Thursday, June 29, 2017

பிக்பாஸ் - எதிர்வினை

நேற்றைய பதிவுக்கு பிறகு…. பிக்பாஸ் பற்றிய எழுத வேண்டாம் என்று நினைந்திருந்தேன். ஆனால் காலம் விடவில்லை.

ஒரு நிகழ்ச்சியின் மீதான எந்த (நேர்மறை/எதிர்மறை) விமர்சனமாக இருந்தாலும், அது நிகழ்ச்சியின் உயிர்ப்பிற்கு வழிவகுக்குமே தவிர…… அதன் மீதான ஆர்வத்தை குறைக்காது. நம்முடைய தொடர்ந்த எதிர்மறை விமர்சனங்களால், அந்நிகழ்ச்சியிற்கு காசில்லாமல் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறோம்!!! (நானும் அதை தான் செய்கிறேன்!?!?!?)

முகநூல் மற்றும் கட்செவி வழியே வரும் தகவல்களை பார்க்கும் போது….. சில விளக்கங்களை சொல்லலாம் என்று நினைக்கிறேன்(?)

பிக்பாஸ் என்பது உலகம் முழுவதும் பிரபலமான நிகழ்ச்சி தொடர்!! ஷில்பா ஷெட்டியும், பிக்பாஸ் மூலமே உலகளவில் பிரபலமானவர்!!! இப்போது வட இந்தியாவை தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது!!!

100 நாட்களெல்லாம் தங்க வைக்க மாட்டார் என்றும், 15 நாட்களிலே மொத்த படப்பிடிப்பையும் முடித்து விடுவார்கள் என்று சொல்வதெல்லாம் நிச்சயமாக நம்ப கூடியதாக இல்லை. 100 நாட்களும் படப்பிடிப்பு நடக்கும். நவீன தகவல் தொழிற்நுட்ப காலத்தில், 15 நாட்கள் மட்டுமே நடத்தினால், தகவல் எளிதாக கசிந்து விடும்!!!! அது சாத்தியமற்றது

மேலும்அனைவரும் ஏற்கனவே எழுதி கொடுத்த ஸ்க்ரிட் படியே நடிக்கிறார்கள் என்பது பொய் என்றே தோன்றுகிறது. சில இடங்களில் நடிக்க வைக்கப்படலாம். ஆனால் முற்றிலும் அரங்கேறும் நாடகம் என்பதில் சாத்தியமில்லை!!!

ஏன் முழுவதும் லைவ்வாக விட வேண்டியது தானே??? என்றொரு கேள்வியையும் பார்த்தேன். முழுவதும் லைவ்வாக போட்டால், ஒரு நாள் கூட நீங்கள் காண மாட்டீர்கள்!!!! அதில் சிலவை மட்டுமே சுவராசியமானவை!! அதை மட்டும் கத்தரித்து ஒளிப்பரப்பவதன் மூலம், மக்களின் ஈர்ப்பை பெற இயலும்

8 மணி நேரம் நீயா நானா படப்பிடிப்பு நடந்தாலும், ஷோ வருவது என்னவோ 40 நிமிடங்களே!!! இரண்டு மணி நேர திரைப்படங்களில் கூட, ” படம் மெதுவாக செல்கிறது. இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்என்று சொல்கிறவர்கள், 24 மணி நேரமும் ஒளிப்பரப்பினால் பார்ப்பார்களா என்ன????

திரை நட்சத்திரங்கள் 15 பேருக்கு பதிலாக , 15 விவசாயிகள் கூப்பிட்டு 100 விவசாயம் பண்ண சொல்லியிருந்தால், விவசாயிகளின் கஷ்டங்கள் புரிந்திருக்கும் என்றொரு தகவல் பார்த்தோம்!!!!

விவசாயிகளின் உண்மையான பிரச்சனையை புரிந்தவர்கள் எத்தனை பேர்??? விவசாய பிரச்சனைகளை பற்றிய போராட்டம் நடந்தால் கூட, கண்டு கொள்ளாதவர்கள் நம்மவர்கள்!!! அப்படி இருக்கும் போது, விவசாயம் செய்தால் மட்டும், நாம் பார்த்து விட்டு அஹா!!! ஒஹோ!! என்று புகழ் பாடுவமோ என்ன!?!? நிச்சயமாக கிடையாது!!!

முகநூலிலும் விவாத களங்களிலும் வீர வசனம் பேசுபவர்களில், எத்தனை பேர் விவசாய அனுபவம் உண்டு ?!?!?!?

விஜய் டிவி என்பது பொழுது போக்கு சேனல்!! அப்படியிருக்கையில் மக்களுக்கு சுவரசியம் தரக்கூடிய, உணர்ச்சி பெருக்கை ஏற்படுத்த கூடிய நிகழ்ச்சியையே வழங்க முயற்சிக்கும்!!! அந்த வகையில் பிக்பாஸும் ஒன்றே!!! விஜய் டிவியும் ஒருவகையில் வியாபார நிறுவனமே!! அது பணம் சாம்பதிக்க தான் முயற்சிக்கும்!!! அதை சமூக நல முன்னேற்றம் இயங்க வேண்டும் என்று எண்ணுவது எவ்வகையில் நியாயமே!!!

உண்மையில் சமூக அக்கறையோடு இயங்க வேண்டியவர்களே, சமூக நலனை பற்றி கவலைப்படாமல் இருக்கும் போது, பண முதலாளிகளிடம் மட்டும் எதிர்ப்பார்த்தல் எவ்வகையில் நியாயமே!?!?!?

நாம் அனைவரும் எதோ ஒரு தொழிலை செய்து கொண்டிருக்கிறோம்!!! நம்மிடம் வரும் வாடிக்கையாளர்களிடமிருந்து, எவ்வகையில் பணம் சம்பாதிக்கலாம் என்று தான் யோசித்து கொண்டிருக்கிறோம்!!!! அதில் வாடிக்கையாளர்களின் நலனை பற்றி பெரிதாக சிந்தித்துகிறோமா??? அப்படி இயங்கினால், தலை வணங்குகிறோம்!!!

நம்மிடம் இல்லாத குணத்தை, பண முதலையான விஜய் டிவி மட்டும் எதிர்பார்த்தல் எத்தகைய மனநிலையோ!?!?!?

நம்மிடம் உள்ள குறையை மறைக்க, மற்றவரினை குற்றவாளியாக மாற்றி, அவரை தேச துரோகியாக கண்பிக்க முயற்சிக்கிறோம்!!! நாம் பொதுநலவாதியாக இருந்தால், மற்ற சுயநலவாதிகள் மீது கேட்டு கேட்கலாம்!!! ஆனால் நாமே ………………………!?!?!?

ஏமாற்றும் நிகழ்வில், எமாற்றுக்காரனை போலவே ஏமாற்றுப்படுவனின் ஏமாளித்தனம் முக்கியமானதே!!! ஏமாற்றுக்காரனை மட்டும் குற்றவாளியாகவும், ஏமாற்றப்படுவனின் ஏமாளித்தனத்தை புனித பட்டம் மட்டும் ஏனோ!?!?!? புரியவில்லை!?!?!?!?

#பின்குறிப்பு - மேற்கண்ட அனைத்தையும் படித்தவுடன்நான் விஜய் டிவியை ஆதரிப்பதாக நினைத்தால் நான் பொறுப்பாக முடியாது; நம்மை நோக்கிய பற்றிய சுயப்பரிசோதனை குறித்த கேள்வி கணைகளின் தொகுப்பே!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Wednesday, June 28, 2017

பிக்பாஸ்- ஒரு சமூக கண்ணோட்டம்

நேற்று …. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை பார்த்தேன். சிறிது நேரத்திலேயே…. அந்நிகழ்ச்சியின் மீது ஈர்ப்பு குறைந்து விட்டது.

அடுத்தவரின் தனிப்பட்ட விஷயங்களை தெரிந்து கொள்வதில்…. எனக்கு எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. மாறாக, அடுத்தவரின் வீட்டில் நடக்கும் விஷயங்களை பற்றி பேசுவதை பெரிய களிப்பாக எண்ணுபவர்களுக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சி நிச்சயமாக ஈர்ப்பை தரும்.

மற்றவரை திட்டுவதன் மூலம், “ நான் நல்லவன்என்ற பிம்பத்தை ஏற்படுத்துவது முயல்வது மனித மனதின் இயல்பு. அதனை வெளிப்படையாக எடுத்து சொல்ல இயம்புகிறது இந்நிகழ்ச்சி!!!

மேலும் மற்றவரின் தனிப்பட்ட விஷயங்களை தெரிந்து கொள்வதை, வாழ்க்கையை களிப்பாகவே வைத்திருக்கும் சோமபானமாக மனம் நினைக்கிறது. அதற்கு ஏற்றாற் போல் தீனியும்… .காலங் காலமாக கிடைத்து கொண்டு தான் இருக்கிறது. பழங்காலங்களில் நாட்டுபுற கதைகளில் தொடங்கி, இன்றைய நவீன சிறு கதை வரை நீளும்.

ஒலி மற்றும் ஒளி வளர்ச்சிக்கு பிறகு, திரைப்படங்களும், டிவி சீரியல்களும், அவ்வெற்றிடத்தை நிரப்பின. மேற்கண்ட அனைத்திலும் புனைவு கலந்த இருப்பதால், அடுத்த நிலையான நிஜ வாழ்க்கை பயணத்தை நோக்கி பயணப்பட்டது மனம். ” சொல்வதெல்லாம் உண்மைஎன்ற நிகழ்ச்சியின் வெற்றி, மனித மன கிலேசத்தை தெளிவாக எடுத்து சொன்னது.

தமிழுக்கு தமிழனுக்கும் கலைக்குமான தொடர்பு என்பது அளவிட முடியாதது. அக்கலை பயண அன்பில், உச்சப்பட்ச நிலையாக திரைநட்சத்திரங்கள் ஜொலிக்கின்றனர். அதனால் தான், இன்றும் வார பத்திரிக்கைகள் பெரும்பாதியை திரை நட்சத்திரங்களை வைத்தே ஒட்டி கொண்டிருக்கிறார். திரைநட்சத்திரங்களின் கிசுகிசுக்கள் அறிந்து கொள்வதும், மேற்கண்ட மனகிலெசத்தின் வெளிப்பாடே!!!!

என்னுடைய புரிதலில்… “சொல்வதெல்லாம் உண்மைநிகழ்ச்சியின் அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சியேபிக்பாஸ் என்று அடித்து சொல்வேன்!!!!
பிக்பாஸ் நிகழ்ச்சியை, யாரும் பார்க்க வேண்டும் என்று சொல்ல மாட்டேன்; சொல்லவும் முடியாது். மேற்கண்ட உளவியலை தெரிந்து கொண்டு பாருங்கள்!!!!

நவீன உலகம் தகவல் தொழிற்நுட்பத்தால் பிணைக்கப்பட்டுள்ள வேளையில், தகவல் தொடர்பு சாதனங்களற்று வாழ்வது என்பது சற்று கடினமானது. அப்படி வாழ்வோமானால், சுற்றத்தாருடன் பேசு வேண்டிய கட்டாயம் ஏற்படும்

அப்படி பேசும் போது…. நிச்சயமாக கோபம், வெறுப்பு, அழுகை, மகிழ்ச்சி, வெகுளித்தனம், முரட்டுத்தனம் போன்ற வெளிப்படும். இத்தகைய உணர்ச்சி குவியலை வெளிக்கொணர வைப்பதன் மூலம், பொதுஜனத்தை எளிதாக ஈர்க்க இயலும். இதுவே பிக்பாஸின் வெற்றி மந்திரம்!!!

தமிழ் ஊடகங்களில், நவீனத்துவமாக காட்டி கொள்ளும் விஜய் டிவி, உணர்ச்சிகளை வைத்தே, பல தருணங்களில் பணம் பார்க்கிறது. அதில் பிக்பாஸும் ஒரு பண களமே!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Saturday, June 24, 2017

சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?????

புதிதாக வாங்கிய பைக்கை பதிவு செய்வதற்காக.... நாகப்பட்டிணம் சென்றிருந்தேன். என்னுடன் தங்கையும் வந்திருந்தார்...

வீடு திரும்பியவுடன் தங்கை, “ உடம்பு ரொம்ப வலியாக உள்ளதுஎன்றார்.
உடனே,” உட்கார்ந்த வந்த உனக்கு இப்படி வலிச்சா.... பைக் ஒட்டிட்டு வந்த எனக்கு எப்படி வலிக்கும்என்றேன்.

நீ பைக் ஒட்டிட்டு வந்தா!!! அதனால் வலிக்காது... ஆனால் எவ்வளவு நேரமும் சும்மா உட்கார்ந்து வர்றது... எனக்கும் தான் அதிகமாக வலிக்கும்
அம்மாவும், அதே கருத்தை முன் வைக்கிறார்....

----------------------------------------------------------------------------

எனக்கு சற்று குழப்பமாக தோன்றியது. சற்று சிந்தித்து பார்த்தால், அவர்களின் பேச்சில் உண்மை இருந்தது.

வண்டியை ஒட்டுபவருக்கு கண், காது, கை கால் என சர்வ அங்கங்களும் வேலை செய்யும். ஆனால் பின்னால் உட்கார்ந்து வருவபவர்களுக்கு வேலை இல்லையென்பதால், அலுப்பு தோன்ற ஆரம்பிக்கும்... அதுவே காலம் கடக்கையில் வலியாக மாறி விடுகிறது...

ஒட்டுபவருக்கும் உடல் வலி என்பது உண்டாகும். ஆனால் மற்ற செயல்களால், அதன் தன்மை மறைக்கப்பட்டு விடும். அவ்வளவு தான் வித்தியாசம்!!!!!

நாமும்...... பின்னால் அமர்ந்து செல்லும் போதும், நீண்ட தூர பேருந்து பயணங்களிலும் இத்தருணத்தை கடந்து சென்றிருப்போம்!!!!

மேற்கண்ட நிகழ்வுகளிலிருந்து.... ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளலலாம். நாம் செய்யப்படுகின்ற செயல்களால் மட்டுமே, எப்போதுமே துன்பங்களை கணக்கில் எடுத்து கொள்ளப்படுவதில்லை. உடலினை தாண்டி, மனமும் துன்பத்தையும் வேலையின் தன்மையை முடிவு செய்கிறது.

வடிவேல் சொல்வது போல், சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா????? ஏதேனும் வேலை செய்வதனை காட்டிலும்..... வேலை செய்யாமல் இருப்பது கடினம்... அதே மனநிலையை வண்டி ஒட்டுவதில் ஒப்பிடலாம். வண்டியை ஒட்டுவதினை காட்டிலும், பின்னால் உட்கார்ந்து வருவது கஷ்டம் தான் போலும்!!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Tuesday, June 20, 2017

இடம்பெயர்வு வரலாறும் அரசியலும்

உயிரினங்களில் இடம் பெயர்வு என்பது இயற்கையானது. பறவைகள் வலசை போவதும், மீன்கள் நிரோட்டத்திற்கு ஏற்ப மாறுவதும், காட்டு விலங்குகள் உணவை தேடி, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வழக்கம்!!!

மனிதன்..... பரிணாம வளர்ச்சி படிநிலையில், உச்சமாக இருக்கிறான். அதோடு மட்டுமில்லாமல் பகுத்தறிவையும், சிறிதும் பெற்று விட்டான். ஆதலால்.... வெகு காலத்திற்கு முன்பே, உணவிற்காகவும் உறைவிடத்திற்காகவும் இடப்பெயர்வை தவிர்த்து, ஒரிடத்தில் நிலைய தங்க ஆரம்பித்து விட்டான்!!!!
இவ்வாறு புதிய வளர்ச்சி நிலையினை... நாம் நாகரீக வளர்ச்சி என்று கூறுகிறோம். அவ்வளவு தான்!!!

மரபணு கூற்றப்படி.... ஆப்பிரிக்கா கண்டத்தில் முதன்முதலில் மனிதன் தோன்றி இருக்கலாம் என்கிறது அறிவியல் உலகம்!!! அவ்விடத்திலிருந்தே... உலகம் முழுவதும் மக்கள் பரவி இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு!!! (இதிலும் பிற்காலத்தில் மாற்று கருத்துகள் வரலாம்).

அவ்வாறு இருக்கையில், தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவரும் தமிழ்நாட்டின் பூர்வ குடிமக்கள் என்று அறுதியுட்டு கூற முடியாது.

ஆரியம், திராவிடம் என்ற கருத்துகள் வைத்து சண்டை போட முடியுமே தவிர.... எந்தவொரு காலத்தில் தெளிவான முடிவு வருவது என்பது மிக கடினமான நிகழ்வே!!! அதை வைத்து அரசியல் செய்வது மட்டும் சாத்தியம்!!!

இன்றைய நிலையில், சென்னையில் வாசிக்கும் பல லெட்சம் மக்கள் வெளிமாவட்டத்தினையே சேர்ந்தவர்களே!!! இன்னும் 5 தலைமுறைகள் செல்லுகையில், அவர்கள் அனைவரும் சென்னை வாசிகளாகவே அறியப்படுவர். அதாவது 100-150 வருடங்களின் உங்களின் பூர்விகம் மண்ணே... எளிதில் மறக்கடிப்படும் நிலை வந்து விடும்!!!

அப்படியிருக்கையில் 2000-3000 வருடங்களுக்கு முன்னால் நடந்ததை...... பூர்விகத்தை தேடுவது எவ்வகையில் சாத்தியமோ???

கார்பன் வயதுகணிப்பு, கீழடி, பூம்புகார் போன்று பல இடங்களில் ஆய்வு செய்வதன் மூலம், பழங்கால கல்வெட்டுகளை ஆய்வு செய்வதன் மூலம், சங்க கால நூல்களை ஆய்வின் மூலம் மரபணு ஜீன்களை ஆய்வதன் மூலம்..... பூர்விகத்தை யூகிக்க முடியுமே தவிர.... அறுதியிட்டு கூற இயலாது.

முதலில் ..நம்முடைய.. முந்திய 5 -10 தலைமுறைகளை தோண்டி எடுக்க முயலுங்கள்!!! அதுவே, நம்முடைய வரலாற்றையாவது தெரிந்து கொள்ள இயலும்!!! அதை விட்டு ................

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



Thursday, June 15, 2017

பிரச்சனைகளுக்கு பின்நவீனத்துவமே தீர்வு

”……….. இவர் ஆட்சியை பிடித்தால், இந்தியா/தமிழ்நாடு வல்லரசு/நல்லரசாக மாறி விடும்………..”

அரசாங்க வேலை கிடைச்சா, வாழ்க்கை இனிமையாகி விடும்.”

இந்த டிகிரி படிச்சா…… வேலை கன்பார்ம்……”

இந்த கோட்சிங் செண்டர் ல படிச்சா.. வேலை கிடைச்சுடும்.. “

இதுமாதிரியான பெண்ணை திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கை சுபிஷ்மாக மாறி விடும்.”

இந்த ஸ்கூல படிச்சா ஸ்டேட் பர்ஸ்ட் வந்திடலாம்.”

இந்த மருந்த சாப்பிட்டா, எல்லா நோய்களும் குணமாகி விடும்…”

இப்படியாக பட்டியல் நீண்டு செல்லும்.

மேற்கண்ட அனைத்தும் புரிதல்களும் படு அபத்தமானவை. ஒரு பிரச்சனை குறித்து, தெளிவான புரிதல் இல்லாதவர்களே !!!!!….. இது மாதிரி மையப்படுத்தப்பட்ட, ஒற்றை தீர்வை நோக்கி பயணிப்பவர்கள்.

எந்த பிரச்சனைக்கும் ஒற்றை காரணி காரணமாக இருக்காது; பல்வேறு காரணிகளால் ஆக்கப்பட்டதே பிரச்சனைகள். ஒற்றை காரணி பிரச்சனையாக இருந்தால், ஒற்றை தீர்வு விடையாக அமையும். அதனால், பின்நவீத்துவ ரீதியிலான பன்மைப்படுத்தப்பட்ட தீர்வுகளே விடையாக இருக்க முடியும்.

மேற்கண்டவற்றில் எடுத்துகாட்டாக ////“ இந்த கோட்சிங் செண்டர் ல படிச்சா.. வேலை கிடைச்சுடும்.. “////

ஒரு கோட்சிங் செண்டரின் பணி என்பது பாடம் குறித்த புரிதலை ஏற்படுத்துவது, தேர்வை பயமில்லமால் அணுக மாதிரி தேர்வுகளை வைப்பது மற்றும் பாட குறிப்புகளை அளிப்பதும் ஆகும்.

மேற்கண்ட அனைத்தும் பயிற்சி நிறுவனம் அளித்து விட்டால் மட்டும் போதுமா???? அம்மாணவன் படிக்க வேண்டுடாமா???

ஒருவன் தேர்வில் வெற்றி பெறுவதற்கு, பயிற்சி நிறுவனத்தின் பங்கு 50 சதவீதம் என்றால், மீதி 50 சதவீதம் பங்கு மாணவனை சேரும். இதில் இல்லாமல், தேர்வின் கடின தன்மை, தேர்வை பயம் இல்லாமல் அணுகுதல், உளவியல் அழுத்தம், வாழ்க்கையை பற்றிய பயம் என பல்வகை காரணிகள் தேர்வின் வெற்றியை தீர்மானிக்கின்றன. ஏன் மற்ற கோட்சிங் செண்டர் சென்றவர்கள் வெற்றி பெறவில்லையா???

---------------------------------------------------------------------------------------------

இது மாதிரியே .50/100 ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்ட தீர்வு வழிமுறைகள், இன்றைக்கு பொருந்த கூடியவை என்று வாதிடவதும் அபத்தமானது. அம்பேத்கர், காந்தி, ஸ்டாலின் மற்றும் காந்தி என பல தலைவர்கள் முன் வைத்த கருத்துகள் பெரும்பாலும் ,சூழ்நிலையை பொறுத்தது. அக்கருத்துகள் 1000 ஆண்டுகள் கடந்தாலும் சிறந்தவை என வாதிடவதும் தவறு!!

அப்போது இருந்த பிரச்சனைகலின் தன்மைகள் வெவ்வேறானவை. அதே பிரச்சனை இன்று தொடர்ந்தாலும், காரணிகள் வெவ்வேறானவை. அதை விடுத்து எல்லாவற்றிற்கு சர்வரோக நிவராணி என்பது எத்தகைய புரிதலோ!!!!

காரணத்தை ஆராயமால், பொத்தாம் பொதுவாக எப்பிரச்சனையும் தீர்க்க இயலாது. இவ்வாறு மையப்படுத்த நவீனத்துவம் தீர்வை விடுத்து, பன்மைப்படுத்தப்பட்ட பின்நவீனத்துவத்தினால் விடையை தேடுவோம்!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்