Monday, April 22, 2019

வோட்டிங் மிஷின் அரசியல்


ஒரு வழியாக தேர்தல் முடிந்தது. பொதுவாக தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது ஒளிக்கும் குரல்கள் இப்போதே கேட்க தொடங்கி விட்டன. அது என்னவா!?!?!?, “ நாங்கள் வாக்களிக்கும் போது, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே வாக்களிப்பது போல் செட் செய்து வைத்திருக்கிறார்கள்”” என்பதே!!!

தேர்தல் முடிந்த பிறகு, இரண்டு தேர்தல் பணியாளர்களிடமும், பூத்த ஏஜெண்ட்களிடம் சில விவரங்களை சேகரித்தேன். அது உங்கள் பார்வைக்கு-

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மிண்ணுனு வாக்குபதிவு இயந்திரங்கள், மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படுகிறது. அங்கும் குவாலிட்டிக் செக் செய்யப்படுகிறது.

அடுத்ததாக…. மாவட்ட தலைநகரங்களிலும், இதே முறையில் குவாலிட்டி செக் செய்யப்படுகிறது. அடுத்ததாக….. வட்ட அளவில், சில இயந்திரங்களில் 1000 வாக்குகள் வரை இட்டு, மீண்டும் பரிசோதிக்கப்படுகிறது. அதற்கு பிறகு வாக்குசாவடிக்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் மாதிரி வாக்குப்பதிவு சுமார் 6.30 அளவில் நடைபெறுகிறது. பூத் ஏஜெண்டுகளின் முன்னிலையில், 50 வாக்குகள் வரை இடப்பட்டு மீண்டும் ஆய்வு செய்யப்படுகிறது. பிறகு நீக்கம் செய்யப்பட்டு, 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது. இப்போது VVPAT இயந்திரமும் பயன்படுத்த தொடங்கியாகி விட்டது.

மேற்கண்ட நடைமுறையில் எதேனும் குறைப்பாடு இருப்பின், புது இயந்திரம் மாற்றப்படுகிறது. இவ்வளவு நடைமுறைகளினை தாண்டி தான், வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குசாவடியில் பூத் ஏஜெண்டுகளின் பணி முக்கியமானது.

இவ்வாறாக இரண்டு/மூன்று கட்ட ஆய்வுகளுக்கு பின்னரே, வாக்குபதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இயந்திரத்தை மாற்ற இயலுமா? என்றால், தொழிற்நுட்ப ரீதியாக எனக்கு தெரியாது. அப்படியே மாற்ற முடியமானாலும், மேற்கண்ட நடைமுறைகளினை தாண்டி செயல்படுத்துவது வாய்ப்பே இல்லை.

வாக்கு பதிவு இயந்திரத்தில் தவறு இருந்தால் நிரூபியுங்கள் என்று தேர்தல் ஆணையம் அழைத்த போது, எந்த கட்சியும், வாக்குபதிவு இயந்திரத்தை மாற்ற இயலும் என்று நிருபீக்கவில்லை. இன்னும் சொல்ல போனால்…. இரு கட்சிகள் மட்டுமே வந்தது!!!

தோற்கும் போது…… இக்காரணத்தை சொல்லும் கட்சிகள், வெற்றி பெறும் போது வாய் திறப்பது இல்லை. மேலும் மக்களினை ஏமாளிகளாய் நினைத்து கொண்டு, தவறான தகவலை கொடுக்கின்றன !!!!

இதுக்கு பிறகு…. கம்பு சுத்தினால் , பேசுவதற்கு ஒன்றுமில்லை!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment