இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
4000mah ரெட்மீ போனை வாங்கிய பிறகு, பவர் பேங்க் தேவையில்லை என்றிருந்தேன். ஆனால் கஜா புயலிற்கு பிறகு மின்சார பிரச்சனையினால் பவர் பேங்கினை வாங்கினேன். ஆனால் இன்றோ...
நிலைமை தலைகீழ்!!
செல்போன் பயன்பாடு, ”பேசுவதற்கு மட்டும்” என்ற நிலையினை கடந்து பல ஆண்டுகளாகி விட்டது. அதற்கு ஏற்றாற் போல் டேட்டாவின் விலையும் இந்தியாவில் மிக குறைவு!!!
டேட்டாவின் விலை அதிகமாக இருந்த காலத்தில்...
தேவையான நேரத்தில் மட்டும் இணையத்தை ஆன்/ஆப் செய்வோம். ஜியோவின் வருகைக்கு பிறகு...
டேட்டாவின் விலை குறைந்து ஆன்/ஆப் என்ற நிலையை மறந்து விட்டோம்!!! மேலும் பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது.
முன்பெல்லாம் 4’ ஸ்கிரின் என்பதெல்லாம் மிக பெரிய விஷயம்!!! இன்று குறைந்தபட்ச ஸ்கிரின் அளவே 4 இன்சு தான்!!! வீடியோக்களை பார்ப்பதற்கு ஏதுவாக..... ஸ்கிரின் அளவுகள் அதிகமாகி கொண்டிருக்கின்றன. அப்புறம்!!!! செல்பி!!! வாட்ஸ் அப் சாட்டிங்க்!!! என தேவைகள் அதிகமாகி கொண்டிருக்கின்றன.
முழுமையாக சார்ஜ் போட்டாலும்... காலையிலிருந்து மாலை வரை சார்சு இருப்பதே மிக கடினம்!! இன்றைய சூழ்நிலையில்... கையில் பவர் பேங்க் உடன் சுற்றுவது அவசியமாகி விட்டது!!!
நானும் .. .அதில் விதிவிலக்கல்ல!!! காலையில் சார்ஜ் போட்டால்... இரவு வரை நிற்பதே பெரிய விஷயம்!!! அதுவும் இரவு முழுவதும் பவர் பேங்க்கிற்கு சார்சு போட்ட்டல் தான்... அடுத்த நாள் செல்போனுக்கு சார்சு போடுவதற்கு எளிதாக இருக்கிறது. இல்லையெனில்.....அடுத்த நாள் திண்டாட்டம் தான்!!!
இன்றைய நிலைக்கு...... செல்போன் அவசியம் என்ற நிலையினை தாண்டி... பவர் பேங்கும் அவசியம் என்ற நிலைக்கு வந்து விட்டோம்!!! அப்படி ... என்ன தான் உறுப்படியான வேலை செல்போன்ல செய்றோம்ன்னு கேட்க கூடாது!! எல்லாம் வெட்டி வேலை தான்!!
காலையில் படுக்கையை விட்டு எழும் போது ஆன் செய்யப்படும் டேட்டா... இரவு படுக்கைக்கு போகும் தான்... ஆப் செய்யப்படுகிறது. நம்மை விட செல்போன்கள் அதிகமாக வேலை செய்கின்றன!! வாங்குன 10000
ரூபாய் விட அதிகமாக வேலை செய்கிறது.
செல்போன்களை சிறிது ஒய்வெடுக்க விடுங்கள்!!! அது செல்போனுக்கு மட்டுமல்ல!!! நமக்கு தான் நல்லது!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment