” ஜெயிக்க வேண்டிய
குதிரையில் பயணிக்க வேண்டும்” என்பது பெரும்பாலான மனிதர்களின் புரிதல்!!!!
இது தேர்தல்!!!! சூதாட்டம் கிடையாது!!
ஜெயிக்கிற வேட்பாளருக்கு
ஒட்டு போட்டு ஜெயிக்க வைக்க ஆசைப்படுவதில் தவறில்லை. “நான் வாக்களித்த வேட்பாளர் ஜெயித்து
விட்டார் “ என்று சுயதம்பட்டம் அடித்து கொள்ள தான் முடியும்.
மாறாக உங்கள் சுயத்தை
இழந்து விடுகிறீர்கள். உங்களது உரிமை, மற்றொருவருக்கும் விட்டு கொடுத்து விட்டு....
அடிமை மனநிலைக்கு வந்து விடுகிறீர்கள்.
நீங்கள் யாருக்கு
விரும்புகிறீர்களே வாக்களியுங்கள்!!! அது நோட்டாவாக இருக்கலாம்!! அங்கிகரிக்கப்பட்ட
கட்சியின் வேட்பாளராக இருக்கலாம்!!!! சுயட்சை வேட்பாளராக இருக்கலாம்!!!
”
சுயேட்சை/ நோட்டாவிற்கு/ சின்ன கட்சிக்கு வாக்களித்து , உங்களது வாக்குகளை வீணாக்காதீர்கள்
“ என்று பொய் பிரச்சாரம் தொடர்ந்து பரப்படுகிறது. உங்களை மூளை சலவை செய்யும் ஆதிக்க
மனநிலை!!!
”சில
முக்கியமான பெரிய கட்சிகளுக்கு மட்டும் வாக்களித்து வாக்குகளை உபயோகமாக மாற்றுங்கள்” என்று கூறுவர்கள்.
சில கட்சிகளுக்கு
மட்டும் தான் வாக்களிக்க வேண்டும் என்றால், இந்தியா ஏதற்கு பலகட்சி ஆட்சி முறையை பின்பற்ற
வேண்டும். மாறாக இருகட்சி ஆட்சி முறை மாற்றி விடலாமே!!!
வாக்களிப்பது உங்கள்
உரிமை!!! நம்முடைய பிரதிநிதியை தேர்ந்தெடுப்பது நம கடமையும் கூட!!! இன்றைய நம்முடைய
ஒரு வாக்கு, நாளைய சமூகத்தினை வளர்ப்பதாக இருக்க வேண்டும்!!! நம்முடைய ஒரு வாக்கு,
என்ன செய்து விட போகிறது???? என்று எண்ண வேண்டாம்.
சிந்தித்து வாக்களிப்போம்!!!
ஜனநாயகம் காப்போம்!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment