Friday, March 13, 2020

சிஸ்டம் சரியில்லை -நிர்வாக பிரச்சனைகள்

சிஸ்டம் சரியில்லைஎன்றார் ஒரு சினிமா காரர். ஆனால் அரசியல் சாயம் பூசி.... அதன் சாரத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டனர் சமூக போராளிகள் !!!!. நிர்வாக துறை பற்றிய புரிந்தவர்களுக்கு.... ” சிஸ்டம் சரியில்லைஎன்பதன் சாரத்தை நன்கு உணர்ந்திருப்பார்கள்!!!

இப்படியாக...பல உண்மைகளை, அரசியல் சாயம் பூசி மறைத்து விட்டோம்!!! அரசியல்வாதிகளுக்கு தீனி போடுற வேலையை, சமூக போராளிகள் செய்து வருகின்றனர்.

சரி இதெல்லாம் எதுக்கு????

யெஸ் வங்கியில் நடந்த நிர்வாக ரீதியான பிரச்சனைகள்.. இன்று பேசும் பொருளாக நிற்கிறது. அதை அரசியல் ரீதியான மாற்றி, பிரச்சனையின் தடத்தை மறைத்து விடுகிறோம்.

நேற்று தொடங்கிய இப்பிரச்சனையை பற்றி, சமூக வலைத்தளங்கள் எவ்வாறு பார்க்கிறது???? என்று தேடி பார்த்தேன். முழுவதும் அரசியல் சாயம் தான்!!! பொருளாதாரம் சார்ந்தோ? நிர்வாகம் சார்ந்தோ?? விவாதிக்கப்பட்ட விஷயங்கள் சொற்பம்!!!

சிறு தொழில் முதல் பெரிய நிறுவனங்கள் வரை, முழு முதலீடு கொண்டு தொடங்க இயலாது. ஆதலால்.... நிதி நிறுவனங்கள், வங்கிகள் மூலமாக கடன் வாங்கி தொடங்கின்றன. அவ்வாறு தொடங்கப்படும் தொழில்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துவிடுவதில்லை. அந்த இடத்தில் அரசியல் நுழைந்து விடுகின்றன. அரசியல் தலையீடுகளால்..... தகுதியற்றவருக்கு கடன் வழங்கி சீரழிந்த நிறுவனங்களும் உண்டு. இல்லையென்றால் ஊழியர்களின் சல்லாபத்திற்கு...... பணத்தை பெற்று கொண்டு தகுதியற்ற கடன்களை வழங்கிய நிகழ்வுகளும் உண்டு!!!

நிர்வாக பிரச்சனை என்பது அரசு துறைகளுக்கு மட்டுமல்ல!!! தனியார் துறையில் நடக்கவே செய்கிறது... ஆனால் சற்று குறைவு... அவ்வளவு தான் வித்தியாசம்!!!

தற்போதைய நிலைமை சரியில்லை மாற்ற வேண்டும் என்பது இடது தன்மை அரசியல் கட்சிகளின் எண்ணம்!!! ஆனால் அவர்களும்... சிஸ்டம் சரியில்லை என்பதை எள்ளி நகையாடுவதுதான் ஆச்சரியம்!!!

சிஸ்டத்தை சரிபண்ணாமல்... நீங்கள் எத்தனை திட்டம்/சட்டம் கொண்டு வந்தாலும்.... எதுவும் மாறாது!!!

 

உங்களில் ஒருவன்

உங்களை போல் ஒருவன்

வேதை குமார்

 


No comments:

Post a Comment