வெயில்
காலம் தொடங்கி விட்டது. சுட்டெரிக்கும்
வெயிலையையும் தாண்டி, அரசியலும் உக்கிரமாகவே
காட்சியளிக்கிறது. பல நேரங்களில் சொல்லப்படும்
அரசியல் கருத்துகளை நினைக்கும் அழுவதா?” சிரிப்பதா? என்று கூட தெரியவில்லை.
தூய்மை
வாத அரசியல் நிலை என்பது
சுதந்திரத்திற்கு முன்பே மறைந்து விட்டது.
இப்போதும் அரசியலில் தூய்மை வாதமாக புரிந்து
கொள்ளும் அரசியல் முரடர்கள் எங்ஙனம்
புரிந்து கொள்ளுவது?? அதிலும் கட்சி சார்பானவர்கள்
என்றால்... நிலைமை இன்னும் மோசம்!!!
ஒரு கட்சி ஆரம்பிப்பது என்பது
கருத்தியலின் அடிப்படையில் தொடங்கலாம்., ஆனால் தொடர்ந்து நிலைத்திருப்பதில்
வாக்கு அரசியலே முக்கியம். ஆனால்
கொள்கைகளையே முழு முதற் பொருளாக
தொண்டதாக ஒவ்வொரு அரசியல் கட்சி
முழங்குவதை கண்டால்...... கண்டாகுவதை தடுக்க இயலவில்லை!!!
இந்த தலைவர் ஆட்சி செய்ததாலேயே...
இந்தியாவை/தமிழ்நாட்டை முன்னேற்றி விட்டார் என்று ஒரு கூட்டமும்,
சீரழித்து விட்டார் இன்னொரு கூட்டமும் கூப்பாடு
போடுகின்றன. இந்த தலைவர் வந்தால்,
இந்தியாவை/தமிழ்நாட்டை சொர்க்க பூமியாக மாற்றி
விடுவார்கள் என்று கூட்டமும், சுடுகாடாய்
மாற்றி விடுவார்கள் என்று இன்னொரு கூட்டமும்
ஆர்பரிக்கிறது!!! முடியவில்லை!!! காதுகள் புளித்து போய்
விட்டன.
இன்னொரு
புறம் பார்த்தால்...... அரசியல் வாதிகள் வானத்தில்
இருந்து குதித்து வருவதில்லை. இந்த சமூகத்தில் இருந்து
உருவாகுபவர்கள்!!!! தன்னால் ஒரு துரும்பையும்
எடுத்து போடாமல், ” இந்த தலைவராக வந்தால்
நல்லாயிடும் “ என்று இன்னொரு மக்கள்
கூட்டம் வேற கிளம்பி விடுகிறது.
இன்றைய
சூழ்நிலையில்..... அரசியலில் கருத்தியல் என்பதெல்ல்லாம் இரண்டாம் நிலையே!!! கட்சியின் விஸ்வாசி அவ்வளவு!!! கொள்கைகள் என்பதெல்லாம் கனல் நீர்!!! இப்படியிருக்கையில்
ஒருவன் கட்சி சார்பானவன் என்றாலே,
அவனுடைய சுயத்தை இழந்து கட்சி
தலைவனின் அடிமை மனநிலைக்கு வந்து
விடுகிறான்!!! அவனிடம் பேசி நேரத்தை
வீணாக்க வேண்டியதில்லை!!!!
மக்களவை/சட்ட சபை என
ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை, இரண்டு மாதம் மட்டும்
திருவிழா போல் நடைபெறுகிறது. இதில்
ஏன் இவ்வளவு மன கசப்புகள்!!!!
ஒவ்வொருக்குமான அரசியல் சார்பு என்று
தனி நபர் சுதந்திரம்!!! அடுத்தவரும்
அதனையே கடைபிடிக்க வேண்டும் என்பது எவ்விதத்தில் நியாயம்!!
உங்களை
ஆள போகிறவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதால் முக்கியமாக எடுத்து கொள்ள வேண்டியது.
அந்த தேர்தலில் நமது கடமையை ஒழுங்காக
செய்கிறமா??
நடைமுறைக்கு
சாத்தியமில்லாத தேர்தல் அறிக்கை, மக்களின்
விருப்பத்திற்கு என்று பல்வேறு சலுகைகள்......
இதை பற்றியெல்லாம் சிந்திக்காமல், ஆட்டு மந்தைகளினை போல்......
பொது புத்தியிலே வாக்களிக்கிறோம்!!!
பெரியார்
பிறந்த மண் என்று கூவி
கொள்பவர் கூட...... பெரியார் சொன்ன கருத்தை கடைபிடிப்பதில்லை.
ஏதையும் கேள்வி கேட்காமல் ஒத்து
கொள்ளாதீர்கள்!!! நீங்களும் சிந்தியுங்கள்!!!! சமூகத்தினையும் சிந்திக்க வையுங்கள்!!!! இதை தாண்டிய சிறந்த
அரசியல் உலகில் ஏதுவுமில்லை!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment