1. COVID 19 பிறந்து....
கிட்டதட்ட 4 மாதங்கள் தான் ஆகின்றது. ஆனால் கிட்டத்தட்ட 1,60,000 பேர் இறந்து விட்டனர்!!!
சீனாவில் ஆரம்பித்தாலும்... ஆரம்பத்தில் நோயின் தீவிரத்தை நாடுகள் உணரவில்லை!!!
ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்பினை தொடர்ந்து......
மற்ற நாடுகள் உணர ஆரம்பித்தது
2. இந்தியாவில் கூட ஊரடங்கு அறிவித்து 4 வாரங்கள் முடிவடைய போகிறது. ஊரடங்கிற்கு முன்பு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்குவதற்கு 3 நாள் தேவைப்பட்ட நிலையில்....
ஊரடங்கிற்கு பிறகு சராசரியாக 6 நாள் தேவைப்பட்டிருக்கிறது. 6 சதவீத அளவில் வேகம் குறைந்திருக்கிறது
3. உலக சுகாதார அமைப்பும் சமூக விலகலையும், தனித்திருத்தல், வீட்டிலிருத்தலையே வலியுறுத்தி கூறுகிறது. அதிகளவில் மக்கள் தொகையையும், பொருளாதார மந்தத்தில் இருக்கும் இந்தியாவில் ஊரடங்கினை செயல்படுத்துவது சற்று சவலான காரியம்!!!
4. வளர்ந்த நாடுகளில் மிகப்பெரிய பாதிப்பினையும், உயிரிழிப்பினையும் ஏற்படுத்தி வருகையில், இரண்டாம் தர நாடுகளில் பாதிப்பு குறைவாக இருப்பதும் சற்று ஆச்சரியமான விஷயம்!!! இயற்கையாக உள்ள Herd Immunity ஆக இருக்கலாம்!!! ஆனால் முறையாக தரவுகளும் இல்லை!!!
5. இது மாதிரியான நிலையை உலகம் கண்டதில்லை!!! இப்பிரச்சனையும் ஏப்ரல் - மே மாதத்துடன் முடிந்து விடுகிற தெரியவில்லை!!! இந்த வருட இறுதியை கூட அடையலாம்!!! ஆனால் பொருளாதார பிரச்சனைகள் களைய 2-5 வருடங்கள் கூட ஆகலாம்!!!
6. இந்தியாவில் மே மாத ஆரம்பத்தில் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டாலும்...... கட்டுபாடுகள் விலக்க கூடாது!!! பொது போக்குவரத்தை தள்ளி போட வேண்டும்!!! மத சார்ந்த விழாக்களுக்கு அனுமதிக்க கூடாது!!! பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜீலை தள்ளி வைக்கலாம்!!!!
7. ஒரு பகுதியிலியே ...... வைரஸின் ஜீன் வெவ்வேறு strain கிடைப்பதால் தடுப்பூசி கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது!!! இயற்கையாக நோய் எதிர்ப்பாற்றல் கிடைத்தால் மட்டுமே ... இந்நோய் முழுவதும் உலகத்தை விரட்ட முடியும்
8. அதுவரைக்கும்.... சமூக விலகல், கை கழுவதல், முகவுறை அணிவது தான் சிறந்த எளிமையான வழிமுறையாக இருக்கும்!!!
9. பாதிப்பு விகிதம் அதிகமாக இருந்தாலும்.... இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது!!! ஆனால் ஒரே நேரத்தில் அதிகமான நபர்களுக்கு பாதிக்கப்படும் போது மருத்துவ துறை முழுவதும் முடங்குவது தான் பிரச்சனை!!!!
10. இறப்பினை தாண்டி பொருளாதாரம் சார்ந்து பிரச்சனைகள் அதிகமாகவே இருக்க போகிறது!!! அதிலும் நடுத்தர/கீழ்த்தர வர்க்கத்தின் நிலைமை சொல்லி மாளாது!!! பணத்தினை பார்த்து செலவு செய்யுங்கள்!!!
11. சுய ஒழுக்கம், சுய சார்பு, சூழ்நிலைக்கு ஏற்ப வாழுதல், இக்கட்டான சூழ்நிலையை கையாளுதல், சமூக பொறுப்புணர்வு, எளிமையாக வாழுதல் போன்ற நன்னெறிகளையும் கற்று கொடுத்துள்ளது!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்