Friday, April 3, 2020

அறிவியல் போதை- தத்துவ போதை

போதை என்பது ஒரு மனநிலை போக்கு!!!மயக்கம்!! நமக்கு தெரிந்தது..... மது போதை பற்றிதான்!!! எனக்கு கூட புத்தக போதை உண்டு!!! இப்படியாக ஒவ்வொருக்கும் ஒரு போதை இருக்கும்!!! அதில் அறிவியல் போதை சேர்த்து கொள்ளலலாம் போல!!!

அறிவியலை மீது அளவு கடந்த நம்பிக்கை உண்டு!!! உலகத்தையும்/செயலையும் புரிந்து கொள்வதற்கு அறிவியலின் பங்கு அளப்பறியது. ஆனால்... எல்லாவற்றை அறிவியல் வயிலாக மட்டும் ஒத்துகொள்வேன் என்பதே அறிவியல் போதையோ என்று நினைக்க தோன்றுகிறது.

அறிவியல் பூர்வமாக நிருபீக்கப்பட்ட குறிகுணங்களாக இருந்தாலும்.. .அனுபவத்தின் பங்கு எந்தளவிற்கு முக்கியம் என்பது மருத்துவருக்கு தெரியும்!!! அதிலும் இந்திய சூழ்நிலைக்கு நடைபெறும் ஆராய்ச்சிகள் வெகு குறைவே!!! அயல் நாட்டில் நடைபெறும் ஆராய்ச்சிகளை, இந்தியாவின் சூழ்நிலைக்கு ஏற்ப அடையாளப்படுவத்தில் கூட முயற்சிகள் நடப்பதில்லை!!!

அரசியல் புரிதலில் இடது சாரியாக அடையாள படுத்தி கொள்ளும் போது.... அறிவாளியாக காட்டி கொள்வது வழக்கம்!!! தன்னை அறிவியலாளர்கள் காட்டி கொள்வதன் மூலம் ... தன்னை புத்திசாலியாக காட்டி கொள்கிறார்கள் போலும்!!!

அறிவியலை நீங்களும் நம்புங்கள்..... நானும் நிறையவே நம்புகிறேன்........ ஆனால் மற்ற துறையின் கருத்துகளை காது கொடுக்க கேட்கவே மறுக்கிறீர்களே!!! ஏன்?

உலக சுதாகார அமைப்பு.. எபோலா வைரஸ் போன்ற கொள்ளை நோயின் போது MEURI என்ற நெறிமுறையை கொண்டு வந்தது. அதாவது முழுமையாக ஆய்வு நடத்தாமலோ....hypothesis அடிப்படையில் சில மருந்துகளை பரிந்துரைகள் செய்ய முடியும்!!! அதன் அடிப்படையில் hydroxychloroquine மற்றும் azithromycin போன்ற மருந்துகளை பரிந்துரை செய்யப்பட்டன!!!!

சித்த மருந்துகளில் முழுமையாக ஆய்வுகள் என்பது இல்லை!! கொள்ளை நோயின் போது அனுபவத்தின் அடிப்படையில் சில பரிந்துரைகள் சொல்கிறோம்!!! அதை கேட்க மறுப்பது ஏன் என்று மட்டும் புரியவில்லை!!!

விஞ்ஞானம் மாற கூடியது;மெய் ஞானம் மாறாதுஎன்பது சித்த மருத்துவ சொல்லாடல்!!! அதில் எனக்கு நம்பிக்கையில்லை!!! ஆனாலும் அறிவியலும் காலத்திற்கு ஏற்ப மாற கூடியது... என்று அறிவியல் ஆய்வுகளே மெய்பிக்கின்றன!!!!

கொலஸ்டிரால் கெட்டது என்று சொன்ன அறிவியல் ஆய்வு....... குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு... கொலஸ்டிரால் நல்லது என்று சொல்லியது. எல்லா ஆய்வுகள் முடித்து... மனிதர் உட்கொண்ட பிறகு, Post marketing surveillance மூலமாக திரும்ப பெறப்பட்ட மருந்துகள் ஏராளம்!!!

இப்படியாக கருத்தியல் ரீதியாக... ஆயிரம் விவாதங்களை நடத்தி கொண்டே போகலாம்!!! மக்கள் நலனுக்காக ஒருங்கிணைந்த மருத்துவ முறையை பற்றிய பேச வேண்டியது காலத்தின் கட்டாயம்!!!

சித்த மருத்துவர்களுக்கு தத்துவம் சார்ந்த போதை உண்டு!!!ஆங்கில மருத்துவர்களுக்கு அறிவியல் போதை உண்டு!!! ஆனால் மக்களின் தேவைக்கு ஏற்ப சிந்திப்பது காலத்தின் முடிவு!!! தண்டவாளம் எந்த இடத்திலும் ஒன்று சேராது!!! சேர்ந்தாலும் ரயில் போக முடியாது!!! ஆங்கில மருத்துவமும் பராம்பரிய மருத்துவமும் தண்டவாளத்தை போல் இணைந்து செயல்பட்டால், கொள்ளை நோயினை எளிதாக கடக்கலாம்!!!

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

 


No comments:

Post a Comment