Saturday, December 3, 2016

தாதுக்களும் பராம்பரிய மருத்துவ முறைகளும்

உலகம் ஒவ்வொரு நிமிடமும், ஏதேனும் ஒன்றை தேடி கொண்டு தான் இருக்கிறது. அந்த தேடலினால் சில தரவுகள் பெறப்படுகின்றன. அவற்றில்சில தரவுகள் தத்துவ ரீதியான முடிவுகளையும் ,சில தரவுகள் அறிவியல் பூர்வமான முடிவுகளை தருகிறது. அந்த தேடலில், மருத்துவ துறையும் விதிவிலக்கல்ல!!!

நோயின் காரணத்திற்கான தேடல் தொடங்கி, பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. தொடக்க காலங்களில் பேய், பிசாசு போன்றவையே காரணம் என கருதி, மாந்திரீகம் செய்தனர். அதனால் கோயில் பூசாரிகளும் மருத்துவர் ஆக்கப்பட்ட வரலாறு உண்டு. இன்றும் தொடர்ந்து வருகிறது என்பது கண் கண்ட உண்மை.

இன்றைய நவீன அறிவியல், செல்களின் பாதிப்பே நோயிற்கு காரணம் என்கிறது. இன்றும் பல நோய்களுக்கு அறிவியல் விடை தேடி கொண்டிருக்கிறதே தவிர, முற்று பெறவில்லை என்பதே உண்மை.
இடைப்பட்ட காலத்தில், நோயிற்கு காரணமென பல்வேறு தரவுகள் முன்வைக்கப்பட்டன. அதில் முக்கியமானது தாதுக்கள். (Temperament, Humorism) . இதில் பல மாறுபாடுகள் இருக்கின்றன.

எண்ணிக்கையில்; (சித்தா, ஆயுர்வேதம்-3, கிரேக்கம்-4 , பஞ்சபூதம்-5 ), வடிவங்களில்: (சித்தாவளி, அழல், ஐயம்; ஆயுர்வேதம்- வாதம், பித்தம், கபம் ; கிரேக்கம்- இரத்தம், கபம், கரும்பித்தம், மஞ்சள் பித்தம்).

ஆனால் தாதுக்கள் என்ற கருத்தாக்கத்தில் மட்டும் பல்வேறு பராம்பரிய முறைகள் ஒத்திருக்கின்றன். இத்தாதுக்களில் ஏற்படுகின்ற மாற்றங்களே, நோயிற்கு முதற்காரணம் என்று வாதிட்டனர். இவை 19 நூற்றாண்டின் இறுதி வரைக்கும், மருத்துவ வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தன. அறிவியல் வளர்ச்சியினால், தாதுக்கள் என்ற கருத்தாக்கம் மறைந்து விட்டது போன்று தோன்றுகிறது. இன்றும் பராம்பரிய மருத்துவர்களிடம் தொடர்ந்தே வருகிறது.

உலகம் முழுவதும் பஞ்சபூதங்களினை ஒத்து கொள்கின்றனர். அந்த பஞ்சபூதத்தை சுருக்கி, வளி/வாதம், அழல்/பித்தம், ஐயம்/கபம் என்ற முத்தாதுக்களாக சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் வழங்கப்படுகிறது.

அதில் சிலர் மட்டும் ஆகாய பூதத்தினை ஒத்து கொள்வதில்லை. ஆகாயம் கண்ணுக்கு புலப்படவில்லை என்பது அவர்களது வாதம். ஆகாயம் விடுத்த மற்ற பூதங்களை, இரத்தம், கபம், கரும்பித்தம், மஞ்சள் பித்தம் ஆகியவற்றொடு ஒப்பிடலாம்.

மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிராடஸும் இரத்தம், கபம், கரும்பித்தம், மஞ்சள் பித்தம் என்ற கருத்தாத்தை ஒத்து கொண்டார். இதே கருத்தை பழம்பெரும் மருத்துவரான காலன்(galen) கூறி உள்ளார்.. யூனானி மருத்துவமும், இதை hot, dry, moist, cold என்ற வடிவில் ஏற்று கொள்கிறது.

இவற்றை, நவீன அறிவியல் விளக்க இயலுமா?? என்ற கேள்விகள் பல இருந்தாலும், பராம்பரிய மருந்துகளில் தேர்வில், இத்தாதுக்கள் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பது மட்டும் உண்மை. மனிதனின் உடல்மொழி மற்றும் மனமொழியை, தாதுக்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் பல இடங்களில் ஒத்திருக்கின்றன.

இன்றைய நவீன அறிவியல் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, தாதுக்கள் பற்றிய புரிதல், சற்று பழமையானதாக தெரியலாம். நோயிற்கு முதற்காரணம், உடலன்றி பேய், பிசாசு என்று புரிந்து கொண்டிருந்த காலத்தில், தாதுக்கள் என்ற தத்துவியலும், ஒரு வகையான அறிவியலே!!!!


உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

No comments:

Post a Comment