சித்த மருத்துவத்தால் கொரோனா வைரஸை குணப்படுத்த முடியுமா???
என்று ஆய்வு செய்ய மத்திய, மாநில அரசுகள், ஆயுஷ் துறை மற்றும் சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
என் மனதில் தோன்றிய சில புரிதல்கள்....
1. எபிடெமிக் என்ற நிலையில் இருந்து...உலகளவிலான தொற்று நோய் என்று மாறி விட்டது. உலகமே உற்று நோக்க கூடிய விஷயம் என்பதால்....... சித்த மருத்துவத்தை உபயோகம் செய்வது குறித்து கொள்கை முடிவெடுப்பது சற்று கடினமான காரியம்!!!
2. இந்திய மருத்துவ சூழல் என்பது ஒருங்கிணைந்த மருத்துவத்தினை பற்றி பேசியதில்லை. இத்தகைய கடுமையான சூழ்நிலையில்... ஆங்கில மருத்துவத்தோடு சித்த மருத்துவத்தினை சேர்ந்து பயன்படுத்துவது என்பது சற்று சவாலான செய்கை!!!
சீனாவில் ஒருங்கிணைந்த மருத்துவம் குறித்த புரிதல் அதிகமாகவே உள்ளது. பயன்படுத்தப்பட்டு வருகின்றது; அதன் தொடர்ச்சியே கொரோணா வைரஸ் பாதிப்பிலும் தொடர்கிறது.
(டெங்கு காய்ச்சலுக்கு ...... நிலவேம்பு குடிநீர் கொடுத்த போது... ஒருங்கிணைப்பு தொடங்கி விட்டாலும்.... அதன் புரிதல் மிக குறைவே!!!)
3. ” சித்த மருத்துவம் அறிவியல் பூர்வமானது; அனுபவத்தின் அடிப்படையில் வரக்கூடியது “ என்று சொன்னாலும் நவீனத்துவ உலகம் நிச்சயமாக ஏற்று கொள்ளாது; பரிசோத்து பார்க்க களம் இதுவல்ல!!!! தமிழகம் சார்ந்த நோயல்ல!!! உலகம் சார்ந்து நோய் என்பதால் முக்கிய முடிவுகளை எடுப்பது மிக கடினம்!!
4. நவீன மருத்துவத்திலும் நேரடி மருந்தில்லாமல்... நோய் குறிக்குணங்களுக்கு ஏற்ப மருந்து வழங்கி கொண்டிருக்கிறது. அது போல் சித்த மருத்துவத்திலும் குறிகுணங்கள் அடிப்படையில் மருந்துகளை வழங்கலாம்..... என்பதே.... நம் முன் உள்ள வாய்ப்பு!!!
அதனையும்....
பொத்தம் பொதுவாக பேச இயலாது!!! Anti pyretic, anti inflammatory,
mucolytic என்று கொரோனா வைரஸ் நோயோடு தொடர்புடைய தரவுகளோடு அளிக்க வேண்டும். கோரோனா வைரஸ் குடும்ப நோய்களான சார்ஸ், மெர்ஸ் போன்ற நோய்களின் எதிர்ப்பு சக்தி தன்மை குறித்த தரவுகளை சேர்த்து தர வேண்டும்!!!
5. நாம் பரிந்துரைக்கும் மருந்தானது...... குறிப்பிட்ட காலத்தில் தமிழ்நாடு முழுவதும் கொடுக்கமளவிற்கு தயாரிக்க இயலுமா?? என்ற கேள்வியும் முக்கியம்!!!
6. நாமும் தத்துவார்த்த புரிதலோடு நோயையும், பரிந்துரைக்கும் மருந்தினையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
7. கொரோனா வைரஸ் நோயின் குறிகுணங்களுக்கு ஆங்கில மருத்துவத்தோடு சித்த மருத்துவத்தினை சேர்ந்து அளிக்கில் சிறப்பான பலனை அளிக்க வாய்ப்புகள் அதிகம்!!!
8. உயர் நீதி மன்றம் 4 வார கால அவகாசம் வழங்கியுள்ளது. அதற்குள் கொரோனா வைரஸ் வேறொரு கட்டத்தினை அடையலாம்!!!
1. கொரோனா வைரஸ் நோயிற்கு எதாவது தீர்வு கிடைக்காதா? என்று பொதுமக்கள் நினைக்கின்றனர்.
இந்த வாய்ப்பின் மூலம் சித்த மருத்துவத்திற்கு விடிவு காலம் பிறக்காதா?? என்று சித்த மருத்துவம் சமூகம் எண்ணுகின்றனர்.
2. இவ்வறாக….. உணர்வு பூர்வமாக சிந்திக்காமல்….. அறிவு பூர்வமாக…..
நவீன உலகத்தொடு ஒன்றி…. நடைமுறை சாத்தியங்களுக்கு உட்பட்டே சிந்திக்க வேண்டும் என்று எனது புரிதல்!!!
3. பாக்டீரியாவின் எதிர்ப்பு மரு்ந்து இருப்பது போல்…..
வைரஸிற்கு எதிர்ப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பெருமளவில் தொல்வியையே கண்டுள்ளது. அதனால் தான்…. வராமல் தடுப்பதற்காக… தடுப்பூசிகள் மூலமாகவே வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் அந்த இடத்தில் வைரஸின் எதிராக மூலிகை மருந்துகள் சிறப்பாகவே செயல்படுவதாக பல தரவுகள் இருக்கின்றன.
4. இந்தியா போன்ற வளரும் நாடுகளில், ஆராய்ச்சி துறைக்கு ஒதுக்கப்படும் நிதி என்பது மிக குறைவு (1
% குறைவு )!!!! அதிலும் ஆயுஷ் துறைக்கு ஒதுக்கப்படுவது அதிலும் குறைவு!!!!
5. நாம் பரிந்துரைக்கு மருந்துகள் மூலிகை மருந்துகளாக இருப்பது சால சிறந்தது. அதை விடுத்து…..
உலோக பாடாண சரக்குகளை கொண்டு தாயரிக்கப்படும் மருந்துகளை… ஏற்று கொள்வது மிக கடினம்!! அதற்கு நாம்
toxicity study, loading dose போன்ற பலவற்றை ஆய்வுப்படுத்திய பின்னரே அனுமதி கிடைக்கும்.
இருக்கின்ற கால சூழ்நிலையில், மூலிகை என்பது சற்று எளிதாக இருக்கும். மிகப்பெரிய மருந்துகளை விட, மிக எளிதாக மூலிகை சரக்குகளை சொல்வதன் மூலம்…..
ஏற்கனவே உள்ள தரவுகளை வைத்து சொல்ல முடியும்.
6. அதிலும் மாத்திரை அல்லது குடிநீர் போன்ற எளிய வகைகளே சிறந்தது என்று நினைக்கிறேன். வயிற்றில் ஆமம் அதிகமாகி சுரம் உண்டாகுமென்பது சித்த நூல்கள் கூற்று!!!
அதிலும் குடிநீர் சால சிறந்தது!!
7. நமது அங்கரிக்கப்பட்ட புத்தகங்களில் உள்ள குடிநீர் வகைகளை தெரிவு செய்து முடிவு செய்யலாம். அதில் நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், ஆடோதொடை குடிநீர் போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளலலாம்( எனது கருத்து)
8. அதிலும் கொரோனா வைரஸ்…. கப குறிகுணங்களுடன் இருப்பதனால், கப சுர குடிநீர் மற்றும் ஆடோதோடை குடிநீர் ஆகிய இரண்டில் ஒன்றை பரிந்துரைக்கலாம்.
9. கப சுர குடிநீரில் உள்ள மூலிகைகள் நேரடியாக கோரோனா வைரஸ் எதிர்ப்பாற்றலை பெற்றிருக்கிறதா?? என்றால் முழுமையான ஆய்வுகள் இல்லை. ஆனால் அதிலுள்ள மூலிகைகளுக்கு
anti pyretic, immune modulatory, anti inflammatory போன்ற நற்செய்கைகள் உள்ளன.
10. ஆடோதோடை குடிநீரில் உள்ள அதிமதுரம்…. ஏற்கனவே சார்ஸ் வைரஸ் நோயிற்கு சிறந்தது என்று ஆய்வக முடிவுகள் உள்ளது.( நன்றி திருநாராயணன் சார் ) மேலும் தற்போது in
silico ஆய்வு முடிவுகளில் அதிமதுரம் கொரோனே வைரஸ் எதிராக செயல்படும் ஆற்றல் உடையது என்று கூறுகிறது.
11. மேற்கண்ட மருந்துகள்…. சித்த வைத்திய திரட்டு நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆதலால்… ஆதார நூல் என்பதில் பெரிய பிரச்சனையில்லை. மேற்கண்ட மருந்துகள்… பல ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகின்றது. பின்விளைவுகள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
கடைசியாக…. மேற்கண்ட மருந்துகளை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் பட்சத்தில்…..
நோய் தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள் நிச்சயம் குறையலாம்.
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment