Monday, June 5, 2017

வெற்றியின் அளவுகோல் தீர்மானம்

உண்மையிலேயே, வெற்றி/தோல்வி என்பதை, எதை வைத்து அங்கிகரிக்கிறோம் ? என்று கேள்வி பல நேரங்களில் என்னுள் எழுவது உண்டு.
அக மற்றும் புற சூழ்நிலைகள் ஆகிய இரண்டுமே, இதில் முக்கியத்துவம் பெறுகிறது.

பெரும்பாலும்... புற சூழ்நிலை சார்ந்த வெற்றிகளை மட்டுமே, நாம் உணர்ந்திருப்போம்!!! அதாவது, பலரோடு ஒப்பிட்டு, ஒருவனுடைய வெற்றியை நிர்ணயம் செய்கிறோம்.

தேர்வு எழுகின்ற 100 பேரில், இருபது நபர் மட்டுமே வெற்றி பெறுவதாக எடுத்து கொள்ளலாம். ஒரே துறை சார்ந்த இருவரில், ஒருவரின் சம்பளத்தை கொண்டும், புகழ் கொண்டும் வெற்றி/தோல்வியை தீர்மானிக்கிறோம்.
இதையெல்லாம் தாண்டி..... அக சூழ்நிலையால்/மனதினால் தீர்மானிக்கப்படும் வெற்றி/தோல்வியை, எப்போதும் கண்டு கொள்ளப்படுவதில்லை.

ஒவ்வொரு தனிமனிதனுக்கும், தான் செய்த செயலின் மீதான நம்பிக்கை இருக்கும். அந்த செயலால் வெற்றி நடந்து விட்டால், அதில் சந்தோஷத்தின் அளவு குறைவாகவே இருக்கும். மாறாக தோல்வி அடைந்து விட்டால், வருத்தத்தின் அளவு அளவிட முடியாது.

அதனையே நேர்மாறாக எடுத்து கொள்வோம். எதிர்பாராமல் கிடைக்கும் வெற்றி, அதீத சந்தோஷத்தை தரலாம். ஆனால், பெரியளவு வருத்தத்தை தந்து விடாது.

இதனை தாண்டி நல்ல நேரம்/கெட்ட நேரம், இறைவனின் ஆசிர்வாதம், அதிர்ஷ்டம் என்ற வரையறைகளும், இதனுள் சேர்ந்தே வியாபிக்கிறது.
மொத்தத்தில், ஒவ்வொரு வெற்றி/தோல்வியின் அளவுகோல்களில், அக சூழ்நிலையின் பாதிப்பை மறந்து விட கூடாது!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment