நாளைய தினம்… வாக்களிக்கும் நாள்!!!
ஏற்கனவே
கேட்ட கேள்வி தொக்கி நிற்கிறது.
எதன் அடிப்படையில் வாக்களிப்பது??? கட்சி அடிப்படையிலா?? வேட்பாளர்
அடிப்படையிலா?
இந்தியாவை
பொறுத்தவரை, மூன்றடுக்கு அரசாங்க முறை உள்ளது.
மத்திய அரசு, மாநில அரசு
மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் என மூன்று பிரிவுகளின்
மூலம் நிர்வாகம் நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்தலும், ஒவ்வொரு
வகையான
செயல்பாடுகளினை
செய்கிறது. ஆகவே மூன்று தேர்தல்களிலும்,
ஒரே மாதிரியான கருத்துருவை கொண்டு வாக்களிக்க இயலாது.
இந்திய
அரசியலமைப்பு சட்டமே, உள்ளாட்சி அமைப்புகளில்,
அரசியல் கட்சியை கொண்டு வர
கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது.
ஆகவே கிராம பஞ்சாயத்திற்கு மட்டும்….
கட்சி சார்ந்த அரசியல் மறுக்கப்படுகிறது.
ஆனால், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட
ஒன்றியத்திற்கு கட்சி சார்ந்த அரசியல்
நடைபெறுகிறது.
என்னை பொறுத்தவரை கட்சியா??? தனிநபரா? என்றால், அத்தொகுதியின் தனி நபரை முதலில்
கருத்தில் கொள்ள வேண்டும். பிறகு
கட்சியின் கொள்கைகள்!!!! தனிநபர் 70 சதவீத முக்கியத்துவமும், கட்சிக்கும்
30 சதவீத முக்கியத்துவமும் அளிக்க வேண்டியுள்ளதாக கருதுகிறேன்.(
பல கட்சிகளில், கட்சியின் கொள்கைகளை விட, தனி நபர்
சார்ந்த அரசியல் முன்னிறுத்தப்படுகிறது என்பது நகை
முரணான விஷயம்)
வேட்பாளரின்
அரசியல் பிண்ணனி, தொழில், சமூகத்திற்கு செய்த
சேவைகள் ஆகியவற்றை நன்கு தெரிந்து கொள்ள
வேண்டும். மேலும் அவர் சார்ந்த
கட்சியின் கடந்த கால செயல்பாடுகளையும்
ஆய்வுக்கு எடுத்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே
பஞ்சாயத்து தேர்தல், சட்டமன்ற தேர்தல் போன்றவற்றில் வெற்றி
பெற்றிருந்தால், வேட்பாளரினை பற்றி சிந்திப்பதற்கு எளிதாக
இருக்கும். இல்லையேல், அவர் சார்ந்த கட்சியின்
பின்புலத்தை தான் எடுக்க வேண்டியது
உள்ளது.
ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு
செல்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்.
உங்கள் தொகுதியின் குறைகளை முன் வைத்து
பேச, அவரால் மட்டுமே முடியும்.
கட்சி தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து உங்களது
தொகுதிக்கு நல்லது செய்யும் என்பதெல்லாம்
மூடநம்பிக்கை!!!
மேலும்
பாராளுமன்ற அரசு என்பது கூட்டு
பொறுப்புடையது. ஆதலால், ஆளுங்கட்சியின் செயல்பாட்டிற்கு
எதிராக, எந்த ஆளுங்கட்சி உறுப்பினரும்
கருத்து சொல்ல முடியாது.
ஆகையால்…
வாக்களிக்கும் முன் சிந்தித்து வாக்களியுங்கள்!!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment