புதிதாக
வாங்கிய பைக்கை பதிவு செய்வதற்காக....
நாகப்பட்டிணம் சென்றிருந்தேன். என்னுடன் தங்கையும் வந்திருந்தார்...
வீடு திரும்பியவுடன் தங்கை, “ உடம்பு ரொம்ப வலியாக
உள்ளது” என்றார்.
உடனே,”
உட்கார்ந்த வந்த உனக்கு இப்படி
வலிச்சா.... பைக் ஒட்டிட்டு வந்த
எனக்கு எப்படி வலிக்கும்” என்றேன்.
” நீ பைக் ஒட்டிட்டு வந்தா!!!
அதனால் வலிக்காது... ஆனால் எவ்வளவு நேரமும்
சும்மா உட்கார்ந்து வர்றது... எனக்கும் தான் அதிகமாக வலிக்கும்”
அம்மாவும்,
அதே கருத்தை முன் வைக்கிறார்....
----------------------------------------------------------------------------
எனக்கு
சற்று குழப்பமாக தோன்றியது. சற்று சிந்தித்து பார்த்தால்,
அவர்களின் பேச்சில் உண்மை இருந்தது.
வண்டியை
ஒட்டுபவருக்கு கண், காது, கை
கால் என சர்வ அங்கங்களும்
வேலை செய்யும். ஆனால் பின்னால் உட்கார்ந்து
வருவபவர்களுக்கு வேலை இல்லையென்பதால், அலுப்பு
தோன்ற ஆரம்பிக்கும்... அதுவே காலம் கடக்கையில்
வலியாக மாறி விடுகிறது...
ஒட்டுபவருக்கும்
உடல் வலி என்பது உண்டாகும்.
ஆனால் மற்ற செயல்களால், அதன்
தன்மை மறைக்கப்பட்டு விடும். அவ்வளவு தான்
வித்தியாசம்!!!!!
நாமும்......
பின்னால் அமர்ந்து செல்லும் போதும், நீண்ட தூர
பேருந்து பயணங்களிலும் இத்தருணத்தை கடந்து சென்றிருப்போம்!!!!
மேற்கண்ட
நிகழ்வுகளிலிருந்து.... ஒரு விஷயத்தை புரிந்து
கொள்ளலலாம். நாம் செய்யப்படுகின்ற செயல்களால்
மட்டுமே, எப்போதுமே துன்பங்களை கணக்கில் எடுத்து கொள்ளப்படுவதில்லை. உடலினை
தாண்டி, மனமும் துன்பத்தையும் வேலையின்
தன்மையை முடிவு செய்கிறது.
வடிவேல்
சொல்வது போல், சும்மா இருப்பது
எவ்வளவு கஷ்டம் தெரியுமா????? ஏதேனும்
வேலை செய்வதனை காட்டிலும்..... வேலை செய்யாமல் இருப்பது
கடினம்... அதே மனநிலையை வண்டி
ஒட்டுவதில் ஒப்பிடலாம். வண்டியை ஒட்டுவதினை காட்டிலும்,
பின்னால் உட்கார்ந்து வருவது கஷ்டம் தான்
போலும்!!!!
உங்களில் ஒருவன்
உங்களை போல் ஒருவன்
வேதை குமார்
No comments:
Post a Comment