” வேலை செய்யும் போது....
ஒய்வு கிடைத்தால் தான் சூப்பராக இருக்குமே... “ என்று எண்ணிய மனம்..... ஒய்வு கிடைத்த போது லயிக்க மனமில்லை.
விரும்பிய உணவு கிடைத்த போதும்....
உண்ண கூட விருப்பமில்லை!!
பணம் அதிக இருந்த போது...
விரும்பிய பொருட்களை வாங்க முடியவில்லை!!
விரும்பிய நகைச்சுவை காட்சி...விரும்பிய பாடல் ஒலித்தாலும்... டிவியை பார்க்க விருப்பமின்மை!!!
வீட்டில் மூத்தவனாக இருந்தாலும்... தன்னுடைய சொல்லிற்கு மதிப்பில்லை!!!
....
இதெல்லாம் எப்போது என்கிறீர்களா???
ஊரடங்கு உத்தரவினால் அடைப்பட்டிருக்கும் ஒவ்வொருவரின் மனநிலை!!
இதே மனநிலை... வேறொருவருக்கும் இருக்கும்... அது யார்?
...
.....
.......
ஆம்.... இல்லங்களில் அடைப்பட்டிருக்கும் வயோதிகர்களின் மனநிலை!!! எல்லாம் இருந்தும் வறண்ட மனநிலை..... ஆனாலும் ஊரடங்கின் போது வயோதிகர்களுக்கு ஆனந்தம் அதிகமாக வாய்ப்பு உள்ளது!!! ஏனெனில் தனது பிள்ளைகளுடனும்.... பேர பிள்ளைகளுடன் பேசி..... அளவாள நேரம் கிடைக்கும்!!
இளைஞர் சமுதாயம்... வயோதிகர் மனநிலை புரிந்து கொள்ளவே முயற்சிப்பதில்லை!!! வயோதிகத்தின் பிரச்சனை முதுமை போது தான் தெரியும்!!! முதுமை நிலை என்பது மிகவும் கொடுமையானது!! இப்போதைய ஊரடங்கினை போல்!!!
மனித வாழ்வியல் மிக வேகமாக ஒடி கொண்டிருக்கிறது!!! அதில் எதையும் கவனிக்க நேரமில்லை!! உலகத்தை/வாழ்வியலை கவனிக்க நேரம் தரப்பட்டுள்ளது!! இந்த ஊரடங்கின் காலத்தை கொடுமையாக கருதாமல்...... புரிந்து கொள்ள கிடைக்கும் வாய்ப்பாக பாருங்கள்!!!
இளமை காலத்தில் நேரமின்றி... ஒடி அலைந்து விட்டு... முதுமை காலத்தில் யோசித்து பலன் ஏதும் இராது!!! தனிமை கொடுமையானது அல்ல!!! சுகமான சுமைகள்!!! எனக்கெல்லாம் தனிமை போன்ற சுகம்.... வேறொன்றிலும் கிடையாது!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment