சாகித்தியஅகாதமி விருதுகள் அறிவிப்பதற்கு முன்னரே சர்ச்சைகள் ஆரம்பித்து
விட்டன. விருதுகள் என்றாலே சர்ச்சைகள் இருக்கும்
என்ற பொது விதி எல்லோரும்
அறிந்ததே!!!
என்னுடைய
கேள்வி, அதனை தாண்டியது. தமிழ்
ஹிந்து விருது பெற தகுதியானவர்கள்
என்று, ஒரு பட்டியல் வெளியிட்டு
இருந்தது. அதனை கவனித்து பார்க்கையில்,
எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.
பரிந்துரைக்கப்பட்ட நூல்கள் பெரும்பாலனவை..... நாவல்,
சிறுகதை மற்றும் கவிதை என்ற
பிரிவுகளில் மட்டுமே உள்ளது.
சரி...இதுவரை விருது பெற்றவர்களின்
பட்டியலை விக்கிபிடியாவில் தேடினால், அதிலும் நாவல், சிறுகதை
தாண்டிய பிற தலைப்புகளில் பெரியளவிற்கு
காணப்படவில்லை.
நாவல்,சிறுகதை தாண்டிய உரைநடை,
திறனாய்வு கட்டுரைகள், விமர்சன கட்டுரைகள் என்ற
தலைப்புகளில் நூல்கள் வரவில்லையோ!!! அல்லது
அத்தகைய தலைப்புகளில் உள்ள நூல்கள் விருதுக்கு
தகுதியில்லையா???
புனைவு
இலக்கியம் மட்டுமே... தமிழ் இலக்கியமா???
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment