Monday, February 26, 2018

வழிபாட்டு தலங்களும், இணை பொருளாதரமும்


கலாச்சார, மத மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில் விருப்பம் இருப்பினும், அதில் கலந்து கொள்வதில் விருப்பம் இருந்ததில்லை;மாறாக, தவிர்க்கவே விரும்புவேன். இருந்த போதிலும், அப்படியான தருணங்கள், பல அமைந்து விடுவதுண்டு!!! இதில் முக்கியமானது, சாமி தரிசனமாகவே இருக்கும்.

இப்படியாக கலந்து கொண்டு விட்டிற்கு வரும் போது, “ கோவிலுக்கு போனியே.... என்ன வாங்கிட்டு வந்த????” என்பார் அம்மா.

கோவிலுக்கு போனா!?!?!? ... எதாதுவுது வாங்கிட்டு வரணும் ரூல்சு எதுவும் இருக்கிறதாஎன்று எதிர் கேள்வி கேட்பேன்.
வாங்கிட்டு வரணும் ன்னு ரூல்ஸ் கிடையாது. எதாவது சாமான் வாங்கிட்டு வந்தா, ஐந்து வருசமானாலும், அந்த கோவில் வாங்கினதும் ஞாபகம் வருமல்ல....” என்பார்...

அடுத்த சொன்ன விஷயம், இன்னும் ஆச்சரியமாகவும்/உண்மையாகவும் இருந்தது.

நம்ம பொருள் வாங்குவாங்க ன்னு நிறையே பேர் கடை போட்டிருங்காங்க!!! அந்த கடைக்கு வியாபாரம் நடந்த மாதிரி இருக்கும்.... அவங்களுக்கு லாபம் கிடைச்ச மாதிரி இருக்கும் ....” என்றார்...

(மேற்கண்ட உரையாடல் என்பது, இரண்டு மூன்று தடவை நடந்தும், கோவிலுக்கு சென்றால், எதாவது வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததில்லை...).

சரி..... நாம் விஷயத்திற்கு வருவோம்....

எந்தவொரு பண்பாட்டு, மத மற்றும் கலாச்சார நிகழ்விலும், அதை சுற்றிய இணை பொருளாதாரம் (pararllel economy ) என்பது சுழன்று கொண்டிருக்கும். பல வேலைவாய்ப்புகளை தற்காலிகமாக உருவாக்கும். தீபாவளி, பொங்கல் தருணங்களில் .... திடீரென்று முளைக்கும் ரோட்டர கடைகளினை போல, பல பேருக்கு வேலைவாய்ப்பினையும் அளித்து, சிறிதளவு லாபத்தை அளிக்கும்.

பொருளாதார மேம்பாட்டோடு, உறவுகளின் கூடுகை, மன நிறைவு மற்றும் பண்பாட்டு இருப்பு போன்றவை நிலைநிறுத்தப்படுகிறது.

அதே சமயத்தில்.... இத்தகைய நிகழ்வுகளை முதலாளித்துவ உலகம் செயற்கையாக ஏற்படுத்த முயலுமானால், எந்த பலனையும் பெற இயலாது. அதற்கு சம கால உதாரணம் ஜக்கி வாசு தேவ்வின் சிவ ராத்திரி!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Saturday, February 24, 2018

அறிவை பெறுதலும் சமூக அங்கிகாரமும்


மனிதன் புரிந்து கொள்வதில் உள்ள பிரச்சனைகள் ஏராளம். அதன் ஏற்று கொள்வதில் பிரச்சனைகள் உண்டு.

A என்ற மனிதருக்கும் நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கிறது என்று வைத்து கொள்வோம். B என்ற மனிதருக்கும் விஷயங்கள் தெரியவில்லை என்று வைத்து கொள்வோம்.

அதில் B என்பவர், தகவல் பெற வாய்ப்பில்லாமலும் இருக்க்லாம். அல்லது தகவல் பெற வாய்ப்பிருந்து, கற்று கொள்ளமல் இருக்கலாம்.

மேற்கண்ட கூற்றினால், A மனிதர் புத்திசாலி, திறமையானவன் என்ற புகழ ஆரம்பித்து விடுகிறோம். இது உண்மையா?? என்பதை சற்று சிந்திக்க வேண்டியுள்ளது.

அறிவினை பெறாதவன் இருப்பதால் தான், அறிவை பெற்றவன் என்று ஒருவனே தோன்றுகிறான். இருவரை ஒப்பிட்டு திறமையை அங்கிகாரம் செய்கிறோம்.

ஒவ்வொரு மனிதரும் ,இயல்பாக தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள் ஏராளம். அவ்வாறாக, ஒருவனின் கடமையை புகழ்/அறிவாளி என்ற நிலைக்கு உயர்த்தி விடுகிறோம்.....

திறமைகளை அங்கிகாரம் செய்வதில் எவ்வளவே பிரச்சனைகள் உள்ளது!!! திறமைகளை வெளி கொணர்வதில், அதை விட அதிக பிரச்சனைகள் உள்ளது.

நான் கெட்டவன் என்பதற்காக, அடுத்தவனை நல்லவனாக அங்கிகாரிக்க முடியுமா என்ன????

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Saturday, February 17, 2018

இன்றைய கல்வி முறையும், நாளைய வேலைவாய்ப்பும்


நேற்றைய தினம்தெரிந்த ஒருவரோடு பேசி கொண்டிருந்தேன். அப்போது, பள்ளி படிப்பு பற்றியும் உரையாடல் வந்தது. தனியார் பன்னாட்டு பள்ளியில் வருடத்திற்கு 50,000 ரூபாயாக, அவரது மகனுக்கு செலவு ஆகிறதென்றார். இதே தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தால், 20000 ரூபாய் செலவாகும். விஷயம் அதுவல்ல!!!

பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்ற நோக்கில், கணக்கு பார்க்காமல் செலவு செய்து கொண்டிருக்கிறோம். அவர்களும் விளையாட்டை துறந்து, குடும்ப உறவுகளை தொலைத்து, இளமை காலத்தை மறந்து, எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்று படிக்கிறார்கள்.

வருடத்திற்கு, 2 லட்ச இஞ்சினியங்க் மாணவர்கள், படித்து முடித்து வெளிவருவதாக தகவல்!! அது போல், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கலை கல்லூரி மாணவர்களும் வெளிவருகின்றனர். இவர்கள் அனைவருக்குமான வேலைவாய்ப்பினை பற்றி சிந்தித்தால், கானல் நீரே தெரிகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைவரும் வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி தவிக்கின்றனர். இப்பிரச்சனையே அமெரிக்காவில் டிரம்ப் வெற்றி பெறுவதற்கும், ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளிவருவதற்கு காரணமாக அமைந்தது.

எந்த காலத்திலும், அரசே அனைவருக்கும் வேலைவாய்ப்பினை வழங்க இயலாது. அப்படியே வழங்கினாலும், 5-10 சதவீத மக்களுக்கு மேல் வேலை வழங்க இயலாது. மேலும் தனியார் துறையிலும் பெருமளவு வேலைவாய்ப்பினை வழங்க இயலாது. 10-20 சதவீதத்தினை தாண்ட வாய்ப்பில்லை.
பெரும்பாலும் சுய தொழிலும், தற்சார்பு வேலையும், அன்றாட கூலிகளும், அதிகமான வேலைவாய்ப்பினை வழங்குவதாக உள்ளது.

இந்தியா போன்ற விவசாய நாடுகளில், விவசாயத்திலே பெருமளவு வேலைவாய்ப்பு இருந்தது. விவசாயத்தில் ஏற்படும் நட்டத்தினால், விவசாய தொழிலாளார் அளவு குறைந்து, தொழிற்துறை மற்றும் சேவை துறை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டனர்.

வேலைவாய்ப்பினை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட மெக்காலே கல்வி முறையினாலும், மாணவர்களினை தற்சார்பு சிந்தனை உடையவர்களாக மாற்ற இயலாது. பெருநிறுவனங்களுக்கு தேவையான skill குறைந்தே காணப்படுகிறது என்பது நிதர்சனம்!!!!

பொருளாதார பெருமந்த நிலையினால், தனியார் துறையில் முதலீடு பெருமளவு குறைந்துள்ளது. வாரா கடன் அளவு அதிகரித்துள்ளதால், வங்கிகள் கடன் கொடுக்க கூடிய நிலையில் இல்லை. புதிய முதலீட்டு திட்டங்கள் இல்லாமல், தனியார் துறை வேலைவாய்ப்பு குறைந்துள்ளது.

மறுபடியும் மேலே உள்ள கதைக்கு வருவோம்!!!
மேற்கண்ட மாணவன், பள்ளி/ கல்லூரி படிப்பினை முடித்து வெளிவருவதற்கு, இன்னும் 10-15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும், அப்போது வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்று சொல்ல இயலாது. ஆனால், வேலைவாய்ப்பு இன்மை அதிகமாகி இருக்குமே தவிர, குறைந்திருக்க வாய்ப்புல்லை.

அப்படி இருக்கையில், எதிர்காலத்தை நினைத்து, நிகழ்காலத்தை இழந்து கொண்டிருக்கிறோம். அதற்காக, “ உங்களை பட்ட படிப்பினை படிக்க வேண்டாம்என்று சொல்லவில்லை. நம்முடைய நோக்கிற்கு ஏற்ப செயல்படுகிறோமா??? என்று சிந்திக்கவே வேண்டுகிறேன்.

வருங்காலங்களில், சுய சார்பும், தன்னிறைவும், உலக பொது வாழ்வியலும், தன்னம்பிக்கையும் உள்ள மாணவனே வெற்றி அடைவான். பரிணாம வளர்ச்சியில், “ தப்பி பிழைத்தல் விதி கூட புரிய வரும்அவ்வளவே!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Wednesday, February 14, 2018

Bridge Course மற்றும் Integrated Course பற்றிய புரிதல்


Bridge Course பற்றி விவாதங்கள் முற்று பெறாத நிலையிலே, Integrated Course பற்றி விவாதங்கள் கிளம்பி விட்டன. ஜேகப் ஜான் எழுதிய கட்டுரையை தொடர்ந்து, இவ்வகையான விவாதங்கள் தொடங்கி விட்டன.

இந்த விவகாரத்தில், இருவகையான எதிர் வினைகளை எதிர் பார்க்கிறேன். 1. ஜேகப் ஜான் கட்டுரைக்கு எதிர் வினை 2. ஒருங்கிணைந்த மருத்துவ முறை குறித்த விவாதம் / தேவை குறித்த புரிதல். இரண்டுமே சம காலத்தில் தேவையான புரிதலே!!! ஒருங்கிணைந்த மருத்துவ முறை குறித்து யோசிப்பதும், நடைமுறை சாத்தியங்களை பற்றி விவாதிப்பதும் அதிக முக்கியத்துவம் என்று கருதுகிறேன்.

Bridge Course பற்றி விவாதம் எழுந்த போது, “Bridge Course விட, Integrated Course வந்தால் நன்றாக இருக்கும் “ என்று எண்ணினேன். Bridge Course கொண்டு வருவதும், நடைமுறைப்படுத்துவதும் எளிது. ஆனால் Integrated Course நடைமுறைப்படுத்துவது என்பது சற்று சவாலான காரியம்.

குறைந்தபட்சமாக, அனைத்தும் கிராமங்களுக்கு மருத்துவ வசதிகளை செய்வதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவ துறையில் தன்னிறவு பெற்றால் மட்டுமே, ஒருங்கிணைந்த மருத்துவ முறை கொண்டு வருவதை பற்றி யோசிக்க முடியும். அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில், மருத்துவத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகப்படுத்தினால் மட்டும் சாத்தியம்.

ஒவ்வொரு மருத்துவருக்கும், மற்றைய மருத்துவ முறைகள் குறித்த புரிதலை எற்படுத்த வேண்டும். அதற்கு, இளநிலை மருத்துவம் படிக்கும் போது, அதனை பாடமாக்க வேண்டும். இத்தகைய புரிதல் இல்லாததால், ஒருங்கிணைந்த மருத்துவ முறை குறித்த விவாதமே அர்த்தம் இல்லாதாகி விடுகிறது.

எல்லா மருத்துவ முறைகளும், தங்கள் மருத்துவமுறைக்களுக்கே உரித்தான பாதகங்களை(Negative) யோசிக்க மறுக்கின்றனர் / ஒப்பு கொள்ள மறுக்கின்றனர். இந்த புரிதல்
இல்லாமல், ஒருங்கிணைந்த மருத்துவ முறை குறித்த விவாதத்தின் தொடக்க புள்ளியே சாத்தியமல்ல!!!

மருத்துவம் என்பது வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. அதனால், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு மட்டுமே, ஒருங்கிணைந்த மருத்துவ முறை சாத்தியமா??? என்பது தெரியவில்லை,. உலகளவில் விவாதம் தொடங்க வேண்டும். சீனாவிலும் ஒருங்கிணைந்த மருத்துவ முறை இருப்பதையும், இங்கு கவனத்தில் கொள்வது அவசியம்.

மருத்துவர்கள், திறந்த மனதோடு உரையாடலை முன்னிறுவது மிக முக்கியமானது. பராம்பரிய மருத்துவர்கள், விவாதத்திற்கு தயராக இல்லை என்பதை ஒத்து கொள்ள இயலாது. நவீன மருத்துவர்களுக்கு, இதே மனநிலை இருக்கிறது என்பதே உண்மை. உலகமாயமாக்கல் மற்றும் வணிக மயமாக்கலுக்கு பிறகு, தனிமனித பண பசி அதிகமாகி விட்ட பிறகு, இது சாத்தியாமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

மருத்துவ செலவினங்கள் அதிகமாகி விட்ட நிலையிலும், அனைத்து நோய்களுக்கு ஒற்றை தீர்வு சாத்தியமில்லாத நிலையில், ஒருங்கிணைந்த மருத்துவ முறை என்பது காலத்தில் கட்டாயம்.

ஒரே மருத்துவரே, அனைத்தும் மருத்துவ முறைகளையும் கற்று, நோயாளிக்கு சிகிச்சை அளிக்க இயலுமா? அனைத்து மருத்துவ முறைகளும், ஒரு இடத்தில் இருந்து, மருத்துவ முறை தேர்ந்தெடுக்கும் உரிமை, மக்களுக்கு அளிப்பது நல்லதா???? மருத்துவ முறைகள், வெவ்வேறு அடிப்படை கொள்கைகளை உடையதாக இருக்கும் போது, அனைத்தையும் மைய நீரோட்டத்தில் நிறுத்துவது எவ்வகையில் சாத்தியம்????? என்று பல கேள்விகள் எழுகின்றது.

நாம் செல்லும் பாதை, நீண்ட தூரமாக இருந்தாலும், முதலடியை இந்திய போன்ற நாடுகளில் எடுத்து வைப்பது சாத்தியம் என்று நினைக்கிறேன். ஏனெனில், பல்வேறு மருத்துவ முறைகளை, தன்னத்தே கொண்ட நாடு இந்தியா என்பதை மறந்து விட இயலாது.

ஏற்கனவே……. பல தருணங்களில், ஒரே நோயிற்கு பல மருத்துவ முறைகளை நோயாளிகள் எடுக்க தொடங்கி விட்டனர். அதனை மறைமுகமாக பல்வேறு மருத்துவர்களும் ஆதரிக்க தொடங்கி விட்டனர். அதனை ஒழுங்குப்படுத்தி, முறையான கட்டுபாடுகளோடு, பொதுமைப்படுத்துவதும் அவசியம். அத்தகைய புரிதலை, மருத்துவ சமூகம் ஏற்குமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்

Tuesday, February 6, 2018

ஒலி மாசுபாடும் தனி நபர் சுதந்திரமும்


சென்னையிலிருந்து, சொந்த ஊருக்கு வந்து வீட்டில் வந்து வரும் போது, ஒரு வித மன அமைதி ஏற்படும். அது மன அமைதி என்பதை மனகளிப்பின் உச்ச பட்ச நிலை என்று கூட கூறலாம்.

இந்த மனகளிப்பிற்கு, சொந்த ஊருக்கு வந்தோம் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அதனை தாண்டிய இன்னொரு காரணமும் இருந்தது!!!! சென்னை மண்ணின் இரைச்சலை தாண்டி, கிராமத்தின் இரைச்சல் இல்லாத சுற்றுபுற சூழ்நிலை தான்!!!! மற்றவருக்கு ஆச்சரியமாக கூட இருக்கலாம்!!! அதன் களிப்பை உணர்ந்த தருணங்கள் பல உண்டு

சென்னையில் நான் தங்கியிருந்த பகுதிகள், புறநகர் பகுதிகளாக இருந்தாலும், காதில் வந்து சேரும் இரைச்சலை, மன அமைதியை வேரரப்பதாகவே அமைந்தது என்றால் மிகையில்லை!!!

மிக சமீபத்தில் சென்ற நிகழ்வில், ஒலி அளவு அதிகமாகி, காதில் ஏற்பட்ட இரைச்சல் இன்னும் குறையவில்லை.

கிராமங்களில் நடக்கும் சுப காரியங்களில், வைக்கப்படும் ஒலிபெருக்கிகளில், இயல்பாகவே ஒலி அளவு அதிகமாகவே இருக்கும்.

சாதாரணமாகவே காற்று, மண், நீர் மாசுபாடு குறித்த விழிப்புணர்வே இல்லாத நமக்கு, ஒலி மாசுபாடு குறித்த விழிப்புணர்வு இருக்கவே வாய்ப்பு இல்லை!!!

கேட்கும் திறன் குறைதல், மன அழுத்தம், தலைவலி, இரத்த அழுத்தம் அதிகமாதல், இதய நோய்கள் போன்றவை உண்டாக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மருத்துவ உலகம் சொல்லுகிறது.

நகர எல்லைக்குள் எர் ஹரான் ஒலிப்பதை தவிர்க்கவும் என்ற விளம்பர பலகை என்றாவது கவனித்திருப்போமா!!?!?!? பொது நிகழ்வுகளில்/இடங்களில், ஒலி அளவுகள் குறித்த விழிப்புணர்வு நமக்கு இருப்பதில்லை.

அடுத்தவன் மூக்கினை தொடும் வரை, நம்முடைய தனி மனித சுதந்திரம்!? “ என்ற திரைப்பட வரி தான் வந்து செல்கிறது. நம்முடைய தனி மனித சுதந்திரத்தை பற்றி பேசுவர்கள், அடுத்தவரின் சுதந்திரத்தை பறிப்பது ஏனோ!?!?

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்