Thursday, April 25, 2019

தாயா?, மனைவியா?? /பிறந்த வீடா? புகுந்த வீடா??


குடும்ப உறவுகள் மிக மெல்லியவை. மலை உச்சியில் நிற்பவை!!! சிறிது பிசகினாலும் உறவு மரணம்(பிரிவு) நிச்சயம்!!!!! அதிலும் புதிதாக திருமண உறவில் இணையும் தம்பதிகளின் சார்ந்த பிரச்சனைகள் அடுத்த லெவல்!!!

குடும்பத்தில் புதிதாக ஒரு பெண் நுழையும் போது, ஆண்/பெண் என இருவருமே தர்ம சங்கட நிலைக்கு வந்து விடுகிறார்கள்.

ஆணுக்கும் ...... தாயா?, மனைவியா?? என்று போராட்டம்!!! பெண்ணும்..... பிறந்த வீடா? புகுந்த வீடா?? என்று போராட்டம்.

தலைமுறை இடைவெளியும் பிரச்சனையை இன்னும் அதிகமாக்குகிறது. அதிலும் குடும்ப பிரச்சனைகளை பற்றிய அனுபவம் இல்லாத புதுமண தம்பதிகள், முடிவுகள் எடுக்க முடியாமல் திரிசங்கு நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

ஒரு பிரச்சனை எழும் போது ஆண் மனைவிக்கு ஆதரவு அளிப்பதா?? தாயிற்கு ஆதரவு அளிப்பதா? என்று குழம்பி நிற்கிறான். இந்த தருணங்களில் மெளனமே பதிலாக இருக்கிறது. இரண்டு பக்கமற்று நியாய தராசாக நின்றாலும் பிரச்சனை தான்!!! சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுப்பது சால சிறந்தது!!!

பெண்ணை பொறுத்து இதே நிலை தான்!!! ஆனால் புகுந்த வீடு வந்த பிறகு, பிறந்த வீட்டினை வைத்து ஒப்பிடுவது தவறான புரிதல்!!!!

வாழ்வது ஆணும் பெண்ணும் தான்..... !! அதில் இருபுறமும் ஆயிரம் பிரச்சனைகள் இருக்க தான் செய்யும்!!! விட்டு கொடுத்து வாழ்தல் மட்டுமே சுகமளிக்கும்!!! “ நான் பெரியவனா?? நீ பெரியவனா??? “ என்ற வெட்டி வார்த்தைகள் தலையீட்டால், குடும்ப வாழ்க்கை கேள்வி குறியே!!!

காலங்கள் செல்ல செல்ல...... குடும்ப கட்டமைப்பு தாண்டிய தனி மனித சுதந்திரம் முக்கியமாகி விட்டது. இதில் எது சரியென்று, கருத்தியல் ரீதியாக ஆயிரம் விவாதிக்கலாம்!!!

குடும்ப கட்டமைப்பு அடிமை தனத்தை கடைபிடிக்கிறது என்பது உண்மை!!! ஆனால் ஆணுக்கும் பெண்ணும், பெண்ணும் ஆணும் அன்பு சார்ந்து அடிமையாக இருப்பதில் தவறில்லை!!! வாழ்க்கை புரிதலை மேம்படுத்துங்கள்!!! வாழ்க்கை நயத்தை அனுபவியுங்கள்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Monday, April 22, 2019

வோட்டிங் மிஷின் அரசியல்


ஒரு வழியாக தேர்தல் முடிந்தது. பொதுவாக தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது ஒளிக்கும் குரல்கள் இப்போதே கேட்க தொடங்கி விட்டன. அது என்னவா!?!?!?, “ நாங்கள் வாக்களிக்கும் போது, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே வாக்களிப்பது போல் செட் செய்து வைத்திருக்கிறார்கள்”” என்பதே!!!

தேர்தல் முடிந்த பிறகு, இரண்டு தேர்தல் பணியாளர்களிடமும், பூத்த ஏஜெண்ட்களிடம் சில விவரங்களை சேகரித்தேன். அது உங்கள் பார்வைக்கு-

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மிண்ணுனு வாக்குபதிவு இயந்திரங்கள், மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படுகிறது. அங்கும் குவாலிட்டிக் செக் செய்யப்படுகிறது.

அடுத்ததாக…. மாவட்ட தலைநகரங்களிலும், இதே முறையில் குவாலிட்டி செக் செய்யப்படுகிறது. அடுத்ததாக….. வட்ட அளவில், சில இயந்திரங்களில் 1000 வாக்குகள் வரை இட்டு, மீண்டும் பரிசோதிக்கப்படுகிறது. அதற்கு பிறகு வாக்குசாவடிக்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் மாதிரி வாக்குப்பதிவு சுமார் 6.30 அளவில் நடைபெறுகிறது. பூத் ஏஜெண்டுகளின் முன்னிலையில், 50 வாக்குகள் வரை இடப்பட்டு மீண்டும் ஆய்வு செய்யப்படுகிறது. பிறகு நீக்கம் செய்யப்பட்டு, 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது. இப்போது VVPAT இயந்திரமும் பயன்படுத்த தொடங்கியாகி விட்டது.

மேற்கண்ட நடைமுறையில் எதேனும் குறைப்பாடு இருப்பின், புது இயந்திரம் மாற்றப்படுகிறது. இவ்வளவு நடைமுறைகளினை தாண்டி தான், வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குசாவடியில் பூத் ஏஜெண்டுகளின் பணி முக்கியமானது.

இவ்வாறாக இரண்டு/மூன்று கட்ட ஆய்வுகளுக்கு பின்னரே, வாக்குபதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இயந்திரத்தை மாற்ற இயலுமா? என்றால், தொழிற்நுட்ப ரீதியாக எனக்கு தெரியாது. அப்படியே மாற்ற முடியமானாலும், மேற்கண்ட நடைமுறைகளினை தாண்டி செயல்படுத்துவது வாய்ப்பே இல்லை.

வாக்கு பதிவு இயந்திரத்தில் தவறு இருந்தால் நிரூபியுங்கள் என்று தேர்தல் ஆணையம் அழைத்த போது, எந்த கட்சியும், வாக்குபதிவு இயந்திரத்தை மாற்ற இயலும் என்று நிருபீக்கவில்லை. இன்னும் சொல்ல போனால்…. இரு கட்சிகள் மட்டுமே வந்தது!!!

தோற்கும் போது…… இக்காரணத்தை சொல்லும் கட்சிகள், வெற்றி பெறும் போது வாய் திறப்பது இல்லை. மேலும் மக்களினை ஏமாளிகளாய் நினைத்து கொண்டு, தவறான தகவலை கொடுக்கின்றன !!!!

இதுக்கு பிறகு…. கம்பு சுத்தினால் , பேசுவதற்கு ஒன்றுமில்லை!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Wednesday, April 17, 2019

சிந்தித்து வாக்களிப்போம்!!! ஜனநாயகம் காப்போம்!!!


” ஜெயிக்க வேண்டிய குதிரையில் பயணிக்க வேண்டும் என்பது பெரும்பாலான மனிதர்களின் புரிதல்!!!! இது தேர்தல்!!!! சூதாட்டம் கிடையாது!!

ஜெயிக்கிற வேட்பாளருக்கு ஒட்டு போட்டு ஜெயிக்க வைக்க ஆசைப்படுவதில் தவறில்லை. “நான் வாக்களித்த வேட்பாளர் ஜெயித்து விட்டார் “ என்று சுயதம்பட்டம் அடித்து கொள்ள தான் முடியும்.

மாறாக உங்கள் சுயத்தை இழந்து விடுகிறீர்கள். உங்களது உரிமை, மற்றொருவருக்கும் விட்டு கொடுத்து விட்டு.... அடிமை மனநிலைக்கு வந்து விடுகிறீர்கள்.

நீங்கள் யாருக்கு விரும்புகிறீர்களே வாக்களியுங்கள்!!! அது நோட்டாவாக இருக்கலாம்!! அங்கிகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளராக இருக்கலாம்!!!! சுயட்சை வேட்பாளராக இருக்கலாம்!!!

சுயேட்சை/ நோட்டாவிற்கு/ சின்ன கட்சிக்கு வாக்களித்து , உங்களது வாக்குகளை வீணாக்காதீர்கள் “ என்று பொய் பிரச்சாரம் தொடர்ந்து பரப்படுகிறது. உங்களை மூளை சலவை செய்யும் ஆதிக்க மனநிலை!!!

சில முக்கியமான பெரிய கட்சிகளுக்கு மட்டும் வாக்களித்து வாக்குகளை உபயோகமாக மாற்றுங்கள் என்று கூறுவர்கள்.

சில கட்சிகளுக்கு மட்டும் தான் வாக்களிக்க வேண்டும் என்றால், இந்தியா ஏதற்கு பலகட்சி ஆட்சி முறையை பின்பற்ற வேண்டும். மாறாக இருகட்சி ஆட்சி முறை மாற்றி விடலாமே!!!

வாக்களிப்பது உங்கள் உரிமை!!! நம்முடைய பிரதிநிதியை தேர்ந்தெடுப்பது நம கடமையும் கூட!!! இன்றைய நம்முடைய ஒரு வாக்கு, நாளைய சமூகத்தினை வளர்ப்பதாக இருக்க வேண்டும்!!! நம்முடைய ஒரு வாக்கு, என்ன செய்து விட போகிறது???? என்று எண்ண வேண்டாம்.

சிந்தித்து வாக்களிப்போம்!!! ஜனநாயகம் காப்போம்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



எதை வைத்து வாக்களிப்பது


நாளைய தினம்வாக்களிக்கும் நாள்!!!

ஏற்கனவே கேட்ட கேள்வி தொக்கி நிற்கிறது. எதன் அடிப்படையில் வாக்களிப்பது??? கட்சி அடிப்படையிலா?? வேட்பாளர் அடிப்படையிலா?

இந்தியாவை பொறுத்தவரை, மூன்றடுக்கு அரசாங்க முறை உள்ளது. மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் என மூன்று பிரிவுகளின் மூலம் நிர்வாகம் நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்தலும், ஒவ்வொரு வகையான
செயல்பாடுகளினை செய்கிறது. ஆகவே மூன்று தேர்தல்களிலும், ஒரே மாதிரியான கருத்துருவை கொண்டு வாக்களிக்க இயலாது.

இந்திய அரசியலமைப்பு சட்டமே, உள்ளாட்சி அமைப்புகளில், அரசியல் கட்சியை கொண்டு வர கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது. ஆகவே கிராம பஞ்சாயத்திற்கு மட்டும்…. கட்சி சார்ந்த அரசியல் மறுக்கப்படுகிறது. ஆனால், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஒன்றியத்திற்கு கட்சி சார்ந்த அரசியல் நடைபெறுகிறது.

என்னை பொறுத்தவரை கட்சியா??? தனிநபரா? என்றால், அத்தொகுதியின் தனி நபரை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். பிறகு கட்சியின் கொள்கைகள்!!!! தனிநபர் 70 சதவீத முக்கியத்துவமும், கட்சிக்கும் 30 சதவீத முக்கியத்துவமும் அளிக்க வேண்டியுள்ளதாக கருதுகிறேன்.( பல கட்சிகளில், கட்சியின் கொள்கைகளை விட, தனி நபர் சார்ந்த அரசியல் முன்னிறுத்தப்படுகிறது என்பது நகை முரணான விஷயம்)

வேட்பாளரின் அரசியல் பிண்ணனி, தொழில், சமூகத்திற்கு செய்த சேவைகள் ஆகியவற்றை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் அவர் சார்ந்த கட்சியின் கடந்த கால செயல்பாடுகளையும் ஆய்வுக்கு எடுத்து கொள்ள வேண்டும்.

ஏற்கனவே பஞ்சாயத்து தேர்தல், சட்டமன்ற தேர்தல் போன்றவற்றில் வெற்றி பெற்றிருந்தால், வேட்பாளரினை பற்றி சிந்திப்பதற்கு எளிதாக இருக்கும். இல்லையேல், அவர் சார்ந்த கட்சியின் பின்புலத்தை தான் எடுக்க வேண்டியது உள்ளது.

ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு செல்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். உங்கள் தொகுதியின் குறைகளை முன் வைத்து பேச, அவரால் மட்டுமே முடியும்.
கட்சி தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து உங்களது தொகுதிக்கு நல்லது செய்யும் என்பதெல்லாம் மூடநம்பிக்கை!!!

மேலும் பாராளுமன்ற அரசு என்பது கூட்டு பொறுப்புடையது. ஆதலால், ஆளுங்கட்சியின் செயல்பாட்டிற்கு எதிராக, எந்த ஆளுங்கட்சி உறுப்பினரும் கருத்து சொல்ல முடியாது.

ஆகையால்வாக்களிக்கும் முன் சிந்தித்து வாக்களியுங்கள்!!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Monday, April 15, 2019

கஜா புயலும் தேங்காய் விளைச்சலும்


நேற்றைய தினம், தமிழ் புத்தாண்டு என்பதால்…. தேங்காய் வாங்க கடையிற்கு சென்றிருந்தேன். “ என்ன சார்…. தேங்காய் யெல்லாம் வாங்க வந்திருக்கீங்க!!! தேங்காய் விற்ற காலமெல்லாம் போயிற்றாஎன்றார் கடைக்கார அண்ணாச்சி.

மவுனமே பதிலாக, தேங்காயை வாங்கிட்டு வந்தேன்!! ஏன் இந்த மாற்றம்???

ஆம்!! நீங்கள் நினைப்பது உண்மை தான்!!! கஜா புயல் அடித்து, சரியாக ஐந்து மாதங்கள் முடிந்து விட்டது. அது ஏற்படுத்திய பாதிப்புகளே இவையெல்லாம்!!!

எனக்கு நினைவு தெரிந்தவரை, தேங்காயும் வாங்கியதில்லை!!! தேங்காய் எண்ணெயும் வாங்கியதில்லை!!!! மாறாக விற்று தான் இருக்கிறோம்!!! ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ்!!!!

கஜா புயலினால் வீடுகளை இழந்தோம்!!! ஆனால் அதை தாண்டி எராளமான மரங்களை இழந்தோம்!!! கஜா புயலினை தொடர்ந்து, ஒரு வாரத்தில் மழை பெய்தது. அதற்கு பிறகு, வடகிழக்கு பருவ மழை பொய்த்து விட்டது. ஆதலால், இந்த கோடை மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தவே வாய்ப்பிருப்பதாக தோன்றுகிறது.

மார்சு மாத இறுதியிலிருந்தே….. வெயில் தாக்கம் அதிகமாயிற்று!!! பகலில் அனற்காற்று வீச தொடங்கி விட்டது. முந்தைய வருடங்களில், கடலோர மாவட்டம் என்பதால், வெயிலின் கொடுமை அதிகமே இருக்கும். இந்த வருடத்தில், மரங்கள் முழுவதும் வீழ்ந்தபடியாலும், பருவமழை பொய்த்தாலும் நிலைமை மோசமாகி விட்டது.. மரங்களை மறுபடியும் நட்டு வளர்ப்பது கூட மிக கடினம்!!!

ஐந்து மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும், இன்னும் 20 சதவீத வீடுகள் தார்பாலின் பாய்களிலே வேய்ந்து நிற்கிறது. தென்னங்கீற்றின் விலை, விண்ணை முட்டுகிறது. புயலின் வீழ்ந்த மரங்கள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. எங்களது வீட்டில் கூட சவுக்கு, மாமரம் போன்றவைகளை இன்னும் தொடவில்லை!!!

விழுந்த மரங்களை வெட்டி விற்றாலும் போதிய விலை இல்லை!!! ஆதலால் அகற்றவில்லை. ஆனாலும், நெல் விளைச்சல் இந்த வருடம் சிறப்பாக இருந்தது. ஆனாலும் விலை இல்லை!!! ”ஆடு, மாடுகளுக்கு உணவிற்காக புல், தழை கிடைக்காதுஎன்பதால் பெரும்பாலனோர் விற்று விட்டனர். மீதமிருக்கின்ற ஆடு மாடுகளுக்காக வைக்கோல் மற்றும் கடலை தழையின் விலையும் அதிகம்!!!!

முந்திரி, சவுக்கு, தென்னை, மாமரம் போன்றவை நீண்ட கால அடிப்படை பலம் தரக்கூடியவை!!! இவை இப்பகுதி மக்களுக்கு வாழ்வதரமாகவும், சில இடங்களிலும் உபரி வருமானமாகவும் இருக்க கூடியவை!! இதை முழுவதும் இழந்து நிற்கின்றனர்!!!

இயற்கை சீரழவிற்கு பிறகு, மறுகட்டுமானம் செய்வதற்கான திட்டமிடலும், போதிய மூலதனம் இருந்ததால் மட்டுமே முழுவதும் மீள இயலும். ஆனால் அதற்கான முன்னெடுப்புகள் இருப்பதாக தெரியவில்லை. தற்காலிக தீர்வை மட்டுமே பெரும்பாலும் யோசிக்கிறோம்!!! காலம் தான் அதற்கு பதில் சொல்லும்!!!
----------------------------------------------------------
கஜா புயல், தனிப்பட்ட முறையிலும், சமூக ரீதியாக மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான மன தைரியத்தை எனக்கு தந்தது என்றால் மிகையல்ல!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Tuesday, April 2, 2019

வாக்கு அரசியலும் தூய்மை வாத அரசியலும்


வெயில் காலம் தொடங்கி விட்டது. சுட்டெரிக்கும் வெயிலையையும் தாண்டி, அரசியலும் உக்கிரமாகவே காட்சியளிக்கிறது. பல நேரங்களில் சொல்லப்படும் அரசியல் கருத்துகளை நினைக்கும் அழுவதா?” சிரிப்பதா? என்று கூட தெரியவில்லை.

தூய்மை வாத அரசியல் நிலை என்பது சுதந்திரத்திற்கு முன்பே மறைந்து விட்டது. இப்போதும் அரசியலில் தூய்மை வாதமாக புரிந்து கொள்ளும் அரசியல் முரடர்கள் எங்ஙனம் புரிந்து கொள்ளுவது?? அதிலும் கட்சி சார்பானவர்கள் என்றால்... நிலைமை இன்னும் மோசம்!!!

ஒரு கட்சி ஆரம்பிப்பது என்பது கருத்தியலின் அடிப்படையில் தொடங்கலாம்., ஆனால் தொடர்ந்து நிலைத்திருப்பதில் வாக்கு அரசியலே முக்கியம். ஆனால் கொள்கைகளையே முழு முதற் பொருளாக தொண்டதாக ஒவ்வொரு அரசியல் கட்சி முழங்குவதை கண்டால்...... கண்டாகுவதை தடுக்க இயலவில்லை!!!

இந்த தலைவர் ஆட்சி செய்ததாலேயே... இந்தியாவை/தமிழ்நாட்டை முன்னேற்றி விட்டார் என்று ஒரு கூட்டமும், சீரழித்து விட்டார் இன்னொரு கூட்டமும் கூப்பாடு போடுகின்றன. இந்த தலைவர் வந்தால், இந்தியாவை/தமிழ்நாட்டை சொர்க்க பூமியாக மாற்றி விடுவார்கள் என்று கூட்டமும், சுடுகாடாய் மாற்றி விடுவார்கள் என்று இன்னொரு கூட்டமும் ஆர்பரிக்கிறது!!! முடியவில்லை!!! காதுகள் புளித்து போய் விட்டன.

இன்னொரு புறம் பார்த்தால்...... அரசியல் வாதிகள் வானத்தில் இருந்து குதித்து வருவதில்லை. இந்த சமூகத்தில் இருந்து உருவாகுபவர்கள்!!!! தன்னால் ஒரு துரும்பையும் எடுத்து போடாமல், ” இந்த தலைவராக வந்தால் நல்லாயிடும்என்று இன்னொரு மக்கள் கூட்டம் வேற கிளம்பி விடுகிறது.

இன்றைய சூழ்நிலையில்..... அரசியலில் கருத்தியல் என்பதெல்ல்லாம் இரண்டாம் நிலையே!!! கட்சியின் விஸ்வாசி அவ்வளவு!!! கொள்கைகள் என்பதெல்லாம் கனல் நீர்!!! இப்படியிருக்கையில் ஒருவன் கட்சி சார்பானவன் என்றாலே, அவனுடைய சுயத்தை இழந்து கட்சி தலைவனின் அடிமை மனநிலைக்கு வந்து விடுகிறான்!!! அவனிடம் பேசி நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை!!!!

மக்களவை/சட்ட சபை என ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை, இரண்டு மாதம் மட்டும் திருவிழா போல் நடைபெறுகிறது. இதில் ஏன் இவ்வளவு மன கசப்புகள்!!!! ஒவ்வொருக்குமான அரசியல் சார்பு என்று தனி நபர் சுதந்திரம்!!! அடுத்தவரும் அதனையே கடைபிடிக்க வேண்டும் என்பது எவ்விதத்தில் நியாயம்!!

உங்களை ஆள போகிறவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதால் முக்கியமாக எடுத்து கொள்ள வேண்டியது. அந்த தேர்தலில் நமது கடமையை ஒழுங்காக செய்கிறமா??

நடைமுறைக்கு சாத்தியமில்லாத தேர்தல் அறிக்கை, மக்களின் விருப்பத்திற்கு என்று பல்வேறு சலுகைகள்...... இதை பற்றியெல்லாம் சிந்திக்காமல், ஆட்டு மந்தைகளினை போல்...... பொது புத்தியிலே வாக்களிக்கிறோம்!!!

பெரியார் பிறந்த மண் என்று கூவி கொள்பவர் கூட...... பெரியார் சொன்ன கருத்தை கடைபிடிப்பதில்லை. ஏதையும் கேள்வி கேட்காமல் ஒத்து கொள்ளாதீர்கள்!!! நீங்களும் சிந்தியுங்கள்!!!! சமூகத்தினையும் சிந்திக்க வையுங்கள்!!!! இதை தாண்டிய சிறந்த அரசியல் உலகில் ஏதுவுமில்லை!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்