Monday, December 26, 2016

சித்த மருத்துவத்தில் விவாதத்தின் பங்கு

விவாதங்களினால் முற்று பெற்ற முடிவுகள் எடுக்க முடியாது என்பது நிதர்சனமான இருந்தாலும், முடிவுகள் எடுப்பதற்கான செம்மையான பாதை விவாதங்கள் ஏற்படுத்தி தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை!!!!

ஒவ்வொரு துறையிலும், விரிவான, மனம் திறந்த விவாதங்கள் நடைபெற வேண்டியது காலத்தின் கட்டாயம். இதுவே அத்துறையின் வளர்ச்சியிற்கு சிறந்தது. மாறாக, விவாதங்கள் நடைபெறும் போது, தனிநபர் விமர்சனமாக மாறி கருத்து செறிவு குறைந்து விடுகிறது. இந்த செய்கையே, விவாதம் குறித்த மோசமான பிம்பங்களை, காண்பித்து விடுகிறது.

பண்டைய கால வரலாற்றில் கூட, இந்து மதம், பெளத்தம் மற்றும் சமண சமயத்தின் வளர்ச்சிக்கு விவாதங்கள் முக்கிய பங்கு வகித்தன. இப்போதும் கூட, அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் கூட விவாதங்கள் மிக முக்கியமானவை. தந்தி டிவியையும், புதிய தலைமுறை டிவியையும் பார்த்து விட்டு…. விவாதங்கள் தேவையில்லை என்று எண்ண வேண்டாம்!?!?!?

நானும், அதிகளவு விவாதம் புரிய விரும்புபவன்!!! அது எந்த துறையாக இருந்தாலும் சரி!!!! அதிலும் எதிர் கருத்து உள்ளவர்களுடன் விவாதம் புரியும் போது, என்னுடைய அறிவை மேம்படுத்தி கொள்ள உதவும்.

சித்த மருத்துவ துறையின் வளர்ச்சிக்கும் விவாதங்கள் மிக முக்கியம் என்றால் மிகையல்ல!!! பட்டம் பெற்ற மருத்துவர்களுக்கும், பராம்பரிய் மருத்துவர்களுக்கும் இடையே வெளிப்படையான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.

மாற்று மருத்துவ துறையின் கருத்துகளையும், பொதுமக்களின் கருத்துகளையும் உள்வாங்கி கொள்வதும் அவசியம். வரலாற்று ஆசிரியர்கள், ஊடகவிலாயர்கள், ஆராய்ச்சியாளர்கள், தமிழ் அறிஞர்கள், சுவட்டியல் அறிஞர்கள், தாவரவியல் அறிஞர்கள், ராசாயண ஆய்வாளர்கள், மானுடவியலாளர்கள், எழுத்தாளர்கள் போன்ற பல்துறை அறிஞர்களுடன் வெளிப்படையான விவாதம் அவசியம்!!!

இதையெல்லாம் தாண்டி, சித்த மருத்துவத்தின் அடிப்படையை மாற்று துறையினர் உள் வாங்கி கொள்ளாமல்….. மேற்கண்ட எதுவும் சாத்தியமும் இல்லை!!!!

தத்துவத்தின் வழியை விட்டு விடாமலும், அறிவியல் பாதையை ஏற்று கொண்டு பயணிப்பதும் நல்லது.

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Thursday, December 22, 2016

புனைவு இலக்கியங்கள் மீதான பார்வை

எனக்கு புனைவு இலக்கியங்கள் மீது , எப்போதும் விருப்பம் இருந்ததே இல்லை( சரித்திர நாவலை தவிர). அதற்காக காரணத்தையும் அறிய முடியவில்லை!!!

இந்த நாவலை படித்திருக்கிறயா?? இந்த சிறுகதை தொகுப்பை படித்திருக்கிறயா?? ”என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்பேன்!!! பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் என்ற நாவலை மட்டுமே படித்திருக்கிறேன்!!! தியாக பூமி நாவலை படிக்கும் போது, எப்போது முடியும் என்ற நிலை தான் தோன்றுகிறது.

இதற்காக எழுத்தாளர்களை குறை சொல்ல விருப்பமும் இல்லை!!! இது என்னுடைய தன்னிலை விளக்கம்......

ஒரு கருத்தை..... கதை வழியே செல்லும் போது, அதன் வலிமை அதிகம் என்பதனாலே.... அக்கதை/ நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. ” அக்கருத்தை வெளிக்கொணர , அந்தளவிற்கு சுற்றி வளைத்து பேச வேண்டியதில்லை...” என்பது என்னுடைய நிலை !!!!

நாவல்கள் வழியே... வாழ்க்கை நடைமுறை, கலச்சார பிண்ணனி, மனித உளவியல் போன்றவற்றை தெரிந்து கொள்ளலலாம் என்றாலும், அத்தகவுகளை ஆய்வு கட்டுரைகள் வழியே பெற முடியும் என்று நினைக்கிறேன்.

இதற்கான பிண்ணனி உளவியலை, நவீன அறிவியல் வழியே அறிய முடியவில்லை. ஆனால் சித்த மருத்துவத்தின் அடிப்படை வழியே அறிய முடிகிறது!!!

என்னுடைய உடலமைப்பு மற்றும் மன அமைப்பு, பித்தம் மற்றும் வாதத்தினால் ஆக்கப்பட்டது. இத்தகைய உடலமைப்பினருக்கு, ஒரு கருத்தை புனைகளின் வழியே தெரிந்து கொள்வதில் விருப்பம் இருக்காது!!! நேரடியான புரிந்து கொள்வர்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Saturday, December 17, 2016

சாகித்திய அகாதமி விருதுகள் - புனைவு மட்டும் தான் இலக்கியமா??

சாகித்தியஅகாதமி விருதுகள் அறிவிப்பதற்கு முன்னரே சர்ச்சைகள் ஆரம்பித்து விட்டன. விருதுகள் என்றாலே சர்ச்சைகள் இருக்கும் என்ற பொது விதி எல்லோரும் அறிந்ததே!!!

என்னுடைய கேள்வி, அதனை தாண்டியது. தமிழ் ஹிந்து விருது பெற தகுதியானவர்கள் என்று, ஒரு பட்டியல் வெளியிட்டு இருந்தது. அதனை கவனித்து பார்க்கையில், எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. பரிந்துரைக்கப்பட்ட நூல்கள் பெரும்பாலனவை..... நாவல், சிறுகதை மற்றும் கவிதை என்ற பிரிவுகளில் மட்டுமே உள்ளது.

சரி...இதுவரை விருது பெற்றவர்களின் பட்டியலை விக்கிபிடியாவில் தேடினால், அதிலும் நாவல், சிறுகதை தாண்டிய பிற தலைப்புகளில் பெரியளவிற்கு காணப்படவில்லை.

நாவல்,சிறுகதை தாண்டிய உரைநடை, திறனாய்வு கட்டுரைகள், விமர்சன கட்டுரைகள் என்ற தலைப்புகளில் நூல்கள் வரவில்லையோ!!! அல்லது அத்தகைய தலைப்புகளில் உள்ள நூல்கள் விருதுக்கு தகுதியில்லையா???

புனைவு இலக்கியம் மட்டுமே... தமிழ் இலக்கியமா???

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

பேக் ஐடி

#ambujasimi எனும் பேக் ஐடி பற்றி தான், கடந்த ஒரு வார காலமாக, முகநூல் முழுவதும் பேசப்படும் விஷயமாக இருக்கிறது. சுமார் 2.50 லட்ச பார்வையாளர்களை கொண்டுள்ள, இந்த அக்கவுண்டை. ஒர் ஆண் ஊடகவியலாளர் பயன்படுத்தி உள்ளார். இதற்கு நம்பிக்கையூட்டும் விதமாக, ஒரு பெண்ணின் போட்டாவை போட்டு உள்ளார். மேலும் திருமணம் மற்றும் குழந்தைகளின் போட்டாவையும் போட்டு, உயிர்ப்போடு வைத்துள்ளார். ஒரு பெண்ணின் போட்டாவை, அவருடைய அனுமதியில்லாமல் பயன்படுத்தியது முற்றிலும் தவறானது.
இந்த செய்தியை படித்தவுடன், ஒரு திரைப்படத்தின் வசனமே, என் மனதில் கடந்து சென்றது. தனுஷ் நடித்த ”திருவிளையாடல் ஆரம்பம் படம் தான் அது!!!!

தனுஷிற்கு தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று ஆசை மட்டும் இருந்தது. ஆனால் அதற்கான பணம், அவரிடம் இருக்காது. அதற்கு தன்னுடைய காதலை மூலதனமாக வைத்து, பணம் பெற்று, வியாபரத்தில் வெற்றி பெறுவார். தொழில் செய்வதற்கு, யாரும் பணம் கொடுக்க முன்வராத நிலையில், தன்னுடைய காதலை பயன்படுத்தியாதாகவும், ஆனால் என்னுடைய காதல் உண்மையானது என்று நியாயம் பேசுவார். அதில் அவருடைய பாதை தவறு என்றாலும் அவருடைய நோக்கம் சரியானது என்ற நிலையில் ஒத்து கொள்ளாலமே தவிர, முழுவதும் நியாயப்படுத்த இயலாது. இந்த நிகழ்வையும் இந்த காட்சியோடு ஒப்பிடுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்..

நான், இதனை தாண்டிய உளவியலையே காண முயல்கிறேன். முகநூல் உலகம் சற்று விசித்திரமானது. முகநூலில் பெண்களின் பேச்சுக்கும் எழுத்தும் கிடைக்கும் மரியாதையும் ஆதரவும், வெளியுலக யதார்த்தில் நிச்சயமாக கிடைக்காது. “சாட்டையடி பதிவு தோழி, சூப்பர் தோழி..” இப்படியாக புகழ்ந்து தள்ளுவர்கள், நிழயுலகில் பெண்ணின் பேச்சுக்கு கூட மதிப்பு கொடுக்க மாட்டார்கள்.

ஒரே பதிவை, ஆண் போடுவதற்கும், ஒரு பெண் போடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். ஆணுக்கு 10 லைக் கிடைக்கிறது என்றால், அதே பதிவினை, பெண் போட்டால் 100 லைக் கிடைக்கும். அந்த கருத்து சரியா? தவறா? என்ற கேள்வியே இல்லாமல், வழிமொழிவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். ஹார்மோன் செய்யும் எதிர்பாலின கவர்ச்சியின் வெளிப்பாடே!!!!

பெண் பாலித்துனத்துடன், பேச வேண்டும் என்ற ஆண் பாலினத்தின் எண்ணம், முகநூல் வழியாக எளிதாக பயணப்படுகிறது. அதற்கு காரணம் தேவையில்லை!!! நேரடியாக பேசுவதில் உள்ள அசுசைகளை, சமூக வலைத்தளங்கள் எளிதாக உடைத்து எறிகிறது.

தன்னை ஆதரிக்க வேண்டும்.”, “ தன்னுடைய திறமைகளை அங்கிகாரம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமும் மறுபுறம் அதிகமாகி வருகிறது. இந்த எண்ணத்தில் ஆண், பெண் வித்தியாசமெல்லாம் கிடையாது. எல்லோரும் ஒன்று தான்!!!

இந்த இரண்டும் புள்ளிகளையும் இணைக்கும் இடமாக முகநூல் அமைகிறது. அதிலும் பெண் தோல் போர்த்திய ஆணுடல் என்றால், இன்னும் சவுகரியம் அதிகமாக இருக்கும்!!!!

இந்த மனநிலையில் இருந்து தான் அந்த முகநூல் போராளியை காண்கிறேன். அவர் செய்த குற்றத்தை நியாயப்படுத்தவும் முடியாது; நியாயப்படுத்தவும் கூடாது.

அதே சமயத்தில். அந்த குற்றத்திற்காக. அவரை மட்டும் குற்றவாளி கூட்டில் ஏற்றி, நாம் எல்லோரும் நிரபராதி போல் நடிப்பதிலும், எனக்கு உடன்பாடில்லை. அந்த நபரே குற்றமே செய்தவராக இருந்தாலும், அத்தகைய நிலைக்கு கொண்டு சென்றது, சமூகம் என்பதில் சிறிதும் ஐயமில்லை!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Thursday, December 15, 2016

எதிர்மறை சிந்தனையாளன்

நான் ஒரு எதிர்மறை சிந்தனையாளன்(negative thinker). என் செயல்களை, கூர்ந்து கவனித்தவர்களால், நிச்சயமாக கூற இயலும். எனது அக்கா மனிதவள மேம்பாட்டு(HR) துறையை சார்ந்தவர் என்பதால், சரியாக கவனித்து கூறினார்.

ஒரு விஷயத்தை யோசிக்கும் போது, அதனால் ஏற்படும் சாதகங்களை தாண்டி, பாதகங்களை பற்றி மட்டுமே யோசிப்பேன். சாதகங்களால் வெற்றி கிடைப்பது உறுதி என்பதனை தாண்டி, பாதகங்களை நீக்கினால், இன்னும் எளிதாக வெற்றிக்கனியை பறிக்கலாம்.

ஒரு நேர்மறை சிந்தனையாளனுக்கு…. சில பாதகங்கள் இருப்பதை போலவே, எதிர்மறை சிந்தனையாளனுக்கு சில பாதகங்கள் இருக்கவே செய்கின்றன. ஆதலால்இதனை மாற்றி கொள்ள விருப்பமுமில்லை;

இதனாலேவெற்றி பெற்ற தருணங்களில், பெரியளவு உள களிப்பும் இருந்ததுமில்லை; மாறாகசில பயங்கள் மட்டுமே தொடரும். தோல்வியடைந்த தருணங்கள் கூட, பெரியளவிற்கு சோகத்தை தந்ததில்லை. மாறாக அனுபவத்தை மட்டுமே தந்துள்ளது.

2013 ம் ஆண்டு, TNPSC சித்த மருத்துவ தேர்வில் தோல்வியடைந்தாலும், அன்றிரவே…. TNPSC GROUP 1, GROUP 2 படிக்க ஆரம்பித்தேன். அதுவே 2016 ஆம் ஆண்டு சித்த மருத்துவ தேர்வில் வெற்றியை பெற செய்தது.

எதிர்மறை சிந்தனையாளன்என்ற சிந்தனை தளம் சரியா? தவறா? என்று விவாதிக்க விருப்பம் இல்லை. ” தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்எனும் பழிமொழிக்கு ஏற்ப…. வாழ பழகி கொள்ள வேண்டியது தான்!!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Saturday, December 3, 2016

தாதுக்களும் பராம்பரிய மருத்துவ முறைகளும்

உலகம் ஒவ்வொரு நிமிடமும், ஏதேனும் ஒன்றை தேடி கொண்டு தான் இருக்கிறது. அந்த தேடலினால் சில தரவுகள் பெறப்படுகின்றன. அவற்றில்சில தரவுகள் தத்துவ ரீதியான முடிவுகளையும் ,சில தரவுகள் அறிவியல் பூர்வமான முடிவுகளை தருகிறது. அந்த தேடலில், மருத்துவ துறையும் விதிவிலக்கல்ல!!!

நோயின் காரணத்திற்கான தேடல் தொடங்கி, பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. தொடக்க காலங்களில் பேய், பிசாசு போன்றவையே காரணம் என கருதி, மாந்திரீகம் செய்தனர். அதனால் கோயில் பூசாரிகளும் மருத்துவர் ஆக்கப்பட்ட வரலாறு உண்டு. இன்றும் தொடர்ந்து வருகிறது என்பது கண் கண்ட உண்மை.

இன்றைய நவீன அறிவியல், செல்களின் பாதிப்பே நோயிற்கு காரணம் என்கிறது. இன்றும் பல நோய்களுக்கு அறிவியல் விடை தேடி கொண்டிருக்கிறதே தவிர, முற்று பெறவில்லை என்பதே உண்மை.
இடைப்பட்ட காலத்தில், நோயிற்கு காரணமென பல்வேறு தரவுகள் முன்வைக்கப்பட்டன. அதில் முக்கியமானது தாதுக்கள். (Temperament, Humorism) . இதில் பல மாறுபாடுகள் இருக்கின்றன.

எண்ணிக்கையில்; (சித்தா, ஆயுர்வேதம்-3, கிரேக்கம்-4 , பஞ்சபூதம்-5 ), வடிவங்களில்: (சித்தாவளி, அழல், ஐயம்; ஆயுர்வேதம்- வாதம், பித்தம், கபம் ; கிரேக்கம்- இரத்தம், கபம், கரும்பித்தம், மஞ்சள் பித்தம்).

ஆனால் தாதுக்கள் என்ற கருத்தாக்கத்தில் மட்டும் பல்வேறு பராம்பரிய முறைகள் ஒத்திருக்கின்றன். இத்தாதுக்களில் ஏற்படுகின்ற மாற்றங்களே, நோயிற்கு முதற்காரணம் என்று வாதிட்டனர். இவை 19 நூற்றாண்டின் இறுதி வரைக்கும், மருத்துவ வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தன. அறிவியல் வளர்ச்சியினால், தாதுக்கள் என்ற கருத்தாக்கம் மறைந்து விட்டது போன்று தோன்றுகிறது. இன்றும் பராம்பரிய மருத்துவர்களிடம் தொடர்ந்தே வருகிறது.

உலகம் முழுவதும் பஞ்சபூதங்களினை ஒத்து கொள்கின்றனர். அந்த பஞ்சபூதத்தை சுருக்கி, வளி/வாதம், அழல்/பித்தம், ஐயம்/கபம் என்ற முத்தாதுக்களாக சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் வழங்கப்படுகிறது.

அதில் சிலர் மட்டும் ஆகாய பூதத்தினை ஒத்து கொள்வதில்லை. ஆகாயம் கண்ணுக்கு புலப்படவில்லை என்பது அவர்களது வாதம். ஆகாயம் விடுத்த மற்ற பூதங்களை, இரத்தம், கபம், கரும்பித்தம், மஞ்சள் பித்தம் ஆகியவற்றொடு ஒப்பிடலாம்.

மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிராடஸும் இரத்தம், கபம், கரும்பித்தம், மஞ்சள் பித்தம் என்ற கருத்தாத்தை ஒத்து கொண்டார். இதே கருத்தை பழம்பெரும் மருத்துவரான காலன்(galen) கூறி உள்ளார்.. யூனானி மருத்துவமும், இதை hot, dry, moist, cold என்ற வடிவில் ஏற்று கொள்கிறது.

இவற்றை, நவீன அறிவியல் விளக்க இயலுமா?? என்ற கேள்விகள் பல இருந்தாலும், பராம்பரிய மருந்துகளில் தேர்வில், இத்தாதுக்கள் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பது மட்டும் உண்மை. மனிதனின் உடல்மொழி மற்றும் மனமொழியை, தாதுக்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் பல இடங்களில் ஒத்திருக்கின்றன.

இன்றைய நவீன அறிவியல் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, தாதுக்கள் பற்றிய புரிதல், சற்று பழமையானதாக தெரியலாம். நோயிற்கு முதற்காரணம், உடலன்றி பேய், பிசாசு என்று புரிந்து கொண்டிருந்த காலத்தில், தாதுக்கள் என்ற தத்துவியலும், ஒரு வகையான அறிவியலே!!!!


உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

Tuesday, November 29, 2016

வாழைப்பழமும் செயற்கை பழுக்க வைத்தலும்


இரண்டு நாட்களுக்கு முன்னர், நண்பர் ஒருவருடன் பேசி கொண்டிருந்தேன். அவர் கண்ட நிகழ்வை, என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்ன விஷயம், கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. வாழைப்பழ கடையில், ஒரு வாழைப்பழ தாரினை, ஒரு நீருள்ள வாளியில் மூழ்க வைத்து எடுத்தர்களாம். அவ்வாறு எடுத்தால், சில மணி நேரங்களில் பழத்து விடுமாம்.

நானும் வாழைப்பழத்தை பழக்க வைப்பதற்கு, வேறு வகையான முறைகளை பார்த்திருக்கிறேன். பொங்கல் நேரங்களில், புகைமூட்டத்தின் மூலம் பழுக்க வைப்பார்கள். இந்த முறைகளால் பழுக்க வைக்கப்படும் பழங்கள், நல்லவையா?? உடலுக்கு தீங்கு ஏற்படுத்தாதா?? என்ற கேள்வியே முன் நிற்கிறது.

இதற்காக calcium carbide, acetylene, ethylene, propylene, ethrel (2-chloroethyl phosphonic acid), glycol, ethanol போன்ற ராசாயணங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் தலைவலி, தூக்கமின்மை, ஞாபக மறதி, மயக்கம் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்.

இது மாதிரியான நிகழ்வை, நாமும் கடந்து சென்றிருப்போம். ஆனால், அடுத்த நொடியே மறந்து விட்டு, அதே பழத்தை வாங்கி உட்கொள்வோம்!!!! நானும் அதற்கு விதிவிலக்கல்ல!!! ஆனால், நண்பரின் ஒரு கேள்வி, என்னை இன்னும் தீவிரமாக சிந்திக்க வைத்தது. “ நம்முடைய வீட்டில் வளரும் வாழைப்பழம் எப்போது ஒரே சீராக பழுப்பதில்லை, மேலிருந்து கீழாக தான் பழுக்கும். ஆனால் கடைகளில் விற்கபடுவதில் தார் முழுவதும் பழுத்திருக்கும். அதை பற்றி யாரும் யோசித்ததில்லை…” நானும் அப்படித்தான் இருந்தேன்.

வியாபரத்திற்காக செயற்கையாக பழுக்க வைக்கிறோம் என்று வியாபரிகள் நியாயப்படுத்தலாம். ஆனால் உடல்நலத்திற்கு கேடு விளைவிற்பதாக இருந்தால்நிச்சயமாக கெடுதலே!!!! கவனமாக பார்த்து வாங்குங்கள்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Saturday, November 26, 2016

சித்த மருத்துவத்தில் அறிவியலாரின் பங்கு

நான் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் முதுநிலை மருத்துவம் படித்து கொண்டிருந்த தருணம் அது!!!! ஆயுஷ் துறையின் செயலாளர், எங்களது நிறுவனத்திற்கு வருகை தந்தார். அப்போது மருத்துவ மாணவர்களுக்கும் செயலாளாருக்கும் இடையே கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்களுடைய கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்களையும் அளித்தார்.

“drug testing laboratory” எப்போது வரும் என்று மாணவர் சார்பில், ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது. ”நீங்க MD படிக்கிறீங்கஆதலால் நோயாளியை பார்த்தல் மற்றும் நோயை குணமாக்குதலில் கவனம் செலுத்துங்கள் என்றார். PhD (ஆராய்ச்சி) படிப்பு தொடங்கும் போது, அதனை பார்த்து கொள்ளலலாம் என்றார்.

அவரது பதிலில், எனக்கு ஒர் தெளிவு பிறந்தது. ஆராய்ச்சி செய்தல் மற்றும் நோயாளியை அணுகி நோயை தீர்த்தல் ஆகிய இரண்டும் நேர்கோட்டின் இரு விளிம்பில் இருப்பவை. இரண்டையும் ஒருவரே செய்வது என்பது கடினம் என்று தோன்றுகிறது. பிழைகள் ஏற்பட நிறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் நவீன அறிவியல் உலகம், மேற்கண்ட இரு பணிகளையும் சித்த மருத்துவரிடம் இருந்தே எதிர்பார்க்கிறது. எத்தகைய நகை முரண்!?!?!?

ஆங்கில மருத்துவத்தில் இருந்து, ஒரு மருந்து வெளியாக குறைந்தபட்சமாக 10-12 வருடமாகிறது. Preclinical and clinical என்ற இரு நிலைகளிலும், ஆராய்ச்சி பணியில் ஈடுபடுவர்கள், பெரும்பாலும் மருத்துவர் அல்லாதவர்களே!!!! அதாவது pharmacologist, microbiologist, chemists, epidemiologist போன்றோர்களே அதிகமாக ஈடுபடுகின்றனர்.

ஆங்கில மருத்துவத்தில், ஒரு மருந்தை கண்டுபிடித்து வெளியிடுவதற்கு குறைந்தபட்சமாக 200 கோடி செலவாகிறது. அதனை பெரும்பாலும் மருந்து கம்பெனிகளே ஏற்கிறது. அந்த செலவை, 5 ஆண்டுகளிலே மருந்து தயாரிக்கும் நிறுவனம் லாபமாக ஈட்டி விடும். அதோடு மட்டுமில்லாமல் அரசும் மானியம் வழங்குகிறது.

ஆனால் இந்திய மருத்துவ முறையில் உள்ள மருந்துகளில் ஆராய்ச்சி செய்து வெளியிடுவதற்கு, மருந்து நிறுவனங்கள் ஈடுபடுவதில்லை. ஏனெனில் காப்புரிமை பெற முடியாது. இத்தகைய முன்னெடுப்பதில், சில ஆயுர்வேத நிறுவனங்கள் செய்கின்றன. ஆதலால், இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் அடைய முடிகிறது.

சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சி செய்ய மற்ற துறை வல்லுனர்கள் முன்வர வேண்டும். அதிலும் குறிப்பாக pharmacologist, microbiologist, chemists, epidemiologist போன்றோரின் பங்கு முக்கியம். அது போல் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட வேண்டும்.

தேரினை இழுப்பதற்கு, சித்த மருத்துவர் என்ற ஒருவர் மட்டுமே ஈடுபட்டால் சக்கரம் சுழலாது. பல்வேறு கைகள் இணைய வேண்டியது, காலத்தின் கட்டாயம்!!!!!. வாருங்கள் சித்த மருத்துவத்தை முன் இழுப்போம்!!!! அறிவியல் எனும் அச்சாணியில் வடம் இழுப்போம்!!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்