நேற்றைய
தினம்… தெரிந்த ஒருவரோடு பேசி
கொண்டிருந்தேன். அப்போது, பள்ளி படிப்பு பற்றியும்
உரையாடல் வந்தது. தனியார் பன்னாட்டு
பள்ளியில் வருடத்திற்கு 50,000 ரூபாயாக, அவரது மகனுக்கு செலவு
ஆகிறதென்றார். இதே தனியார் மெட்ரிகுலேஷன்
பள்ளியில் படித்தால், 20000 ரூபாய் செலவாகும். விஷயம்
அதுவல்ல!!!
பிள்ளைகளின்
எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும்
என்ற நோக்கில், கணக்கு பார்க்காமல் செலவு
செய்து கொண்டிருக்கிறோம். அவர்களும் விளையாட்டை துறந்து, குடும்ப உறவுகளை தொலைத்து,
இளமை காலத்தை மறந்து, எதிர்காலம்
நன்றாக அமைய வேண்டும் என்று
படிக்கிறார்கள்.
வருடத்திற்கு,
2 லட்ச இஞ்சினியங்க் மாணவர்கள், படித்து முடித்து வெளிவருவதாக
தகவல்!! அது போல், 5 லட்சத்திற்கும்
மேற்பட்ட கலை கல்லூரி மாணவர்களும்
வெளிவருகின்றனர். இவர்கள் அனைவருக்குமான வேலைவாய்ப்பினை
பற்றி சிந்தித்தால், கானல் நீரே தெரிகிறது.
இந்தியாவில்
மட்டுமல்ல, உலக நாடுகள் அனைவரும்
வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி தவிக்கின்றனர். இப்பிரச்சனையே
அமெரிக்காவில் டிரம்ப் வெற்றி பெறுவதற்கும்,
ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளிவருவதற்கு காரணமாக அமைந்தது.
எந்த காலத்திலும், அரசே அனைவருக்கும் வேலைவாய்ப்பினை
வழங்க இயலாது. அப்படியே வழங்கினாலும்,
5-10 சதவீத மக்களுக்கு மேல் வேலை வழங்க
இயலாது. மேலும் தனியார் துறையிலும்
பெருமளவு வேலைவாய்ப்பினை வழங்க இயலாது. 10-20 சதவீதத்தினை
தாண்ட வாய்ப்பில்லை.
பெரும்பாலும்
சுய தொழிலும், தற்சார்பு வேலையும், அன்றாட கூலிகளும், அதிகமான
வேலைவாய்ப்பினை வழங்குவதாக உள்ளது.
இந்தியா
போன்ற விவசாய நாடுகளில், விவசாயத்திலே
பெருமளவு வேலைவாய்ப்பு இருந்தது. விவசாயத்தில் ஏற்படும் நட்டத்தினால், விவசாய தொழிலாளார் அளவு
குறைந்து, தொழிற்துறை மற்றும் சேவை துறை
நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டனர்.
வேலைவாய்ப்பினை
மையப்படுத்தி உருவாக்கப்பட்ட மெக்காலே கல்வி முறையினாலும், மாணவர்களினை
தற்சார்பு சிந்தனை உடையவர்களாக மாற்ற
இயலாது. பெருநிறுவனங்களுக்கு தேவையான skill குறைந்தே காணப்படுகிறது என்பது நிதர்சனம்!!!!
பொருளாதார
பெருமந்த நிலையினால், தனியார் துறையில் முதலீடு
பெருமளவு குறைந்துள்ளது. வாரா கடன் அளவு
அதிகரித்துள்ளதால், வங்கிகள் கடன் கொடுக்க கூடிய
நிலையில் இல்லை. புதிய முதலீட்டு
திட்டங்கள் இல்லாமல், தனியார் துறை வேலைவாய்ப்பு
குறைந்துள்ளது.
மறுபடியும்
மேலே உள்ள கதைக்கு வருவோம்!!!
மேற்கண்ட
மாணவன், பள்ளி/ கல்லூரி படிப்பினை
முடித்து வெளிவருவதற்கு, இன்னும் 10-15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும், அப்போது வேலைவாய்ப்பு எப்படி
இருக்கும் என்று சொல்ல இயலாது.
ஆனால், வேலைவாய்ப்பு இன்மை அதிகமாகி இருக்குமே
தவிர, குறைந்திருக்க வாய்ப்புல்லை.
அப்படி
இருக்கையில், எதிர்காலத்தை நினைத்து, நிகழ்காலத்தை இழந்து கொண்டிருக்கிறோம். அதற்காக,
“ உங்களை பட்ட படிப்பினை படிக்க
வேண்டாம்” என்று சொல்லவில்லை. நம்முடைய
நோக்கிற்கு ஏற்ப செயல்படுகிறோமா??? என்று
சிந்திக்கவே வேண்டுகிறேன்.
வருங்காலங்களில்,
சுய சார்பும், தன்னிறைவும், உலக பொது வாழ்வியலும்,
தன்னம்பிக்கையும் உள்ள மாணவனே வெற்றி
அடைவான். பரிணாம வளர்ச்சியில், “ தப்பி
பிழைத்தல் விதி கூட புரிய
வரும்” அவ்வளவே!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment