முழுமை பெறும்.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment