Friday, June 9, 2017

புத்தக மயக்கம்!!!!

தெரிந்த உறவினர் ஒருவர், 4000 ரூபாய் மதிப்புள்ள குர்தா ஒன்றை திருமண வரவேற்பிற்காக வாங்கினார். அது போல் 90,000 மதிப்புள்ள ஸ்மார்ட் டீவி ஒன்றும் வாங்கினார். “ ஏன் இவ்வளவு செலவு செய்து வாங்கிறீர்கள்என்று கேட்டேன். “பார்த்தவுடனே பிடித்து யோய் விட்டது…. யோசிக்கமால் வாங்கி விட்டேன். வாங்கிய பிறகு தான், ஏன் வாங்கினேன் என்று யோசித்தேன்என்றார்.

வாங்குவது அவருடைய தனிப்பட்ட விருப்பம்….. அதில் கேள்வி கேட்க வேண்டிய அவசியமில்லை.. “ என்பது உண்மை தான் !!! இருந்த போதிலும், பொருளாதார நிலையை வைத்தே…. அந்த கேள்வியை கேட்க வேண்டிய அவசியம் வந்தது.

இவ்வாறாகசிறிதும் சிந்திக்காமல், மனம் சொல்வதை அப்படியே செய்வோம். ஒவ்வொருவரும் இந்நிலையை கடந்தே வந்திருப்போம். இவையெல்லாம் முழுவதும் தவறென்றும் சொல்ல முடியாது. ஆனால் …. அதே தவற்றை திரும்ப திரும்ப செய்வது தான் பிரச்சனை!!!

எனக்கும் அப்படியான நிகழ்வென்று நடந்தது. இரு தினங்களுக்கு முன் வர்த்தமானன் பதிப்பகத்திலிருந்து சில புத்தகங்களுக்கு சலுகை விலை அறிவித்திருந்தார். எதை பற்றி யோசிக்காமல், சட்டென்று செல்போனை எடுத்து, சுமார் 1500 ரூபாயிற்கு புத்தகத்தை ஆர்டர் கொடுத்து விட்டேன்.

புத்தகங்கள் வாங்குவது தவறான விஷயமா?? என்று நீங்கள் யோசிக்கலாம். புத்தக வாசிப்பு மற்றும் புத்தகத்தை வாங்குதல் என்பது நிச்சயமாக தவறு இல்லை தான்!!! இருந்த போதிலும், வாங்கிய புத்தகங்களை படிக்காமல்புதிய புதியதாக வாங்கி அலமாரிகளை நிரப்பி வைப்பதால் பயன் ஏதோ???

கடந்த ஒரு வருடத்தில் மட்டும், சுமார் பதினைந்தாயிரம் ரூபாயிற்கு புத்தகங்களை வாங்கி இருப்பேன். அதில் பாதி புத்தகங்களை மட்டும் மட்டும் படித்திருப்பேன். சில புத்தகங்களை பாதி மற்றும் கால்வாசி நிலையிலேயே தொக்கி நிற்கிறது.

நானும்… “ இருக்கின்ற புத்தகங்களை படிக்காமல், புதிய புத்தகங்களை வாங்க கூடாதுஎன்று எத்தனையே முறை யோசித்திருக்கிறேன். ஆனாலும், நல்ல புத்தகங்களை பார்க்கும் போது, அதனை வாங்குவது என்பது தவிர்க்க முடியாமல் போகிறது. ஸ்டாப் சேகரித்தலை போல, புத்தகங்கள் வாங்கி சேகரித்து கொண்டிருக்கிறேன்..

துணிகள் வாங்கும் போதும், வீட்டிற்கு தேவையான உபயோக பொருட்கள் வாங்கும் போதும், யோசித்தே பொருட்களை வாங்குவேன். ஆனால்,. புத்தகம் வாங்கும் போது மட்டும் இல்லாமல் போய் விடுகிறது!!!

காதல் மயக்கத்தில் எதுவும் தெரியாமல் இருப்பது போல், புத்தக மயக்கத்தில் எதுவும் தெரியமால் போய் விடுகிறது. மது மட்டும் தான் போதையா!!! ஏன் புத்தகம் கூட போதையாக மாறி விட்டதே!!!

உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்



No comments:

Post a Comment